SKYPE போன்ற சாதனங்கள் மூலம் திருமணம் செய்து
வைக்கலாமா?
கட்டுரையாளர் - றஸ்மி மூஸா சலபி
திருமணம் என்பது ஒரு
வணக்கம்.அது ஒரு ஒப்பந்தம் .அது தனி மனித உரிமை மேலும் அது ஒரு தனிமனித தெரிவு என்றே கூறலாம் .அல்லாஹ்
கூறுகின்றான் “மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து
படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.
அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப்
பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ
அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ்
உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:1)
உலக இயக்கத்தில் திருமணம் என்பது சமூகத்தின் அச்சாணி என்றே
கூற வேண்டும். சமூக அமைப்புக்கு இது இன்றியமையாதது .இது மனித வாழ்கையின் உயிரோட்டம் நபி ஸல் அவர்கள்
கூறினார்கள் “திருமணம்
எனது வழி முறை யார் அதை இல்லை என்று மருகின்றாரோ அவர் என்னை சார்ந்தவர் அல்லர் ”
எனக் கூறினார்கள் எனவே ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் இது இரு கட்டாயமற்ற நபிவழி.ஆனால்
இதனை நாடும் போது உயிரோட்டமுள்ளதாக நிறைவு
செய்ய வேண்டும். நபி ஸல் அவர்கள் காட்டி தந்த விதிமுறைகளை பேணி இக்கடமையை நிறவேற்ற வேண்டும்.
இங்கு திருமணத்தின்
முக்கியத்துவத்தை பற்றி நான் கட்டுரை எழுதவில்லை இங்கு ஆராயும் பிரதான விடயம் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள்ளே நடக்கும் பல
திருமணங்கள் நிபந்தனைகளை தவறாக புரிந்து கொண்டு அதனை நிறைவேற்ற முற்படுகின்றனர. அதில் ஒரு முக்கியமான உலகில் சாதாரணாமாக நடக்கும் திருமண நிகழ்வுமுறைமைதான்
skype போன்ற சமூகவலை தளங்களை
பயன்படுத்தி தூர தேசத்தில் வசிக்கும் ஒரு மாப்பிள்ளையை அல்லது ஒரு பெண்ணை திருமணம்
முடித்து கொடுப்பது. இருவருக்கும் யார் என்றோ தெரியாத சூழ்நிலையில் இத்
திருமணங்கள் சமூகத்தில் அரங்கேறுகின்றது .இது
இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?எனபதுதான் இங்கு
நாம் அறிய வேண்டிய விடயம் .
திருமணத்தின் சரத்துக்களில்
வலி என்ற பொருப்புதாரகளும் சாஹித் என்ற
சாட்சியாளர்களும்? எந்த கலப்படமும் இல்லாத நேரடியாக இரண்டு கண்களாலும் பார்கின்ற
ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும்.இதனால்தான் பெண்ணின் வலி மாப்பிள்ளையிடம் நேரடியாக
சம்மதம் கேட்டு தனது மகளை ஒப்படைகின்றார்.இவ்வாறுதான் ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்
படவேண்டும்.
எனினும் நேரடியாக நடக்க வேண்டிய இந்த நிகழ்வு தூர
தேசத்தில் உள்ள மனவாளர்களிடம் சம்மதம்
கேட்டு திருமணம்நடத்துவது இஸ்லாமிய
நிபந்தனைகள் மற்றும் சரியத் சட்டங்களுக்க்கு முரணானது .கொலை
செய்யப்பட்ட ஒருவனுக்கு எப்படி நாம் தொலை
தூரத்தில் இருக்கின்ற நபர்களை நவீன சாதனங்கள் மூலம் சாட்சியாக ஏற்றுக்
கொள்ள மாட்ட்டோமோ அதே போன்றுதான் இதுவும்
.இஸ்லாமிய சரியத் சட்டத்தில் சாட்சிகள் ஒப்பந்தங்கள் இப்படி நிறைவு செய்ய அனுமதி
வழங்கவில்லை.
அடுத்தது இது ஒரு ஒப்பந்தம்
என்பதை அல்லாஹ்வே கூறுகின்றான் “அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.(அல்குர்ஆன் 4:21) “இது நேருக்கு நேர்
ஒப்பந்தம் இதனை செய்யும் சாரார்கள் ஓரிடத்தில்
இருக்க வேண்டும். ஆனால் இங்கு மாப்பிள்ளையை பெண் பாத்திருக்கமாட்டார். பெண்ணின்
தந்தைக்கு மாப்பிள்ளை யார் என்று தெரியாது. சாட்சிகளுக்கு மாப்பிள்ளையை கூட
தெரியாமல் இருக்கலாம். இப்படி இருக்க இதனால் நடை பெறும் பல திருமணங்கள் பல பிரச்சினைகளை காலப்போக்கில் உண்டாக்கி
விடுகின்றது
மேலும் திருமணம் என்பது
உயிரோட்டமானது .அது ஒரு வணக்கம் .அதில் விருப்பு வெறுப்புகள் உண்டு. எங்கோ
தேசத்தில் வாழும் ஒருவரை வெறும் கண்ணாடிகளுக்குள் காட்டி திருமணம் பேசி விட்டால்
அது எந்தவகையில் நியாயமானது ? வேறு ஒருவரை காட்டிக் கூட இந்த திருமணத்தில் ஆள்மாறாட்டம் செய்யக் கூடிய
வாய்ப்புகள் பல உள்ளன
நேரடியாக தங்கையை காட்டி அக்காவை
திருமணம் செய்து வைக்கும் காலத்தில் இந்த மீடியாக்கள் எங்கனம் உண்மை தன்மை வாய்ந்தது ? எனவே இந்த திருமணம் இஸ்லாத்தின்படி அனுமதிக்கப்படவில்லை
என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் இது நபி ஸல் அவர்களின் திருமண
வழிமுறைகளுக்கு மாற்றமானது
.
