அந்நிய மார்க்கத்தினருக்கு சலாம் கூறலாமா ?

| 0 comments




அந்நிய மார்க்கத்தினருக்கு சலாம் கூறலாமா ?

றஸ்மி மூசா சலபி

கேள்வி  .அரூஸ் முஹம்மது
ஹப்புத்தளை

பொதுவாக இஸ்லாத்தில் இருக்கின்ற வணக்க வழிபாடுகளுடன் தொடர்பான அம்சங்களை  முஸ்லிம்கள் மாத்திரம் தான் நிறைவு செய்ய வேண்டும் செயற்படுத்த வேண்டும் வேறு எந்த மதத்தினரும் நிறைவு செய்ய முடியாது உதாரணமாக ஒரு பக்கத்தில் உள்ள அந்நிய சகோதரன் தும்மினால் நாம்  அவன் அல்ஹம்துலில்லாஹ் சொல்லவேண்டும் என்று எதிர்பாக்க முடியாது அதேபோல் அந்நிய மதத்தினர் ஒருபரசு பொருளை  நமக்கு தந்தால் நாம் ஜசாகல்லாஹ் ஹைரா என்று சொல்ல முடியாது ஏனன்றால் அப்படி சொன்னால அவர் அல்லாஹ்விடம் நல்ல கூலி பெற  வேண்டும் அல்லா காபிர்களுக்கு நல்ல கூலி கொடுக்கமுடியாது .அதே வேளை அவர்கள் நாம் கூறுவதை விளங்கிக் கொள்ள மாட்டார்கள் நபி ஸல் வழிமுறைகளும் இதற்க்கு சான்றாக இல்லை

இந்த அடிப்படையில் சலாம் சொல்வதை  நாம் அணுகும் போது சலாம் இஸ்லாத்தில்  ஒரு வணக்கம் அது அல்லாஹ்வை  ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமுக்கு உரிய  வணக்கம் ஆனால் அதை முஸ்லிம்களுக்கு சொல்வதானால்  மட்டுமே அல்லாஹ்வின்  சாந்தி இறங்க முடியும் சிலை வணங்கும் ஒரு காபிருக்கு இந்த சாந்தி இறங்க நாம் பிராத்தனை செய்ய முடியாது  

எனவே நபி ஸல் அவர்களின் சலாம் தொடர்பான சட்ட விளக்கம அடிப்படையில் இப்படி ஒரு நாம் முடிவிற்கு வரலாம் நபி ஸல் காலத்தில் யூதர்கள் முஸ்லிம்களை கண்டால் சலாம் சொல்லும் வழக்கம் இருந்தது அது எப்படி என்றால் அஸ்ஸாமு அலைக்கும்” உங்கள் மீது மரணம் உண்டாகட்டும் “ என்ற அர்த்தத்தில்  லாம் என்ற அரபு எழுத்தினை  விட்டுவிட்டு சலாம் சொல்வார்கள் இதை அறிந்த  நபி ஸல் அவர்கள் நீங்கள் வஅலைக்கும்  என்று மாத்திரம் சொல்லுங்கள் என்று நபி ஸல் சொல்லிக் கொடுத்தார்கள் அதாவது உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் என்பதான அர்த்தத்தில் கூறுமாறு ஏவினார்கள் 

இது பற்றி மேலும்  கூறும் போது நபி ஸல் கூறினார்கள்” யகூதிகள் உங்களுக்கு அஸ்ஸாம் என்று சலாம் சொல்கின்றாக்கள் நீங்கள் அவர்களுக்கு உங்களுக்கும் அப்படியே ஆகுக என்று கூறுங்கள் “புகாரி எனக் கூறினார்கள்

இன்னோர் ஹதீஸில் கூறினார்கள் “நீங்கள் யகூதி நசாராக்களுக்கு  சலாத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று “இது வும் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது

மேற் சொன்ன அடிப்படையில் நாம் இவ்வாறு கருத்தைப் பெறலாம்
யகூதி நசாராக்களுக்கு சலாத்தை நாமாக ஆரம்பிக்க கூடாது அவர்களாக ஆரம்பித்தால் நபி ஸல்  காட்டித்  தந்ததுபோல் கூறவேண்டும் இதைதான் சஹாபாக்கள் விளங்கி இருப்பார்கள். எனவே ஒரு அந்நிய மதத்தினர் சலாம் சொன்னால் இங்கு யகூதி நசாராக்கள் மட்டுமன்றி அந்நிய எந்த மத்தினர் சலாம்  சொன்னாலும் நாம்  பதிலை கூறலாம் அது நபி ஸல் காட்டி  தந்த படி கூறலாம்  நாமாக முந்திக் கொண்டு சலாத்தை கூற முடியாது ஏனெனன்றால் இது ஒரு பிராத்தனை இதை நல்ல அடியார்களுக்கு மட்டுமே கூற வேண்டும் சுவர்க்கத்தில் கூட சுவனவாசிகளுக்கு மட்டும் உரிய வார்த்தை நரகவாதிகள் சலாம் கொண்டு அழைக்கபடமாட்டார்கள்

அப்படி உண்மையில் அவர்கள் சலாம் சொன்னால் நாம் பதில் சலாத்தை கூறும்போது சிலவேளை அவருக்கு இது ஒரு பிரார்த்தனையாக மாறி அவருக்கு அல்லா நேர்வழி காட்டவும் கூடும் இதற்க்கு சான்றாகத்தான் யகூதி நசாராகளுக்கு சலாம் விவகாரத்தில் இஸ்லாம் இப்படி அனுமதி வழங்கி யுள்ளது அதே நேரம் யகூதிகள் அல்லது வேறு மதத்தினர் உண்மையில் இந்த சலாத்தை உரிய முறைப்படி கூறினால் நாம் பதில் சொல்வதற்கு எந்த தடையையும் காணவில்லை

எனவே அன்னியர்கள் சலாம் சொன்னால் மாத்திரம் நாம் பதில் சொல்லாம் நாமாக முந்திக் கொண்டு சலாம் சொல்வதற்கு எவ்வித சான்றுகளையும் இதைவிட காணவில்லை.ஒரு சட்டம் ஏற்கனவே உள்ளது என்பதால் அதை இல்லாமல் செய்யும் வேறு சட்டம் இல்லாத படியால் மேற் சொன்ன அணுகுமுறையை நாம் பின்பற்றலாம்  அல்லா மிகவும் அறிந்தவன்

றஸ்மி மூசா சலபி  


0 comments:

Post a Comment