காதலர் தினம் என்ற பெயரில் விபசாரச்சான்றிதழ்

| 0 comments



காதலர் தினம் என்ற பெயரில் விபசாரச்சான்றிதழ்

கட்டுரையாளர் – றஸ்மி மூஸா சலபி

காதலர் தினம் என்ற பெயரில் விபசாரச்சான்றிதழ்


காதல்(LOVE)என்ற சொல் என்னதான் வேறு வார்த்தைகள் ஜாபகம் இல்லாவிட்டலும் எல்லோருடைய மனிதிலும் எண்ணத்திலும் இந்த சொல் மிகவும் பிரபலாமாக போய்விட்டது. இன்று சிறு குழந்தைகளுக்கு பெற்றோர் கூறும் முதல் வார்த்தை ஐ  லவ் யூ (I LOVE YOU ) என்பதுதான். முன்பெல்லாம் இந்த காதல்(LOVE ) என்ற சொல்லை ஆங்கில ஆசிரியர்கள் கூட வகுப்பறையில் பயன்படுத்த கூச்சப்பட்ட காலம் மாறி இன்று உதாரணத்துக்கு சின்ன குழந்தைகளுக்கு கூட இந்த சொல்லை பயன்படுத்தும் அளவுக்கு கல்வித்துறைகூட மாறி போய்விட்டது என்றால் அது ஆச்சரியப் படுவதற்கில்லை.இதற்காக காதலர் தினம் ஒன்றை ஏற்படுத்தி இன்றைய உலகு விபாச்சாரத்தை அழகு பார்கின்றது 
.
அது ஒரு புறம் இருக்க இன்று காதல் என்ற கொடிய நோய் உலகை ஆட்கொண்டு சமூகத்தை சீரழித்துக்  கொண்டிருகின்றது என்பது மட்டும் உண்மை .கணவன் மனைவி ரகசியமாக செய்த காரியமெல்லாம் இன்று காதல் என்ற விவகாரம் மூலம் சமூக வலைதளங்களின் தஞ்சம் கொண்டு சூடு பிடித்துக் கொண்டு இருகின்றது இதனால் கடைசியில் திருமணம் நடக்குதோ இல்லையோ காதல் மட்டும் அரங்கேறி சமூகத்தை  சீரழித்துக் கொண்டு கொண்டிரிக்கின்றது என்பது மட்டும்தான்  உண்மை

இன்று நிறையப்பேர் காதல் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று வினவுகின்றனர் நான் கூறுகின்றேன்  இஸ்லாம் காதல்பற்றி எதுவுமே கூறவில்லை நவீன காலத்தில் தோன்றிய அநாகரிகத்தை பற்றி இஸ்லாம் விபாசாரம் என்றே வரையறை செய்கின்றது அதனால்தான் கண்ணால்  காதால் கரத்தால் விபாசாரம் செய்ய வேண்டாம் என்று இஸ்லாம் கூறுகின்றது  இதை வெறுத்து  அழகிய திருமணம் பற்றிதான் இஸ்லாம் அதிகம் அதிகம் பேசுகின்றது .இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை  பற்றி பேச வேண்டும் என்று நாம் எதிர்பாக்க தேவை இல்லை 
இன்று நாம் காதலுக்கு கொடுக்கும் பெயர் அன்பு என்றாலும் அது இன்று காமம் என்ற ஒன்றைத்தான் மறைபொருளாக கொண்டுள்ளது அனுமதி அளிக்கப்பட்ட காமாம் ,செக்ஸ்  என்பது இதன் மறுபெயர் .அது விபாசாரமாக மாறி சமூகத்தை சின்னாபின்னமாகுகின்றது என்ன ஆச்சரியம் ?விபசாரம் என்ற போர்வையில் பல விடுதிகளில் கைது செய்யப்படும் நபர்களை ஏளனமாகப் பார்க்கும் சமூகம் மீடியாக்களில் அழகு பார்க்கும் இன்றைய உலகம் பத்திரிக்கைகளில் கிளி கிளி எனக் கிழிக்கும் மீடியாக்கள் எல்லாம்  காதல் என்ற பெயரால் பாதைகளிலும் பார்க்குககளிலும் கூத்தடிப்பதை அனுமதி அளிக்கப்பட்ட விபாசாரமாக பார்கின்றது இது என்ன புதுமை ? பெற்றோரும் இதற்க்கு அனுமதி அளிக்கும் அவல நிலை இன்று தொடர்கின்றது .

