இஸ்லாமிய பொருளாதாரத்தில் நவீன வங்கி முறைமையின் சாரம்

| 3 comments
                                                       றஸ்மி  மூசா -சலபி
   இஸ்லாமிய பொருளாதாரத்தில் நவீன வங்கி முறைமையின் சாரம்
வங்கி  முறைமை என்பது உலக பண பரிமாற்று முறைமையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது .உலக பொருளாதார வலையமைப்பு வங்கி முறைமையின் கீழே கட்டியமைக்கப்பட்டுள்ளது .இதனால் வங்கி  செயற்பாடு  இல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. ஆனபோதிலும் வட்டி என்பது இந்த பொருளாதாரத்தின் பிரதான சாரமாக போய்விட்டது .வட்டி என்ற பிரதான பொருளாதார முறைமைதான்  வங்கிகளை கொண்டு நடத்துகின்றது . இந்த அடிப்படையில் இந்த வட்டி முறைமைதான் இஸ்லாமிய பொருளாதார திட்டங்களை ஏனைய பொருளாதார முறைமைகளில் இருந்து வேறு படுத்தும் பிரதான  அம்சமாகும்.
இந்த ஒரு அடிப்படை பின்னணியில்தான் இஸ்லாமிய வங்கி முறைமை என்ற அம்சம் நோக்கப்பட  வேண்டும்.இஸ்லாமிய   நிதி நிறுவனம் அல்லது  இஸ்லாமிய வங்கி  முறைமை போன்ற சொற்கள் உலக அளவில் மிகவும் பிரபல்யமானவை. இவைகள் இவ்வாறு பிரபலமானதற்கு அடிப்படை காரணம்,  இஸ்லாம் வட்டியை தடை செய்து வியாபாரத்தை அனுமதித்துள்ளது என்பதும்,  மேலும்   வட்டியை ஒரு போதும் நுகர அனுமதிப்பதில்லை என்பதினாலும் ஆகும் . அதனால்தான் முஸ்லிம் சமூகம் அல்லாத  மாற்று சமூக  வங்கியாளர்கள் கூட இந்த வட்டி முறைமை அற்ற வியாபார செயற்பாட்டை  தங்களுடைய வியாபார முறைமையின் ஒரு பகுதியாக   இணைத்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இத்தகைய செயற்பாடுகள் ஊடாக அந்நிய சமூகம்  சிலவேளை தங்களுடைய வியாபார நடைமுறைமைகளை  மேலும் விஸ்தரிப்பதாகவும்  இருக்கலாம் அல்லது முஸ்லிம் சமூகத்தின் கண்ணியத்தை வியாபாரத்தின் ஊடாக வழங்கு வதாகவும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் வட்டி முறைமையற்ற வங்கி செயற்பாடுகள் உலக அளவில் மிகவும் அவசியாமான ஒன்றாக இன்று அனைத்து  சமூகங்களாலும் உணரப்பட்டுள்ளது .
உலக அளவில் இஸ்லாமிய  நாடுகளை பொறுத்தவரையில் வட்டியற்ற வியாபார   முறைமை சாதகமாக உள்ளது அதற்கு  காரணம்   அவர்களுடைய சகல வியாபார நடைமுறைகளையும் வட்டியற்ற ஒரு அமைப்பில் நடைமுறைபடுத்தி வருகின்றமை ஆகும். அதே வேளை  நாட்டின் வியாபார சகல முறைமைகளும் அடிப்படை  வட்டியற்ற ஒரு அமைப்பில் இயங்குவதாகவும்காணப் படுகின்றது.  எனவே இஸ்லாமிய நாடுகளில் வட்டி ஒரு பிரச்சினை இல்லை எனலாம்.

இந்தக் கட்டுரையின் மூலம்  இஸ்லாமிய  வியாபார முறைமை பற்றி பேசுவது என்பதை பார்க்கிலும் இஸ்லாமிய வங்கி முறை ஒன்றை பற்றி பேசுவதின் ஊடாக இஸ்லாமிய வியாபார முறைமை பற்றி பேசலாம் என  விளைகின்றேன் .
வட்டி முறைமை ஏன் உலகில் இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . வட்டி முறைமையை இஸ்லாம் தடை செய்கின்றது அதற்கான அடிப்படை காரணம் எந்த ஒரு சமூகமும்  பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் சிக்குண்டு தங்களை அளித்து கொள்ளக் கூடாது என்பதும் , சமூகத்தின் ஒரு சாரார் மட்டும் இந்த பொருளாதார நலவுகளை  அனுபவிக்கக் கூடாது என்பதுமாகும் . எனவே உலகில் பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழித்து ,  சகல மக்களும் சமமான வாழ்வை வழங்குவதுதான் இஸ்லாத்தின் உயரிய நோக்கம் .இங்கு மறுமை என்பதுதான் உயரிய குறிக்கோள் உண்மையான பிரதிபலன் மறுமை ஓன்று  மட்டுமே என்ற இஸ்லாத்தின் உயரிய கொள்கை .இந்த நோக்கம் ஏனைய  பொருளாதார திட்டங்களில்  கொள்கையாக இல்லாவிட்டாலும் இஸ்லாமிய பொருளாதார முறைமையில் பர்ல் (கட்டாயம் ) கொள்கையாக இருக்க வேண்டும். இதைதான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
எனவே இஸ்லாமிய பொருளாதார செயற்பாடுகளில் அவதானிக்கப்படுவது வியாபார நிறுவனங்களின் தனித்துவ மேம்பாடு என்பதை விட அதனூடாக சமூக மேம்பாடுதான் மிகவும் முக்கியமானதாக நோக்கப்படுகின்றது.  இந்த ஒரு அடிப்படையில் தான் சகாத் என்ற ஒரு பொருளாதார நலத்திட்டத்தை இஸ்லாம் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஏற்படுத்தியுள்ளது. இந்தவகையில் இஸ்லாமிய வரலாற்றில் வங்கி முறைமை இருக்கவில்லை ஆனால் அங்கு பைதுஸ் சகாத் மற்றும் பைதுல் மால்  போன்ற நிதி நிறுவனங்கள் காணப்பட்டன. இவைகள் சமூக வளர்சிக்கு பெருதும் பாடுபட்டன. உலகில்   எவ்வித பொருளாதார நிறுவனங்களும் இல்லாத காலத்தில் இவைகள் தான் முன்னோடியாக திகழ்ந்தன என்று துணிந்து கூறலாம்.
நாம் ஏற்கனவே கூறியது போல் இஸ்லாத்தில் வியாபாரத்தின் அடிப்படை  என்பது வட்டி அற்ற ஒன்றாக இருக்க வேண்டும். அது எந்த வியாபார முறைமையாக இருந்தாலும் சரியே. இதனால்தான் வியாபாரத்தில் இஸ்லாம் பல முறையற்ற அம்சங்களை தடை செய்கின்றது . அல்லா குர்ஆனில் நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. (அல்-குர்ஆன் 4:29) எனக் கூறி
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாக எழுவார்கள்.  எனவும் அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடைசெய்து விட்டான். அல்குர்ஆன் (2:275 ) எனவும் கூறுகின்றது
மேற்கூறப்பட்ட இந்த கட்டளைகளின்  மூலம் அல்லாஹ் நமக்கு வியாபாரத்தை பொருளீட்டும் ஒரு அம்சமாக வழங்கியுள்ளான் என்பது புரியும். இரு நபர்களுக்கிடையே பரஸ்பர
அடிப்படையில் கொடுக்கல், வாங்கல் நடைபெறுவதே வியாபாரம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் வியாபாரத்தில் கிடைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இலாபம் ஆகுமானதாகும்,
 இந்த வகையில் வியாபாரத்தில் பல பண்புகளை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதாவது
1)  வியாபாரத்தில் நேர்மை  இருக்க வேண்டும்
அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன்(55: 7, 8 மற்றும் 9)

வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான்.
2)அளவு, நிறுவை சரியாயிருத்தல்
அளக்கும் போது நிறைவாக அளவுங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது
(திருக்குர்ஆன் : 17 : 35)
அல்லாஹுதாஆலா ஒரு சமுதாயம் தன்னுடைய வியாபாரத்தில் செய்து வந்த அளவு, நிறுவை தவறுகளை திருத்துவதற்கென நபி ஷுஐப்(அலை) அவர்களை நபியாக அனுப்பிவைத்தான் என்பதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் அம்சம் அல்லா இந்த அளவை நிறுவி விடயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளான் என்பதை..
"அளவை   நிறுவை  செய்பவர்களுக்கு கேடுதான் அவர்கள்    மக்களுக்கு  நிறுக்கும் போது  அத்துமீறி செய்கின்றனர் அவர்கள் நினைகின்றனரா தாங்கள் எழுப்பப் பட மாட்டோம் என்று " என அல்லா அழ குர்ஆனில் கேள்வி எழுப்பிகின்றான். இந்த அளவை நிறுவைதான்  வட்டி என்பதின் பின்விளைவு இது பொருளை மட்டும் அளப்பது அல்ல மாறாக நமது கொடுக்கல் வாங்களின் சாரம்சமும் இதுதான் .
அதே வேளை  பின்வரும் பண்புகள் இருக்கவே கூடாது
1. அளவை, நிறுவை மோசடிசெய்தல்.
அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள்! (அல்குர்ஆன் ( 7:85)
2. பொய் சொல்லி வியாபாரம் செய்தல்.
வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் (3:71)
வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனினும் அதைப்பற்றி உயர்வாகக் கூறி அதனை விற்பனை செய்வது கூடாது.இவ்வாறு பொருளீட்டுவது இஸ்லாத்தில் மறுக்கப்படுவதோடு இது மிகப் பெரிய குற்றம் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரு பொருளை வாங்கும் நுகர்வோருக்கு அதனுடைய சரியான அளவையும், எடை போடும் போது சரியாக நிறுத்தியும் தர வேண்டும். அவ்வாறில்லாமல் ஏமாற்றி பெறக்கூடிய பொருள் முறையாக சம்பாதித்ததாக கருதப்படமாட்டாது
நபி ஸல் அவர்கள் கூறும் போது "விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக" என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)
மேலும் குர்ஆனில் "விசுவாசிகளே! நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்"
"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது.  நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)
ஒருவர் தாம் செய்த பாவத்திற்கான தண்டனையை அவரே அனுபவிக்க வேண்டும் இவ்வாறுதான் மோசடி செய்யும் ஒருவர் தான் மோசடி செய்த பொருளைக்கொண்டே தண்டிக்கப்படுவார் என அல்லாஹ் மோசடி குறித்து எச்சரிக்கை செய்கின்றான். எனவே வியாபாரப் பொருட்களில் கலப்படம், போலி, பித்தலாட்டம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இத்தகைய ஒரு கோணத்தில் இருந்து இஸ்லாமிய நிதி நிறுவனம் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது .



வட்டியில்லாத வங்கி முறைமையின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும் ?
நான் மேற்கூறிய அடிப்படை அம்சங்களை கொண்டு  இஸ்லாமிய வங்கி என்ற எண்ணக் கருவை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இஸ்லாமிய   பொருளாதார நடவடிக்கை முறைபடுதலின் போது  மக்கள் நலன் என்பதும் மற்றும்  மறுமை சிந்தனை என்பதும் மிக முக்கியமானது .இங்கு இழப்புக்கள் என்பது இல்லை ஏனனில்  மறுமை என்பதுதான் இதன்
உயரிய லாபம் .இந்த சிந்தனை பொருளாதார முறைமையில் இளையோடினால் மட்டுமே வெற்றிகரமான ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும்.
ஆனால் இந்த முறைமை சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை  என்பதும் இன்றைய ஆய்வுகள் மூலம் தெளிவாகின்றது. குறிப்பாக அந்நிய சமூகத்தில் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் வங்கி நடவடிக்கையில் கூட இது தெளிவாக உலகில் புரிந்து கொள்ளப் படவில்லை.இன்றய உலகில் வங்கிமுறை மிகவும் வளர்ந்து வரும் ஒன்றாக மாறிவருகின்றது .மனித சமூகத்தின் பொருளாதார செயற்பாடுகள் உலகில் வியாபித்து செல்கின்றது . இதனால் மனித சமூகம் வலுக்கட்டயாமாக வங்கி முறைமையுடன் தொடர்புபட வேண்டிய கட்டாய சூழல் காணப்படுகின்றது .எனவே இஸ்லாமிய வங்கி முறைமை என்பது முஸ்லிம் சமூகத்தை வட்டியில் இருந்து பாதுகாப்பதும் மட்டுமல்ல வங்கியினால் மனிதன் பெறத்தகு தேவையான சகல அம்சங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் . அதாவது இன்று வட்டியுடன் தொடர்புள்ள வங்கிகள் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளையும் வட்டியற்ற வங்கிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் பூரணமாக ஒரு முஸ்லிம் இந்த வட்டியின் செயற்பாடுகளில் இருந்து மீள முடியும். உலகம் மாறிவரும் போது  நாமும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மாற்றம் இஸ்லாம் கூறும் மாற்றமாக இருக்க வேண்டும்
இந்த வகையில் உலக வாங்கி அளவில் மேற்கொள்ளப்படும் பொதுவாக வங்கிகளின் செயற்பாடுகள் என்பது பின்வருமாறு கணப்படுகின்றது.

