தராவீஹ் 23 ரகத் தொழுகை நடாத்தும் இமாமை பின் பற்றி நாம் பதின்மூன்று மட்டும்
தொழலாமா ?
(வட்டி யோடு
தொடர்பானவரின் வீட்டில் சாப்பிட மாட்டோம்
.சீதனம் எடுத்தவர்களின் திருமணம் போக
மாட்டோம் என்றால் பித்தத் செய்யும் இமாம் மட்டும் என்ன விதிவிலக்கா ?
மதிபீட்டாய்வு அஸ்செய்க் :றஸ்மி மூசா சலபி (MA)
நபி ஸல் கூறினார்கள் “யார்
மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துகின்றாரோ அது
நிராகரிக்கப்பட்டதாகும் “(அபூ தாவூத்)
என நபி (ஸல்) கூறிய ஒரு
செய்தியை நாம் கொண்டு பார்க்கும் போது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை செய்வது அல்லது அதற்கு
ஆதரவு வளங்குவது, அல்லது அதை பின்பற்றுவது போன்ற எதுவும் ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல
. இந்த வகையில் மார்க்கத்தில் இல்லாத விடயங்களை கொண்டு ஒரு இமாம் தொழுகை
நடத்துவாரானால் அந்த தொழுகை இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் சிலர் நொண்டிசாட்டுக்காக ஆதாரம் காட்டும் ஒரு செய்திதான் ஒரு முறை
உஸ்மான் ரலி அவர்களிடம் வந்து “எங்களுக்கு குழப்பம் செய்யும் ஒரு இமாம் தொழுகை
நடத்துகின்றார் நாங்கள் அதில்
இருந்து வெளியேற முடியுமா? என்று வினவ அதற்கு அவர்கள் “தொழுகை என்பது மக்கள் செய்வதில் அழகான அமல்.
அவர்கள் அழகாக செய்தால் நீங்களும் அழகாக செய்யுங்கள். அவர்கள் மாறு செய்தால்
அவர்களுடைய பிழைகளை விட்டும் தவிர்ந்து நடங்கள் “ என்று கூறிய சம்பவம் புஹாரியில்
பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தியாகும் .இது உஸ்மான்
ரலி கால ஹவாரிஜூகள் பிரச்சினையை மையமாக கொண்ட விடயமாகும் .அந்த நேரத்தில் காணப்பட்ட
ஒரு குழப்பத்தை சுட்டிக் காட்டினாலும் உமர் ரலி அவர்களின் பதில் நாம் இன்று தேடும்
பித்அத் வாதிகளை பின்பற்றுவதற்கான சான்றாக கொள்ள முடியாது அப்படி உஸ்மான் ரலி அவர்கள்
சொல்லவும் இல்லை.
இந்த அடிப்படையில் இங்கு பித்அத் மட்டுமல்ல ஒரு இமாம்
குழப்பகாரராக இருந்தாலும் அவரை நாம் விட்டு நீங்கி இருக்கத்தான் வேண்டும். இமாம்
ஹாபிள் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் சொல்லுவதுபோல் இந்த உஸ்மான் ரலி அவர்களின் செய்தி
உத்மான் ரலி கால ஹவாரிஜூகளின் தலைவர்கள் தொழுகை நடதுவதைதன் சுட்டுகிண்றது எனக்
கூறுகின்றார். என்பதும் நமக்கு சான்றழிகின்றது
எது எப்படி இருந்தாலும்
இங்கு உஸ்மான் ரலி கூட ஒரு பித்அத் செய்யும் இமாமை பின்பற்ற சொல்லவில்லை அவர்களும்
ஒதுங்கி இருக்கவே கூறுகின்றனர் அல்லாஹ் கூறுகின்றான் .”தொழுகையாளர்களுக்கு கேடுதான் அவர்கள் தொழுகைய
பராமுகமாக செய்கின்றனர் .மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செய்கின்றனர் “ (சூரா
மாஊன் )என கூறும் செய்தியும் எதை எமக்கு உணர்த்துகின்றது என்றால் மார்கத்துக்கு
முரணாக செய்யும் ஒரு இமாமை நாம் பின்பற்றுவதும் நாம் செய்யும் பராமுகமே என்பதை
கருத்தில் கொள்ள வேண்டும்
அடுத்ததாக வேறு வழியில்லை
என்ற நிர்பந்தம் வணக்கங்களில் கிடையாது அது நாம் உயிர்போகும் போது மட்டுமே
நிர்பந்தநிலை ஏற்படும்.எனவே நாம்
நினைப்பதுபோல் போல் இருபத்துமூன்று ரக்கத் தொழும் இமாமை பின்பற்றி நாம் எட்டு
தொழலாமா ?அல்லது ஒரு பகுதியை தொழலாமா? என்றால் எப்படி தொழுவது இது என்ன வியாபாரமா
? அல்லது அரசியலா ? இது ஒரு வணக்கம். புனிதமானது .இஸ்லாத்தை நிராகரித்து ஒருவர்
செய்யும் எந்த வணக்கத்தையும் நாம் அங்கீகரிப்பது பாவம். ஏன் என்றால் அந்த செயல் பின்வரும் குற்றங்களை ஏற்படுத்தும்
Ø இஸ்லாத்துக்கு முரணான
பித்அத்தினை நாம் பின்பற்றுகின்றோம்
