நோன்பும் அதன் சட்டங்களும்-இலத்திரனியல் நூல்
அஷ்செய்க் றஸ்மி மூஸா சலபி – MA
0097466805953
(Sri Lankan Research and Da’hwa Academy)
அல்லா கூறுகின்றான் “ நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு
முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் நோன்புகடமையாக்கப்பட்டுள்ளது.”அல்குர்ஆன்
2:184 .
மேலும் நோன்பு பேணுதலானது என்பதை நபி ஸல் கூறும் போது “யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை “ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி எனவே நோன்பு என்பது வெறும் சடங்குகள் அல்ல என்பது தெளிவாகின்றது
.அதே போன்று இதன் முக்கியத்துவம் என்ன ?
“நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து
விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி
எனவே இவைகள் எல்லாம் நோன்பின் மகத்துவத்தை
எடுத்துக்கூறும் சான்றுகளாகும். இந்த வகையில் நோன்பின் சட்டங்களை நாம்
பார்ப்போமானால் . முஸ்லிமான ,பருவவயதை அடைந்த .சித்த சுயாதீனமுள்ள ஆண் மற்றும்
பெண் மீது கடமையாகும் .
சிறுவர்களை நோன்பு பிடிக்க கட்டாயப்படுத்தல்
மேலும் பருவ வயதை அடையாத
சிறுவர்களை நோன்பு நோற்க பழக்கலாம் ஆனால் கட்டாயப் படுத்தக்கூடாது ஏனனில் அது
அவர்களின் கடமை அல்ல.ஒரு செய்தியில் வருவதாவது
“ஆஷுரா தினத்தில் நாங்களும்
நோன்பு நோற்போம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். அவர்களுக்குத் துணியால்
விளையாட்டுப் பொருளையும் தயார் செய்து வைத்துக் கொள்வோம். அவர்கள் உணவு கேட்கும் போது
அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து நோன்பு துறக்கும் வரை கவனத்தைத் திருப்புவோம்.
அறிவிப்பவர்: ருபைய்யி பின்த் முஅவித் (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்
இந்த செய்தி ரமலான் அல்லாத சுன்னதான் நோன்பை பற்றி வநதுள்ளதனால் இவைகள்
ஓரிரு நோன்புகளுடன் முடிந்துவிடும் ஆனால் ரமலான் கிட்டதட்ட ஒரு மாதம்
என்பதால் நாம் அவர்களை வருத்தாமல்
குறிப்பிட்ட ஓரிரு நோன்புகளை நோக்க செய்யலாம்.ஏனனில் சிலவேளை அது அவர்களின் உடல்
பலத்தை பலயீனப்படுத்தும்.
சிலர் சிறுவர்களுக்கு
உணவு கொடுக்க வேண்டும் சமிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களை கட்டாயப்
படுத்தி நோன்பு நோக்க செய்வதை பார்கின்றோம் இது ஏற்றுக் கொள்ளதகதன்று
நோன்பு தற்காலிகமாக மற்றும்
நிரந்தரமாக விலக்களிக்கப்பட்டவர்கள்
1- நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள்-வயது
முதிர்ந்தவர்கள்
உடலியல் பலம்
இல்லாதவர்கள் அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமன்றி உண்மையில் உடலை இயக்க சராசரி மனிதனுக்கு
இருக்கும் சக்தி அற்ற வைத்திய அறிவுறுத்தல்கள்பெற்றவரும் அடங்குவர் .இவர்கள்ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம்
என குரான் கூறுகின்றது (2:184) இந்த வசனம்
பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் போது, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், கிழவிகள் ஒரு நாள்
நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
நூல்: புகாரி .எனவே இவ்வாறு செய்வதால் அவர்களின் கடமை நீங்கி விடும் ஆனால் அப்படி
உணவு கொடுக்க வசதி இல்லை என்றால் அவர்களுக்கு அதுவும் கடமை இல்லை .இவர்களுக்கு
இயலாமை காரணமாக நிரந்தரமாக நோன்பு கடமை நீக்கம் செய்யப்பட்டுள்ளது .
2-
நோயாளியும் பிரயாணியும்
“நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால்
வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள .
“ அல்குர்ஆன் 2:184 எனவே இவர்கள் வேறு வசதியான காலத்தில் இதை நிறைவு செய்யலாம் .
எனினும் பயணிகள் நோன்பை
முடியுமானால் நோற்கவும் முடியும் .இது பற்றி வருவதாவது
“நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு
நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள். “ அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி) நூல்: புகாரி எனவே பயணத்தில் நோன்பு ஒரு சலுகை விரும்பியவர்
பிடிக்கலாம் விரும்பியவர் விடலாம் .இன்னொரு செய்தியில்
“பயணத்தின் போதும் நோன்பு
நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அது அல்லாஹ்வின் சலுகையாகும்.
