இஸ்லாமிய சட்டவாக்கம் இஜ்திகாத் -பாகம் - 2

| 0 comments

 இஸ்லாமிய சட்டவாக்கம் இஜ்திகாத் -பாகம் - 2

கட்டுரையாளர் –றஸ்மி மூசா சலபி

( பாகம் -2 )

முன்னைய கட்டுரையில் முதலாம் பாகத்தில் நான் இவ்வாறு கூறினேன்

“” எனவே ஒருவர் இன்று பிக்ஹு துறை பற்றி பேசினால் அது குரான் சுன்னாஹ் பற்றி மட்டுமே பேச வேண்டும் .பிக்ஹு அதன் தொகுப்பாக மட்டுமே இருக்கு வேண்டும் .ஹதீசுக்கு அல்லது குரானுக்கு எதிர்மறை விளக்கம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை .குறிப்பிட்ட பிக்ஹு துறை இமாம்களே தங்களுடைய சட்டங்கள குரான் ஹதீசுக்கு முரண்பட்டால் அதை வீசி விடுங்கள் எனக் கூறி உள்ளனர் அப்படி யாராவது தனக்கு விளங்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த நினைத்தால் அதற்க்கு இஸ்லாம் எமக்கு அழகான  வழியை காட்டி உள்ளது அதுதான் இஜ்திகாத் (இரண்டாம் பாகத்தில் எதிர்பாருங்கள்) “” என்பதாக

அந்த அடிப்படையில்  பிக்ஹு துறையை சரியான ஒரு கோணத்தில் விளங்கிக் கொள்ள இஜ்திகாத் என்றால் என்ன என்பதை மேலோட்டாமாக சொல்லுகின்றேன்

நபி ஸல் கூறினார்கள் “ஒரு சட்டவாளன் ஒரு சட்டத்துக்கு முயற்சி செய்து தீர்ப்பு வழங்கினால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு அதில் அவர் தவறு செய்தால் ஒரு கூலி உண்டு “ அறிவிப்பவர் அபூ ஹுரைரா அதாரம் நஸயி

இஸ்லாமிய ஷரியத் தொடர்பில் அதாவது, இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களான  நபி மொழி அல்லது அல்குரான்  வசனங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் போது  சில வேளை புரிந்துகொள்வதில் சிக்கல்கள் உண்டு. இது ஒரு  பொதுவான ஒரு விடயம். இது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ள ஒரு நடைமுறை சிக்கல்தான் எனினும் இவ்வாறு இஸ்லாத்தில் ஏதாவது ஒன்றை புரிந்து கொள்வதில் எதாவது கருத்து  மயக்கங்கள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால்  அவற்றை இஸ்லாமிய சட்ட வரையறைக்குள் நின்று மேலும் வேறு சில சட்ட உபாயங்கள் மூலம் தீர்க்க வேண்டிய ஒரு கடப்பாடு ஒரு ஆய்வாளனுக்கு அவசியம்.

ஒரு விடயத்தை பற்றி தெளிவில்லாமல்  இருந்தால் அது தொடர்பான வேறு எதாவது வலுசேர்ககூடிய ஆதாரங்களை தேடி அலசி ஆராய  வேண்டும். அப்போதுதான்  ஒரு சட்ட விடயம் தொடர்பாக ஒரு முடிவிற்கு எம்மால் வரமுடியும் .இதற்கு ஒரு சிறந்த வழியாகத்தான் அல்லாஹ் இஜ்திகாத் என்ற சட்ட பொறிமுறையையும் கூட எமக்கு அருளி உள்ளான்.

இங்கு இஜ்திகாத் என்பது கடுமையாக கஷ்டப்பட்டு தேடி சட்டங்களை சமூகத்துக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவே இலகுவாக யாரும் சமூகத்தில் சட்டம் சொல்ல முடியாது . துறை சார்ந்த நிபுணத்துவம் இதற்க்கு தேவை .இதைத்தான் இஸ்லாமிய ஆய்வியலில் இஜ்திகாத் என அழைகின்றோம்.

இந்தவகையில்  ஷரியத் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மிக அவதானம் தேவை.  அவற்றை நுணுக்கமாக பகுத்தாய்வு  செய்ய வேண்டும் .பதிலாக, நாம் ஆய்வை மேற்கொண்டுள்ள விடயம்  எமது புலன் அறிவிற்கு சிந்திக்க முடியவில்லை என்பதால்,அல்லது அதன் சான்றுகள் தெளிவில்லாமல் காணப்படுகிறது.அல்லது சமூகத்துக்கு ஒரு சரியான தீர்வை பெற முடியாமல் உள்ளது   போன்ற பல்வேறு  நொண்டி சாட்டுக்களை கூறி   அதிலிருந்து  இலகுவாக  யாரும் தப்பித்துவிட முடியாது.