1- பண  வைப்பு (Deposit)
2- பண மீளெடுப்பு (Withdraw)
3- கடன் திட்டங்கள் (Loan Schemes)
4-கடன் அட்டைகள் (Credit Cards)
5-இலத்திரனியல் அட்டை பாவனைகள் (ATM Cards)
6- காப்புறுதிகள் (Insurance)
7- காசோலை பாவனைகள் (Cheaque )
8-பொருட் பாதுகாப்பு பொட்டகங்கள் (Cabinet Box)
9-சேமிப்புக்கள் (Savings)
10- பங்கு சந்தை முறைமை( Chair Marketing System)
11- அடமானம் (Pawn)
13-வாடகை (Rent )
போன்ற பல நான் குறிப்பிடாத மறைமுகமான அம்சங்கள் இருக்கலாம் .நான் மேலே கூறியுள்ள விடயங்கள் என்பது ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் இன்றைய காலத்தின் தேவைதான். வங்கி என்று வரும் போது  அவை கட்டாயம் அவசியமானது  இவைகளை தவிர்த்து வாழ  வேண்டும் என்று கூறுவதை விட இவைகளை எப்படி இஸ்லாமிய மயமாக்கலாம் என்பதை பற்றி நாம் இந்த வங்கி முறைமை ஊடாக சிந்திக்க வேண்டிய ஒரு கடப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கு உண்டு .ஒன்றை எடுத்து மற்ற ஒன்றை விட முடியாத அளவுக்கு இவைகள் ஒன்றோடு ஓன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் அல்லாத நாடுகளில் இவைகளின் அவசியம் உணரப்பட்டுள்ளது .உதாரணமாக அரசாங்கத்தில் வேலை செய்யும் ஒருவர் தனது வேதனங்களை  இன்று வங்கி ஊடாக தான் மேற்கொள்ள முடியும் என்றால் கட்டாயம் ATM  அட்டைகளை அல்லது சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கத்தான் வேண்டும் .இஸ்லாமிய வங்கிகள் காணப்படாத ஒரு சூழலில்  இவைகளின் தேவை இல்லாமல் நாம் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது..இன்றைய சடுதியான உலகில் அடிக்கடி வங்கி சென்று பணத்தை பரம் பாரிய முறைபடி வரிசையில் நின்று பெற முடியாது . அவசர பயணங்கள் மற்றும் உலக பாதுகாப்பு முறைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கட்டாயம் இன்றைய வங்கி முறைகளுடன் தொடர்பில்லாமல் இருக்க முடியாது .இது நான் கூறும் மிக எளிய உதாரணம் .இவ்வாறு பல  விடயங்களை கூற முடியும் .
இந்தவகையில் இஸ்லாமிய வங்கிகளுக்கு ஒரு கடப்பாடு இருக்கின்றது. நாங்கள் வட்டியில்லாத முறைமையை அமுல்படுத்துகின்றோம் என்று கூறுவதை விட வட்டியுள்ள  வங்கிகள்  வழங்கும் சகல அம்சங்களையும் இந்த வங்கிகளும் மக்களுக்கு வழங்க வேண்டும் அதல்லாமல் பண வைப்புக்கு ஒரு வங்கியும் கடன் அட்டைக்கு ஒரு வங்கியும் காசோலைக்கு ஒரு வங்கியும் என்றிருந்தால் இந்த முறைமை சரியாக அமையாது .எனவே உலக அளவில் பொது வங்கிகள் என்ன சேவைகள் செய்கின்றது என்பதை இஸ்லாமிய வங்கிகள் ஊடாக வழங்கபட வேண்டும். .அதே வேளை ஏனைய  வங்கிகளுக்கு நிகராக இஸ்லாமிய வங்கிகளும் தங்களது நடை முறைககளில்  மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதாராண வங்கிகளை போல இஸ்லாமிய வங்கிகளும் சகல செயற்பாடுகளையும் இலகு படுத்திக் கொடுப்பது மட்டுமல்ல மாறாக இஸ்லாம் கூறும் உதவி மனப்பாங்குகள்    அதில் காணப்படவேண்டும்.  எனவே விதி முறைகளை கடைபிடித்தல் என்பது மட்டும் இஸ்லாமிய வங்கியின் நோக்கம் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவ்ண்டும்.
நான் ஆரம்பத்தில் கூறியது போல் சேவை என்பது முதன்மைபடுத்தப்பட்டு அல்லா தான் உயரிய நோக்கமாக இருக்க வேண்டும்.
எனவே இஸ்லாமிய வங்கிகள் என்பது  மற்ற வங்கிகள் போன்று இலாபம் உழைக்கும் வங்கிகளாக இருக்க முடியாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
இஸ்லாமிய வட்டி அற்ற நிதி நிறுவனம் அல்லது வங்கி என்றவுடன் பல அரபு சொற்கள் வழக்கத்தில் உள்ளன உதாரணமாக .முசாரக்கா , முலாரபா .ஈஜார் போன்ற இன்னும் பல சொற்களை வழக்கத்தில்  உள்ளன  .இவைகள் சாதரணமாக எல்லா வங்கிகளிலும்   பயன்படுத்தப்படும்  ஆங்கில சொற் பிரயோகங்களின் மாதிரிதான் .இதற்கென எந்த ஹதீஸ்களும்  அல்லது குரான் வசனங்களும் வங்கி முறைகளுக்கென பெயர் குரிப்பிடபபட்டவைகள் அல்ல..நபி (ஸல்) அவர்கள் அப்படி எதுவும்  கூறவும் இல்லை. எனவே அரபு சொற்களை மட்டும் பயன்படுத்தி வட்டியற்ற பொருளாதாரம் என்பதை நோக்காக கொள்ளாமல் .நோக்கம் இலக்காக இருக்க வேண்டும். நமது சமூக பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது , மார்க்கமே உயரிய கொள்கையாக  இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய வங்கிகள் மீண்டும் மீண்டும் ஏற்றத் தாழ்வை சமூகத்தில் ஏற்படுதுகின்றன .சமூகங்களின் காலடயில்  சென்று சமூகத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. என்ற குறைபாடுகள் உண்டு .இதனால்தான் சமூகத்தில் நலிந்தவர்கள் பிணை இன்றி எந்த உதவிகளையும் வங்கிகளில் இருந்துபெற முடியாத நிலை உள்ளது. எனவே மீண்டும் மீண்டும் சமூகத்தில் சக்தி வாய்ந்தவர்களே வங்கிகளில் பயன்  அடையக் கூடியவர்களாக உள்ளனர். இது மிகப் பெரும் குறைபாடு. இஸ்லாத்தில் இவாறான ஒரு சூழல் காணப்படமுடியாது.
முதலில் வட்டி என்றால் என்ன என்பதை வங்கிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் இஸ்லாம் வட்டி பற்றி என்ன சொல்கிறது .வட்டி என்பது இஸ்லாமிய வரை விலக்கணப்படி ஒருவருக்கு மற்ற ஒருவர் ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ அல்லது சேவையையோ வழங்கி அதன் மூலம் லாபம் அல்லது நட்டம் என்பதை   கருத்தில் கொள்ளாது லாபத்தில் மட்டும் பங்கெடுக்கும் செயன் முறைதான் வட்டி ஆகும் .இதன் விரிவான விபரங்கள் பற்றி நபி ஸல் அவர்கள் எமக்கு சொல்ல விட்டாலும் பொதுவாக வட்டி என்பதை மட்டும் வரை விலக்கணப் படுத்தி (அல்  ஆபன் முலா அபா ) என்ற பன்மடங்கு பெரும் நியாயமற்ற முறை என்பதை இஸ்லாம் சுட்டிக் காடுகின்றது இதேய குரானும் எமக்கு சொல்லிக் காட்டுகின்றது.
நபி ஸல் அவர்கள் வட்டி என்பதற்கு ஒரு வரை விலக்கணத்தை  கூறும் போது” "தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில்

