தொழுகையின் சுத்ரா முறைமை அவசியமானதா ?
--------------------------------------------------------
--------------------------------------------------------
அஸ்ஸெஹ் றஸ்மி மூஸா சலபி
----------------------------------------------------------------
சுத்ரா என்பது தடுப்பு அல்லது மறைப்பு என்ற பொருள் பொதுவாக கொடுக்கப்பட்டாலும் வழக்கத்தில் நாம்
கருத்தாக கொள்வது ஒருவர் தனியாக தொழும்போது (வெளி இடம் )ஏதாவது ஒரு மறைப்பை
ஏற்படுத்தி கொள்வது. இதன் மூலம் தொழுகின்ற ஒருவருக்கு வெளி தலையிடுகள் இருக்கக்கூடாது
என்பதாகும். இது தொடர்பாக வந்துள்ள பல நபி மொழிகளில் நபி ஸல் அவர்கள் மஸ்ஜித் அல்லாத வெளி இடங்களில் சுத்ரா வைத்துகொண்டு
தொழுதுள்ளார்கள் என்று வந்தாலும் மஸ்ஜிதுக்ளில் சுத்தரா பயன்படுத்தினார்கள் என்று
வரவில்லை எனினும் மஸ்ஜிதுகளில் இதை பயன்படுத்துவது
தடை என்ற முடிவிற்கு நாம் வரவில்லை . எது
எப்படி இருந்தாலும் சுத்ரா என்பது ஒரு
தொழுகையாளி அல்லது இமாமாக தொழுகை நடத்துபவர் தடுப்பு ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்பது
தெளிவானது
ஏனனில் நபி ஸல் கூறினார்கள் “தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால்
அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாற்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு
நல்லதாகத் தோன்றும்“என்ற செய்தி ஸஹீஹுல்
புஹாரியில் காணப்படுகின்றது இந்த அடிப்படையில் தொழுகையாளிக்கு இடைஞ்சலாக
யாரும் இருக்கக் கூடாது. அது பாவமானது .எனவே சுத்ரா என்பது மற்றவர்களுக்கு ஒரு
தடையாக அல்லது அடையாளத்தை காண்பிப்பதாக இருக்கும் .
யாருக்கு இந்த சட்டம்
பொதுவாக இது மஸ்ஜிதுகள் அல்லாத இடங்களில் தனியாக ஒருவர் தொழும்போது பயன்படுத்தலாம்
ஏனனில் மஸ்ஜிதுகளில் தொழுகைக்கான குறியீடுகள்
மற்றும் ஜமாஅத் அமைப்பு முறைகள்
இருப்பதால் இதன் பாவனை சற்று சிரமாமனது எனினும் இவைகளை வெளியிடங்களில் தொழும்போது பயன்படுத்தலாம் .
எனவே வெட்டவெளியில் தொழுகின்ற ஒருவர் நபி ஸல் கூறியது போல் அம்பையேனும் முன்னால்
வைத்துக் கொண்டு தொழுமாறு ஏவினார்கள் மேலும் புகாரியில் வரும் ஒரு செய்தியில் தலை
கவசத்தை கூட நபி ஸல் அவர்கள் பயன்படுத்தி
உள்ளனர் .
மஸ்ஜிதுகளில் தொழும் போது நபி ஸல் சுத்ரா முறைமையை பயன் படுத்தினார்கள் என்று எந்த ஒரு இடத்திலும்
செய்திகள் இல்லை. காரணம் அங்கு வெளி தலையீடுகள் இருக்கவில்லை என்பதும் பொதுவாக ஜமாதாகவே நபி அவர்கள் தொழுது
வந்துள்ளதால் இமாமுக்கு பள்ளி சுவர் தடுப்பாக இருந்தது .
இதன் அளவு என்ன ?
பொதுவாக இதற்கு அளவு குறிபிட்டு சொல்லப் படவில்லை நபி ஸல் ஈட்டியை யேனும் பயன்படுத்துமாறு
கூறினார்கள். மேலும் ஒட்டகத்தை பயன்படுத்தினார்கள்.
தலை கவசத்தை பயன்படுத்தினார்கள் .அதே வேளை ஒட்டகத்தை கட்டி வைக்கும் கட்டையை பயன்படுத்தினார்கள்
என்றும் வருகின்றது. எனவே வெளிஇடத்தில தொழும் ஒருவர் எதோ ஒரு தடுப்பை ஒன்றை பயன்படுத்தவேண்டும் என்பது தெளிவு” நபி
அவர்கள் பிரயாணத்தில் இருந்தால் தனது தலை கவசத்தை தடுப்பாக பயன்படுத்துவார்கள் “
இப்னு மாஜா( 778 )என செய்தி வருகின்றது
.
