முன் சென்ற நபிமார்களின் சட்டங்கள் நமக்கு பொது நடைமுறை சட்டங்கள் இல்லை.

| 0 comments



முன் சென்ற நபிமார்களின் சட்டங்கள் நமக்கு பொது நடைமுறை சட்டங்கள் இல்லை.

(சூனியம் தொடர்பாக ஹாரூத் மாரூத் தொடர்பான வியாக்கியானங்களுக்கு பதிலுரை )

அஸ்சேஹ் றஸ்மி மூஸா சலபி .

சூனியம் பற்றிப் பேசும் போது அல்லாஹ் குர்ஆனில் கூறும்  ஹாரூத் மாரூத் என்ற இருவர் தொடர்பான சம்பவம் பற்றி பல வியாக்கியானங்கள் காணப்படுவதை நாம் காணலாம்.இந்த இடத்தில தமிழுலக இஸ்லாமிய அறிஞ்சர்கள் விடும் மிகப் பெரிய தவறு இஸ்லாத்தின் மிக முக்கியமான சட்ட நுணுக்கம் பற்றி அறியாமையாலாகும்  .அதாவது நபி ஸல் அவர்களுக்கும் மூசா நபிக்குமிடையில் இடம் பெற்ற சூனியம் தொடர்பான சம்பவத்தை  அணுகும் போது ஒரு சட்ட நுணுக்கத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அதாவது இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்யாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை   பெற்று கொள்ள முடியும்.

இங்கு பிரச்சினை என்னெவென்றால் நபி ஸல் அவர்களுக்கு ஏற்பட்ட சூனியம் எனும் செயற்பாடு இஸ்லாத்தில் இல்லை என்ற ஒரு சிலரின் வாதமே. இவர்களுடைய அடிப்படை வாதத்திற்கு காரணம் முன்னுள்ளநபிமார்களின் சம்பவங்களை நபி (ஸல்)  அவர்களுடன் ஒப்பிட்டு நோக்கியதுதான்.  இந்த பிழையான அணுகு முறைதான்  நபி ஸல் அவர்களின் சஹீகான பல நபி மொழிகளைகூட நிராகரிக்கக் காரணம் ஆகும்.

அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்துக்கும் நபிமார்களை அந்தந்த  சமூகத்தின் தேவை கருதியே அனுப்பியுள்ளான் என்பதை நாம்   வரலாறுகளை புரட்டிப் பார்க்கும் போது அறிந்து  கொள்ளலாம் .ஆதம் நபி முதல் கடைசியாக வந்த சகல நபி மார்களும் தங்களுடைய சமூக அமைப்புக்கேற்ப வித்தியாசமான அமைப்புகளில்   நபியாக  அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள்  அனுப்பப்பட்ட காலம் மற்றும் வாழ்வியல் அமைப்பு   சமூகவியல் நோக்கில் மிகவும் வித்தியாசமானது . ஒவ்வொரு சமூகத்தின் தட்ப வெட்ப சூழலுக்கேற்ப அல்லா நபிமார்களை தேர்வு செய்தான். இது நாம் வரலாற்றில் கற்றுக் கொண்ட  பாடம்.

ஒரு பலமுள்ள சமூகத்துக்கு கடமைகளை  ஏற்றத்தாழ்வாக வழங்கப்   படுவது  என்பது ஓர் சமூகவியல் நடைமுறை. உதாரணமாக 5 வயது குழந்தைக்கும் 50 வயது குழந்தைக்கும்  வளங்கப்படும் கடமைகள் மற்றும் அவர்களின் செயற்திறன்கள் என்பது வேறுபட்டது. இந்த வகையில் காலத்துக்கு ஏற்ப ஆயுள் நீடிக்கப்பட்ட மற்றும்  சக்தி பலமாக வளங்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு அல்லா மிகையான செயற்பாடுகளை வழங்கியுள்ளான் என்பது இயல்பானது .இதில் நாம் மூக்கை நுழைத்து சிந்திக்க வென்றிய அவசியம் இல்லை.

