நபி (ஸல்) அவர்கள் கூறிய முஜத்தித்களில் ஒருவரா? இமாம் அல்பானி ரஹ் ?

| 2 comments




நபி (ஸல்) அவர்கள்  கூறிய முஜத்தித்களில் ஒருவரா? இமாம் அல்பானி ரஹ் ?
தொடர் -1

மதிப்பீட்டாய்வு : றஸ்மி மூஸா சலபி  (MA)

நபி (ஸல்) அவர்கள்  கூறிய முஜத்தித்களில் ஒருவரா? இமாம் அல்பானி ரஹ் ?

மதிப்பீட்டாய்வு : றஸ்மி மூஸா சலபி  (MA)

இமாம் இப்னு இப்னு பாஸ் ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸை சுட்டிக் காட்டி கூறினார்கள்  “மார்க்கத்தை மேம்படுத்த ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் ஒரு சீர்திருத்தவாதியை ( முஜத்தித் ) இந்த சமூகத்துக்கு அல்லாஹ் அனுப்பு இந்த மார்க்கத்தை சீர்திருத்துகின்றான்”  என்ற ஹதீஸை அவர்கள் ஒரு முறை முன்நிறுத்தி இமாம் நாசிருதீன் அல்பானி ரஹ் அவர்களை அல்லாஹ் இதற்க்கு தேர்ந்தெடுத்துள்ளான் என்ற செய்தியை சிலாஹித்து கூறிய மன நெகிழ்ச்சி வாசகத்தை நான் இவ்விடத்தில் நினைவுபடுத்தியவனாக .

உலக வரலாற்றில் தனிநபர் ஆய்வு Case Study என்ற ஒரு துறையை உலகில் அறிமுகப்படுத்திய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூட எந்த ஒரு தனி நபரும் இப்படி ஒரு தனி நபர் ஆய்வு துறையை செய்ததாக கண்டு கொள்ளவில்லை. 1967 ஆண்டுக்கு பின்னர்தான் இந்த துறை உலகிற்கு அறிமுகப் படுத்தப் பட்டது ஆனால் இமாம் அல்பானி அவர்கள் ஜரஹ் வதஹ்தில் என்ற தனி நபர் ஆய்வினை இதற்கு முன்னரே மேற்கொண்டு ஹதீஸ் துறையை இந்த உலகத்துக்கு மேம்படுத்தினார்கள் என்றால் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அவர்களின் கூற்று இமாம் அல்பானி அவர்கள் பற்றிய ஒரு ஒரு வெட்டு முகம் என்றால் அது மிகையாகாது  

முஜத்தித் என்பவர்

ü  அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
ü  ஆலிம் என்ற நபி ஸல் கூறிய சொல்லுக்கு உரித்தானவர்
ü  பகிஹ் என்று நபி ஸல் அவர்களால் கூறப்பட்டவர்
ü  முப்தி என்ற வார்த்தைக்கு உரித்தானவர்
ü  முஜ்தஹித் என்ற ஆய்வாளன்

இவைகள் எல்லாம் ஒருங்கே அமையப் பெற்ற தகுதியும் பெறுமதியும் வாய்ந்தவர் இமாம் அல்பானி ரஹ் என்றால் சாலப்பொருந்தும்

இதுவரை உலக வரலாற்றில் யாருமே இவ்வளவு தனிநபர்களை ஆய்வு செய்து எந்தவொரு பலகலைகழகத்திலும்கூட  வெளியிடவில்லை என்பதும் இதுவே ஒரு இஸ்லாம் அல்லாத ஒரு துறையாக இருந்திருந்தால் இமாம் அவர்களுக்கு  கின்னஸ் சாதனை வழங்கப்பட்டிருக்கும்  என்பது இப்போது எண்ணத் தோன்றுகின்றது