உடனுக்குடன் கைமாறிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்." (புஹாரி) நபி ஸல்  அவர்கள் இங்கு கூறிய அம்சம் ஒரு எளிய உதாரணம். இந்த உதாரணத்தை முன்னிறுத்தி நாம் பல விடயங்களை அமைத்துக் கொள்ளமுடியும்.
இங்கு நபி ஸல் அவர்கள் ஒரு அளவீட்டைதான் இங்கு குறிப்பிட்டுள்ளார்கள் .ஆனால் நிபந்தனை இங்கு இல்லை ஆனால் நிபந்தனைகளை நாம்தான் வரை அறுக்க வேண்டும்
பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். இதற்கு சிறந்த உதாரணங்களை நபி ஸல் அவர்கள் வாழ்வில் நாம் காணக் கூடியதாக உள்ளது. .வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது. இத்தகைய ஒரு பொருளாதார முறைமை பற்றி பேச நாம் பின்வரும் இஸ்லாமியா பொருளாதார முறைமை பற்றி நாம் நுணுக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, "கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்'' என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை. மரத்தில் உள்ள பிஞ்சை விலை பேசலாமே தவிர, காயான உடன் வாங்கிக் கொள்கிறேன் என்று பிஞ்சாக இருக்கும் போதே விலை பேசக்கூடாது. ஏனென்றால் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது என்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படை.
உதாரணத்திற்கு, ஒரு மரத்தில் பேரீச்சையோ திராட்சையோ பிஞ்சாக இருக்கிறது. இதை வாங்குபவன், இதைக் கனியான உடன் நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறான். காயாக இருக்கும் போதே அந்தப் பொருள் இவ்வளவு வரும் என்று அவன் ஒரு கணக்கை வைத்திருப்பான். அந்தக் கணக்கு வந்தால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைய மாட்டான். ஆனால் அவன் போட்ட கணக்கு வரவில்லை என்றால் பொருளை வாங்கியவன் நஷ்டமடைகின்றான். பொருளை விற்றவன் இதில் ஒரு கணக்கை வைத்திருப்பான். அதாவது, இவ்வளவுதான் இதில் லாபம் வரும் என்று பொருளை விற்றவன் போட்ட கணக்கின் அடிப்படையில் லாபம் வந்தால் அவன் நஷ்டமடைய மாட்டான். இவனது கணக்கை விட அதிகமான கனிகள் வந்தால் விற்றவனுக்கு நஷ்டமாகின்றது. இப்படி இருவர் மனம் புண்பட்டுச் செய்யும் வியாபாரத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. இந்த வியாபாரத்தில் ஏமாற்றும் நோக்கம் இல்லாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைத் தடை செய்தார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். நூல்:( புகாரி 2194 )
ஹுமைத் அவர்கள் கூறியதாவது: "பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையாத வரை பேரீச்ச மரத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள்'' என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்களிடம், "பக்குவம்
அடைவது என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது'' என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி 2197
பேரீச்சம்பழம் மரத்தில் பிஞ்சாக இருக்கும் போது விற்கக் கூடாது. அப்படியே விற்கவேண்டும் என்றால் கனியாக ஆனவுடன் உள்ள விலையைப் பேசக்கூடாது. பிஞ்சிற்கு என்ன விலையோ அதைத் தான் பேசவேண்டும். பேரீச்சம்பழத்தை பொறுத்த வரை அது மஞ்சள் நிறத்தையோ சிவப்பு நிறத்தயோ அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு அது மரத்திலேயே இருந்தாலும் அதற்கு விலை பேசுவது குற்றமில்லை. ஏனென்றால் அது எல்லாவிதமான ஆபத்தையும் கடந்துவிட்டது. பயிரை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அனைத்தும் அரிசியாக வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதன் கீழ்பகுதி மஞ்சள் நிறத்தை அடைந்துவிட்டால் அதன் பிறகு அதற்கு ஆபத்தில்லை பேரீச்சம்பழத்தைப் பொறுத்த வரை அது மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாகவோ ஆனதற்குப் பிறகு காய்க்குறிய பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கெள்ளளாம்.
ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆபத்து இருக்கிறது. அந்த ஆபத்தை அது கடந்துவிட்டால் அதற்குப் பிறகு எந்த இடையூறும் இருக்காது என்று தெரிந்ததற்குப் பின்னால் அதை விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை என்பது கீழ்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பலன் உறுதிப்படுவதற்கு முன்னால் பழங்களை விற்பதைத் தடுத்துள்ளார்கள். அவர்களிடத்தில் "பலன் உறுதிப்படுவது என்றால் என்ன?'' என்று கேட்கப்பட்டது. "(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதே!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: புகாரி 1486 மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி, காய்க்கு விலை பேசி பணத்தை வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஒரு மனிதர் மற்றொரு மனிதனிடத்தில் மரத்தில் உள்ள பிஞ்சைக் காட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, இது காயான உடன் எடுத்துக் கொள் என்று சொல்கிறார். அந்த மனிதரும் சரி என்று சொல்கிறார். பிறகு பருவ நிலையாலோ அல்லது மழை வந்ததாலோ அல்லது வெயிலின் காரணமாகவோ அந்தப் பிஞ்சு காயாகவில்லை; உதிர்ந்து விடுகிறது. இப்போது ஒரு சகோதரன் தனது மற்றொரு சகோதரருடைய பணத்தை வாங்குவது எப்படிக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பக்குவமடைவதற்கு முன் அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள்! என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், பக்குவமடைதல் என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கவர்கள், "சிவப்பாக, மஞ்சளாக மாறுவதாகும்!' என்று பதிலளித்தார்கள். மேலும், "அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால் உம் சகோதரரின் பொருளை எந்த அடிப்படையில் நீர் ஹலாலாக (உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக) கருதுவீர்!'' என்றும் கேட்டார்கள். நூல்: புகாரி (I2208)

