இமாம் நாசிருதீன் அல்பானி ரஹ் விமர்சிக்கப்படும் தகுதியை கொண்டுள்ளார?

| 0 comments





மதிப்பீட்டாய்வு : றஸ்மி மூஸா சலபி  (MA)

இமாம் நாசிருதீன் அல்பானி ரஹ் விமர்சிக்கப்படும் தகுதியை கொண்டுள்ளார?

சென்ற  பகுதி முடிவு 

ஒரு ஹதீஸை பற்றி அல்லது அதன் மதன் பற்றி அல்லது அதன் அறிவிப்பாளர் தொடர் பற்றி பலரும் பல அபிப்பிராயங்களை கூறுவர் இது உசூலுல் பிக்ஹி துறையில் ஒரு  பொதுவான ஒரு  இயல்பு இமாம் அல்பானிக்கு முன்னரும் பல கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன  ஆனால் இன்று நமக்கு ஒரு ஹதீஸ் தொடர்பான ஒரு பிரச்சினை வந்தால் யாரை ஏற்றுக் கொள்வது எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வது என்பது அசாத்தியமானது அனால் உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மனிதரை நாமும்  ஏற்றுக் கொள்வதும் என்பது சிறப்பானது இந்த வகையில் “
தொடரும் ............


பகுதி -2

புதிய பகுதி தொடர்கிறது .........................................

பொதுவாக ஹதீஸ்களை புரிதல் அல்லது உறுதிப்படுத்தல் என்ற சர்ச்சை மிக நீண்ட காலமாகவே இஸ்லாமிய உலகில் இருந்து கொண்டு வருகின்றது  இது  நபி )ஸல்( காலத்தில் இருந்தே இது ஆரம்பித்த விடயம்தான்  சஹாபாக்கள் கூட  ஹதீஸ்களை தவறாக விளங்கிய பல சந்தர்பங்கள் ஏற்படத்தான் செய்தன .நபி அவர்கள் தயம்மும் தொடர்பாக கூறிய ஒரு ஹதீஸை ஒரு சஹாபி பிழையாக  விளங்கவில்லையா ? பிறை சம்மந்தமாக ஒரு சகாபா குழு பிழையாக விளங்கவில்லையா ? இப்படி அடிக்கி கொண்டே போகலாம் எனவே இவைகள் எல்லாம் சாதாரணமானவைதான்   இதில் மடிச்சிக்கட்டிக் கொண்டு நிற்பதற்கு எதுவும் இல்லை  

இந்த வகையில் ஒரு பிந்திய காலத்தில் இந்த ஹதீஸ்களை தொகுதவர்களை நாம் எமது கண்களால் காணாத அல்லது நேரடியாக சந்திக்காத நமக்கு தாய்மொழி அல்லாத வேறு மொழியில் உள்ள  போன்ற பிரச்சினைகள்   பல கோணங்களில் இருக்கும் போது இவ்வாறான  பிரச்சினைகள் எழுவது சர்வசாதாரனமானவைதான் இவ்வாறான பிரச்சினைகள்தான்  நமக்கு பிற்காலத்தில் உசூலுல் ஹதீஸ் என்ற துறை  வளர்ச்சியடைய காரணமாகவும்  அமைந்துள்ளது எனவே  ஹதீஸ்களை சீரமைத்தல் என்னும் பணி இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது
 .
இந்த வகையில்  ஹதீஸ்களை அறிந்து கொள்ள நமக்கென பல வழிகாட்டிகளை அல்லது முன்மாதிரிகளை நாம் பின் பற்றுவது வாழ்கையில் மிக முக்கியமானது. எப்படி இமாம் அவர்கள் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களை  அல்லது இமாம் இப்னு தைமியா போன்றோரை  முன்மாதிரியாக கொண்டார்களோ அதே போன்று எப்படி இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அல்லது இமாம் ஸாலிஹ் அல்உதய்மின் போன்ற நவீன கால அறிஜர்கள் இமாம் அல்பானியை முன்மாதிரியாக பெற்றார்களோ அதே போன்ற  ஒரு வழிமுறைதான் இப்படி நாம் நமது வாழ்கையில் அல்லாஹ்வால் தேர்வுசெய்யப்பட்ட ஒருவரை முன்மாதிரியாக கொள்வதென்பது
.  
.எனவே ஹதீஸ்கள் தொடர்பான ஆய்வில் நாம் எல்லோரையும் பின்பற்றா  விடடாலும் குறிப்பாக உலக இஸ்லாமிய சமூகத்தால் கல்வியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களை நாமும் ஏற்றுக் கொள்வதுதான் சிறப்பானது இந்த வகையில் இமாம் அல்பானி ரஹ்  அவர்களுடைய பணியை நாம் நோக்கலாம்

நான் ஆரம்பத்தில் கூறியது போல் இப்னு பாஸ் அவர்கள் கூறிய “மார்க்கத்தை மேம்படுத்த ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் ஒரு சீர்திருத்தவாதியை (முஜத்தித் ) இந்த சமூகத்துக்கு அல்லாஹ் அனுப்பு இந்த மார்க்கத்தை சீர்திருத்துகின்றான்” (ஹதீஸ் )என்ற இமாம் அல்பானியை  அவர் சுட்டும் ஹதீஸ் ,  நமக்கு அல்லாஹ்வினால் இதற்காகவே பண்படுதப்பட்டவர் என்று கூறப்பட்டவர் இந்த துறையை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் அளப்பெரியன  என நாம் ஏற்றுக் கொள்வதில் அல்லாஹ்வின் கிருபை உண்டு.