மேலும் இதை எவ்வாறு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் புராதன காலம் முதல் இன்று வரை மனித சமூகத்தின் உடலியல் விருத்தி  ஆயுள் காலம் மற்றும் உடலமைப்பு என்பனவைகள் மிகவும் வித்தியாசமானவை ,அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சக்தி  என்பன கூட வேறுபட்டவை உதாரணமாக சொல்வதானால் அல்லாஹ்வால்  அனுப்பப்பட்ட நபிமார்களையே நாம் குறிப்பிடலாம் .ஆதம் அலை அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்தில் குடியேறச் செய்தான்  அவர்களுக்கு சகல அம்சங்களையும் சுவர்க்கத்தில் வழங்கினான் . அதே வேளை   நூஹ் நபி அவர்கள் 950 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது  . தொடர்ந்து வந்த நபிமார்களும் இதே வயது ஏற்றதாழ்வு அடிப்படையில் படைக்கப்பட்டனர் இந்த விடயம் பைபிளும் குறிப்பிடப் பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் (2334- 2279) இருந்த  அக்காடியன் என்ற மொழிகளிலும் இது பற்றிக் கூறப் பட்டுள்ளதாக வரலாறுகளில் காணக் கூடியதாக உள்ளது .

.இந்தவகையில் சுலைமான் நபி  930 வருடங்களும் ,சுஐப் நபி  882 வருடங் களும்  சாலிஹ் நபி 586 இத்ரீஸ் நபி 356 ஹூத் நபி 265 சகரியா நபி 207 இப்ராஹிம் நபி 195 சுலைமான் நபி 150 அய்யூப் நபி 146 மூசா 125 நபி யாக்கூப் 139 நபி யூசுப் நபி 110 யஹ்யா நபி  95 என்ற வயது அடிப்படையில் வாழ்ந்தாதாக சரித்திரங்கள் கூறுகின்றது. இந்த வயதுகள் சிலவேளை ஓரிரு வயது வித்தியாசங்கள் கூடிக் குறைத்தாலும் இங்கு நான் இதை கொண்டு வந்தது வயதை பற்றிய ஆய்வுக்காக அல்ல மாறாக புராதன வரலாறுகளில் இப்படிதான் மனித வாழ்க்கை இருந்துள்ளது என்பதை சொல்ல வந்தேன் .இந்த வகையில் நபி ஸல் அவர்களுடைய சமூகத்துக்கு அறுபது அல்லது எழுபது வருடங்கள் அவ்வளவுதான் .அதனாலதான் முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட பலமான எந்த சக்தியும் முகம்மத் நபிக்கு கொடுக்கப்படவில்லை.

 நபிமார்கள் அனுப்பப் பட்ட சூலல் என்பது அந்த சமூகத்துக்கு உரியது அவர்களின் உயரம் ,நிறம் ,ஆயுள் காலம் என்பன அந்த சமூகத்துக்கு அனுப்பப்படும்  நபிக்குரிய பண்புகள் அல்ல மாறாக அந்த சமூகத்தில் வாழும் மக்களின் சமூக கட்டமைப்பு எனவே நபி மட்டுமல்ல அந்த சமூகம் அனைத்துமே நபியை போன்றுதான் இருப்பார் என்னில் ஒரு நபி அந்த சமூகத்தில் இருந்துதான் வருவார் உதாரணமாக சுலைமான் நபி 950 வருடங்கள் வாழ்ந்தனர் அதே போல்  அவர்களின் உயரம் என்பன மிகப் பிரமாண்டமாக இருந்ததாக  கூறப்படுகின்றது  