மேலும் காதல் என்ற பெயரில் மாற்றுமத சமூகத்திலேயே திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது அல்லாஹ் கூறுகின்றான் உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)என்ற எச்சரிக்கையை நமது முஸ்லிம் சமூகம் காதலுக்கு கண் இல்லை என்று பழைய புராணத்தை பேசிக் கொண்டிருக்கின்றது .

கடைசியில் வீட்டிலிருந்து ஓடிப்போய் வாழ்கையை சீரழிப்பதை கண்ணூடாக காண்கின்றோம். கடைசியில் வாழ்க்கையும் இல்லை மார்க்கமும் இல்லை கல்வி ஒழுக்கம் எல்லாம் சீரழிந்து   சின்னாபின்னமானதுதான் மிச்சம்

குறிப்பாக காதல் என்ற போர்வையில் கற்பை இழக்கும் பெண்களை பார்த்துக் அல்லா கூறுகின்றான்  தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்”என்பதாக
இதே போன்று ஆண்களை நாடிச் செல்லும் பெண்களுக்கு அல்லாஹ் லூத் நபியின் சரிதத்தை உதாரணமாக சொல்லிக் காட்டுகின்றான்

"தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களாபெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறிய போது "லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது. அல்குர்ஆன் 27:56

எனவே சட்ட ரீதியாக அனுமதி அளிக்கப்பட்ட திருமணத்தை தவிர பெண்களை அணுகுவது எந்த வகையிலும் கூடாது மஹ்ரம் அல்லாத எந்தப் பெண்களும் பழகுவதற்கு நமக்கு தடை சொந்த சித்தப்பா சின்னம்மாவின் பிள்ளைகலானாலும் சரியே நபி ஸல் கூறினார்கள்  "கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானி

எனவே மேற் காணும் நபி மொழி எமக்கு பெண்களுடைய தொடர்பு ஆண்களுடன் எப்படி உறவை வரையறை செய்ய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது இப்படி ஏராளமான ஆதாரங்கள் உண்டு ஆதாரங்களை மட்டும் கொட்டி தீர்ப்பது நோக்கமல்ல .

சுருக்கமாக நபி ஸல் அவர்கள் இப்படியான காதல் வலைகளில் விளக் கூடிய இளைஜர் சமூகத்தை பார்த்துக் கூறுகின்றார்கள்

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில்  ஏழு பேருக்கு நிழல் (-அடைக்கலம்) அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்üவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகி-ருந்து) பிரிந்து சென்ற இருவர்.

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் "நான்    அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறியவர்.

6.  தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-)நூல் : புகாரி :660

எனவே நபி ஸல் கூறிய இப்படிப்பட்ட ஒரு சமூகத்தை நோக்கிய எமது பயணம் மட்டுமே வெற்றி அளிக்கக்கூடியது

சுருக்கமாக சொல்வதானால் நமது பொறுப்புக்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அதனை செவ்வனே பதில் கூற கடமைப்பட்டுள்ளோம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள்  ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவீர் . தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

எனவே இவ்வாறான சமூகத்தை சீரழிக்கும் இந்த காதலையும் அதனை கொண்டாடும் காதலர் தினத்தையும் வண்மையாக விட்டு ஒதுக்குவோம்  .இல்லாவிட்டால் அண்மைய காலத்தில் காதல் திருமணம் என்ற போர்வையில் உலகமே வியந்துபோன கண்டி முஸ்லிம் தம்பதிகளின் நிகழ்வு போல் நமக்கு ஒரு படிப்பினை இல்லாமல் போய்விடும் .அல்லாஹ் போதுமானவன்


றஸ்மி மூஸா சலபி

0 comments:

Post a Comment