ஈரானின் அணுவாயுத தேசம் இஸ்லாத்துக்கே விரோதமானது
(எமன்தேசம் தொடர்பான பிரதிபலிப்புக்கள் )
புதிய மதிப்பீட்டு ஆய்வறிக்கை
அஷ்செய்க் றஸ்மி
மூஸா சலபி
ஈரான் இன்று உலகில்
வளர்ந்து வரும் நாடுகளில் ஓன்று .எண்ணெய் வளம் நிறைந்து காணப்படும் ஒரு வளைகுடா
பாரசீக நாடு. குறிப்பாக இன்று அணு வாயுதத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்பதற்காக
உலகிற்கே தாஜா காடடிக் கொண்டு தண்நீரிற்குள் நெருப்பை கொண்டு செல்லும் நாடாக
உலகால் பார்க்கப்படுகின்றது. .குறிப்பாக இன்று இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக வும் சவுதி அரேபியாவுக்கு விரோதியாகவும் உள்ள
நாடாக பார்க்கப்படுகின்றது. .
அது கொள்கை
அளவில் சீயா என்ற ஆட்சியதிகாரத்தை கொண்ட நாடு .சீயாக்கொள்கை என்பது அதன் உயிர்மூச்சு சீய கொளகைக்காக யாருக்கும் எதனையும் விட்டுக் கொடுக்காத ஒரு தேசம் .இன்று
இஸ்லாமிய உலகில் சீயா என்ற அதிகாரம் வாய்ந்த ஒரே ஒரு அரசு ஈரான் மட்டுமே .இது இவவாறு
இருக்க,
மறுபுறத்தில் இன்று உலகில்
சீயா சுன்னி என்ற பிரச்சினை யுத்தகளமாக மாற இரானின் பங்களிப்பு அதிகமானது என்பது
எலோரும் அறிந்த உண்மை. அதைதான் இன்று யேமன் தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் ரத்தக்களரியை கண்னூடாக காண்கின்றோம்.
.அதே போன்று சிரியாவிலும் அதைதான்
காண்கின்றோம் இன்று ஈராக் பாகிஸ்தான் சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் சீய
சுன்னிப் பிரச்சினைகளுக்கு ஈரானின் பங்களிப்பு அளப் பெரியது. .ஏன் இலங்கையில்
கிழக்கில் அமைந்துள்ள சீய அரபுக் கல்லூரிக்கு கூட ஈரான்தான் முழு நிதி உதவியினை
வழங்கி வருவதும் இலங்கையில் சீயாக் கொள்கை வளர இக்கல்லூரி ஒரு களமாகவும் அமைந்து காணப்படுகின்றது எம்மில் நிறையப்பேருக்கு இது தெரியாமல் இல்லை. .
இந்த வகையில் சீயாக்களின்
கொள்கை என்பது ஒரு அரசியல் சார்ந்தது அதற்கும் மார்க்க விடயங்களுக்கும் எந்த
தொடர்பும் இல்லை. .இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற ஒரு அரசியல் புரிந்துணர்வின்மை
இன்று இவ்வாறான ஒரு கூட்டம் இன்றுவரை காணப்படுகிண்றது அவ்வளவுதான். அதற்கென ஒரு பிறிதான சரியத் சட்டங்களை கொண்டுள்ளது. மேலும் உலக இஸ்லாமிய சட்டத்துறையை மதிக்காமல் தான்போன
போக்கில் குரான் மற்றும் ஹதீஸ்களை மறுதலித்துக் கொண்டு செயற்படுகின்றது. இது ஒரு
புறமிருக்க ,
மறு புறத்தில், இவர்களின் தந்திரோபாயங்களில் ஒன்றுதான் தன்னை
சூழ உள்ள இஸ்லாமிய நாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு உலகில் சீயதேசம் ஒன்றை
உருவாக்க முனைகின்றனர். அதன் ஒரு அங்கம்தான் எமனை ஆட்சிப்படுத்தி அதனை முழு சீய
தேசமாக மாற்றும் அவர்களின் மடமைதன்மான சிந்தனை தென்படுகின்றது. எனினும் பின்னால்
இப்படி ஒரு சவுதி வல்லரசு தனக்கு எமனாக வருமெண்டு கனவில் கூட நினைக்கவும் இல்லை ..