ஏனெனில்  இப்படியான  குறுகிய ஒரு  சிந்தனைப்போக்கு  பரந்து விரிந்து வியாபித்து செல்லும் இஸ்லாமிய அறிவியல் துறைக்கு சிலவேளை முட்டுக்கட்டையாக கூட அமையக்கூடும்.

இதற்காகத்தான்  இஸ்லாமியசட்டதுறையில்  நியாயிதல் (Justification) என்ற விடயம் மிகவும்  அவசியமான ஒன்றாக இன்று கருதப்படுகிறது. நியாயித்தல் என்ற விடயம் இஸ்லாமிய சட்டத்துறையில் இன்றைய நவீன கால இஸ்லாமிய  அறிஜர்களின் ஆய்வுகளின் போது பயன்படுத்தப்படுகிறது. உலகளவிலும்   இச்சொல் பல துறைகளில் பிரபலமானது.  இந்த நியாயிதல்தான் இஜ்திகாத் என்ற சட்ட பொறிமுறையின் உள்ளடக்கமும் கூட.

இவற்றுக்கு அப்பால் இஸ்லாத்தில் உள்ள சஹீகான மற்றும் வலுவான சம்பவங்களை நாம்  நியாயபடுத்த மறுக்கும்  போது அது நடு நிலைமையான அறிவுத் தேடலுக்கு சிலவேளை  குந்தகமாக  அமையக்கூடும்.   குறிப்பாக  நபி (ஸல்) அவர்களுடைய நபி மொழிகள் தொடர்பான  அணுகு முறையின் போது  மிகவும் ஆழ்ந்து அவதானித்து கைக்கொள்ளவேண்டும்.

நபி மொழிகளில் ஏராளமானவை முன்னுக்கு பின் முரண் போன்று எமக்கு தோன்றலாம். உண்மையில் அவை முரண் அல்ல. அதனை நாம்  சரியானது   என  நியாயப்படுத்த முயற்சிக்கும் போது பல நிதர்சன  விடயங்கள் எமக்கு புலப்படகூடும் . அவ்வாறாக தோன்றும் விடயங்களை  நாம் முன்னர்  கூறியதுபோல்  ஏனைய ஆதாரங்களின் மூலம் அவற்றை நிவர்த்தி  செய்ய முயற்சித்தால் அதன் உண்மை தன்மை புலப்படும் .

உதாரணமாக   ஒன்றை சொல்வதானால் நபி (ஸல்) நீர் அருந்தும் போது நின்று கொண்டு அருந்தியதாகவும்அதே போல் சிறு நீர் கழிக்கும் போதும் நின்று கொண்டு கழித்ததாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது .ஆனால் நபி (ஸல்) அவர்களின் கண்டிப்பான உத்தரவு இவைகளை நின்றுகொண்டு ஒரு போதும் செய்ய கூடாது  என்பதாக , இதேபோல் தோற்று நோய் உண்டு என்பதாகவும்   இல்லை என்பதாகவும் பல நபி மொழிகள் உண்டு.  இவ்வாறு பல நபிமொழிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடானதுபோல் உள்ளது 
.
ஆனால் நாம் இவைகளுக்கு இடையில்  நின்று சட்ட நுணுக்கம் பெற  முயற்சிகின்றோம்  நாம் எதனையும் நிராகரிக்க முனைவதில்லை.  இவ்வாறு ஏராளமான தகவல்களை நாம் குறிப்பிடலாம் .இவ்விடயதில் நாம் நியாயித்து ஒரு முடிவிற்கு  வர முயற்சிப்பதற்கு காரணம்  இவைகள் நம்பகமான தகவல் என்பதாலும் , இவைகளின்   அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதனாலுமாகும். எனவே நாம் இந்த முரண்பாடான விடயங்களை அப்படியே விட்டுவிடுவதில்லை எனவே இவைகளுக்கு பரிகாரம்தான்  இந்த நியாயிதல்  எனும்  கோட்பாடு காணப் படுகின்றது.இது இஸ்லாமிய  சரியா துறையில் இது ஒரு மயில்கல் என்று கூட கூறலாம்.

இந்த  வகையில்  இஸ்லாமிய அறிவு எனும்போது அது அல்லாஹ்வுடைய அருளாகும் .நபி ஸல் அவர்களுடைய  சொற்படி "யாருக்கு அல்லா  நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான் "  என்பதற்கேற்ப இந்த அறிவு அல்லா விரும்பும் நல்லடியார்களுக்கு  வழங்குகிறான் . இவ்வறிவு கற்றுணர்வதினால்   மட்டும்   கிடைப்பதில்லை.  இந்த கோணத்தில்தான்  இஸ்லாமிய சரியா துறை வளர்ச்சி அடைந்தும்  வந்துள்ளது  என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.எனவே பிக்ஹு துறை பற்றிப் பேசும் ஒரு ஆய்வாளன் கட்டாயமாக இஜ்திகாத் பற்றிய சிந்தனை கொண்டிருத்தல் இன்றியமையாதது .


தொடரும் ..................

றஸ்மி மூஸா சலபி 

0 comments:

Post a Comment