பகுதி -1
விவசாய கருவிகளை நபி )ஸல்( அவர்கள் இழிவு எனக் கூறி வெறுதார்களா ? (ஹதீஸ் மறுக்கும் கொள்கை )
புதிய மதிப்பீட்டாய்வு ஆய்வு :றஸ்மி மூசா சலபி – MA
“அபூ உமாமா அல்
பாஹிலி ரலி அவர்கள் ஒரு வீட்டில் ஏர் கலப்பையும் மற்றும் சில விவசாயக்
கருவிகளையும் கண்டார்கள் உடனே அவர்கள் இந்தக் கருவி ஒரு சமூகத்தின் வீட்டினுள்
நுழையும் போது அல்லாஹ் இழிவை புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி ஸல் கூற நான்
கேட்டுள்ளேன் என கூறிய ஹதீஸ் புஹாரி )2321( பதிவு செய்யப்பட்டுள்ளது அறிவிப்பவர் முஹம்மத்
பின் சியாத்
மேற்படி சம்பவம்
ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இந்த சம்பவம் ஒரு அனுமதிக்கப்பட்ட
ஒரு விடயத்தை குறைவாக குறிப்பிடுவதுபோல் உள்ளது. இதனை எப்படி அணுகுவது?
உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் பல முறன்படுவதுபோல் தென்படும் ஆனால அவற்றை நாம்
சரியான புரிந்துணர்வு அடிப்படையில் சமப்படுத்த வேண்டும்.இதுதான் உசூலுல்ஹதீஸ்
கற்றுத்தரும் பாடம்
மேற்குறித்த ஹதீஸில்
குறிப்பிடப்படும் விடயம் விவசாயம் சார்ந்த
கருவிகள் ஒரு வீட்டில் இருந்தால் இழிவு
ஏற்படும் என்பதாகும் .பொதுவாக பொருளாதாரம் சம்மந்தமாக ஏதாவது அம்சம் மனிதனிடம் இருந்தால்
கஷ்டம் ,நஷ்டம் இழிவு, அழிவு ,பொய், களவு குடும்ப பிரச்சினை போன்ற பல அம்சங்கள் இருக்கத்தான் செய்யும் எத்தனையோ பேர் தொழில்
செய்து பின்னர் நஷ்டப்பட்டு கடன்பட்டு சமூகத்தில் இழிவு நிலையை சந்தித்துள்ளனர்.இது
உலக நியதி அதற்காக கடன்படக்கூடாது அல்லது
நஷ்டப்படக்கூடாது என்பது அர்த்தமாகுமா?மனித வாழ்கையில் துன்பத்தை ஏற்படுத்தும் ஒரு
அம்சம்தான் இந்த செல்வம் என்பது
அல்லாஹ்வே குர்ஆனில்
கூறுகின்றான் “நிச்சயமாக உலக வாழ்க்கை விளையாட்டு
கேளிக்கை மேலும் உங்களுக்கு இடையில் செல்வத்தையும் பிள்ளைகளையும் கொண்டு பெருமை
அடிப்பதுதான்” என்பதாக.
எனவே ஒரு
சம்பவ சூழ்நிலையை கருத்திற்கொண்டு அல்லது
அதன் யதார்த்ததை கருத்திற்கொண்டு சில நேரங்களில் எதிர்மறையாக குரானிலும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட்ட
பல விடயங்கள் உண்டு என்ற வகையில்தான்
அல்லாஹ்வே குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான் இதற்காக பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாதா
? அல்லது செல்வம் சேர்க்க கூடாதா?இப்படி நாம் விளங்குவதா ?
