இதுதான் கியாமுல் லைல் தொழுகை

| 0 comments

பர்ல் அல்லாத தொழுகை களை  தவிர ஏனைய தொழுகை களை நபீல் என்ற பெயர் கொண்டு அழை கின்றோம் .இந்த தொழுகைகள் கட்டாயம் நிறை வேற வேண்டும் என்றில்லாவிட்டாலும் ,நமக்கு நேரம் கிடைக்கின்ற போது செய்தால் போது மானது ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் அல்லா எந்தக் குற்றமும் பிடிக்க மாட்டான் ." அல்லா ஒரு மனிதனின் சக்திக்கு மீறி எந்த சுமையையும் சுமத்த மாட்டன் "இந்த வகையில் பல பர்ல் அல்லாத தொழுகைகள் உண்டு உதாரணமாக சொல்வதானால் ஜனாஸா ,மழை வேண்டி தொழல் போன்ற தொழுகைகளை குறிப்பிட முடியும். எனினும் ஐந்து வேளை தொழும் தொழுகையோடு தொடர்புபட்ட முன் பின் நபீலான தொழுகை மற்றும் இரவுத் தொழுகை என்பன மிக முக்கியமானது .
இதை நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து தனது வாள்நாளில் கடை பிடித்து வந்துள்ளனர் . இவைகளை மற்றவர்களுக்கு  செய்யுமாறு வலியுறுத்தா விட்டாலும் இதன் முக்கியத்துவத்தை பற்றி அதிகம் எடுத்து சொல்லியுள்ளனர் "எவர் ஒருவர் பர்லான தொழுகைகளுக்கு முன் பின் வரும் உபரியான 12 ரகத் தொழுகை களை நிறை வேற்று கின்றாரோ அவருக்கு அல்லா மறுமையில் ஒரு மாளிகையை கட்டுவதாக  புகாரி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் கியாமுல் லைல் என்று நாம் சொல்லும் இரவுத் தொழுகை பற்றி பார்ப்போமானால் இஸ்லாம் இந்த தொழுகைக்கு அதிக அழுத்தம் கொடுத்து சொல்கின்றது .இந்த  தொழுகை கட்டாயம் என்றில்லாவிட்டாலும் குரான் மற்றும் ஹதீஸ்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தொழுகையாகும் .இந்த தொழுகை குர்ஆனில் பர்ல் தொழுகை பற்றி கூறப்பட்டுள்ளதை விட அதிகமான இடங்களில் கூறப் பட்டுள்ளது.

இஸ்லாத்தில் சில பர்லான அமல்களில் இல்லாத நன்மைகளை அல்லா சில நபீலான அம்சங்களில் வைத்துள்ளான் .அப்படி சிறப்பாகப்பட்ட ஒரு அமல்தான் இந்த கியாமுல் லைல் என்றளைக்கப்ப்படும் இந்த இரவுத் தொழுகை யாகும். யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகின்றாரோ அவருடைய, முன்னரும் பின்னரும் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என அபூஹுரைரா(ரலி) . அறிவித்துள்ளார்கள் . இது புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது  இவ்வாறு ஏராளமான நபி மொழிகள் இது பற்றிக் காணப்படுகின்றது.