எமனை இவ்வளவு ஆர்வமாக
ஆக்கிரமிக்க இவர்கள் காட்டும் அக்கறை என்ன? இவர்களின் முழு நோக்கமும் எமனுக்கு
சமீபமாக எல்லையாக அமைந்துள்ள சவுதிஅரேபியாவை அச்சுறுத்தி மார்க்கத்தின் புனித தலங்களை
கையகபடுத்துவதுதான். என்பதும் மற்றும் சவுதி அரேபிய நாட்டுக்கு எப்போதும் ஒரு
அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பதும்தான். இது இவர்களின் சவுதி மீதுள்ள நீண்ட
கால காழ்புணர்ச்சி செயற்பாடுதான் காரணம். எனினும்
அல்லாஹ்வின் உதவியால் இன்று அந்த ரகசிய தகவல் சவுதி மன்னருக்கு ஒரு உதிப்பு வழங்கப்பட்டு இன்று அது முறியடிக்கப்படும்
தருவாயில் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
சிலவேளை சவுதியின் முன்னாள்
காலம் சென்ற மன்னர் இருந்திருந்தால்
எமனுக்கு ஒரு போதும் சவுதி படை போயிருக்காது. அது அவரின் வெளிநாட்டு கொள்கை .
அப்படிதான் இதனால்தான் அல்லாஹ் சவுதியில் ஆட்சி மாற்றத்தை வழங்கி இருக்கின்றான்
போலும் அல்ஹம்துலில்லாஹ். இதனால் ஈரானின் சீய தேசங்களை விஸ்தரிக்கும் திட்டம் இனி
சிலவேளை சவுதி அரேபிய தேசத்தால் தடைபப்டக்கூடும்.
“ஈரான் இஸ்ரேலை
எதிர்கின்றது என்பது உண்மைதான் .அது இஸ்லாத்தின் பொது உடன்பாடு எல்லா இஸ்லாமிய
நாடுகளும் அதை வெறுக்கதான் செய்கின்றது. ஆனால் ஈரான் இஸ்ரேலை வெறுப்பது போல் சீயா
அல்லாத மக்களையும் வெறுத்து ஒதுக்குவது அவர்களின்
கொள்கை என்பதால் இஸ்ரேலை அவர்கள் வெறுப்பதை
நாம் நமக்கு சார்பாக பார்ப்பதை விட முஸ்லிம்களை சுன்னிக்கள் என அவர்கள்
வெறுத்து பார்ப்பதை நாம் அதனை விட காரமாக ஈரானை பார்க்க வேண்டி உள்ளது அதுதான் உண்மை”
இதனால்தான் இவர்கள்
தங்களின் அணு ஆயுதங்களை பயன்படுத்தி எதிர் காலத்தில் ஏன் சில முஸ்லிம் நாடுகளை கூட அச்சுறுத்தி
அடிபணிய வைக்கமாட்டார்கள் என்று எண்ணக் கூடாது ?அதுதானே ஏமனில் நடந்துள்ளது
.சிரியாவில் அதுதானே நடக்கின்றது .எனவே இரானின் சர்வதேச ராஜ தந்திரம் என்பது இஸ்ரேல
மட்டுமல்ல சீயா அல்லாத இஸ்லாமிய உலகமும்தான்.
அதனால்தான் நாம் மஸ்ஜித் இமாமுடன் கோபித்தால் கூட அவர் இமாம உள்ள குறிப்பிட்ட
பள்ளிவாயலுக்கு போவோம் ஏனென்றால் அது அல்லாஹ்வின் மாளிகை .கியூபா அமெரிக்காவின்
விரோதி என்பதால் அது ஐக்கிய நாடுகள் சபைக்கு கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் இல்லை அதே போன்று சவுதி அரசோடு கோபமாக யாரும் இருந்தால்
அதற்காக அல்லாஹ்வின் வீட்டை தரிசிக்க யாராவது மக்கா போக மறுப்பார்களா? இதுதான் இப்போது
எமனின் பின்னால் ஈரான் உள்ளது என்பதற்கு அத்தாட்சி சவுதி தலை இட்டதன் பின்னால்
இனிமேல் வணக்கம் புரிய சவுதி வரமாட்டோம் ஈரான் என அறிவித்துள்ளது எதைக் காட்டுகின்றது இவர்களின்
இஸ்லாமிய உலகில் உள்ள காற்புனற்சியை தெளிவாக இது எடுத்துக் காட்டுகின்றது .
எனவே ஈரானின் அணுவாயுத
பலம் என்பது நாம் நினைப்பதுபோல் முஸ்லிம் சமூகத்துக்கு எந்த பயனும் அளிக்காது.
அவர்களின் விரோதம் சுன்னிக்கள் என்ற நாம்
அனைவரையும் தான் தாக்கக் கூடும் .எனவே
முஸ்லிம் சமூகம் ஈரானின் அணு ஆயுதம் பற்றி அதிக ஆர்வம் செலுத்த வேண்டிய அவசியம்
இல்லை .
.இஸ்ரேலை அளிக்க
அல்லாஹ்வே இறுதி நாள் ஒன்றை திடமாக வைத்துள்ளான் அதுதான் நபி ஸல் அவர்கள் கூறிய
முன்அறிவிப்புக்கள் இதுவரை பலஸ்தீனத்தில்
இஸ்ரேலால் அளிக்கப்பட்ட தேசத்தை மீட்க எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஏன் ஈரான்
கூட மவுனியாகதான் இருகின்றது என்றால் இதற்குப் பிறகு நமக்கு ஒரு அணு ஆயுத பலம் எதற்காக
தேவை ?