இதே போன்று சுலைமான் நபிக்கு ஜின்கள் மட்டுமல்ல அவரின் ஆட்சியில் இருந்த    தனி மனிதனுக்கு கூட அவ்வாறான சக்தியை வழங்கி இருந்தான். சுலைமான் நபியின் வரலாற்றில் வரும் பல்கீஸ் அரசின்  சிம்மாசனத்தை ஒரு மனிதனே  கொண்டு வந்தார் என்பதை நாம் குர்ஆனில் பார்கின்றோம்   இதை அல்லா இவ்வாறு குர்ஆனில் கூறுகின்றான் பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: இது என்னுடைய இறைவனின் அருட்கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்என்று (ஸுலைமான்) கூறினார்.( 27-1)
மேலும்  சுலைமான் நபிக்கு வளங்கபட்ட  சக்தியின் ஒரு வடிவத்தை நாம் விளங்கிக் கொண்டால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) 'இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவுகொள்ளச் செல்வேன். ஒவ்வொரு துணைவியாரும் கர்ப்பமுற்று இறைவழியில் போரிடுகிற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும்' என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவிதான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான்(அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களின் துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, இறைவழியில் போரிடும் குதிரைவீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார். புஹாரி 111

இங்கு சுலைமான் அலை அவர்கள் இன்சா அல்லா என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தாத காரணத்தால்தான் இவருக்கு இந்த குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது என்பதை சொல்லத்தான் இந்த சம்பவத்தை இஸ்லாம் குறிப்பிடுகின்றது .மற்றும்படி அவருடைய சக்தியின் வல்லமையை குறிக்கப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்  .ஏனனில் சக்தியின் வடிவம் என்பது பொதுவாக  எல்லோருக்கும்  தெரியும்  இந்த  சக்தியின்  வடிவம்  பற்றி  பைபிளிலும்  கூறப் பட்டுள்ளது  .

இங்கு நபி ஸல் அவர்களது சமூகத்தை இந்த விடயத்தை ஒப்பிட்டு பார்த்தல் உண்மையில் இப்படி ஒரு உறவு எவ்விதத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஆயுள் காலம் மற்றும் சக்தி போன்ற விடயங்கள் மிகையாக கொடுக்கப் பட்டவர் ஒருவர்தான் இதை செய்ய முடியும் .எனவே தனது ஆட்சியில் பல்கிசின் ஆசனத்தை ஒரு தனி மனிதன் கொண்டு  வர முடியும் என்றால் சுலைமான் அலை அவர்களுக்கு இந்த சக்தி என்பது மிகவும் இலகுவானது எனவே இந்த சக்தியை எப்படி நாம் மற்ற சமூகங்களிடம் ஒப்பிட்டு பார்க்க முடியும் ? மூசா நபிக்கு கடலை பிளக்கும் அளவுக்கு அல்லா சக்தியை வழங்கினான் .ஈசா நபிக்கு உயிர்ப்க்கும் ஆற்றால்  வளங்கப்பட்டன. மூஸா நபியின் சமூகத்துக்கு அல்லா நாம் இன்று பார்க்கும் கார்டூன் படங்களில் வருவது போன்று உணவு வகைகள் மன்னு சல்வா என்ற ஒரு தட்டில் தினமும் வானத்தில் இருந்து அல்லாஹ்வால் இறக்கப்பட்டன.இப்படி முகம்மத் நபியுடைய சமூகம் கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அல்லா பல சதிகளை வளங்கி இருந்தான் .

இதனூடாக நாம் விளங்க வேண்டிய ஒரு சட்ட நுணுக்கம் என்னவென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .இன்றுள்ள வணக்க வழிபாடுகள் முன்னுள்ள நபிமார்களின் வணக்கங்களுடன் பெயரால் ஒன்றாக இருந்தாலும் கருத்திலும் செயல் வடிவத்திலும் வித்தியாசமானது என்பதை புரிந்து கொள்ளவேண்டும் .எனவே முன் சென்ற நபி மார்களின் வரலாறுகள் அல்லது சட்டங்கள் என்பது எமது அதாவது முஹம்மத் நபியுடைய சமூகத்துக்கு ஒரு போதும் சட்டமாகாது இதை  நாம் தெளிவாக  புரிந்து கொண்டால் இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை  பெற்று கொள்ள முடியும்முகமத்தின் ஸல் அவர்களின் சமூக ஆயுள் மிகவும் குறைந்தது மற்றும் அல்லாஹ்வின் புறத்தில் நேரடியாக நபி ஸல் அவர்கள் பிரயோகிக்கும் அளவுக்கு கூட எவ்வித சக்தியும் வளங்கப்படவில்லை.