இந்த ஹதீஸை வைத்து நாம் பார்க்கும் போது விற்பவன் மீது மட்டும் குற்றம் என்பதைக் காட்டுகிறது ஆனால் நபி (ஸல்) அவார்கள் சொல்லும் போது விற்பவன் மீதும் வாங்குபவன்
மீதும் குற்றம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்பதற்குத் தடை விதித்தார்கள். இத்தடை விற்பவருக்கும் வாங்குபவருக்கும் உள்ளதாகும். நூல்: புகாரி (2194) ஒரு காய் மரத்தில் இருக்கும் நிலையில் அதை அப்படியே விற்பது தவறில்லை. இந்த நிலையைக் காட்டி இதற்கு அடுத்த நிலையில் உள்ளதற்கு விற்கக் கூடாது.
எனவே இங்கு நிபந்தனை இன்றி பொருள் பரிமாற்றம் நடை பெறுகின்றது .நிபந்தனை என்பது வாங்குபவரும் விற்பவரும் நஷ்டத்திலும் பங்கெடுப்பர் என்றிருந்தால் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை .இதானால்தான் நபி ஸல் அவர்கள் ஒரு பொருள் முழுமை அடைவதற்கு முன் வாங்குவதையோ விற்பதையோ தடை செய்யக் காரணம் எனலாம் .எனவே இஸ்லாமிய பொருளாதாரத்தில் இரு சாராரும் நன்மை அடைய வேண்டும்வியாபாரம் என்பது மன நிறைவாக இருக்க வேண்டும். விற்பவனும் வாங்குபவனும் பாதிக்கப்படக் கூடாது.
இந்தவகையில் தான் ஜாகிலிய  காலத்தில் காணப்பட்ட முசாபனா என்ற பொருளாதார முறைமை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள் .. முஸாபனா என்றால் மரத்திலுள்ள பக்குவப்பட்ட பேரீச்சம்பழத்திற்கு பக்குவப்படாத பேரீச்சம்பழத்தை விற்பது. ஒரு இனத்தை அதே இனத்தைச் சேர்ந்த ஒன்றிற்கு விற்பது. இந்த வகையான வியாபாரம் தவணை முறையில் தான் நடைபெறும். உதாரணமாக, பேரீச்சம்பழத்திற்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை, திராட்சைக்குப் பதிலாக திராட்சையை, மிளகாய்க்குப் பதிலாக மிளகாயை விற்பது, அதாவது ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டை விற்பது மார்க்கத்தில் தடையில்லை. மரத்தில் உள்ளதைக் காட்டி, "இதில் 100 கிலோ இருக்கும்; இது பழமான உடன் நீ எடுத்துக் கொள். இப்போது எனக்கு 100 கிலோ கொடு' என்ற ஒருவர் கேட்கிறார். அவர் சொன்னதைப் போன்று 100 கிலோ கிடைத்தால் பிரச்சனையில்லை. அப்படி இல்லாமல் வாங்கியவர் 100 கிலோவை வாங்கிவிட்டு மரத்தில் உள்ளது 90 கிலோவாகவோ 80 கிலோவாகவோ இருந்தால் மரத்தில் உள்ள பொருளை வாங்கியவர் பாதிக்கப்படுகிறார். இப்போது 100 கிலோ வாங்கியவர் கிடைக்காமல் போன 10 கிலோவிற்கு என்ன பதில் சொல்வார்? இதை நபி (ஸல்) அவர்கள் வட்டி என்று சொல்கிறார்கள். அப்படி மரத்தில் உள்ளது 100 கிலோவிற்கு அதிகமாக இருந்தால் விற்றவன் பாதிக்கப்படுகிறான்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். "முஸாபனா' என்பது மரத்திலுள்ள பேரீச்சங்கனிகளை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு முகத்தலளவையில் விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு முகத்தலளவையில் விற்பதுமாகும்! நூல்: புகாரி (2185) முஹாக்கலா
வியாபாரத்தை நபி (ஸல்) தடை செய்தார்கள். முஹாக்கலா என்றால் பக்குவப்பட்ட நெல்லை அதே இனத்தைச் சேர்ந்த ஒரு பொருளுக்கு விற்பதாகும். நெற்கதிர்களை கதிரில் வைத்து விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அது மஞ்சள் நிறம் ஆனதற்குப் பின்னால் விற்பதை அனுமதித்தார்கள். நெற்கதிர்கள் பச்சையாக இருக்கும் போது விற்றால் பச்சைக்கு என்ன விலையோ அதைத் தான் விலை பேசவேண்டும். அது மஞ்சளாதனற்குப் பின்னால் உள்ள நிலைக்கு விலை பேசக்கூடாது.
 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "முஹாகலா, முஸாபனா ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள். நூல்: புகாரி 2187 நபி (ஸல்) அவர்கள் வியாபாரத்தில் ஏமாறக்கூடிய, ஏமாற்றக்கூடிய அனைத்து வாயில்களையும் அடைக்கிறார்கள். வியாபாரம் என்று வரும் போது விற்பவனும் வாங்குபவனும் நஷ்டமடையாமல் இருப்பது இஸ்லாமிய வியாபாரத்தின் அடிப்படையாகும். இந்த இடத்தில்  வட்டி என்பதற்கான முதன்மை அம்சத்தை நபி ஸல் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே நபி ஸல் அவர்களின் காலத்தில் கானபப்ட்ட இந்த பொருளாதார முறைகளை எமக்கு கூறினாலும் நாம்தான் இன்றைய காலத்தில் காணப்படும் பொருளாதார அம்சங்களை முறை படுத்தி எடுக்க வேண்டும் . நான் இந்த நபி மொழிகளை இங்கு ஏன் கூறுகின்றேன் என்றால் சில பொருளாதார மாற்று நடைமுறைகளை விளங்கி கொள்ளவேண்டும் என்பதற்காகதான் .இவைகளின் மூலம் நாம் நமது பொருளாதார அம்சங்களை விளங்கிக் கொள்ள முடியும்
இந்த வகையில் சகல பொருளாதார அம்சங்களும் வட்டி என்ற எண்ணக் கரு இல்லாமல் போனால் மாற்று வழியாக அது ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகள் என்ற இருபக்க இணக்கப்பாட்டை அடைந்து விடும் . பொருளாதார செயற்பாடுகளும் வட்டியுடன் தொடர்புபட்டால் அது கடன் அல்லது அடமானம் போன்ற அம்சங்களில் இருந்து அது வட்டி என்ற தன்மைக்கு மாறிவிடும் .உதாரணமாக எனக்கு ஒருவர் பத்து  ரூபாய் கடனாக தருவாரானால் அதை நான் குறிப்பிட்ட ஒரு தவணையில் கொடுத்து விடுவேன் .இதே பத்து  ரூபாயை  மீண்டும்  நான் கொடுக்கும் போது அதற்கு நிகராக அதை விட ஒரு மடங்கு அல்லது அதிகமாக கொடுத்தால் அது வட்டியாக மாறிவிடும்.  அதே வேளை  அதை அந்த பணத்தின் தேய்மானம் கருதி,  அல்லது அதன் நீண்ட கால தேக்கு நிலை கருதி நான் சம்பாதித்த பணத்தில் இருந்து சிறுது அதிகமாக மனமுவந்து வழங்கினால்  அது வட்டி என்ற தன்மையில் இருந்து மாறி அது அன்பளிப்பு அல்லது முதலீட்டுக்கான தன்மையை பெற்று விடும் ஆனால் வட்டி என்பது மட்டும் அங்கு காணப்பட்டால்  அங்கு வட்டி நிபந்தனையாக மாறி பொருளாதார அம்சங்களை சீர்குலைத்து  விடும்  . எனவே வட்டி என்பது ஒரு விடயம் மட்டுமே அதாவது இலாபம் அல்லது நட்டம் என்பது கருதாமல் மேற்கொள்ளும் பண பரிமாற்றம் என்று நாம் கூறலாம் .