" நபி ஸல் அவர்கள் தங்க களத்து கால் பாதம் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள் உங்கள் முன் பின் பாவங் கல் மன்னிக்கப் பட்டவர் அல்லவா நீங்கள் எனக் கேட்டால் .நான் நன்றியுடைய அடியாராக இருக்கக் கூடாத எனக் கேட்பார்கள் " (புகாரி , முஸ்லிம்
எனவே இதன் முக்கியத்துவம் பற்றியோ அல்லது இதன் கட்டமைப்பு பற்றியோ இந்த ஆய்வில் நான் சொல்ல வரவில்லை. இந்த தொழுகையின் உண்மையான யதார்த்தம் என்ன ?என்பதை மட்டும் இந்த கட்டுரை மூலம் சொல்ல விளைகின்றேன். இந்த தொழுகையை பொறுத்தவரையில் அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள இந்த தொழுகை ரமலான் காலத்தில் மட்டுமுள்ள ஒரு தொழுகையாக நமது சமூகத்தில் நிறை வேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுவும் குறிப்பாக ரமலான் காலத்தில் இஷா தொழுகைக்கு பின்னால் நேர காலத்தோடு பட படவென நிறைவேற்றப்படும் ஒரு மரபு ரீதியான தொழுகையாக போய் விட்டது.
இந்த தொழுகையை  ஜமாத்தாக தொழுவதோ அல்லது இஷாவுக்குப் பின்னர் தொழுவதோ அல்லது ரமலானில் தொழுவதோ எந்தப் பிரச்சினையும் இல்லை . ஆனால் உண்மையாக இந்த தொழுகை நாடப்படும் நேரம் என்ன ?ஏன் இஸ்லாம் இந்த தொழுகையை குறிப்பிட்ட அந்த நேரத்தில் கடமையாக்கி உள்ளது ? என்பதுதான் நாம் அறிய வேண்டிய மிக முக்கியமான  கேள்விகளாகும் .
இந்த தொழுகை நிறைவேற்ற இஸ்லாம் எதிர்பாக்கும் நேரம் என்ன ? என்பதை நாம் பார்த்தால் நபி ஸல் அவர்கள் இந்த தொழுகையை பின்னிரவில் தொழுது வந்துள்ளனர் அதாவது கூடுதலாக தூக்கத்தை விட்டும் எழுந்து இந்த தொழுகையை நிறை வேற்றி உள்ளனர். இது தொடர்பாக வரும் ஒரு செய்தியில் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூச்) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். என்னுடைய காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்கள் மறுபடியும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து மற்றும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ஸுபுஹுத் தொழுகைக்காக (வீட்டைவிட்டு) வெளியே சென்றார்கள்.இதை தழுவி மேலும் பல நபி மொழிகள் வந்துள்ளன.
இவ்வாறு தூக்கத்தை விட்டும் எழுந்து இரவின் கடைசிப் பகுதியில் தொழுவதற்கான காரணம் என்ன ? என்பதை நாம் பார்த்தல் அல்லா தனது ஹதீசுல் குத்சியில் கூறுகின்றான் "அல்லா ஒவ்வொரு இரவிலும் அடி வானத்தில் இறங்கு  கின்றான் அவ்வேளை இரவின் கடைசி மூன்றி ஒரு பகுதி மட்டும் எஞ்சி  இருக்கின்றது. அவ்வேளை அவன் கூறுகின்றான் யார் என்னை  அழைகின்றாரோ அவருக்கு நான் பதில் அளிகின்றேன். யார் என்னிடம் கேட்கின்றாரோ நான் அவனுக்கு கொடுக்கின்றேன். யார் என்னிடம் பாவ சித்தம் செய்கிறாரோ  நான் அவருக்கு அதை ஏற்றுக் கொள்கின்றேன் "
என அபூ ஹுரைரா (ரலி )அறிவிக்கும் நபி மொழி புஹாரியில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
எனவே தியாகம் மற்றும் அல்லாஹ்வை சந்திக்கும் நேரம் என்பன இரவின் மூன்றில் கடைசி பகுதி என்பதால் இதன் உண்மையான் நேரம் அதுதான் அதனால்தான் திர்மிதியில் வரும் ஒரு ஹதீஸில்"  மக்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது நீங்கள் இரவில் எழும்பி தொழுங்கள் சாந்தமாக சுவர்க்கம் நுழைவீர்கள் " என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது
எனவே இந்த தொழுகையின் உண்மையான தாத்பரியம் அதுதான் .நாம் கஷ்டப் பட்டு எழும்பி தொழும் போது அல்லா அடிவானத்துக்கு இறங்கி வந்து  தனது அடியார்களை அவனே கேள்வி கேட்டு அவனுடைய நல்ல பாகியங்களை வழங்குகின்றான் .
மேலும் இந்த தொழுகையை நபி ஸல் அவர்கள் தனியாக வீடுகளில் தொழுவதை அதிகம் விரும்பி உள்ளனர் .மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உஙகள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! (புஹாரி)  என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.ஸைத் பின் ஸாபித் (ரலி) அறிவிக்கும் செய்தி புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"நீங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் உங்கள் வீடுகளை அடக்கஸ்தளங்களாக   ஆக்க வேண்டாம் " என்ற மற்றுமொரு ஹதீஸ் எமக்கு இன்னும் வலு சேர்க்கக் கூடியதாக உள்ளது .
எனவே இந்த தொழுகையை ஜமாத்தாக தொழுவது தொடர்பாக வந்துள்ள ஆதாரங்களை நாம் பார்த்தால் நபி (ஸல்) அவர்களை தொட்டும் மற்றும் உமர் ரலி அவர்களை தொட்டும் வந்துள்ள ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளது முதலில் நபி ஸல் அவர்களை தொட்டும் வந்துள்ள ஹதீஸில் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். 'இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)" என்று கூறினார்கள்
மேலும் ஒரு செய்தியில் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம்இல்லத்திலேயே) அமந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உஙகளது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உஙகள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! (புகாரி)என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
இங்கு இரண்டு விதமாக இந்த ஹதீஸ்கள் வந்துள்ளன ஓன்று வீட்டில் ஒரு அறையை அமைத்து தொழுதுள்ளனர் அதை பின்பற்றி மக்கள்  தொழுதுள்ளனர் . அதே போல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு சென்று தொழுதுள்ளனர் அதை பின்பற்றி மக்கள் தொழுதுள்ளனர் இந்த இரண்டிலும் நபி (ஸல்) அவர்கள் இந்த தொழுகையை வீடுகள் நிறைவேற்றுவதை விரும்பி உள்ளதால் வீடுகளில் தொளுதிருக்கலாம் அல்லது அவர்கள் பள்ளியில்தான் தொழுதார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இரண்டும் சஹீகான வைதான்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள் விரும்பாமல்தான் சஹாபாக்கள் பின்னால் நின்று தொழுதுள்ளனர். இதற்கு ஒரு சான்றுதான் நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் அவர்களுடைய தலை அசைவை பார்த்து இந்த தொழுகையை நிறை வேற்றி உள்ளனர். இந்த தொழுகையை ஜமாத்தாக நிறை வேற்ற ஒரு விருப்ப மின்மையை உணர்த்தியது இந்த செய்திகளில் தென்படுகின்றது . அதற்கு அவர்களே பதில் கூறும் போது இது உங்களுக்கு பர்ல் ஆகஆகி விடுமோ என அஞ்சிக் கொள்வதாக் கூறிய காரணம் இதுதான்.
அடுத்ததாக உமர் ரலி அவர்களை தொட்டும் வாரக் கூடிய ஒரு நபி மொழியை  பார்ப்போமானால் .அதாவது ஒருமுறை
அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். (புகாரி)
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார். இங்கு உமர் ரலி அவர்கள் இந்த தொழுகையை இரவின் பிற்பகுதியில் தொழுவதை தான் அந்த இடத்தில வலியுறுத்தி வந்துள்ளனர் .
அடுத்ததாக நபியோ (ஸல்) அவர்களுடன்   மக்கள் சேர்ந்து தொழுதது கூட இரவின் பிற்பகுதியே  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்இதனால்தான்  நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வலியுறுத்திய விடயம் இந்த தொழுகை பர்லாக ஆகி விடும் என்ற ஒரு காரணதிட்குதான்  என்ற அம்சத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
அடுத்ததாக இஷாவின் பின் என்பதும் கூட நபி (ஸல்) அவர்களின் இஷாவுடைய நேரம் என்பது நாம் இன்று  தொழுகை நிறைவேற்றும் நேரம் அல்ல அது ஒரு பிந்திய இரவு  நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடாத்த வரும்வரை சஹாபாக்கள் தூங்கி விழுவதாக ஹதீஸ்களில் வந்திருப்பதைக் காணலாம்அந்த அளவுக்கு அவர்கள் பிந்திய நேரத்தில் இஷா தொழுகையை நிறைவேற்றி வந்துள்ளனர் . ஹுமைத் இத்தவீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுகை நடத்தினார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)' என்றார்கள்  புகாரியில் இந்த செய்தி பதிவு செய்யப் பட்டுள்ளது.
அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்கள் இஷாவை பிற்படுத்தி உரிய  நேரத்திற்கு தொழுதுள்ளனர்  அதாவது மக்ரிப் தொழுகையில் இருந்து இஷாவுக்குரிய உண்மையான நேரத்தில் தொழுது வந்துள்ளனர் என்பதை இன்னும் பல நபி மொழிகளில் காணக் கூடியதாக உள்ளது . எனவே இந்த இஷா என்பதை நாம்