மேலும் அல்லாஹ்வும் நபி
ஸல் அவர்களும் இதற்க்கு சில விடயங்க்களை உதாரணமாக
சொல்லிக் காட்டுகிறார்கள் அல்லா குர்ஆனில் “கவிஞர்களை வழி
கேடர்களே பின்பற்றுவர் " எனக்கூறி “அவர்கள் யூகமாக பலவற்றை சொல்லக் கூடியவர்கள் “ எனகூறி கவிஞர்களை
ஏளனமாக பேசுகின்ற அதே வேளை மறு புறததில் ஹஸ்ஸான் பின் தாபித் பற்றி நபி (ஸல்)
கூறும் போது அவருடைய சிறப்பைக் கண்ட அவர்கள் “யா அல்லாஹ் அவருடைய
கரத்தை (ஹஸ்ஸான்) ஜிப்ரயீல் அலை கரங்கொண்டு பலப்படுத்துவாயாக” என பிரார்த்திப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது .
மேலும் உமையா பின் உபை
என்ற சஹாபி நபியவர்களிடம் சென்ற போது நபி அவர்கள் உன்னிடம் ஏதாவது கவிதை உண்டா ?எனக்
கேட்க ஆம் என்று கூற அவர் ஒரு கவிதை பாடியதாகவும் பின்னர் நபி அவர்கள் ஆர்வப்பட்டு
கவிதை கேட்டுக் கொண்டே இருக்க தொடர்ந்து
நூறு கவிதைகளை ரசித்துக் கேட்டதாகவும்
புஹாரியில் வரும் ஒரு சம்பவம் இடம் பெற்றுள்ளது அதே போல் முஸ்லிமில் வரும் இன்னோர்
ஹதீஸில் “ உங்கள் உள்ளங்களில் கவிதை நிறைந்து இருப்பதைவிட
வாந்தி நிறைந்திருப்பது சிறந்தது “ என பதியப்பட்ட சம்பவமும் உண்டு
எனவே நிலைமைக்கேற்ப இந்த விடயங்கள் அணுகப்பட்டுள்ளது அதற்காக
ஹதீஸ்கள் மறுதலிக்க முடியாது கவிதை பாடுவதை இயற்றுவதை ஹராம் என்று கூறுவதா ?
இப்போது நான் கேட்பது இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கவிதை பற்றி மற்றும்
கவிஞர்கள் பற்றி எதிர்மறையாக கூறி
இருப்பதால் அதே வேளை மறுபுறம் அதற்க்கு சார்பாகவும் கூறி முன்னுக்குப் பின் முரண்படுவது போல்
காணப்படுவதால் கவிதை பற்றி வரும் சகல ஆதாரங்களையும் என்ன செய்வது ? குரான் மற்றும்
ஹதீஸ்களை மறுப்பதா ? அல்லது நீக்குவதா ? அல்லது சரி காண்பதா?.
மேலும் வேறு ஒரு
கோணத்தில் இன்னோர் சம்பவத்தில் ஒருமுறை
ஒரு சஹாபி வந்து நபியிடம் கேக்குறார் “நான்
திருமணம் முடிக்கப் போகின்றேன் என அப்போது நபி ஸல் அவர்கள் “ நீ ஒரு கன்னிப் பெண்ணை மணம்முடி நீ அவளோடும் அவள் உன்னோடும் விளையாட
“ என்று கூறினார்கள். இங்கு பல விதவைகளை முடித்த நபியே இப்படி கன்னிப்பெண்களை
மணம் முடிக்க கூறினார்கள் என்றால விதவைகள் கேவலமானவர்களா? ஏன் அப்படி நபி ஸல் கூற வேண்டும்
அல்லது இந்த ஹதீஸ்களை நிராகரிப்பதா ?
அதே போன்று ஒரு சஹாபி ஒரு
பெண்ணை விரும்புவதாகவும் ஆனால் அவர் பிள்ளைப்பேறு இல்லாதவராகவும் இருந்தார் அதை
நபி ஸல் மணம்முடிக்க தடை செய்தார்கள். மூன்று முறை அனுமதி மறுக்கபட்டார்கள்
பின்னர் நபி ஸல் கூறினார்கள் “நீ அதிகமாக குழந்தை பெரும் பண்ணை மணம் முடி
ஏனென்றால் நான் அதிகாமான மக்களை கொண்ட ஒரு சமூகமாக இருப்பேன்
“அபூ தாவூத் (2050) என்பதாக .