யார் அச்சலுகையைப் பயன்படுத்திக்கொள்கிறாரோ அது நல்லதே! யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ
அவர் மீது குற்றமில்லை என்று கூறினார்கள். “ அறிவிப்பவர்: ஹம்ஸா பின் அம்ரு (ரலி) நூல்:
முஸ்லிம்
எனவே பிரயாணி நோன்பை
வசதிற்கேற்ப செய்து கொள்ளலாம் .ஒருவருடைய உரிமை என்பதால் பிறிதொருவர் பிரயாணியின்
கஷ்ட நஷ்டங்களை தீர்மானித்து பிரயாணத்தின் அளவு கோலை தீர்மானிக்க முடியாது .பயனங்களை
சொகுசான பயணம் அல்லது இலகுவான பயணம் என்று தீர்மானிக்கும் உரிமை யாருக்கும்
இல்லை.இது தனிநபர் உரிமை.எனவே பிராணியே தீர்மானிக்க வேண்டும் .
3- மாதவிடாய் பெண்கள்
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட
நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள்.
விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்.அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா
(ரலி) நூல்: முஸ்லிம் .எனவே மாதவிடாய் பெண்கள் அதிலிருந்து நீங்கியதும் நோன்பை
வேறு ஒரு காலத்தில் வாசதிற்கேற்ப நோக்கலாம் .இங்கு மாதவிடாய் காலத்தி பிற்போட
ஏதாவது குறிப்பிட்ட மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களும் உண்டு இது இஸ்லாத்தில்
தடை செய்யப்பட்டுள்ளது .இஸ்லாத்தில் இயற்கையான ஒன்றை செயற்கை படுத்தி கடமைகளை
செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை . உடலுக்கு தீங்கு தரும் எந்த ஒரு பொருளையும்
உபயோகிக்க யாருக்கும் உரிமை இல்லை (.இந்த மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை பாவிக்க அனுமதி இல்லை .
4-
கர்ப்பிணி தாய்மார்கள் – இஜ்திகாதானது
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும்
நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள். “ அறிவிப்பவர்: அனஸ்
பின் மாலிக் (ரலி) நூல்: நஸயீ இந்த அடிப்படையில் இவர்கள் நோன்பை மீட்ட எந்த
ஆதாரமும் இல்லை ஆனால் விரும்பினால் அவர்கள் தூய்மை அடைந்ததும் நோன்பை மீட்டலாம்
.நோன்ப்பை மீட்டுவது கட்டாயம் என்றிருந்தால் இவர்கள் தொடர்ந்து ஆறு பிள்ளைகள்
பெற்றால் பனிரெண்டு க்குமேற்பட்ட வருடங்கள் ஒரு பெண் நோன்பு நோக்க முடியாமல் பொய்
விடும் இதனால் குறிப்பிட்ட பெண்ணால் தர்மம் செய்வதோ அல்லது களா செய்வதோ
அசாத்தியமான விடயம் எனவே எனவே நேரடியாக ஆதாரம் இல்லாத காரனாதாலும் அசாத்தியம்ற
நிலை உள்ள காரணத்தாலும் இந்த சட்டம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விலக்களிக்கப்படுகின்றது
“ அல்லா ஒருவரை தனது சக்திக்கு மீறி கஷ்டப்படுதத்மாட்டான் “ என்பதற்கேற்ப
கர்பிணிப் பெண்களும் பாலூட்டும் பெண்களும் பலயீனமானவர்கள் என்பதாலும் ஒரு பெண்
தனது குழந்தையை பூரணமாக கவனிக்கும் உரிமை
பெற்றுள்ளார்
இதற்கு சான்றாக வரும் செய்தியான
இப்னு உமர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறும் போது “ ஒரு கர்ப்பிணி மற்றும்
பாலூட்டும் தாய் தனது குழந்தைக்கு பயந்தால் நோன்பை விடலாம் .அவர்கள் நோன்பை களா செய்ய
வேண்டியதில்லை ஆனால் ஒவ்வொரு ஏழைக்கும் உணவு ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும் “ என்ற இந்த செய்தி
.தப்ரானி தாரகுத்னி அபூ தாவூத் போன்ற கிரந்தங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது . எனவே
உண்மையில் சமூக அமைப்புகளில் இந்த இரண்டு பேருக்கும் உடலியல் வருத்தங்கள் இருப்பதால்
மேற் காணும் செய்தியை நாம் ஒரு முன்னுதாரணமாக எடுக்கலாம் .