நேர காலத்தோடு கணிப் பீடு செய்து இந்த  தொழுகையை நிறைவு செய்வதை தவிர்த்து கூடிய மட்டும் பிந்திய இரவில் தொழுவதை வழக்கமாக்கிக் கொண்டால் அது சிறந்த பயனை தரும். மக்கள் இந்த நேரத்தை தவிர்த்துக் கொண்டால் அவர்கள் இந்த தொழுகையை அறவே தொழமாட்டார்கள் என்று நாம் நினைக்கத் தேவை இல்லை. ஏனனில் மார்க்கத்தில் பிடிப்பு என்பது அவரவர் தனிப் பட்ட விருப்பு குறிப்பாக சுன்னத்தான அமல்களை பொறுத்தவரையில் அப்படிதான் .ஆனால் இந்த தொழுகை நிறை வேறப் படாமல் போய்விடும் என்று நாம் எண்ணிக் கொண்டால் உண்மையாக் இந்த தொழுகை எமக்கு நிறைவேற்றப் பணிக்கப்பட்ட நேரம் தவறிவிடும் .இந்த தொழுகையை பொறுத்தவரையில் தியாகம்  என்பது மிக முக்கியமானது இதனால்தான் அல்லா குர்ஆனில் இந்த தொழுகையின் சிறப்பை பற்றி அல்லா கூறும் போது பல இடங் களில் கூறுகின்றான்
"இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதாஎன்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.(17:79)
இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக; ( 73:2)
இதேபோல் அல்லாஹ்வும் பல இடங் களில் வலியுருதுவதை  நாம் காணலாம்
"மேலும் அல்லா கூறும்  போது" அவர்கள் அல்லாஹ்வை சுஜூது செய்த நிலையிலும் நின்றவர்களாகவும் இரவை களிப்பர் " (25 :64)