அவைகள் என்ன ?குறிப்பாக
எல்லாவற்றையும் நான் கூறாமல் முக்கிய ஓரிரு விடயங்களை கூறுவதானால்
பெண் பார்த்தல் (இரு
சாராரரும்)
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது
ஒரு மனிதர் வந்து அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க விருப்பதைக்
கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளைப் பார்த்து விட்டாயா? எனக் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். நீ சென்று அவளைப் பார்த்துக் கொள்.
அவர்களின் கண்களில் ஒரு பிரச்சினை உள்ளதுஎன்றுகூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 2552
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 2552
திருமணம் முடித்த பின்னால் ஏற்படும் பல பிரச்சினைகளை
தவிர்க்க நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.ஏனென்றால் திருமணங்களில் ஏற்படும்
குறைபாடுகள் பின்னால். ஆயுள்வரை பல பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது .இது
பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்பதற்கும் பொருந்தும்
சம்மதம்
ஒரு பெண்ணை மணம் செய்து கொடுக்க பெண்ணின் சம்மதம் மிகவும்
கட்டாயமானது. சிலர் தந்தையின் சம்மதம் மட்டும் போதும் என்கின்றனர் அது ஆதரமற்றவை பெண்ணிடம் மாப்பிள்ளையை
காட்டி கட்டாயம் சம்மதம் கேக்க வேண்டும். மகர் கூட அவள் தீர்மானிக்க வேண்டும் “என்
தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்துசெய்தார்கள்.எனகூறினார்கள்
அறிவிப்பவர்:கன்ஸாபின்த்கிதாம்(ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
அறிவிப்பவர்:கன்ஸாபின்த்கிதாம்(ரலி)
நூல்: புகாரி 5139, 6945, 6969
இந்த நபி மொழி பெண்ணின் சம்மதம் திருமணதிற்கு அவசியம் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது
.பொருத்தமில்லாத .தகுதி இல்லாத நபர்களை பணத்திற்காக அல்லது வேறு நோக்கங்களுக்காக
திருமணம் செய்து வைப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது .
இவ்வாறு மேற்
குறித்த விடயங்க்களை நாம் சிந்திக்காமல் நவீன யுகத்துக்கு அடிமைய்பட்டால் இப்படி skype
மற்றும் ஏனைய புற சாதனங்களை பயன்படுத்தி நடக்கும் திருமணத்தின் பின்னர் ஒரு வேளை மாப்பிள்ளை
தனது விந்தணுக்களை அனுப்பி தனது மனைவியின் மூலம் தூர தேசத்தில் இருந்து குழாய்
குழந்தை பெற செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை . இதுவெல்லாம் ஒரு வாழ்கையா?
இதுதான் இஸ்லாமிய சமூகத்தின் உருவாக்கமா? இப்படி இஸ்லாமிய வணக்கங்கள் அனைதையும் செய்ய
முற்பட்டால காலப்போக்கில் பள்ளி வாயல்களில் ஐவேளை தொழுகைக்கு யாரும் அதான் சொல்ல தென்படவில்லை
என்பதால் ஐந்து நேரமும் வாய்ஸ் ரெகார்ட் (Voice Record )போட்டு
அதானை சொல்ல முற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .
இப்படி எல்லாமே தலை கீழாக மாறிவிடும் ஆகவே நாம் வணக்க
வழிபாடுகளை செவ்வனே நிறைவு செய்ய வேண்டும்
நான் ஆரம்பத்தில் கூறியது போல் நபி ஸல் கூறினார்கள்” திருமணம் எனது வழிமுறை
“என்பதாக எனவே நபி ஸல் அவர்களின் சுன்னத்தை நாம் சரியாக நிறையவு செய்ய வேண்டும் .இப்படியாக
உயிரோட்டமில்லாத செயற்பாடுகளை இஸ்லாமியப் படுத்துவதை தடை செய்து கொள்ள வேண்டும் .எல்லாவற்றுக்கும்
நவீன தீர்வு என்று முற்பட்டால் அது சமூக வாழ்கை அமைப்பில் பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் அல்லா
எம்மை நல்வழிப்படுத்துவானாக
றஸ்மி மூஸா
சலபி

0 comments:
Post a Comment