ஒரு பெண் பகிரங்கமாக சமூக வலைச்சாதனங்கள் முன் தோன்றி மார்க்க உபதேசம் செய்யலாமா ?

| 0 comments



ஆய்வு அஸ்ஸெஹ் - றஸ்மி மூஸா சலபி - MA

ஒரு பெண் பகிரங்கமாக சமூக வலைச்சாதனங்கள் முன் தோன்றி மார்க்க உபதேசம் செய்யலாமா ?

பொதுவாக ஒரு பெண் மூன்று கோணங்களில் கவர்ச்சியாக நோக்கப்படுகின்றாள்

ü அழகான முகம் அமைப்பு  (Facial Structure)
ü உடல் கட்டமைப்பு  (Body Structure )
ü குரல் வளம் (Voice )

இன்னும்பல வேறு தூண்டல் காரணங்கள் இருந்தாலும் இவைகள் முதன்மையானவை .ஒரு பெண்ணை பார்க்கும் போது மனிதன் தானாக தூண்டப்படும் போது ஹோர்மோன்கள் தூண்டி அவனை மோகம் கொள்ளச் செய்யும் .இதுதான் மனித உடலியல் தத்துவம்

இவைகளில் ஏதாவது ஒன்றுதான் இரு பாலாரையும்  கவரச் செய்கின்றது  என்பதைத்தான்  மனித உளவியல் உடலியல் கூற்றுதத்துவம் .(Human Biological Theory) கூறுகின்றது .இந்த ஒரு ரகசியத்தை கொண்டுதான் அல்லாவும் அவனது தூதரும் ஆணும் பெண்ணும்  பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளை இடுகின்றார்கள் .

பார்வை தாழ்த்துதல் என்பது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ எவ்வித காரணமும் இல்லாமல் சிறிய ஒரு பார்வையும் கூடாது இதைத்தான்  அல்லாஹ்  “ நபியே நீங்கள் மூமினான  பெண்களிடம்  கூறுங்கள் அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தங்கள் மரும அபாயங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் அதே போன்று மூமினான ஆண்களிடம் கூறுங்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும் மரும அபாயங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அது அவர்களுக்கு தூய்மையானதாக இருக்கும் “ (சூரத்துன் நூர் 31) எனக் கூறுகின்றான்

 எனவே பார்வையை தாழ்த்துவது என்பது தூய்மையானது இதனால்தான் அலி ரலி அவர்கள் ஒரு முறை ஒரு பெண்ணை பார்ப்பது தொடர்பாக நபி ஸல் கூறும் போது “நீ பார்வைக்கு மேல் பார்வையை தொடராதே ஏனென்றால் முதல் பார்வை உனக்கு இரண்டாவது பார்வை   உனக்குரியதல்ல “ (அஹ்மத் திர்மிதி) (ஹசன் தரம் ) திருப்பிக்கொள் எனக் கூறினார்கள் .எனவே கடைசிப்பார்வை என்பது நபி (ஸல்) கூறியது ஆசையை ஊட்டக் கூடியது என்பதைத்தான் அவாகள் உணர்த்தினார்கள்.இன்னோர் சஹாபி இது பற்றிக் கேட்டதற்கும் “நீ பார்வையை திருப்பிக் கொள்” எனக்கூறினார்கள்   

எனவே ஒரு ஆணோ ஒரு பெண்ணோ இரு பாலாரும் முகத்தை அல்லது உடலை அல்லது குரலை அல்லது எந்த வடிவிலாவது  ரசிப்பது கூடாது, உற்று நோக்குவது கூடாது ,இஸ்லாம் அதை அனுமதிக்கவில்லை ,இந்த அடிபடையில் ஒரு பெண் பகிரங்கமாக தோன்றி மார்க்க உபந்நியாசங்களை செய்வது அல்லது தனது குரலை உயர்த்தி ஆண்களுக்கு முன்னால்  செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை .ஆனால் பெண்களுக்கு முன்னால் மட்டும் தோன்றி இப்படியான உபந்நியாசங்களை செய்வதில் எந்த தவறும் கிடையாது .காரணம் அங்கு எவ்வித தடைகளும் இல்லை.