மேலும் நபி ஸல் அவர்கள் தனக்கு ஏதாவது ஒரு இடத்தில கிடைக்கும் தடுப்பை பயன்படுதுவார்கள்.
இதைதான் பின்வரும் செய்தி ஆதாரமாக அமைகின்றது. இப்னு உமர் ரலி அவர்கள் “நபியவர்கள் தன் வாகனத்தை குறுக்காக நிறுத்தி அதை
முன்னோக்கித் தொழுவார்கள் என்று கூறினானர்கள்.
அப்போது கேட்கப்படுகிறது வாகனம் ஒடிவிட்டால் அதாவது சுத்ராவாக நிறுதிதப்பட்ட ஒட்டகம்
ஓடிவிட்டால் என்ன செய்வது அதற்கு அவர் வாகனம்
ஓடிவிட்டால் அந்த வாகனத்தின் இருக்கையை எடுத்து
அதை முன்னோக்கி சுத்ராவாக வைத்து தொழுவார்கள் ஸஹீஹுல் புஹாரி 507 என்ற செய்தி
பதிவு செய்யப்பட்டுள்ளது .
எனவே நபி அவர்கள் எல்லா அளவுகளிலும் சுத்ராவை
பயன்படுத்தி உள்ளதால் சுத்ராவுக்கு ஒரு அளவு கிடையாது ஹதீஸ்களில் வந்துள்ள
அளவுகள் எல்லாம் சந்தர்பத்துக்கேற்பவே என்பதை புரிந்து கொள்ளலாம்.மேலும் சிலர் சொல்வது போல் ஒட்டகம் கட்டும் கட்டை அளவு என்றால் அது அசாத்தியமான விடயமாக போய்விடும் .கிடைக்கும் பொருடகள் எமக்கு சுத்ரவாக பயன் படுத்தலாம் .
அதே நேரம் இது தொழுகைக்கு இது கட்டாயமானது அல்ல நபி ஸல் காலத்தில் சுத்ரா பயன்படுத்தப்பட்ட முக்கிய காரணம் கழுதை, ஒட்டகங்கள்
மற்றும் வேறு சில இடைஞ்சல்கள் இருந்ததுதான் . புகாரியில் அபூ தார் அறிவிக்கும்
செய்தி (510
) வருவதாவது மிருகங்களை கட்டி வைக்கும் கட்டையை நபி அவர்கள் ஏன் பயன்படுத்தினார்கள்
என்றால் “ இல்லாவிட்டால் கழுதைகள் பெண்கள் கறுப்பு நாய்கள் தொழுகையை துண்டித்து
விடும் என்றார்கள் கருப்பு நாய் பற்றி கூறும் போது அது செய்தான் என்றார்கள் “எனவே
நபி ஸல் வெளிஇடங்களில் அதிக காலம் செலவு
செய்ததால் இந்த சுத்ரா முறை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது .
இதனால்தான் நபி ஸல் அவர்கள் தொடர்பாக வரும் செய்தியில் தொழும் போது ஒரு ஆடு
வந்தால் நபி ஸல் அவர்கள் அதை கையால் தடுத்து சுவர் பகுதிக்குள் ஒதுக்கி
விடுவார்கள் என்ற செய்தி தப்ரானி ஹாகிம் இப்னு ஹுசைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இதை இமாம் தகபி சரி காண்கின்றார்
இதையே இமாம் அல்பானி அவர்கள் தனது
தமாமுல்மின்னா 300 பக்கத்தில் சுத்ரா பாடத்தில் இந்த தடுப்பு கடமை
ஏன் என்றால் பெண்களும் கழுதைகளும்
நாய்களும் நுழைந்து அதனை பாழ்படுத்தக்கூடாது என்பதால் நபி ஸல் இதை வலியுறுத்தியதாக கூறுகின்றார்.மேலும் தொழுகைக்கு இது
நிபந்தனை இல்லை என்றும் கூறுகின்றார்
மேலும் இமாம் இப்னு பாஸ் ,இமாம் ஸாலிஹ் அல் உதைமீன் போன்ற பலர் சுத்ரா நபி ஸல்
அவர்கள் வலியுறுத்திய சுன்னா என்றும் வெளிஇடங்களில்
இதை கட்டாயம் பேணுமாறும் எனினும் இன்றைய சூலில் மஸ்ஜிதுகளில் உள்ள ஒழுங்கு முறைமை
மற்றும் சாத்தியப் பாடுகளை கருத்திற்
கொண்டு சுத்ரா இல்லாமல் தொழுவது தொழுகையை பாதிக்காது என்றும் கூறி உள்ளனர் .அல்லாஹ்
மிகவும் அறிந்தவன்

உண்மையிலேயே சுத்ரா சம்பந்தமாக நான் தேடி பார்த்ததில் மிகச் சரியான கருத்தை தாங்கள் தான் பதிவிட்டிருக்கிறீர்கள்.
ReplyDelete