இங்கு நபி ஸல் விதியை மறுகின்றரகளா? அதிக மனைவியர்
இருந்தும் பிள்ளைப் பாக்கியம் இல்லாத நபியவர்கள் இப்படி கூறுவது சரியா?
அப்படியானால் அந்த பெண்களின் நிலை என்ன? எனவே இந்த ஹதீஸை மறுப்பதா ?இது சமூக விரோத
கருத்தா? (சிலவேளை நான் இவைகளை சுட்டிக் காட்டுவதால் இந்த ஹதீஸ்களையும் மறுக்க
ஆரம்பிப்பார்களோ
அதே நேரம் மறுபக்கம்
அல்லாஹ் கூறுகின்றான் “நிச்சயமாக உலக வாழ்க்கை விளையாட்டு
மற்றும் கேளிக்கை மேலும் உங்களுக்கு இடையில் செல்வத்தையும் பிள்ளைகளையும் கொண்டு
பெருமை அடிப்பதுதான் “எனக் கூறுகின்றான் “என்றால் இந்த குரான் வசனத்தை
நிராகரிப்பதா ? அல்லது துறவறத்தை ஆதரிப்பதா ? அல்லது மேற்காணும் ஹதீஸ்களை
மறுப்பதா? இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம் ஹதீஸ் மறுப்பு என்ற போர்வையில்.
எனவே இந்த ஒரு வகையில்தான்
விவசாய உபாகரனங்களை பற்றி ஏன்
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்றால் எப்படி கவிதையில் பொய் இருக்குமோ அதை நபி அவர்கள் வேறுத்தார்களோ .எப்படி கன்னி பெண்களை மணப்பதால்
வாழ்கை இனிக்கும் என்பதை விதவைகளுடன்
ஒப்பிட்டார்களோ. எப்படி குழந்தை பேறு சமூக அதிகரிப்புக்கு காரணம் என்பதை
உணர்தினார்களோ அதே போன்ற ஒன்றுதான் விவசாய உபகரனங்கள் இழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தினார்கள் .அது ஒரு
சந்தர்ப்ப சூழ்நிலையில் நபருக்கு நபர் இடத்துக்கு இடம் ஏற்ப கையாண்டார்கள்
இந்த வகையில் வர்த்தகம்
அல்லது ஒரு தொழில் என்ன செய்யும் .
Ø கடன் சுமையை ஏற்படுத்தும்
Ø அதனால் வீண் சண்டை வாக்குவாதம் ஏற்படும்
Ø வீணாக அவப் பெயர் ஏற்படும்
Ø மோசடி ஏற்படும்
Ø குடும்பபகை பிரச்சினைகள்
ஏற்படும் இப்படி ஏராளமான சம்பவங்கள் வாழ்கையில்
ஏற்படுத்தும். எனவே நபி ஸல் அவர்கள் இழிவு என்று சொன்னது ஒரு வித்தியாசமான
வார்த்தை பிரயோகம் அல்ல .உலகின் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.என்பதைத்தான் நபி ஸல்
அவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்ற ஒரு இலகுவான விடயத்தை விளங்கிக் கொள்வதை
விட்டுவிட்டு நேரத்தையும் காலத்தையும் சுருக்க பயன்படுத்தும் ஒரு தந்திரோபாயம்தான்
இந்த ஹதீஸ் மறுப்பு கொள்கை என்பது இப்போது வெளிச்சமாகின்றது
.
ஒரு பலயீனமான ஹதீஸில் கூட ஒரு யூதனிடம் கடன்பட்ட நபி அவர்களை அவன் சபையில் சட்டையை
பிடித்து கடனை கேட்டதாக வருவது கூட எதை உணர்த்துகின்றது ?இவைகள் எல்லாம் சாதாரண
விடயங்கள் என்பதைத்தான் உணர்த்துகின்றது
ஆகவே நமது புத்திக்கு
விளங்கவில்லை என்பதற்காக நாம் எதையும் மறுக்க அல்லது நிராகரிக்க முனைவது முட்டள்தனமானது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்
.
அடுத்த ஆய்வு தொடரும்
ஆய்வு : றஸ்மி மூஸா சலபி- MA

0 comments:
Post a Comment