எனவே நோன்பை காரணம்
காட்டி குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பது மிகப் பெரிய குற்றம் .அதே நேரம் தொடர்ந்து பிள்ளை பெற்று தனது ஆயுளை
கழித்து இதன் காரணமாக நோன்பை களா செய்ய
முடியாவிட்டால் அது பெரும் பாவமாக போய்விடும் .எனவே சமூகத்தில் முஸ்லிம் உம்மாவை உருவாக்கும் மிகப்பெரிய வணக்கமான பிள்ளைகளை பெற்றெடுக்கும்
இந்த கடமை இதனால் இவர்கள் அல்லாஹ்வால் நோன்பு விலக்களிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அது ஒரு சலுகையே .எனினும் முடியுமானவர்கள்
பின்னர் நோற்றுக் கொள்வது அவர்களுக்கு
நன்மையாக அமையும் .முக்கிய விடயம் என்னெவென்றால் கடமை நீக்கம் என்பது மரணித்தாலும்
நீங்காது என்பதால் கடமை இந்த இரு சாராராலும் தவற விட நிறைய வாய்ப்புக்கள்
உள்ளத்தால் நாம் இவர்களை களா செய்ய வற்புறுத்த முடியாது நபி ஸல் கூறினார்கள் “நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர்
நோன்பு நோற்க வேண்டும் என்பதாக கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.எனவே களா என்பது இவர்களுக்கு சாத்தியம் இல்லாமல் போகலாம்
அதே வேளை சிலவேளை இவர்கள் நோன்பு பிடிக்க
ஆசையில் அல்லது கடமை நிறைவேற்றம் செய்யும் பயத்தில் குழந்தை பேற்றைக் கூட இவர்கள் விரும்பாமல்
போகலாம் .எனவே இவைகளை கருத்திற்கொண்டு இவர்களுக்கு விலக்களிப்பது உசிதமானது .
நோன்பின் அமல்கள்
1-
இப்தார்
நோன்பு நோற்ற ஒருவர் நோன்பை ஒழுக்கமாக திறக்கவும் வேண்டும்
.அது நோன்புக்கு நாம் செய்யும் முழுமை அதை பிற்படுதுவதோ அல்லது அதை முறைப்படி
திறக்காமல் இருப்பதோ இஸ்லாமிய வழி முறை அல்ல நபி (ஸல்) கூறினார்கள் “
நோன்பு துறப்பதை விரைந்து
செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பொன்மொழி. அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி மேலும் ஒரு செய்தியில்
“நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம், போய் நமக்காக (நோன்பு
துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கு அம்மனிதர், இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே!
என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும்
பகல் நேரம் மிச்சமுள்ளதே!என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார்.
அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.அறிவிப்பவர்: இப்னு அபீ அவ்ஃபா (ரலி) நூல்: புகாரி மேலும்
நோன்பு திறந்த பின்னர் ஒதுவதற்கென எந்த பிரார்த்தனையும் இல்லை .இது தொடர்பாக வரக்
கூடிய சகல செய்திகளும் பலஈனமானவை.ஆனால்
பொதுவாக நோன்பு திறந்த பின்னர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியலாம் குறிப்பிட்ட
எந்த துவாவும் இல்லை
2- சகர்
இதே போன்ற ஒன்றுதான் சகர்
ஏற்பாடும் இதுவும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும் நபி ஸல் கூறினார்கள்
“நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்.
ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி “ மேலும் கூறும் போது
“நமது நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்ட
(யூத, கிறித்த)வர்களின்
நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் “
மேலும் சகர் செய்வதற்காக
அதிக நேர்மை முன்னதாக எழுவது சிலவேளை நமது சுபஹ் தொழுகையை பாதிக்கும் .சிலர் தொழாமலயே
தூங்கிவிடுவதும் உண்டு .எனவே சகரை பிற்படுத்தி செய்வது சிறந்தது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன்
ஸஹர் செய்து விட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி)
கூறினார்கள். (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம்
கேட்டேன். அதற்கவர்கள், ஐம்பது வசனங்கள் ஓதும்
நேரம் என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
எனவே சகர் என்பது கட்டாயபரல்
என்றில்லாவிட்டலும் கட்டாயமாக வலியுறுத்தப் பட்ட
நபி வழியாகும் .எனவே வேண்டுமென்று சகர் செய்வதை தவிர்க்காமல் பரகத் கருதி
செய்தல் சிறந்தது.
நோன்பின் போது
அனுமதிக்கப்பட்டவை
1-
நோன்பாளியாக இருந்து மறதியாக உண்ணுவது
நோன்பாளியாக இருந்து
மறதியாக உண்ணுவது நோன்பை முறிக்காது மறதியாக உண்ணுவது பற்றி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
“ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்
போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில்
அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)நூல்: புகாரி”
2-
மனைவியை முத்தமிடல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள்.
அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர்.அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி) நூல்: புகாரி
எனவே நோன்பிருக்கும் போது
மனைவியை முத்தமிடலாம் நோன்பை முறிக்காது .
3-
மருத்துவம் செய்யலாம்
நோன்பாளி மருத்துவம்
செய்யலாம் .லேசான நோயாக இருந்தால் தவிர .அதற்கான சிகிச்சை கருதி ஊசி போடலாம் ஆனால்
மாத்திரை போட முடியாது .இதே போன்று இரத்தம் குத்துவது ஒரு விசேட மருத்துவமாக
ஜாஹிலியாக் காலத்தில் காணப்பட்டது இன்றும் அரபு நாடுகளில் வழக்கத்தில் உள்ளது இதை
நபி ஸல் ஆரம்பத்தில் தடுத்தார்கள் பின்னர் அனுமதி வளங்கினார்கள்
.
ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப்
(ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக்
கடந்து சென்றார்கள். அப்போது, இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று
கூறினார்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்.அறிவிப்பவர்:
அனஸ் (ரலி) நூல்: தாரகுத்னீ (பாகம்: 2, பக்கம்: 182) மேலும் ஒரு செய்தியில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
காலத்தில் நோன்பு நோற்றவர் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என்று அனஸ் (ரலி)
அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதை நாங்கள்
வெறுத்தோம் என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ நூல்: புகாரி
எனவே யாருக்கும் பலயீனம்
எனக் கருதினால் இரத்ததானம் செய்வதை அல்லது இப்படி
வைத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சத்துள்ள பானங்கள் அருந்துதல்
மற்றும் ஊசி மூலம் உட்செலுத்துவதும் அனுமதி இல்லை
.நோய்க்கான மருத்துவம் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது
நோன்பை
முறிப்பவைகள்
1-
மனிவியுடன்
உடலுறவு கொள்வது அல்லது தாமாக இந்திரியத்தை வெளியாக்குவது .தூக்கத்தில் வெளியானால்
நோன்பு முறியாது
2- வாந்தி எடுத்தல்
வாந்தி எடுத்தால் நோன்பு
முறியுமா என்பதற்கு பல வாதப்பிரதி வாதங்கள் இருந்தாலும் இமாம் அல்பானி அவர்கள் அபூ
ஹுரைரா அவர்களை தொட்டும் வரும் நபி மொழியாகிய “யார் நோன்போடு வாந்தி எடுத்தாரோ
அவர் நோன்பை களா செய்ய தேவையில்லை. ஆனால்
வேண்டுமென்று எடுத்தால் அதை களாசெய்யட்டும்
“ ஸெஹ் இப்னு உதைமினும் இதே கருத்தை தனது "فتاوى الصيام" என்ற நூலில் குறிப்பிடுகின்றார் .
நோன்பை முறித்தால் சட்டமென்ன ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன்
நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே!
நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள்.
நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு
ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம்
நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க
உமக்குச் சக்தி இருக்கிறதா?
என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம்
செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின்
தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள்
நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள்
யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும்
அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!
என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி
எனவே எக்காரணம் கொண்டும்
நோன்பை முறிக்கக் கூடாது .அப்படி முறித்தால் மேலே உள்ள சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் .சட்டம் உள்ளது என்பதற்காக யாரும்
நோன்பை விட்டு சட்டத்தை நிறைவு செய்ய முடியாது .அது பாவமாகும்
நோன்பு (ரமலான் )தொடர்பான பலயீனமான செய்திகள்
நோன்பு திறந்த பின்னர்
ஓதும் எந்த விசேட பிரார்த்தனைகளும் இல்லை.
நோன்பு பிடிக்க செய்ய
எந்த விசேட துஆக்களும் இல்லை .நிய்யத் என்பது மனதினால் மட்டுமே. மொழிதல் அல்ல .
நோன்பு காலத்துக்கென எந்த
விசேட தொழுகையும் இல்லை .(தராவீஹ் +தகஜ்ஜுத் + கியமுல்லைல் + எல்லாமே ஒன்றுதான் )
இவை 23 ரக்கஅத்துக்கள் தொழ வேண்டும் என்பது ஆதாரமற்றவை
.
நோன்புகால தஸ்பீஹ்
தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை
.
நோன்பு இருபத்தியேழில்
லைலதுல்கதர் இரவு என்பது அடிப்படை ஆதாரமற்றவை
எனவே மேற்படி அமலை அல்லாஹ் ஏற்றுக்
கொள்வானாக.அல்லாஹ் மிகவும் அறிந்தவன்
பகுதி இரண்டு பெருநாள்
தொழுகை பற்றி தொடரும் இன்சா அல்லாஹ்

0 comments:
Post a Comment