1914 ஆம் ஆண்டு அல்பானியாவில் பிறந்த இமாம் முஹம்மது நாசிருதீன் அல்ஹாஜ் நூஹ் அல்பானி உலக இஸ்லாமிய வரலாற்றில் ஜரஹ் வதஹ்தீல் என்ற ஒரு மிகப் பெரிய ஹதீஸ் கலை துறையை மேம்படுத்தி உலகிற்கு புதிய ஒரு அத்தியாயத்தை தோற்று வித்தார்கள் .உலகம் பனிப்போரில் மூழ்கி இருந்த காலத்தில் மேலும்  உலக மகாயுத்தங்களை உலகம் ஆரம்பித்திருந்த ஒரு காலத்தில் இவ்வாறான ஒரு பணியை செய்வது என்பது அசாத்தியமானது.  

எனினும் முதன்முதலாக தனது மூத்த அறிஜர்களில் ஒருவரான இமாம் ஹாபிள் ஈராக்கி என்பவருடைய المغني عن حمل الأسفار في تخريج ما في الإحياء من الأخبار" ي நூலை மீழ்பதித்து தனது ஆய்வுத்துறையை ஆரம்பித்தார்கள். பின்னர்   தனது சுயஆய்வு நூலான கப்ருகளை வணங்கும் மிகப் பெரிய இணைவைத்தல் தொடர்பான  "تحذير الساجد من اتخاذ القبور مساجد என்ற  நூலை எழுதி உலகில் மீண்டும் ஒருமுறை மார்க்கத்தில் காணப்பட்ட  புதிய அனுசஸ்டானங்களை மற்றும் சிர்க் போன்ற பாவங்களை எதிர்த்து சமூகத்துக்கு முன் சென்றார்கள் இவரது  இந்த நூலே இவரை  ஒரு சிறந்த சலபுசாலிஹீன்களில் ஒருவராக சமூகத்துக்கு மேலும் அடையாளப்படுத்தியது என்பது உலகறிந்தது .

இவர்களுடைய  நூற்களை பற்றி எழுத நாட்கணக்கில் தேவைபடும் ஆயினும்   இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல இவருடைய சேவையை இந்த உலகு எப்படி புரிந்துள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை அடையாளப்படுத்துவதும்  ஒரு முஜத்தித் பற்றிய அறிவை முஸ்லிம் சமூகத்துக்கு எடுத்துரைப்பதும்தான் ஆயினும் நான் இதற்கு தகுதியானவனா? என்பது புரியவில்லை  
.
பின்னால் வந்த மிகப் பெரும் ஹதீஸ் துறை அறிஞ்சர் முகம்மது ஸாலிஹ் அல் உதய்மின் இமாம் அவர்கள் பற்றிக்கூறும் போது “ ஹதீஸ் துறையை உலகுக்கு வழங்கிய பெருமகன் அவருடைய சேவை உசூலுல் ஹதீஸ் துறையில் சிம்ம சொப்பனம் என்று எடுத்துரைத்தார்கள் “

இதே போன்று இமாம் இப்னு பாஸ் ரஹ் அவர்கள் “நான் இந்த வானத்துக்கு கீழ் இந்த நவீன காலத்தில் ஹதீஸ் துறையில் இமாம் அல்பானி போல் ஒரு மிகப் பெரிய அறிநஞஜரை காணவில்லை “
ما رأيت تحت أديم السماء عالما بالحديث في العصر الحديث مثل العلامة محمد ناصر الدين الألباني
எனக் கூறுகின்றார்கள்

இங்கு இமாமின் நூற்றுக்கணக்கான நூல்களை மற்றும் வெளியீடுகளை  இங்கு மதிப்பிடாவிட்டலும் ஒரு முக்கிய செய்தியை சொல்லலாம் என்று நினைகின்றேன். காலம் செல்ல செல்ல நவீனம் வளர்ச்சியடைகின்றது  பிரச்சினைகள் பல கோணங்களில் விஸ்பரூபம்எடுகின்றது இது நமது இஸ்லாமிய ஆய்வுத் துறையையும் விட்டபாடில்லை உண்மையும் அதுதான் இஸ்லாமிய அறவியல் வளர்ச்சி பெருகப் பெருக இவ்வாறான பிரச்சினைகள் சர்வசாதாரனமானவை இந்த வகையில் இன்று ஹதீஸ் துறையில் ஏற்பட்டுள்ள பிரசினையும் அதுதான்

