பத்வா என்ற சட்ட முறைமை உண்டா ?
ஆய்வறிக்கை - அஸ்சேஹ்
றஸ்மி மூஸா சலபி
பத்வா மற்றும் முப்தி என்ற சொல் இன்று இஸ்லாமிய ஆய்வுத்துறையில்
மிகவும் ஒரு முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.பத்வா என்பது மார்க்க தீர்ப்பினை
குறித்து சொல்லப்படும் . பொதுவாக ஏதாவது சிக்கலான ஒரு மார்க்க விடயம் தொடர்பாக
இந்த முறைமை ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது .
ஆனால் இன்று
எடுத்தற்கெல்லாம் பத்வா உண்டா என்று கேடகும்
அளவிற்கு நிலைமை மாறிவிட்டது . உண்மையில் இஸ்லாத்தின் இதன் நிலைப்பாடு என்ன ?
இந்த பத்வா என்ற சொல்أفتي என அரபியில் சொல்லப்படும் அதாவது அரபு அகராதியில் முஹ்ஜம்
அல்வசீத் இது பற்றி விளக்கம் கூறும் போது
الْمُفْتِي فَتْوَى أصدر
مَا يُفْتِي بِهِ الْمُفْتِي أَوِ الْعَالِمُ
بِعُلُومِ الدِّينِ وَفِي قَضَايَا الشَّرْعِ لِيُبَيِّنَ الْحُكْمَ الصَّحِيح .
அதாவது இதன் பொருள் ஒரு
தீர்பாளன் அல்லது அறிஞர் மார்க்க அறிவை அல்லது மார்க்க ரீதியான தீர்ப்பை சரியான சட்டத்தை விளங்கப்படுத்த கூறும்
வியாக்கியானம் எனக் கூறுகின்றது .
.இத்தகைய தீர்ப்புகளுக்கு
இஜ்திகாத் ஒரு ஒத்தடமாக பயன் படுத்தப்படுகின்றது. குரானிலும் சுன்னாவிலும்
நேரடியாக சட்டம் பெற முடியாவிட்டால் தனது புத்தியை பயன்படுத்தி குரான் ஹதீஸ் என்ற நிலையல்
நின்று தீர்வை பெறுவது. இதைதான் முஆத் ரலி அவர்களை நபி ஸல் எமன் நாடடுக்கு அனுப்பும் போது கேட்கின்றார்கள் ஒரு தொடர்
ஹதீஸில் “ உனக்கு அல்லாஹ்வினதும் அவனுடைய தூதரினதும் தீர்ப்பு
கிடைக்காவிடல் என்ன செய்வாய் என்றார்கள் . அதற்கு முஆத் ரழி“ நான் எனது கருத்தை
பெற இஜ்திகாத் செய்வேன் என்றார்கள்.இங்கு சட்டத்தை தீர்ர்ப்பாக சொல்ல இஜ்திகாத்
ஒரு முக்கிய விடயம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்
தனியாக இவ்வறான மார்க்க
தீர்ப்பாளன் என்று பயன் படுத்தப்பட்டுள்ளதா ?என்று பார்த்தால்
ஒரு செய்தியில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் நம்பிக்கையாளர்களின்
தலைவர் முஆவியா(ரலி) விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு
ரக்அத்தாகத்தான் தொழுகிறார்" என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'முஆவியா (மார்க்கச்)
சட்ட நிபுணராவார்" என்று பதிலளித்தார்கள்.அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் இங்கு மார்க்க
சட்ட நிபுனர் என்பதற்கு பக்கியா என்ற அரபு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது (புஹாரி)
மேலும் இவரை பகீஹ் என்றும் அரபியில் அழைப்பர்
(மேலும் இஜ்திகாத்
மற்றும் பிக்ஹு துறை தொடர்பான ஆய்வுகள் எனது வெப்தளத்தில் உண்டு .http://ikamathulislam.blogspot.com/2015/01/2.html
எனவே நபி அவர்கள் தெரிவு செய்து
அனுப்பும் ஒருவர் மார்க்கத்தேர்ச்சி பெற்றவராகத்தான் இருப்பார் ,இதே போன்ற ஒரு
சிறப்பு வாய்ந்தவர்தான் இப்னு அப்பாஸ் ரலியும்
மேலும் முஆவியா போன்றவர்களுக்கும் இந்த குறிப்பு பயன்
படுத்தப்பட்டுவந்துள்ளதால் தனியான ஒரு தேர்ச்சி மார்க்க சட்டங்க்களை கூற அவசியம்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
இந்தவகையில் மார்க்த்தீர்ப்பை சொல்வதானால் சட்டங்களை வகுத்து அறிந்துதான்
சொல்ல வேண்டும் .இது ஒரு தனியான அறிவியல்கலை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது
. இது அல்லாஹ்வின் அருள் நபி ஸல் கூறினார்கள் “யாருக்கு அல்லா நலவை நாடுகின்றானோ அவனுக்கு மார்க்கத்தில்
விளக்கத்தை அளிப்பான் “எனவே எல்லோரும் சடுதியாக மார்க்க தீர்ப்பு வழங்க முடியாது .