இந்த இடத்தில நாம் ஒரு கேள்வி கேட்கலாம்மேலே கூறிய விடயத்தை தானேமற்ற வங்கிகளும் அல்லது பணம் படைத்த வட்டி புரோக்கர்களும் செய்கின்றனர் என்று நீங்கள் கேட்கலாம் .இல்லை
1- இங்கு பணத்தை வாங்கும் வங்கிகள் லாபத்தை  மட்டுமே ஒப்பந்தமாக கொண்டுள்ளது.  இங்கு பிரதிபலன் வட்டி மட்டுமே .
2- மேலும் பணத்தை வழங்குபவர்களும் லாபத்தை மட்டுமே கருதி பணம் வழங்கு கின்றனர் .
எனவே இங்கு சேவை முக்கியமல்ல ,பணம் என்ன ஒப்பந்தத்தின் அடிப்படையில் கை மாறுகின்றது என்பதுதான் மிகப் பிரதானமானது.
இந்தவகையில்  பொருளாதாரம்  எதிர்பார்ப்பு இல்லாமல் வேறு ஒருவருக்கு கைமாற முடியுமா ? ஆம் உண்மையில் பணம் இஸ்லாத்தின் அடிப்படியில் பின்வருமாறு கைமாற்றப் படலாம்
1- நாம் கையில் பணம் வைத்திருந்தால் அந்தப் பணத்தை நலிந்தவர் அல்லது தேவையானவர் களுக்கு நன்மை கருதி வழங்கலாம் .
2- நமது பணத்தை சகாத் என்ற அடிப்படையில் கணக்கிட்டு வழங்கலாம .
3- தேவயானவர்களுக்கு அல்லது கடன் பளுவில் உள்ளவர்களுக்கு ஒரு தவணை அடிப்படையில் கடனாக வளங்கலாம .
4-தொழில் செய்யும் ஒருவருக்கு உதவி செய்து அதை இலாப நட்ட அடிப்படையில் பரிமாரம் செய்யலாம் .
5-யாரிடம் இருந்தாவது ஒருவர் பணத்தை பெற்று அதை மீண்டும் வழங்கும் போது அதற்கான ஒரு பெறுமானத்தை விரும்பினால் மனமுவந்து வழங்கலாம்  (பெற்றவர் இலாபம் அடைந்திருந்தால் )இதற்கான ஒரு உதாரணத்தை நபி ஸல் அவர்கள் கூறும் போது
ஆடு, மாடு, ஓட்டகம், கழுதை இவைகளை அடைமானம்  வைத்தால் அவைகளை அடைமானம் வாங்கியவர் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைப் பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (2511)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப்

பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 2512
தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன் 23:8) அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள். (அல்குர்ஆன் 70:32)
எனவே இந்த அடிப்படையில் பணத்தை அல்லது பொருளை  வழங்கும்  ஒருவர்  அதை மற்றவர் பயன் படுத்தலாம் என்பதையும் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதனையும் இங்கு நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது
பொதுவாக பணம் என்பது ஒரு திரவம் . அது இன்று இருக்கும் நிலையில் அடுத்த ஒரு மணித்தியாலத்தில் அதன் பெறுமானங்கள்   இருக்காது   எனவே பணத்துக்கு என்றொரு தனி பெறுமானம் உண்டு .எனவே யாராவது ஒருவருக்கு பணம் வழங்க வேண்டுமாயின் யாரும் எவ்வித பயனும் இல்லாமல் கொடுக்க மாட்டார்கள் அப்படி கொடுப்பதாக இருந்தால் ஏதாவது அட மனம் கொண்டாவது வழங்க முன் வருவர் .குறிப்பாக நிதி நிறுவனங்கள் நிட்சயமாக யாருக்கும் பணத்தை எவ்வித பெறுமானமும் இன்றி வழங்க மாட்டார்கள் இதைதான் நாம் இஸ்லாமிய பொருளாதார அம்சங்களில் முறைபடுத்தி எடுக்க வேண்டும்
ஆனால் நிதி நிறுவனங் களுக்கு ஒரு பிரச்சினை உண்டு அதாவது வங்கிகள் தாம் கொடுத்த பணத்தை பயனாளிகள்  லாபம் ஈட்டி உள்ளனரா இல்லையா என ஆராய்ந்து கொண்டு இருக்க முடியாது.
எனெவே  வங்கிகள் ஒரே ஒரு முறைமையை கையாள வேண்டும் பயனாளிகள் வங்கிகளில் இருந்து பெறும்  சேவைகளை நஷ்டம் அடையாத ஒரு பொறிமுறையை அறிமுகம் செய்யவும் வேண்டும். அதாவது இஸ்லாம் உழைத்து வாழ  கட்டளை இட்டுள்ளது .சும்மா வீட்டில் இருந்து கொண்டு சாப்பிட அனுமதி வழங்க வில்லை .அதே போல் ஆடம்பர அம்சங்களுக்கு மட்டும் பணத்தை பயன்படுடவதையும் இஸ்லாம் அனுமதிக்காது .அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டி ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து வாழ்வை மேற்கொள்ள இஸ்லாம் அனுமதிக்காது .எனவே கடன் வாங்குபவர் அல்லது பணத்தை கோருபவர் என்ன நோக்கத்திற்காக கேட்கிறார் என்பது மிக முக்கியாமானது .
உதாரணமாகக் ஒருவர் ஒரு வாகனத்தை வாங்க அல்லது இரிக்கின்ற வீடை உடைத்து கட்ட பணம் தேவைபட்டால் அதற்காக இஸ்லாமிய வங்கிகள் பணத்தை வாரி வழங்கி பின்னர் அந்த பணத்தை மீள பெற முடியாமல் தவிப்பதை இஸ்லாம் ஆதரிக்க வில்லை வீண் விரயம் இஸ்லாத்தில் தடுக்கப் பட்ட ஓன்று என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அதே போன்று இஸ்லாமிய வங்கிகள் ஏட்டிக்குப் போட்டியாக மற்ற வங்கிகளுக்கு நிகராக

