பெயர் சூட்டுதல் ஒரு வணக்கமாகும் -றஸ்மி மூசா
ஒரு மனிதனுக்கு பெயர் சூட்டுதல் என்பது கட்டாயமானது .உலகில் தனக்கென ஒரு பெயர் இல்லாமல் யாரும் ஜடமாக வாழ முடியாது .இந்த வகையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் பெயர் வைப்பதற்கென தனித் தன்மை உண்டு உதாரணமாக முஸ்லிம்கள்அரபு மொழியை மையப்படுத்தி பெயர் சூட்டுவர் ,கிறிஸ்தவர்கள் தமிழ் மொழியில் ஆனால் தங்களது சமயம் சார்ந்த பெயர்களை சூடுவர் இவ்வாறு ஒவ்வோர் சமூகமும் தங்கள் சமூகத்தின் தனித் தன்மை கொண்டு பெயர்களை சூட்டிக் கொள்வது வழக்கம் .
எனினும் இஸ்லாத்தின்நிலைப்பாடுஎன்ன ? எந்த அமைப்பில் பெயர்களை சூடிக் கொள்ளலாம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .இஸ்லாம் சகல அம்சங்களுக்கும் வழி காட்டும் மார்க்கம்என்னும் வகையில் குழந்தைகளுக்கு பெயர்
சூட்டுவதையும் முக்கியமான ஒன்றாக கருதுகின்றது.
“மறுமை நாளில் உங்கள் தந்தையுடைய பெயருடன் உங்களுடைய பெயர் அழைக்கப் படும் ஆகையால் உங்கள் பெயர்களை அழகு படுத்திக் கொள்ளுங்கள் -அபு தர்தா ரலி ( அஹ்மத் 20704)
என்ற ஹதீஸின் அடிப்படையில் நாம் பெயர்சூட்டும போது அழகான பெயர்களை சூட்டிக் கொள்ள வேண்டும் . அழகானபெயர் என்னும் பொது அதன் அர்த்தம் அழகாகவும் இஸ்லாத்துக்கும், சமூக அர்த்தங்களுக்கும் முரண் பாடில்லாமல் இருக்க வேண்டும் என்பதே.உதாரணமாக சொல்வதானால் நபி ஸல் அவர்கள்
அழகான பெயர் என்பதற்கு அவர்கள் உவமை சொல்லும் போது
“ அல்லாஹ்வின் பெயருடன் அப்து (அடிமை) என்ற வார்த்தையை சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும். உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (4320) எனக் கூறினார்கள்
பெயர் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்க வேண்டுமா ? ஏனென்றால்நபி (ஸல்) அவர்கள் இந்த விடயத்தில் கடும் அக்கறை செலுத்தி உள்ளனர் என்பதை பின்வரும் கதீஸ் சான்று படுத்துகின்றது.
“நபி (ஸல்) அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை.(வரிவாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும்.” அறிவிப்பவர் : புரைதா
(ரலி) நூல் : அபூதாவூத் (3419)
நாம் ஏற்கனவே சொன்னதுபோல் அரபு பெயர்களை சூட வேண்டும் என்பதில்லை நபி ஸல் அவர்கள் நபிமார்களின் பெயர்களான யூசுப் மற்றும் இப்ராகிம் என்றெல்லாம் பெயர் சூட்டி உள்ளனர் ஆனால் இவைகள் அரபு சொற்கள் அல்ல உமர் உத்மான் போன்றவை அரபுச்
சொற்களில் எந்த அர்த்தமும் இல்லை .
என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.எனவே பெயர்களில் அர்த்தம் இல்லாவிட்டாலும்
இஸ்லாத்துக்கு மாற்றமாக இருக்க கூடாது
.
மேலும்
பெயர்களில் இணை வைத்தல் இருத்தல் கூடாது நபி ஸல் அவர்கள் அதனையும்
வண்மையாக கண்டித்துள்ளனர் “ மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (6205) இந்த வகையில் உருது மொழியில் உள்ள பெயரான சாஜஹான் என்பதை சூடுவர்க்கும் தடை உள்ளது உருது மொழியில் சா என்றால் உலகம் என்பதும் ஜகான் என்றால் மன்னன் என்ற அர்த்தமும் கொடுக்கப் படுவதால் இந்தப் பெயர் சிர்க் என்ற இடத்தில வந்து விடும் என்பதால் இந்தப் பெயரினையும் யாரும் சூட்டக்கூடாது.
அதே போன்று இஸ்லாத்தில் தீயவர்களின் பெயர்களை சூடுவதை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள் "நபி (ஸல்) அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள்.
(இதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும் பிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் பின் ஹத்தாப் (ரலி) நூல்:அஹ்மத் (104)
குறிப்பிட்ட சில பெயர்களை வைக்க நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளனர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்தப் (ரலி) நூல் : முஸ்லிம் (4328)எனது பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்முஸ்லிம்(4324)
குறிப்பிட்ட சில பெயர்களை வைக்க நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளனர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். அறிவிப்பவர் : சமுரா பின் ஜ‚ன்தப் (ரலி) நூல் : முஸ்லிம் (4328)எனது பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்முஸ்லிம்(4324)
இந்த அடிப்படையில் நபி ஸல் அவர்களின் பட்டப் பெயரை யாரும் வைக்க கூடாது உதாரணமாக் அபுல் காசிம் என்ற பெயரை யாருக்கும் வைக்க கூடாது
எங்களில் ஓருவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் காசிம் என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்) உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என குறிப்புப் பெயரால் அழைத்து மேன்மைப்படுத்திடமாட்டோம்.
(நபியவர்களுக்கு அபுல்காசிம் என பெயர் இருப்பதே இதற்குக் காரணம்) என்று சொன்னோம். ஆகவே அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று இதைத்) தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டுக என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : புகாரி (6186)
சரி எதோ தவறுதலாக நாம் பெயர் வைத்து விட்டோம் என்றால் அது இஸ்லாத்திற்கு மாற்றமாக
இருகின்றது என்றால் அதை என்ன செய்வது ? நாம்
அதை மாற்ற வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம்
எமக்கு சொல்லித் தருகின்றது "முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபி (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார்.(இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம் (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அறிவிப்பவர் : முஸைய்யப் (ரலி) நூல் : புகாரி (6190)
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (619)
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (619)
அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள்.(அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து) என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் அஹ்தரீ (ரலி) நூல் : அபூதாவூத் (4303)
இந்த அடிப்படையில் நாம் பெயர்களை சூட்டும் பொது மிகவும் யோசித்து அர்த்தமுள்ள இஸ்லாத்துக்கு முரணில்லாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் .நமது பெயர் அப்படி இஸ்லாத்துக்கு முரணாக இருந்தால் அவைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இஸ்லாத்துக்கு மாற்றமில்லாமல் அர்த்தம் இல்லை என்றிருந்தால் அதில் எந்த தப்பும் இல்லை .அல்லா மிகவும் அறிந்தவன்
இந்த அடிப்படையில் நாம் பெயர்களை சூட்டும் பொது மிகவும் யோசித்து அர்த்தமுள்ள இஸ்லாத்துக்கு முரணில்லாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும் .நமது பெயர் அப்படி இஸ்லாத்துக்கு முரணாக இருந்தால் அவைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இஸ்லாத்துக்கு மாற்றமில்லாமல் அர்த்தம் இல்லை என்றிருந்தால் அதில் எந்த தப்பும் இல்லை .அல்லா மிகவும் அறிந்தவன்

0 comments:
Post a Comment