எனவே ஈமானிய பலம் அத்தோடுதான் ஆயுத பலமும் தேவை ஈமானிய பலம் இருந்தால் போதும் அல்லாஹ் நம்மை காப்பான்
சிலவேளை அல்லாஹ்வின் மாளிகை அமைந்துள்ள தேசமே எமன்நாட்டை மீட்டது போல் அல்லா நம்மை காப்பாற்றுவான். ஏன் இன்றைய உலக
சிர்க் மற்றும் பிதாக்கள் அல்லாத ஒரு
உலகமாக மாற்றி அமைக்க அல்லா இதே சவுதி நாடடில்
இருந்தானே இமாம் முகம்மது பின் அப்துல் வஹாப் என்ற அறிஞரை தரவில்லையா? ஏன் .ஹதீஸ்களை தொகுத்து இந்த உலகுக்கு
முறைப்படுத்திய இமாம புகாரியை அல்லா இன்றய ரஷ்யாவில் இருந்து தரவில்லையா ?எனவே
அல்லா எம்மை பாதுகாக்க பல வழிகளை தரவேண்டும் என்றால் தருவான் அதுதான் உண்மை. பத்ர
போர் களங்கள் அதுதான் எமக்கு படிப்பினையாக உள்ளது . அந்த முன்னுதாரங்கள் எமக்கு
வெறும் கற்பனை கதைகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் “எத்தனயோ சிறிய கூட்டங்கள் பெரும் கூட்டங்களை அல்லாஹ்வின்
உதவியால் மிகைத்துவிட்டன “ (குரான்) எனவே இதுதான் உண்மை
எனவே ஈரானின் அணு ஆயுதத்துக்கு
எதிரான உலக தடைகளுக்கு நாம் அதிகமாக கவலைப்படவேண்டியதில்லை அல்லா
அவர்களுக்கு ஹிதாயத்தை வழங்க சொல்லி நாம் பிராத்தனை செய்வோம் .அதுதான் இன்றைய எமது
நிலைப்பாடு .அல்லா ஒரு நாட்டை அல்லது சமூகத்தை வலுப்படுத்த ஆயுதங்களை வழங்க தேவை
இல்லை வெறும் வெற்று உடம்பும் ஈமானிய
பலமும் போதும்” அல்லா அனைத்துக்கும் சக்தி வாய்ந்தவன் “
(பகரா -20 ) மேலும் “ சூழ்ச்சிக் காரர்களுகேல்லாம் அல்லாஹ் சூள்சிக்காரன் “ (அன்பால் – 30 குரான் )
ஆகவே உலக இஸ்லாமிய
வரலாறில் சீயாக்களின் போக்கு முழுக்க முழுக்க இஸ்லாமிய உலகை பகைமை மற்றும்
வெறுப்பை உணரச் செய்யும் நிலைப்பாடாகவே காணப்படுகின்றது என்பதற்கு இது சிறந்த
சான்று. இன்று எமன் மற்றும் சிரிய தேசங்களில் நடக்கும் வன்முறைகள் நல்ல முன்னுதாரணம்
ஆகும் எனவே ஒரு போதும் முஸ்லிம் உலகு ஈரானின் அணு ஆயுத
போக்கை அல்லது அதன் உலக எதிர்ப்பு போக்கை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை எல்லாவற்றுக்கும்
அல்லா போதுமானவன் ..
தொடரும் .........
றஸ்மி மூசா சலபி

உங்களுக்கு சுன்னி இஸ்லாம் பற்றியும் தெரியாது, ஷியா இஸ்லாம் பற்றியும் தெரியாது, ஈரான் பற்றியும் தெரியாது, சாஊதி பற்றியும் தெரியாது என்பது உங்கள் கட்டுரையில் இருந்து நன்கு புலப்படுகிறது.
ReplyDeleteஅணுவாயுதம் ஹராம் என்று பத்வா வழங்கியுள்ள ஒரு நாடு இருக்குமாயின் அது ஈரான் மட்டுமே. உங்கள் தலைப்பே உங்களுக்கு விடயம் தெரியாது என்பதை உணர்த்துகிறது. மேலும், சாஊதி வல்லரசு என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்தே நீங்கள் சாஊதிக்கு வால் பிடிப்பவர் என்பதை அறிந்து கொண்டேன்.
முஸ்லிம்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தாமல் ஒன்றுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
ஒரு துப்பாக்கி தோட்டாவைக் கூட சுயமாக செய்யத் தெரியாது அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கும் சாஊதியை,
ReplyDelete"யஹூதி, நாசராக்களை உங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக அமெரிக்காவுடனும், பிரித்தானியாவுடனும், இஸ்ரேலுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள சாஊதியை வல்லரசு என்று கூறுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா.....?...Rasmy Salafy