.இதனால்தான் சுலைமான் அலை அவர்களுக்கு அந்த சிம்மாசனத்தை கண் மூடி திறப்பதற்குள் ஒரு மனிதன் அவர் முன்னால் கொண்ட வந்தார் என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் ஆனால் நபி ஸல் அவர்கள் சில மணித்தியாலங்கள் மேல் வானத்தை கடந்து மிஹ்ராஜ் சென்றார்கள் என்பதை நபி ஸல் மட்டுமல்ல நாங்களும் இதற்கான சான்றுகளை நிருபிக்க எவ்வளவு முயற்சி செய்கின்றோம்.இதற்கு காரணம் நபி (ஸல்) அவர்கள் சமூகத்துக்கு மற்ற சமூகங்களுக்கு கொடுக்கப் பட்ட எந்த  பலமான சக்தியும் கொடுக்கப்ப் படவில்லை இதுதான் யதார்த்தமான உண்மை. இதை அல்லாஹ்வே சுட்டிக் காட்டுகின்றான் ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?” (53:12.) என்று அல்லா தனது திருமறையில் கேட்கின்றான் .முன்னுள்ள நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட  எந்த சக்தியும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லா கொடுக்காத காரணத்தாலேயே இவ்வாறு அவன் கேட்கின்றான் .

ஆனால் முன்சென்ற நபி மார்கள் இதை விடவும் அற்புதங்களை தங்களது  வாள்நாளில் செய்து கொண்டே இருந்தனர் ஆனால் அந்த நபிமார்கள் தொடர்பாக எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. ஏனனில் மக்களும் அந்த நேரத்தில் சில வித்தைகளை கற்று தேர்ச்சி பெற்று இருந்தனர் இதையே நாம் மூசா நபியின் சூனியம் தொடர்பான சம்பவத்தில் கூட காண்கின்றோம்.

இதே போன்றுதான் ஏனைய  வணக்கங்களும் உதாரணமாக சொல்வதானால்  தொழுகை நோன்பு சகாத் போன்ற விடயங்கள் உட்பட அன்றாட  வாழ்வில் உள்ள திருமணம் கொடுக்கல் போன்ற நாங்கள்  தற்போது கடைபிடிக்கின்ற வணக்கங்கள் அனைத்துமே  ஆதம் நபி முதல் முஹம்மத் நபி வரை அருளப்பட்டதுதான் .ஆனால் ஒவ்வொன்றும் வித்தியாசமான  வெவ்வேறு சட்ட முறைகளோடு தான் அருளப்பட்டது. இது கால  தேச மனித சக்தி போன்ற பல பரிமாணங்களை கொண்டது.

இந்தவகையில் அல்லா  வணக்கங்களையும் இவ்வாறு வித்தியாசமாகவே  அருளி உள்ளான். உதாரணமாக நபி (ஸல்)  அவர்கள் கூறும் போது "முன் சென்ற நபி மார்களுக்கு தொழுகை கட்டாயம்  வணக்க ஸ்தலங்களில் மட்டுமே    தொழ அனுமதி வளங்கப்பட்டது ஆனால்  நபி (ஸல்) அவர்கள் கூறும் போது எனக்கு பூமியில் எல்லா இடங்களும் தொழ அனுமதிக்கப் பட்டுள்ளது எவராவது ஒருவர் எந்த இடத்தில தொழுகை நேரத்தை சந்தித்தாலும் அவர் அங்கே   தொழுது கொள்ளட்டும் " என்ற இந்த நபி மொழி தொழுகை  என்பது எல்லா நபிமார்களுக்கும் ஒன்றல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது .

அதே போல் தாவூத்  நபியின் நோன்பை மற்றும் தொழுகை பற்றி கூறும் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ் விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்'.

தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்  ஆஸ் (ரலி) அறிவித்தார். இங்கு  தாவூத் நபியின் கடமைகளை  நபி (ஸல்) அதனை விரும்பினாலும் இங்கு இது நமக்கு சட்டம் அல்ல தாவூத் நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்தை கூட அவர் ஒரு நொடிப் பொழுதில் ஒதிவிடுவார் என்றுதான் சொல்லப் படுகின்றது ஆனால் இந்த அம்சம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை ஜிப்ரயீல்தான் அவருக்கு ஓதிக் கொடுக்க வேண்டும் .