பணத்தை வாரி வழங்கி பின்னர் அந்த பணத்தை பெற கஷ்டப்படும் நிலையை  தவிர்க்க வேண்டும் . எனவே இஸ்லாமியா வங்கிகள் தாங்கள் மற்ற வங்கிகள் போன்று செயத் பட முடியாது .இஸ்லாமியா சரியா அடிப்படையில் மட்டுமே தங்கள் சிந்தனையை மேற் கொள்ள முடியும்.
மேலும் மறைமுகமாக பண பரிமாற்றம் செய்வதையும் இஸ்லாமிய வங்கிகள் இல்லாமல் செய்ய வேண்டும். தாங்களும் வங்கிகள் என்பதற்காக எதையும் செய்ய முடியாது .இங்கு இஸ்லாம்தான் மிக முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல்  என்பது இம்மை மற்றும் மறுமை என்ற சிந்தனையுடன் சம்மந்தப்பட்டது ஆனால் மாற்று  வங்கிகள் அவ்வாறல்ல அவை உலகோடு சம்மந்தப்பட்டது அங்கு மனிதாபிமானம் என்பது இருக்காது லாபம் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் . இஸ்லாமிய வங்கி முறைமையில் பணக் கொடுக்கல் வாங்கல்  என்பது முக்கியமல்ல. இதனால்தான் இஸ்லாமிய வங்கிகளை விட லாபம் பன்மடங்காக வழக்கும் மாற்று வங்கிகளை தவிர்த்து பல முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய வங்கிகளை நாடும் காரணமாகும் .ஏனனில்  லபாங்களை விட கொள்கை உயர்வானது என்பதை யாரும் மறுக்க முடியாது
எனவே இஸ்லாமிய வங்கி என்பது பின்வரும் அம்சங்களை கவனத்தில் எடுத்துக்  கொள்ள வேண்டும்
1- இலாபாங்களை மற்ற வங்கிகளுக்கு நிகராக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .(சரியான முதலீடுகளை தெரிவு செய்தல் )
2- ஏனைய  வங்கி  முறைமை களை போன்று சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் (ATM, Credit Card)
3- கடன் திட்ட முறைமைகளை ஏனைய வங்கிகளோடு ஒத்த  இலகு முறைமைகளை  கையாள வேண்டும் (குறைந்தளவு  செலுத்துகை) இன்றுள்ள மிகப் பெரும்  குறை பாடு இஸ்லாமிய வங்கிகள் ஒரு பண பரிமாற்றத்துக்கு ஏனைய  வங்கிகளை விட அதிக செலுத்துகை முறைமை உள்ளதாகவும் இதனால் மக்கள் இஸ்லாம் அல்லாத ஏனைய  வங்கிகளுக்கு செல்வதாகவும் அறிய முடிகின்றது எனவே இதன் காரணத்தை நாம் கண்டறிய வேண்டும் .ஏன் மாற்று வங்கிகளுக்கு நிகராக மேற்கொள்ள முடியாது என்பதை பற்றி  சிந்திக்க வேண்டும். வெறுமனே வங்கியின் பங்கு தாரர்களுக்கு உழைத்து கொடுக்கும் வங்கிகளாக இஸ்லாமிய வங்கிகள் இருக்கக் கூடாது.
4- வழிகாட்டல் மூலம் கொடுக்கல் வாங்கல்  மேற்கொள்ளப்பட வேண்டும் (நட்டம் தவிர்த்தல் ) பணத்தை கொடுத்து விட்டோம் என்று நாம் நிம்மதியாக வங்கிகளில் இருக்க முடியாது அந்த பணம் எப்படி  கையாளாப் பட வேண்டும் என்பது பற்றியும்  நாம் சிந்திக்க வேண்டும்.


5-தங்களது பண செயற்பாடுகள் மூலம்  சமுதாய வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் . வங்கிகள் சமூகத்தில் உள்ள இஸ்லாமிய நிதி நிறுவனங்களுடன் மானசீக உறவை வைத்திருக்க வேண்டும் .அவைகளை தங்கள் நிறுவனங்களுடன் இணைத்து சமூக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
6- உதவி மனப்பாங்கான அம்சங்களை கைகொள்ள வேண்டும். நிட்சயமாக சமூக அபிவிருத்தியில் பங்கு கொள்ள வேண்டும் .நமது  வேலை இல்லை என்பது கருதி பேசாமல் இருக்க முடியாது.
எனவே இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் ஏனைய  வங்கிகள் போன்று மக்களை வங்கிக்கு வர வைத்து பணத்துக்கு ஆசை காட்ட முடியாது .மக்கள் காலடியில் சென்று குறைகளை அறிந்து சேவை செய்ய முன்வர வேண்டும்
எனவே இத்தகைய முன்மாதிரிதான் முஸ்லிம் சமூகத்துக்கு தேவை .வெறுமனே நாங்கள் வட்டியில்லா வங்கி நடத்துகின்றோம் என்று கூறிக் கொண்டு மிகவும் கஷ்டமான பணப் பரிமாற்ற முறைமையை ஏற்படுத்தி கொண்டால் அது நியாயமாக இருக்காது .உண்மையில் இஸ்லாமிய வங்கியின் தோற்றப்பாட்டை அல்லது அதன் தற்போதைய இருப்பு நிலையை பற்றி நாம் இந்த இடத்தில குறை கூறவோ விமர்சிக்கவோ  இல்லை  மாறாக சமூக மாற்ற திற்கும்   இத்தகைய வங்கி முறைமை பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதோடு   வட்டியற்ற வங்கி என்பதற்காக அதன் பெறுமானங்கள் சுமையாக இருக்கக் கூடாது.
முடிவு 
எனவே இஸ்லாமிய  பொருளாதார முறை என்பது வட்டியற்ற ஒரு பொருளாதார முறைமை .மேலோட்டமாக இந்த முறைமையை நாம் யாரும் சட்டம் வகுக்க கூடாது .இதனை தூர நோக்குடன் சிந்திக்க வேண்டும் .ஏனனில் பொருளாதாரம் என்பது சமூகத்தின் உயிர் நாடி .இதற்கான தீர்வு வழங்கப் படும் போது விசாலமான கண்ணோட்டத்தோடு  பார்க்க வேண்டும் .இந்தவகையில் உலகில் வளர்ந்து  வரும் இஸ்லாமிய வங்கி  முறைமை இன்று காலத்தின் தேவையாக பரிணமித்துள்ளது .இந்த வகையில் இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் சமூகத்தின் தேவை கருதி பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இன்றுள்ளது .வங்கி கொள்கை (BANK POLICIES ) என்பதை பார்க்கிலும் இஸ்லாமிய சிந்தனை வங்கிகளில் காணப்பட வேண்டும்.
(இந்தக் கட்டுரை எனது தனிப்பட்ட ஆய்வு கண்ணோட்டம் இதில் யாராவது கருத்துக் கூற விரும்பின் என்னை தொடர்பு கொள்ளவும் )
           

