சலபி பற்றிய வரலாற்றுக் குறிப்பு தெரியாத கிள்ளுக் கீரைகள்

| 0 comments





சலபி பற்றிய வரலாற்றுக் குறிப்பு தெரியாத  கிள்ளுக்கீரைகள்

அஸ்செய்க் றஸ்மி மூசா சலபி

சலபி என்ற சொல் தாருத் தௌஹீத் அரபுக் காலசாலைக்கு ஏன் சொந்தம் அவர்கள் மட்டுமா சலபி ? சலபிகள் மட்டுமா தௌஹீத் பேசவேண்டும் ? என்றெல்லாம் இன்று சலபிய உலமாக்களுடன் உள்ள காழ்புணர்வு இன்று தௌஹீத் பேசுவதாக கூறும்  ஏனைய பல உலமாக்களாலும் வேறு பல சகோதரர்களாலும்  குறிப்பாக பீ ஜே யைமையப்படுத்திய ஒரு கூட்டம் கிண்டல் அடிப்பதை  .இன்று நாம் அவதானம் செலுத்துகின்றோம் 
,
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள  வேண்டும் .இலங்கையில் தௌஹீத் பிரசாரத்தை மேற்கொள்வதில் தாருத் தௌஹீத் அஸ்சலபியா கலாசாலை ஆற்றும்  பங்கு அளப்பெரியது .பீ ஜே யை முதல் முதலில் இலங்கைக்கு கொண்டு வந்து இன்று வேறு வேறு அணிகளில் இருக்கும் சகல உலமாக்கையும் கொண்டு வந்து தீவிர பிரச்சாரம் அப்போது செய்யப்பட்டது. நமக்கு  ஜாபகம் இருக்க வேண்டும்

இன்று முரண்பாடுகளில் இருக்கும் மவ்லவி ஹாமித் பக்ரி மட்டுமல்ல பையத் கொள்கையில் இருக்கும் புத்தளம் மவ்லவி உமர் அலி அவர்கள் கூட சலபியா பீடத்தில் ஒரு ஆசிரியராக இருந்துதான் பின்னர்  கொள்கை மாறி  வெளிக் கிளம்பி சென்றார்கள். சலபிகளை உருவாக்குவதில் இப்படிபட்ட பல உலமாக்களுக்கு அதிக பங்குண்டு என்பதை இன்று உள்ள கிள்ளுக் கீரைகளுக்கு தெரியாது.  

எனவே முரண்பாடுகளையும் உடன்பாடுகளையும் இப்படிபட்ட உலமாக்களிடம் நன்றாகவே படித்தவர்கள் சலபிக்கள் .இமாம் இப்னு தைமியவின் கொள்கையும். இமாம் முகம்மத் பின் அப்துல் வஹாபின் கொள்கையும் அதை பின்பற்றிய சலபு சாலிஹீன்களின் கொள்கையையும் அடியொட்டி இன்றுவரை நாம் பின்பற்றுகின்றோம் என்றால் எங்களை நாங்கள் சலபிக்கள் என்று கூறுவதில் அல்லாஹ்வுக்கு அடுத்ததாக பெருமை கொள்கின்றோம் 
.
மேலும் ஜமாத்தே இஸ்லாம் மற்றும் தப்லீக் ஜமாஅத் மற்றும் கப்ரு வணங்கிகள் எல்லாம் தௌஹீத் எதிர்ப்பு பிரச்சாரம் செய்தபோது அவர்கள் சலபிக்களுக்கு எதிராக  சமூகத்தை தூண்டி வாள்வேட்டுகளை கூட அரங்கேற்றிய போதும் பீ ஜே யை நாட்டுக்கு வர விடாமல் அலவி மௌலானா போன்ற  குப்பைகளை  எதிராக தூண்டி பீ ஜேயை நாடு கடத்தச் செய்த சகல பெருமையும் இவர்களுக்கு இருக்கும் வேளையில் அதிக சிரத்தயோடு   தௌஹீத் பிரசாரத்தை இந்த நாட்டுக்கு எடுத்துச் சொன்ன பெருமையும்  சலபிகளுக்கு உண்டு( அதற்காக நாம் ஏனைய உலமாக்கள் தௌஹீத் வளர்ச்சிக்கு பங்க்காற்றவில்லை என்று கூறவில்லை இது சலபிகள் பற்றிய மதிப்பீடு )

இன்று தௌஹீத் சிந்தனை  வழர்ந்து பெருகிவிட்டது .இதில் குளிர்காயும் பலருக்கு வரலாறு தெரியாது .இதனால் இப்போது ஒரு புதிய பயங்கரவாதத்தை தோற்றுவிக்கின்றனர் அதுதான்  சலபி எதிர்ப்பு கொள்கையை முடுக்கி விட ஒரு நயவஞ்சகர் கூட்டம் முனைப்பாக  இயங்குகின்றனர். தௌஹீத் பேசுவதாக கூறி தௌஹீத் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர்.இவர்களுக்கு பீ ஜே யையும் பிடிக்காது இஸ்மாயில் சலபியையும் பிடிக்காது ஆனால் சலபி என்ற நாமம் அழிய வேண்டும் இதுதான் இவர்கள் குறி .அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் துணையால் ஒரு போதும் இவர்களின் நப்பாசை நிறைவேறாது.

பல அரபுக் கலாச்சாலைகளின் உலமாக்கள் கொள்கை இல்லாமல் எல்லாமே சரிதான் என்று சமூகத்தை ஏமாற்றிய வேளையில் எந்த ஒரு இடத்திலும் தௌஹீத் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கொள்கையில் உறுதியாக இருந்தவர்கள் சலபிக்கள்  பீ ஜே இன்றுள்ள தன்னிலை மாற்றம் நிகழ்வதற்கு முன்னால் பீ ஜேயை கூட விட்டுக் கொடுக்க நாம் முனையவில்லை இப்படிதான் கொள்கையில் உறுதியாக இருந்தோம்.

இலங்கையில் முன்னணி வகித்த அறிஞ்சர்கள் பலரிடம் கல்வி கற்றோம் முஸ்தபா மவ்லானா, மவ்லவி அப்துல் வதூத் ஜிப்ரி ,மீரான் மவல்வி .அன்சார் மவ்லவி (மன்னார்)   எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் முதல்வர் அபூ பக்கர் சித்தீக் மதனியிடம்  கல்வி மற்றும் வழி காட்டல் பெற்றோம். இன்று களத்தில் உள்ள மூத்த சலபிகள் பலர் முன்மாதிரிகளாக திகழ்ந்துள்ளனர் எனவே சலபி என்ற இந்த நாமம் சிலர் கூறும் பிழையான முகவரி அல்ல என்பதை தெளிவாக கூறுகின்றேன் .
எனவே சலபி என்ற கொள்கையை மாசுபடுத்தி சலபி உலமாக்களை களங்கப் படுத்தி சமூகத்தில் பிழையான தகவல்களை வழங்கும் பலரை நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தொடரும் ....................................................



0 comments:

Post a Comment