" அவர்கள் விலா புறங் கள் படுகையில் இருந்து விலகி இருக்க தமது இரச்சகனை அச்சத்துடனும் ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள் மேலும் நாம் வழங்கி இருந்தவைகளில் இருந்து செலவும் செய்வார்கள் எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த தற்கு கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப் பட்டுள்ள கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது "32 : 16  இவ்வாறு இதன் முக்கியத்துவம் சொல்லப் பட்டுள்ளது 

மேலும் நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில்

இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.( 73:  20)
இவ்வாறு இரவில் நின்று வணங்குவதன் சிறப்புப் பற்றி பல கோணக் களிலும் சொல்லப் பட்டுள்ளது .
முடிவு
அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் அதிகம்   வலியுறுத்தி  கூறப் பட்ட ஒரு தொழுகை இது .
இதனை இரவின் ஆரம்ப நேரங்களில் வழமையாக தொழுவதை       தவிர்த்து அல்லா எதிர்பார்ர்க்கும் அந்த பின்னிரவில் தொழுது கொள்ளும் பாக்கியமிக்க நேரத்தை நாம் அடைந்து கொள்ள வேண்டும் .
ரமலான் மாதத்துக்குரிய தொழுகை இதுவல்ல .இது ஆயுள் பூராவும்  வாழ்கையில் செய்து வரவேண்டிய ஒரு வணக்கம் .
முன்னிரவில் தொழுது கொள்ளும் முறை பழக்கப் படுத்திக் கொண்டால் அல்லா எதிர்பார்த்து அருளும் அந்த நட பாக்கியங்கள் இல்லாமல் போய் விடும் . எனவே இந்த தொழுகை மூலம் அல்லா எதிர்பார்க்கும் நல்ல பாகியங்களை பெற முயற்சி செய்வோமாக






0 comments:

Post a Comment