3 comments:

  1. நல்ல முயற்சி
    தொடர்ந்து முன்னெடுங்கள் !

    ReplyDelete
  2. A LAYMAN'S INTERPRETATION ON ISLAMIC BANKING

    Can Islam Based Banks Work Under a Different Definition of Interest?

    In the opinion of Muhammad Asad,
    "Every successive Muslim generation is faced with the challenge of giving new dimensions and a fresh economic meaning to the term Riba ( interest) which, for want of better word, may be rendered as usury."

    So the pressing question is, "Are Muslim scholars dynamic in reinterpreting the concept of usury (Riba) in order to find solutions to the problems arising in the modern contemporary world of advanced economics?"

    TRADITIONAL ALIMS'(Scholars) INSUFFICIENCY IN DEALING WITH COMPLICATED ECONOMIC PROBLEMS

    More knowledgeable Alims who have been well trained in both Islamic jurisprudence and in specialized fields of study such as economics, investment, insurance, banking, finance etc., should come forward and try hard to intellectualize the educational, marital, economic, financial, corporate, investment, banking, insurance and other mundane problems of the minority Muslims of India and the world.

    I am sure Islamic principles can not be as rigid as our conservative scholars expect us to believe. Please bear in mind that Muslim minorities are not governed by Wilayat-al-fiqih (Islamic laws), but are governed by compromising
    secular laws, hence we can not apply Islamic jurisprudence in their finest details in Toto.

    The basic question to be addressed is:
    "Do the secular laws of non-Muslim nations undermine the basic beliefs of Muslim minorities?"

    In accordance with the opinions of world renounced Imams (Muslim leaders) Muslim minorities ought to live by the laws of the country where they live, as long as the laws allow Muslims to adhere to the basic personal and private practices of Islam.

    This has been the position of millions of Muslims living in the U.S.A., U.K., France, Germany, Canada, Netherlands, Australia and in some of the Asian countries like
    India, China, Philippines, Thailand, Cambodia, Sri Lanka, Singapore etc

    Leaders of Muslim minorities should not make an illogical ruling on insurance or buying homes on mortgage and similar interest based contractual financial transactions, and put the minority Muslims at a very big economic disadvantage when their standard of living and per- capita incomes are several degrees far below the national average of the majority community.

    ReplyDelete
  3. ISLAM BASED BANKING IN OTHER COUNTRIES

    To take a case study, Malaysia has an excellent Islamic banking.

    Islamic bankers operate on financial rewards to the depositors, levy charges on the borrowers, The terminology varies but the basic principles remain very much the same.





    THE CONCEPT OF INTEREST (usury) IN ISLAM:

    The concept of interest is one of the most complicated in Islam. The Prophet received the revelation condemning riba only a few days before his death and so the companions had no opportunity to ask the blessed prophet (SAW) for the fullest implications of the order. Even Sayyidina Umar ibn al-Khattab had said,


    "The last revelation of the Quran was concerning riba(usury) and the Apostle of Allah passed away before explaining the full meaning of the passage to us" ( Ibn Hanbal, on the authority of Said ibn al-Musayyab).

    The exploitation of the economically weak by the strong is a form of oppression. Hence, attaching profits (riba) on the personal loans obtained by those who are really poor, downtrodden and debt-laden is a disgrace and is condemned as haram(forbidden) by Islam. There can never be two conflicting opinions on this.

    But not all interest-bearing financial transactions fall within this category of exploitation by the economically strong. Life assurance and buying houses on mortgage are two examples of contractual financial transactions which fall outside this category of exploitation.

    To quote Muhammad Asad again," the question as to what kinds of financial transactions fall within the category of riba(usury) is, in the last resort, a moral one".

    It is impossible to give an outright judgment in a non-Muslim country banning on all kinds of interest-bearing financial transactions, in a rigid and once-for-all manner putting the economically weak Muslim
    minority in non-Muslim majority countries at a greater economic disadvantage.

    The interpretation of Islamic scholars must not ignore the changes to man's environment on his social, economic and technological development.

    That is the adoring beauty of the Quran. It is Islam's biggest miracle. People living the third millennium may read the same Quran without an alphabet having been changed, but will see totally new light, new messages, new interpretations and new discoveries that go beautifully and logically cognizant of the socio-economic- technological environment of that time that we people living in the second millennium never ever dreamt of.

    Hence my simple assertion is that, our traditional Muslim scholars should not apply the first century Hijrah definition of Riba to solve the most complicated economic problems of the 21st century.

    One other point that is worth mentioning here is that, during the time of the Prophet(SAW) the value of money was constant and inflation was non-existent and hence Riba ( as the sort practised by Arabs like Abbas-RAA )was forbidden because the lender even after a year of waiting will get the money that he lent whose purchasing power had not diminished at all.


    But in many countries the annual rate of inflation
    is about 15 to 20%.

    In such a condition of rising prices, is it
    fair to expect a person depositing his money for
    safe-keeping ( or lending to another trader who
    makes profits) with a bank to withdraw the same
    amount without any additions, say after a period
    of 12 months.

    Should the Alims give a fatwa(judgment) that bank
    interest on deposit is haram, the depositor will
    get back the same amount whose purchasing power
    has fallen by 15 to 20%

    This is one of the angles (there are many others)
    from which we should aim for a new definition of riba(interest)

    WA MA TAWFIQ ILLA BILLAH
    Nothing from me except with the help of Allah
    P.A.Mohamed Ameen

    ReplyDelete