பிக்ஹுத் துறை இஸ்லாமிய சட்டவாக்கத்தின் தொகுப்பு
(பாகம் - 1)
கட்டுரையாளர் றஸ்மி மூஸா சலபி
(என்னுடைய வெப் தளத்துக்கும் எனது ஆக்கங்களுக்கும்
நானே பொறுப்பு )
பிக்ஹு என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு முன்னால் அடிப்படை அம்சங்கள்
சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக :சுன்னா என்பது நபி ஸல் அவர்களின்
வாழ்கை முழுவதையும் குறிக்கும் .அதில் எதுவும் தனித்து நிக்காது உதாரணமாக நபி ஸல்
திருமணம் பற்றிக் கூறும்போது திருமணம் எனது வழிமுறை (சுன்னா) என்றார்கள் .ஹதீஸ் என்பது நபி அவர்கள தொடர்பான வரக்கூடிய
அனைத்து கூற்றுக்களையும் குறிக்கும் .அதாவது
(சொல் செயல் அங்கீகாரம் வர்ணனை போன்றவை) இவற்றுள் பிக்ஹு என்பது குரான் மற்றும்
மேற்கூறப்பட்ட எல்லா விடயங்களில்
இருந்தும் தொகுத்து எடுக்கப்பட்ட சட்டக்கோவையை குறிக்கும்.அதாவது இஸ்லாமிய வாழ்கை
முறைமைகளை தொகுத்துக் கூறும் சட்ட அம்சங்கள் ஆகும்
.
.இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு நபர் தனக்கு வேண்டிய சட்டங்களை அங்கும் இங்குமாக தேடிபெற முடியாது அவருக்கு இலகுவாக
அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும் உதாரணமாக தொழுகை எப்படி தொழவேண்டும் சகாத் எப்படி மற்றும்
எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பல நபி மொழிகளை
ஆதாரமாக தொகுத்து அதை ஒரே பார்வையில் பிக்ஹு என்ற துறைக்குள் கொண்டுவரல் என்பதை
நாம் சுருக்கமாக அறிய முடியும்
இத்தகைய ஒரு பாரிய முயற்சியைதான் நவீன
வளர்ச்சியடையாத காலத்தில் முன் சென்ற இமாம்களும் செய்தனர் அவர்கள் பிக்ஹு தொடர்பான பல
நூல்களை எழுதினர் அவை மார்க்க அறிவை பெற அப்போது நன்கு பங்காற்றியது எனலாம் இன்றும் அவைகள் சட்ட நூலாக பல நாடுகளில்
பின்பற்றப்பட்டுவருகின்றது இதுவே பிற்காலத்தில்
பிக்ஹு துறையாக வளர்ச்சி பெற்று
வந்துள்ளது
. .
இன்றுள்ள பிரச்சினை இதுதான் இப்படிபட்ட பிக்ஹு துறை பிற்காலத்தில் ஏன்
நம்பகத்தன்மை பெறவில்லை.ஏன் மார்க்க சட்டங்களில் ஒன்றோடொன்று முரண்பட்டது
என்பதுதான். உண்மையில் இதை விளங்கிக் கொள்வதில்தான் நமது மார்க்க அறிவு மேம்பாட்டில்
தங்கி உள்ளது .பிக்ஹு துறை மிகவும்
மேலோங்கியிருந்த காலத்தில் அதாவது குறிப்பாக நான்கு இமாம்களின் காலத்தில் இஸ்லாமிய
அறிவு இந்தளவு வியாபிதிருக்கவில்லை காரணம் அவ்வேளை இமாம்களுக்கு கிடைக்கப்பெற்ற நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு
சட்டங்களை வகுத்தனர் . இவைகள்
சமூகத்துக்கு ஒரு வரப்
பிரசாதமாக அவ்வேளை இருந்தது .நபி அவர்களின் சட்ட விளக்கங்களை பெறுவது என்பது இயலாத
ஒன்றாக இருந்தது காரணம் அவ்வேளை போதிய மார்க்க அறிஞ்சர்கள் இல்லாததும்
மற்றும் இன்றைய வசதி வாய்ப்புக்கள் போல் அன்று இல்லாததுமாகும்
எனினும் பிற்காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய சட்டத்துறை வளர்ச்சி குறிப்பாக நவீன இலத்திரனியல் சாதனங்களின் வளர்ச்சி இஸ்லாமிய சட்ட துறையை உலமாக்கள்
அல்லாத பலரும் இஸ்லாத்தை படிக்க பேச
மற்றும் பிரச்சாரம் செய்ய வழி வகுத்தது .இஸ்லாமிய கல்விக் கூடங்கள் உலகின் நாலா பாகங்களிலும்
பெருகியது சட்டதுரஈ தனித் துறையாக வளர்ச்சி பெற்றது .இதனால் இஸ்லாமிய அறிவை உலகின்
பல இன்று மூலை முடுக்குகளில் உள்ள ஒருவரும் இந்த
மார்க்கத்தை சரியான வடிவில் பெற வழிவகுத்தது .குறிப்பாக இன்று கூட ஹதீஸ் துறை
(உசூலுல் பிக்ஹு ) தரம் ஆய்தல் உலகில் நடை
பெறுவது இதற்க்கு நல்ல சான்று எனலாம் ஹதீஸ்களின் நம்பக தன்மை பற்றி இன்றும் கூட ஆய்வு
செய்யப் படுகின்றது.இது இஸ்லாமிய சட்டத்துறையின் உறுதிப்பாட்டுத் தன்மையை
எடுத்துக்காட்டுகின்றது .