மார்க்க உபாதேசங்கள் புரிவதால்  நமக்கு கவர்ச்சி ஏற்படுமா என்று நாம் கேக்கலாம் .இல்லை செய்தான் எப்படியும் எமது சிந்தனைய மாற்றி எம்மை செயலிழக்க செய்து விடுவான் என்பதுதான் இஸ்லாம் ஒரு ஆண் மற்றும் பெண் தொடர்பாக கொண்டுள்ள கொள்கை .ஒரு பெண் நல்லது பேசினாலும் கேட்டது பேசினாலும் ஒரு பெண்ணை ஆண் பார்க்கும் போது காமம்தான் முதலில் ஏற்படும் .ஆனால் யாரும் இதனை காட்டிக் கொள்ளமாட்டார்கள் .அது தமக்குள்ளே தம்மை அறியாமல் நடக்கும் ஒரு உடலியல் பிரளயம் .எனவே நாம் பெண்களை மரியாதையாக தான் பார்கின்றேம் என்றெல்லாம் கதை அளக்க முடியாது .இரு சகோதர்களை கூட படுக்கையில் பிரித்து விடுங்கள் என்றே இஸ்லாம் கூறுகின்றது 
.
இந்த வகையில்  ஆண்களுக்கு நிகராக சமூக வலைசாதனங்களில் தோன்றி உபதேசம் புரிவது பலரும் அதை பார்ப்பது மார்க்கத்தில் இல்லாத ஓன்று. .சரி அப்படி முகத்தை மூடித்தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் என்றாலும் அது குரல் அமைப்பில் மற்றும் உடல் அமைப்பில் ஏற்படும் கவர்ச்சி தாக்கங்கள் இல்லாமல் போகாது.அதே வேளை பெண்கள் முகத்தை மூடுவது மார்க்கமா ? என்ற அடுத்த ஒரு கேள்வி நோக்கி நகரவேண்டியும் இருக்கும்.அது வேறு ஒரு தலைப்பு

 பொதுவாக ஆண் மற்றும் பெண்கள் சந்திக்கும்  போது ஏற்படும் விபாரீதங்களை மட்டுப்படுத்தவேண்டும் என்பதால்தான் இஸ்லாம் பார்வயை தாழ்த்தும் சட்டத்தைக் கொண்டுவந்தது .எனவே நாம் செய்யும் எல்லா வளிமுறைகளுக்குள்ளும் பார்வையை தாள்த்துவுதை ஒரு ஏற்பாடாக கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளை .

நபி சல காலத்தில் நபியின் மனிவியருக்கு ஹிஜாபுடைய சட்டம் இறங்கியதும் அவர்கள் திரைக்குப் பின்னல் இருந்தே மற்றவர்களுடன் தேவை கருதி பேசினார்கள். அதற்க்கு முன்னர் அவர்கள் நேரடியாக மற்றவர்களுடன் பேசினார்கள் ஆனால் இஸ்லாம் சட்டத்தை மாற்றி அமைத்தது .எனவே ஹிஜாப் சட்டம் இறங்கியதும் நபியின் மனைவியர் ஆண்களுக்கு முன்னால் பகிரங்கமாக தோன்றியதாக எந்த ஆதாரமும் இல்லை .”நீங்கள் அவர்களிடம் ஏதாவது கேட்டால் திரைக்குப் பின்னல் இருந்து கேளுங்கள் அது உங்கள் உள்ளத்துக்கும் அவர்கள் உள்ளத்துக்கும் தூய்மையானது “(சூரத்துல் அஹ்சாப்-53) இதற்குப் பின்னல் அவர்கள்  எனவே அவர்கள் பகிரங்கமாக தோன்றி மார்க்க உபந்நியாசங்களை செய்தார்கள் அல்லது ஏதாவது உரை நிகழ்த்தினார்கள்  என்பதற்கு  எந்த  சான்றுகள் இல்லை .

அதே நேரம் பெண்களின் குரல் ஆண்களுக்கு அவரத் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை .அது தொடர்பாக வரும் சகல செய்திகளும் ஆதரமற்வை.எனவே சாதாரணமாக ஆண்களும் பெண்களும் சந்திக்கும் சந்தர்பங்கள் இருந்தும் அதைத்தான் முறைப்படுத்தி எடுக்க வேண்டுமே தவிர ஆண்களுக்கு நிகராக பகிரங்கமாக தோன்றி மார்க்க உபாதேசம் செய்ய முடியாது .அப்படிதான் பெண்களுக்கு முன் தோன்றி பிரச்சாரம் செய்தாலும் அதை சமூக வலை சாதனங்க்களில் பகிரக்கூடாது .மேலும் இஸ்லாம் பெண்களுக்கு தலைமைதுவ எந்த அதிகாரங்களும் கொடுக்கவில்லை சஹாபாக்கள் மனிவியர்கள் கூட இவ்வாறு பகிரங்கமாக செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை.நவீன யுகம் என்பதற்காக எல்லாவற்றையும் நாம் அடகு வைக்க முடியாது .,

இந்தக் கட்டுரை எனது முடிந்த முடிவு அல்ல யாராவது தகுந்த மாற்றுக் கருத்து கூறினால் .அது மேலும் பல தெளிவுகளை வளங்கும் . அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .



0 comments:

Post a Comment