Ø தொழுகையை நாம் இமாமுக்கு எதிராக மாற்றம் செய்கின்றோம்
எனவே நமக்கு பதிநோரு ரக்கதுக்கள்தான்
தொழ சான்றுகள் தெளிவாக இருந்தும் பல எண்ணிக்கையான ரக்கதுக்களை கொண்டு தொழுகை
நடாத்தும் இமாமை நம் எப்படி பின் பற்றுவது.? இப்படியான இமாமுக்கு பின்னால் நிற்பது எமக்கு தடை
செய்யப்பட்டுள்ளது .இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் மார்கத்துக்கு முரணான
செயற்பாடுகளை நாம் ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் .அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்
இஸ்லாத்தில் நாம்
கொண்டுள்ள அன்பில் நாம் மார்கத்துக்கு முரணானக செய்யும் அமல்களை ஊகுவிப்பதா அல்லது
வெறுப்பதா ? நபி ஸல் கூறினார்கள் “நீங்கள் ஒரு தீமையை கண்டால் அதை கையால் தடுங்கள்
முடியாவிட்டால் வாயினால் தடுங்கள். அதற்கும் முடியாவிட்டால் மனதால் வெறுங்கள்”
என்பது நபி மொழி மேலும் “உங்களில் ஒருவர் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் மற்றும் இந்த
உலகில் உள்ள அனைவரை விடவும் என்னை விரும்பாதவரை ஈமான் கொண்டவராகமாட்டீர் “(முஸ்லிம்)எனக்
கூறும் போது சாதாராண பிழையான வழிகாட்டலை செய்யும் இமாம்கள் என்ன மேன்மையானவர்களா ?
இமாம்கள் நம்பிக்கைக்கு
உரியவர்கள் அவர்கள் செய்வது போல் நம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் முறையாக
சட்டப்படி செய்ய வேண்டும் அதைதான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “இமாம்
ஏற்படுத்தப்பட்டது தொழுகை நடாத்த அவரை நீங்கள் மாறு செய்ய வேண்டாம் என்ற தொடரில்
......அவர் உட்கார்ந்தால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் (புஹாரி ,முஸ்லிம் )
என்று கூறிய காரணம் இமாம்கள் நேர்மையாகவும் உணமையாகவும் நடக்க வேண்டும்
என்பதற்காவே .ஆகவே இமாம்கள் அதை மாறு செய்யக் கூடாது அப்படி மாறு செய்யும்
இமாம்களை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவே நாம் இப்படியான இமாம்களுடன் சேர்ந்து நாம் கியாமுல்
லைல் போன்ற எந்த ஒரு தொழுகையையும் பகுதியாகக் கூட தொழக் கூடாது அது நபி வழி அல்ல ..ஆகவே
பிழையான இமாமத் எங்களுக்கு நன்மை பயக்காது .
அப்படியானால் தீர்வு என்ன?
அல்லது ஊரில் உள்ள வேறு
பித்அத் பின்பற்றப்படாத மஸ்ஜிதுகளை நாடலாம்
நமக்கு தொழ வேறு மஸ்ஜிதுகள் இல்லாவிட்டால் தனியாக வீட்டில் உள்ளவர்களை சேர்த்து ஜமாத்தாக தொழலாம்
மேலும் இந்த தொழுகை
ஜமாத்தாக ஊக்குவிக்கப்படாத ஒரு தனிநபர் தொழுகை என்பதால் நாம் தனியாக தொழலாம் ,
ஆனால் பித்அத்துகள்
நமக்கு பாவத்தை தரக்கூடும். எனவே நாம் பித்அத் இமாமை பின்பற்றுவது பாவம் எனக்
கருதி தனியாக தொழுதால். நமது தூய முயற்சிக்கு அல்லா நமக்கு ஜமாஅத்துடைய
நன்மையை வழங்குவான்,ஆனால் நாம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட இமாமை
பின்பற்றி தொழுதால் ஆயுள்பூராக நாம் அந்த இமாமுக்கு ஆதரவு வாழங்கியவராவோம். அத்துடன் எங்கள் தொழுகையையும் பாதிகும். அல்லா
நம்மை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
ஜமாஅத் என்றால் இஸ்லாம்
அங்கீகரிக்கப்பட்டதுதான் ஜமாஅத். முஸ்லிம்கள் என்றால் ஒவ்வொரு நிமிடமும் முஸ்லிமாக
இருக்க வேண்டும். தெளிவாக மார்க்கத்துக்கு முரணாகக செய்கின்றவர்கள் என்பதை
உணர்ந்து நாம் பின் பற்றினால் அதற்க்கு நாமே பொறுப்பாவோம் . (வட்டியோடு
தொடர்பானவரின் வீட்டில் சாப்பிடமாட்டோம் .சீதனம்
எடுத்தவரின் திருமணம் போகமாட்டோம் என்றால்
பித்தத் செய்யும் இமாம் மட்டும் என்ன விதிவிலக்கா ?சிந்திப்போம்
அல்லாஹ் யாவும் அறிந்தவன்

0 comments:
Post a Comment