இந்த இடத்தில இருந்து நாம் விளங்கிக் கொள்ளும் முக்கிய அம்சம் என்னவென்றால தெளிவானசட்டங்களை நமக்கு இப்போது ஒரு வினாடியில்
பெற்றுக் கொள்ளும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது பிழையான சட்டங்களை பகுத்து பிரித்து
அதை சரி காணும் திறன் இன்று வகுக்கப்பட்டுள்ளது .
இதனால் இன்றைய காலத்தில் பிக்ஹு துறை
பற்றி நாம் பேசுவதானால் அப்படி குறிப்பிட்ட ஒரு இமாமின் அல்லது மார்க்க அறிஞ்சரின்
சட்டத்துறை பின்பற்றுதல் சரி காணப்பட்டு குரான் ஹதீஸை மட்டும் பின்பற்றும் நிலை
உருவாகி உள்ளது காரணம் ஹதீஸ்கள் ஒரு
சட்டத்தை சரியாக சொல்லுமானால் அதுவே இஸ்லாமிய சட்டம் அதனால் ஹதீஸ்களை மீறி அல்லது
மறுதலித்து அல்லது நீக்கி எந்தவொரு சட்டத்தை யாரும் இயற்ற முடியாது .அப்படி பேசுவது
அல்லது சட்டம் வகுப்பது அதற்குப் பெயர் பிக்ஹு துறை அல்ல
எனவே ஒருவர் இன்று பிக்ஹு துறை பற்றி பேசினால் அது குரான் சுன்னாஹ் பற்றி
மட்டுமே பேச வேண்டும் .பிக்ஹு அதன் தொகுப்பாக மட்டுமே இருக்கு வேண்டும் .ஹதீசுக்கு
அல்லது குரானுக்கு எதிர்மறை விளக்கம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை .குறிப்பிட்ட
பிக்ஹு துறை இமாம்களே தங்களுடைய சட்டங்கள குரான் ஹதீசுக்கு முரண்பட்டால் அதை வீசி
விடுங்கள் எனக் கூறி உள்ளனர் அப்படி யாராவது தனக்கு விளங்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த
நினைத்தால் அதற்க்கு இஸ்லாம் எமக்கு அழகான
வழியை காட்டி உள்ளது அதுதான் இஜ்திகாத் (இரண்டாம்
பாகத்தில் எதிர்பாருங்கள்)
எனவே பிக்ஹு என்பது அது நபி ஸல் அவர்களின் வாழ்கை சட்ட தொகுப்பு .எந்த ஒரு
இமாமின் கருத்தோ அல்லது கொள்கையோ அல்ல அவர்களின் காலத்தில் கூட
அப்படிதான் அணுகப்பட்டு வந்துள்ளது .
இப்னு அப்பாஸ் அவர்கள் நபியினால் சட்டத்தை சரியாக பிரித்தறிந்து சொல்லும் சஹாபி
என்ற சிறப்பு அந்தஸ்தை கூட பெற்றவர் எனவே பிக்ஹு என்ற அந்த பயன்பாடு தனியான ஒரு
பிக்ஹு துறை இருப்பதைத்தான் உறுதிப்
படுத்துகின்றது சஹாபாக்கள் கூட பிரச்சினை வரும்போது நபி ஸல்
என்ன சொன்னார்கள் என்றுதான் அவதானித்தார்கள் அதில் நாம் ஐயம் கொள்ள எதுவும் இல்லை
இதற்க்கு சான்றாக பின்வரும் நபி மொழிகளை அவதானித்துப் பாருங்கள்
நபி ஸல் கூறினார்கள் 'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக
இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார்
அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு
மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி)
தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள் ஆதாரம் புஹாரி இங்கு முபக்கிக்ஹ என்ற
சொல் ஒரு சட்ட அறிஞ்சனுக்கு நபி ஸல் அவர்களால் கொடுக்கப்படுகின்றது .
மேலும்
'அல்லாஹ் என்னை நேர்வழி
மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த
பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத்
தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான்.
அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்)
புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப்
பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை.
அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க
விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம்
பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக்
கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான்
கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
இங்கு மார்க்க விளக்கத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதன் அவசியம்
உணர்த்தப்படுகின்றது
மேலும்
நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள்
அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம்
வந்து 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக்
களைந்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக்
கொண்டிருந்தார்கள்"என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த மேலுள்ள ஹதீஸில் மார்க்க சட்டம் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது .சட்டம்
பிறரிடம் கட்டாயம் கேட்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது
மேலும்
“ நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப்
பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான்.
கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக்
கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும்
வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ்
இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.இங்கு பிழையான மார்க்கு தீர்ப்பு வழங்குவதை நபி அவர்கள் சுட்டிக் காட்டுவது
புலப்படுகின்றது
மேலே உள்ள நபி மொழிகள் போல் ஏராளமான நபி மொழிகள் பிக்ஹு என்ற சொல் அல்லது அஹ்காம்
என்ற சொல் பயன் அன்று தொட்டு இன்றுவரை படுத்தப்பட்டு வந்துள்ளது நமக்கு நல்ல சான்றுகளாகும்
Ø
பிக்ஹு என்பது தனித்துறை
Ø
குரான் ஹதீஸ்களின் சட்ட தொகுப்பே பிக்ஹு என்பது
Ø
நபி ஸல் காலத்தில் பிக்ஹு என்ற விடயம் தனித்
துறையாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது
Ø
முன் சென்ற இமாம்கள் இந்த பிக்ஹு துறையை
சிறப்பாக செய்தனர்
Ø
குரான் ஹதீசுக்கு சாட்டங்கள் முரண்பட்டால் அது
பிக்ஹு அல்ல
ஆனால் இங்கு மற்றுமொரு பிரச்சினை என்னெவென்றால் ................தொடரும்
றஸ்மி மூஸா சலபி

0 comments:
Post a Comment