இவ்வாறான பிரச்சினைகள்   இன்று நேற்று ஆரம்பிக்காவிட்டலும் நபி ஸல் காலத்தில் உருவான விடயம்தான் குறிப்பாக ஒரு விடயத்தை  விளங்கிக் கொள்வதில் உள்ள கோளாறு அல்லது ஒன்றை பற்றிய குறைவான தகவல்கள் பெற்று அணுகுவது இதற்க்கு அடிப்படை காரணமாகும்

பொதுவாக ஹதீஸ்கள் வஹி அய்ர மத்லூ ( (الوحي غير متلوعஎன்பர் அதாவது குரானுக்கு அடுத்தபடியான ஆதாரம்  இதுவும் அல்லாஹ்வினால் நல்ல அடியார்கள் மூலம் செவ்வனே பாதுகாகப்பட்டது அதனால்தான் அல்லா  கூறுகின்றான் பிரச்சினைகள்  ஏற்பட்டால் “அவர்கள் தூதரிடம் அல்லது பொறுப்புக்களை சுமந்தவர்களிடம் தனது அறிவை விரிவாக்கம் செய்ய மீண்டு செல்வர் “அந்நிஸா–83  எனக் கூறுவதன் மூலம் நமது அறிவு விரிவாக்கத்தின் முன்னோடிகளான இத்தகைய இமாம்களின் பெறுமதி உயர்வானது

 ஒருவர் பின் ஒருவராக ஹதீஸ்துறை வளர்ச்சி காணப்பட்டு மிகப் பிந்திய அறிஞ்ஜர் இமாம் அல்பானி வரை இந்த துறை மேம்பட்டு வந்துள்ளது அவருடைய மாணவர்கள் பலர் இன்று கூட சமூகத்துக்கு பங்காற்றுவது குறிப்பிடதக்கது .

இந்த வகையில் இமாம் அல்பானி ரஹ் ஒன்றை கூட விட்டு வைக்காமல்  சகல ஹதீஸ்களையும் திறம்பட தர ஆய்வு செய்துள்ளளார்  பல நூற்களை எழுதி உள்ளனர் பல ஆய்வுகளை வெளி யிட்டுள்ளார்  பல உரைகளை ஆற்றி உள்ளனர் இன்று பிரசினைகளுக்கான இறுதி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளதக்க சிறந்த அற்ஞசராக போற்றப்படுகின்றார்

எனினும் இவருக்கு முன்னோடியான பல ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் இவருடைய ஆசிரியர்கள் பலர் பல அனுபவம்வாய்ந்தவர்கள் ஆனால் அல்லா இவருக்கு வழங்கிய தனி சிறப்பு இவருடைய ஆசிரியர்களை விட மிகச் சிறந்த சேவை செய்துள்ளார் என்றே கூற வேண்டும்

இன்றுள்ள பிரச்சினை என்ன ?

ஒரு ஹதீஸை பற்றி அல்லது அதன் மதன் பற்றி அல்லது அதன் அறிவிப்பாளர் தொடர் பற்றி பலரும் பல அபிப்பிராயங்களை கூறுவர் இது உசூலுல் பிக்ஹி துறையில் ஒரு  பொதுவான ஒரு  இயல்பு இமாம் அல்பானிக்கு முன்னரும் பல கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன  ஆனால் இன்று நமக்கு ஒரு ஹதீஸ் தொடர்பான ஒரு பிரச்சினை வந்தால் யாரை ஏற்றுக் கொள்வது எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வது என்பது அசாத்தியமானது அனால் உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனிதரை நாமும்  ஏற்றுக் கொள்வதும் என்பது சிறப்பானது இந்த வகையில்