எனவே முன் சென்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அல்லது பிரஸ்தாபிக்கப்பட்ட விடயங்களை நுணுக்கமாக சட்ட ஆய்வுக்கு உட்படுத்த கூடாது அது ஒரு வரலாற்று  படிப்பினையாக மட்டும்  எடுக்க  வேண்டும்.

சூனியம் தொடர்பாக இந்தவகையில்  சிலர் முரண்படுவது இந்த கோட்பாட்டில்  இருந்து  விலகித்தான். இதை  நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் அல்லா பல நபிமார்களுக்கு வழங்கிய   சக்தி என்பது அந்தந்த சமூகத்தை ஒப்பிட்டுதான் பார்க்க வேண்டும் தவிர இன்றுள்ள சமூகத்தை  சட்டரீதியாக ஒப்பிட்டு பார்க்ககூடாது .எனவே சூனியம் (சிஹ்ர்) என்பது நபி ஸல் அவர்களுக்கு செய்யப்பட்டது என்பது ஒரு முறைமை முன்னுள்ள நபிமார்கள் செய்தது என்பது ஒரு முறைமை இவ்விரண்டையும் ஒன்றோடொன்று குழப்பி நாம் ஆய்வு செய்யக் கூடாது சிஹ்ர் என்ற வார்த்தை சகலருக்கும் ஒரே வார்த்தையாக பயன்படுத்தி இருந்தாலும் அதன் அர்த்தங்களும் பிரயோகங்களும் மிகவும் வேறுபாடானது என்பதை இந்த கட்டுரை  மூலம் அறிந்து கொள்ளலாம்

“எனவே ஹாரூத் மற்றும் மாரூத் என்ன செய்தார்கள் ? அவர்கள் மலக்குகளா ? அல்லது ஜின்களா? அல்லது மனிதர்களா ? எமக்கு அது விளங்கவில்லையா எது விளங்குதோ அதனோடு நிறுத்திக் கொள்ளுங்கள் அதனை கொண்டு சட்டமாக எடுப்பதற்க்கும் அதனை கொண்டு பிழையான விளக்கங்களை கொடுப்பதற்கும் எமக்கு எந்த தேவையும் இல்லை  அல்லா சொல்கின்றான் “அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.(ஆல இம்ரான் -6)

எனவே

1-காலத்துக்கு காலம் நபிமார்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ள முறைமை அவர்களின் சமூக அமைப்புக்குக்கேற்பவே, இங்கு வயது, வளங் கப்பட்ட  சக்தி ,என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டும் .
2-அல்லா நபிமார்களின் இத்தகைய வேறுபாடுகளுக்கு ஏற்ப அந்தந்த சமூகத்து அப்படியான சக்திகளை வழங்கி இருந்தான். சட்டங்களையும் அவ்வாறே வகுத்தும் கொடுத்துள்ளான்.
3-அத்தகைய சமூகங்களின்செய்திகள் வரலாறுகள் என்பன நமது சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியே தவிர பின்பற்றுவதற்கான ஆதாரபூர்வ முன்மாதிரியோ அல்லது சட்டமோ  அல்ல,
4-நமது வணக்க வழிபாடுகள் மற்றும் செயற்பாடுகளில் முன்னைய நபிமார்களை நாம் சட்டமாக கொள்ள நபி (ஸல்) அவர்கள் எந்த வளிமுறையையும் காட்டித்தரவில்லை.

எனவே முன்னுள்ள வேதங்களில் உள்ள அல்லது அல்குரனில் அல்லா படிப்பினையாக சொல்லும் சம்பவங்களை ஆதாரமாக எடுக்க  முனைந்தால் அது முஹம்மது நபியின் மார்க்கத்தில் தவறுகள் விட வாய்ப்புக்கள் ஏற்படும் அல்லாஹ் நம்மை இதிலிருந்து தூரப்படுத்துவானாக .

0 comments:

Post a Comment