பொதுவாக எழுதியல் மற்றும் பேச்சியல் துறையை சீராக கொண்டு செல்லும் ஒருவர் பண்பட்ட அறிவை கொண்டவராகவே கணிக்கப்படுவர் இந்த வகையில் இமாம் அல்பானி அவர்கள் இந்தப் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளனர் என்றால் யாரும் மறுக்க முடியாது     

எனினும் இமாம் அல்பானி ரஹ் அவர்களை விமர்சன உரிமை உண்டா?

இமாம் அல்பானி ரஹ் அவர்களை  பின்பற்றுவது பர்ளு அல்லது வாஜிப் என்பது அர்த்தமல்ல அப்படி யாரும் கூறவும் இல்லை கூறவும் முடியாது கல்வி உரிமையை  அல்லாஹ் சகலருக்கும் வழங்கி உள்ளான் “ நபியே நீர் கூறுவீராக அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமானவர்களா? (குரான் ) என்று எனவே கல்வியில்  அரபி அஜமி என்ற பாகுபாடோ அல்லது வெளிநாட்டவான் உள்ளநாட்டவன என்ற பாகுபாடோ அல்ல மாறாக அல்லாஹ் இந்த வஹியை பாதுகாக்க தெரிவு செய்த பலரில் இந்த மனிதரை யும் ஒருவராக பிற்காலத்தில் அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் என்பதை மானசீகமாக ஏற்று பின்பற்றுவது அதுதான் யதார்த்தம் .

எனினும் அவருடைய ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்கள் இருந்தால் அதை விமர்சனம் செய்யும் உரிமையும் உண்டு அதை யாரும் மறுப்பதற்கில்லை உதாரணமாக தொப்பி அணிவதை எடுத்துக் கொள்ளலாம் இமாம் அவர்கள் தொப்பி அணிவதை சில இடங்களில் வலியுறுத்திக்  கூறுகின்றார் அதற்காக சில நியாயங்களை கூறுகின்றார் அதற்காக இவர் கூறுவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை.ஏனனில் தொப்பி இஸ்லாத்தில் ஒரு வணக்கமல்ல  அதே போன்று  குரங்கு விபாசாரம் செய்ததாகவும் அதற்க்கு ஏனைய குரங்குகள் கல்லெறிந்ததாகவும் வரும் சம்பவத்தில் கூட அதனை மறுக்கப்பட்ட அதர்  என்று இமாம் அவர்கள் கூற அவருடைய மாணவர்கள் சிலர் அதனை மறுப்பு  செய்வதையும் காணலாம்

அதே வேளை இதற்க்கு முன்னர் இமாம் அவர்களை பல பிரபலயமானவர்கள்  பலர் விமர்சன ரீதியாக அணுகி உள்ளதை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன் உதாரணமாக

முகம்மது பின் இப்ராகிம் ஆலி சேஹ்  – மதீனாபல்கழைகழக பேராசிரியர்

முஸ்பிர் பின் அர்முல்லாஹ் – குல்லியத் உசூலுதீன்  தலைமை ஆசிரியர் ரியாத் பல்கழைகழகம்

சபருல் ஹவாலி உம்முல்
குரா  பல்கழைகழகம்  – அகீதா  துறை பேராசிரியர் போன்றோர்

இமாம் அவர்களை விமர்சன ரீதியாக அணுகி இருந்தது இமாம் அவர்கள் ஒரு மனிதன்தான் என்பதை காடடுகின்றது .இவர்கள் செய்த விமர்சனம் சரி பிழை என்பது மறுபக்கம் அதை நான் இங்கு குறிப்பிட வில்லை ஒரு உதாரணத்துக்கு கூறுகின்றேன்

எனவே விமர்சன உரிமை எல்லோருக்கும் உண்டு ஆனால்  அது நிராகரிக்கும் நோக்காகக இருக்கக் கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ,.விளங்காத ஒரு விடயத்தை பின்பற்றும் நோக்கம் கொண்டு விமர்சனம் செய்வதை இஸ்லாம் மறுக்கவில்லை  அதற்காக நாம் ஏற்றுக் கொள்ள  முடியாது என்பதல்ல இமாம் அவர்களுக்கு முன்னர் பல ஹதீஸ் துறை அறிஞர்கள் தொகுப்பாய்வு செய்தாலும் இமாம் அவர்கள் இறுதியாக செய்த பணி முழுமையானது மீளாய்வுக்கு தேவை குறைந்துள்ளது என்பதுதான் நாம் இவ்விடத்தில் புரிந்து கொள்ளும் விடயம் ஆயினும் அல்லாஹ்வின் நாட்டம் பற்றி நாம் எப்போதும் எதுவும் கூற முடியாது  

இதை புரியாத ஹதீஸ் மறுப்பாளர்கள் என்ற பலர் இன்று .........

தொடரும்.................................

மதிப்பீட்டாய்வு : றஸ்மி மூஸா சலபி  (MA)







0 comments:

Post a Comment