மேலும் நபி ஸல் அவர்கள்
“இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது.எனக் கூறினார்கள் ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல
வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு
அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும்
இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)." அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
அறிவித்தார்.அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார்.(புஹாரி முஸ்லிம் )
எனவே மார்க்க விளக்கம்
என்பது ஒரு தனியான கலை அல்லாஹ்வின் அருள் என்பதை உணர்த்தி அடுத்த விடயம்
என்னெவென்றால்
தீர்ப்பு எப்படி
சொல்ல வேண்டும் யார் சொல்ல வேண்டும்
எனினும் மார்க்க தீர்ப்பு
என்றால் (பத்வா) என்றால் இது ஒரு தனிபட்ட ஒரு சட்டம் கிடையாது. அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும் சொன்னவற்றை சட்டமாக சொல்வதும் நேரடியாக வகுக்க முடியாத சட்டத்தை நான்
மேலே கூறியபடி இஜ்திகாத் அடிப்படையில் சட்டமாக கூறுவதும்தான் பத்வா என்பது . குறிப்பிட்ட
அறிஜருக்கு இஜ்திகாத் அடிப்படையில் கிடைக்கின்ற தீர்ப்புதான் சட்டம் அதுதான் பத்வா
என்று கூட அழைக்கப்படும்
தீர்ப்பு சொல்லும் ஒருவர்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொன்னதற்கு மாற்றமாக எந்த தீர்ப்பும் கூற முடியாது
அது பத்வா அல்ல .அது யார் சட்டம்
வகுத்தாலும் சரியே இதற்க்கு சான்றாக அல்லாஹ்
“ யார் அல்லாஹ் இறக்கிய வேதத்தை கொண்டு தீர்ப்பு கூறவில்லையோ அவர்கள் பாவிகள் “
என்பதாக கூறுகின்றான்
எனவே அல்லாஹ்வின்
சட்டங்கள் மற்றும் நபி ஸல் அவர்களின் சட்டங்கள் மட்டுமே அடியொட்டிய சட்டங்களாக
இருக்க வேண்டும் ஒரு செய்தியில்
"நான் நாணய மாற்று
வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி)
ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்)
அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று
வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால்
அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!" என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!"நாஃபிஉ(ரஹ்)
அறிவித்தார்.
இங்கு மிகவும் புகழ்
வாய்ந்த மார்க்க தீர்ப்பாளர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் தீர்ப்பு
கூறும் போது நபி ஸல் அவர்கள் சொன்னபடி தீர்ப்பு வழங்கியதாகவே செய்திகளில் வருகின்றது
இதே போன்று இன்னொரு
செய்தியில் “பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான (சொத்தாக இருக்கும்) ஓர் அடிமையில் அல்லது
அடிமைப் பெண்ணில் தன்னுடைய பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்யும் விஷயத்தில்
இப்னு உமர்(ரலி) மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தார்கள். அத்தீர்ப்பில், '(தன்னுடைய பங்கை) விடுதலை
செய்தவர் மீது அவ்வடிமையை ஒத்த (மற்றோர் அடிமையின்) விலை மதிப்பிடப்பட்டு அந்த அளவிற்குச்
செல்வம் அவரிடம் இருக்குமாயின் அவ்வடிமையை முழுவதுமாக விடுதலை செய்வது அவரின் மீது
கடமையாகும். (அவரின் மற்ற) கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்கு (களுக்கான விலை)கள் கொடுக்கப்பட்டு
விடவேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்"
என்று சொல்லி வந்தார்கள். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர்(ரலி) அறிவித்து
வந்தார்கள்.அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.
இங்கும் உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் பெற்ற தீர்ர்ப்பைதான் மீண்டும்
வளங்கி அதை சுட்டியும் காடடுகின்றார்கள்
மேலும் ஒரு செய்தியில் ஒரு
விபாசாரம் தொடர்பாக நபி ஸல் அவர்களிடம் வந்த ஒரு சஹாபி கேட்கின்றார “(ஒருமுறை) கிராமவாசி
ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின்
சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, 'உண்மை தான் சொன்னார்.
எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார்.நபி
ஸல் தீர்ர்ப்பு கூறி விட்டு சொன்னார்கள்
நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே
நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
எனவே நபி ஸல் கூட தாமாக சட்டம் சொல்லாமல் அல்லாஹ்வின் கட்டளை படியே தீர்ப்பு
கூறினார்கள் இதனால்தான் இதனை வஹி அய்ர மத்லூ ((وحي غير متلوعஎன்கின்றோம் அதாவது
இது குரானுக்கு அடுத்த வஹியாகும்
இந்த மற்றுமொரு செய்தியை பாருங்கள் இது ஒரு பெரிய செய்தியாக
இருந்தாலும் சொல்லவேண்டிய அவசியமாக உள்ளது .
“ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின்
தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து)
இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட
அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள்.
(நபியவர்கள் தற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திறகு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சிறந்தவரை...
அல்லது உங்கள் தலைவரை.. நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி
விடு)ங்கள்" என்று கூறினார்கள். பிறகு, 'சஅதே! இவர்கள் உங்கள்
தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு
அளிக்கப் போகிறீர்கள்?)" என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும்
வலிமையுடையவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும்
குழந்தைகளும் கைது செய்யப்படவேண்டும் என்றும் நான் இவர்களிடையே தீர்ப்பளிக்கிறேன்"
என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்
படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.". அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்)
தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்" என்று கூறினார்கள்.எனவே
தீர்ர்புகள் என்பது நாம் நினைத்தபடி வழங்கமுடியாது என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்
எனவே இங்கு சஹ்த் ரலி அளித்த
தீர்ப்பை நபி ஸல் அல்லாஹ்வினதும் அவனுடைய தூதரினதும் தீர்ப்பு எனக் கூறினார்கள்
எனவே பத்வா என்ற விடயம் மற்றும் பகீஹ் என்ற விடயம் ஹகீம் என்ற விடயம் எல்லாம் நபி
ஸல் அவர்களின் பல குறிப்புக்களில் உள்ளது அதில் மாற்று கருத்து இல்லை எனினும் நான்
மேலே கூறியது போல் மார்க்க தீர்ப்புக்கள் குரான் சுன்னாவுக்கு முரணாக இருந்தால் அது பத்வா
அல்ல இதைதான் அழுத்தம் திருத்தமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
எனினும் இன்று நடப்பது
என்ன ? பத்வா எனும் போது நாம் அரபிய அறிஜர்களுக்கு முக்கியத்துவம்
கொடுகின்றோம். அவர்கள் மீதுள்ள அதீத பற்று மற்றும் சிலவேளை அரபு மொழியில் உள்ள ஒரு மோகத்தினாலும் குரான் சுன்னாவுக்கு முரணாக கூட எழுதப்பட்ட பத்வாக்களை மற்றும் கருத்துக்களை கூட சட்டமாக
எடுகின்றோம்..அதே போல் அரபு மொழியில் பலர் பேசி உள்ள பத்வாக்களை கூட சட்டமாக
பக்தியுடன் நேசிகின்றோம் .அதில் சரி பிழை காண்பதில்லை .
எனினும் நாம் ஒரு துளிகூடா
அவர்களை இகழ்ந்து உதாசீனம் செய்து அவர்களுடைய சேவைகளை உதறி தள்ளி பத்வாக்களை
நிராகரிக்கவில்லை .மேலும் அவர்கள் சொல்லும் சகல தீர்ப்புக்களையும் நாம்
மறுக்கவில்லை குறிப்பிட்ட சில விடயங்கள் மாற்றமக உள்ளதால் நாம் அதை பற்றி மட்டுமே
பேசுகின்றோம் .அதை பற்றி விமர்சனம் செய்கின்றோம் .
முடிவு
பத்வா என்பது இஸ்லாத்தில்
அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.
எனினும் அது மார்க்கத்துக்கு முரணாக இருக்கக்கூடாது. முப்தி என்பவர்
மார்கத்துக்கு முரணாக திர்ப்பு சொல்லவும் கூடாது
.அதை மீறி யாரும் தீர்ப்பு வளங்கினால் அது
பத்வா அல்ல மேலும் .பத்வா என்ற தனியான சட்டம் இஸ்லாத்தில் இல்லை .அது சட்டத்தை
மேம்படுத்தும் சட்டமே தவிர புதிய ஒரூ சட்டத்தை கூற முடியாது .மேலும் ஒவ்வொரு
விடயங்களிலும் சிலர் எப்போதும் முரண்பட்டுக் கொண்டே இருப்பார் இது மறுமை வரை அப்படிதான்
இருக்கும் .எனினும் இஜ்திகாத் என்ற சட்ட நுணுக்க அறிவை பயன் படுத்தி
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உவப்பான முறையில் மார்க்கத்தை கூறுவோம் .அல்லாஹ்
மிகவும் அறிந்தவன் .

0 comments:
Post a Comment