தொடரும் ............
றஸ்மி மூசா சலபி



2 comments:

  1. ஹதீத் கலை மேதையான ஹாபிழ் இமாம் தஹபி (رحمه الله) ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்தித் சம்பந்தமாகவும் தமது ஸியரில் பின்வருமாறு கூறுகிறார்:

    ஹஸ்ஸான் இப்னு முஹம்மத் கூற தான் கேட்டதாக அல்-ஹாகிம் கூறுகிறார்:ஹிஜ்ரி 303 இல் நாங்கள் இப்னு சுரைஜுடைய மஜ்லிஸில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அறிஞர்களில் ஒருவரான ஒரு ஷெய்க் எழுந்து "நற்செய்தி ஓ நீதிபதியே (இப்னு சுரைஜ்)! " நிச்சயமாக அல்லாஹு தஆலா ஒவ்வொரு நூற்றாண்டிலும் மார்க்கத்தை புதுப்பிக்கக் கூடிய ஒருத்தரை (முஜத்தித்) அனுப்புகிறான்.முதலாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உமர் இப்னு அப்தில் அஸீஸை அனுப்பினான். இரண்டாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபியை அனுப்பினான். மூன்றாம் நூற்றாண்டில் அல்லாஹு தஆலா உங்களை (இப்னு சுரைஜ்) அனுப்பியுள்ளான்... எனக் கூறினார்.

    நான் (இமாம் தஹபி) கூறுகிறேன்:நாலாம் நூற்றாண்டில் ஷெய்க் அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ இருந்தார்.ஐந்தாம் நூற்றாண்டில் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலி இருந்தார்.ஆறாம் நூற்றாண்டில் ஹாபிழ் அப்துல் கனீ இருந்தார்.ஏழாம் நூற்றாண்டில் ஷெய்குனா அபுல் ஃபத்ஹ் இப்னு தகீகுல் ஈத் இருந்தார்.

    ஆதாரம் - ஸியர் அ'லாமின் நுபலா

    ReplyDelete
  2. 9ம் நூற்றாண்டின் முஜத்திதான ஹதீத் மற்றும் பிக்ஹ் கலை மேதை ஹாபிழ் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (رحمه الله) அவர்கள் தமது "تحفة المجتهدين بأسماء المجددين" எனும் நூலில் ஒவ்வொரு நூற்றாண்டின் முஜத்திதுகளையும் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

    1ம் நூற்றாண்டு - உமர் இப்னு அப்தில் அஸீஸ் (رحمه الله)

    2ம் நூற்றாண்டு - ஷாபியீ (رحمه الله)

    3ம் நூற்றாண்டு - இப்னு சுரைஜ் மற்றும் அபுல் ஹஸன் அல்-அஷரீ (رحمه الله)

    4ம் நூற்றாண்டு - அல்-பாக்கில்லானீ, ஸஹ்ல் அல்-ஸுலூகி, அபூ ஹாமித் இஸ்ஃபராயீனீ (رحمه الله)

    5ம் நூற்றாண்டு - அல்-கஸ்ஸாலி (رحمه الله)

    6ம் நூற்றாண்டு - ஃபக்ருத்தீன் அர்-ராஸீ , அர்-ராஃபீ (رحمه الله)

    7ம் நூற்றாண்டு - இப்னு தகீகுல் ஈத் (رحمه الله)

    8ம் நூற்றாண்டு - அல்-புல்கினி, அல்-இராக்கீ (رحمه الله)

    9ம் நூற்றாண்டு - ஸுயூத்தி (رحمه الله)


    ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் அபூ ஹாமித் அல்-கஸ்ஸாலீ (رحمه الله) ஏகமானதாக 5ம் நூற்றாண்டின் முஜத்தித் என இந்த உம்மாவின் இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்..

    ReplyDelete