தொலைபேசி மனியோசைகளை (RINGTONE) பயன்படுத்த
இஸ்லாம் அனுமதியளித்துள்ளதா ?
கேள்வி -சுஜான் இஸ்மாயில் -களுதர
கட்டுரையாளர் :
றஸ்மி மூசா சலபி
இசை இஸ்லாத்தில் தடை
செய்யப்பட்ட ஓன்று என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. (மேலதிக இசை பற்றிய
தெளிவுக்கு இந்த லிங்கை வாசியுங்கள் (http://ikamathulislam.blogspot.com/2014/05/blog-post_23.html)ஆனால் இன்று
எல்லோராலும் கேட்கப்படும் கேள்வி இதுதான் கையடக்க தொலைபேசிகளின் அழைப்புமணி (RingTone) பயன்படுத்துதல்
என்பது பற்றியதாகும். இன்று கையடக்க தொலைபேசி பாவனை என்பது காலத்தின் தேவை இது இல்லாமல்
உலகம் இயங்காது என்ற அளவுக்கு போய்விட்டது உண்மையும் அதுதான். அப்படியானால் இந்த ஒலியை
எப்படி பயன்படுத்துவதும் அணுகுவதும்
என்பதுதான்.
உண்மையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்தும் ஒருவர் இந்த ஓசையை(RING TONE) பயன்படுத்தாமல்
இருக்கமுடியாது.
ஏனென்றால் அது தொலை பேசிக்கு இன்றியமையாதது. எனினும் அவ்வாறு பயன்படுத்துபவர்
பின்வரும் இஸ்லாமிய ஒழுங்குமுறைகளை கடைபிடித்தல் அவசியமாகும். .நாம் அவ்வாறு
கடைபிடித்தால் ஒரு இஸ்லாமிய ஒழுக்க கட்டமைப்பை ஏற்படுத்தலாம் இந்தவகையில் நாம் இசை பயன்பாட்டை தவிர்க்க நாம் என்ன ஒழுங்கு
முறைகளை கடை பிடிக்கலாம் என்பதை
பார்ப்போமானால் ?
அவற்றை பின்வருமாறு நோக்கலாம்
1- இசை ஹராம் என்பதால் இசையால் வடிவமைக்கப்பட்ட ஒலியை தடை செய்தல்
உதாரணமாக சினிமாபாட்டுக்கள் அல்லது சினிமா பாடல் போன்று வடிவமைக்கப்பட்ட இசைகளை
ஒலிகளாக பயன்படுத்தக்கூடாது
2-அதிக ஓசை எழுப்பும் அல்லது இசை ஆர்வத்தை தூண்டும்ஒலிகளை பயன்படுத்தக்கூடாது இவைகளை இஸ்லாம் கண்டிப்பாக
தடைசெய்கின்றது
அதேபோன்று
இஸ்லாத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் படியாக நாம் ஒலிகளை பயன்படுத்தக்கூடாது
உதாரணமாக
1- சிலர் குரான் ஆயத்துக்களை
ஒலிகலாக கையடக்க தொலை பேசிகளில் போட்டு கொள்கின்றனர். எனினும் அது அசிங்கமான
இடங்களுக்கு செல்லும் போது யாரும் அழைப்பை ஏற்படுத்தினால் அவை ஒலிக்கும்போது உவப்பிலாமல் ஆகின்றது. இதற்கு உதாரணமாக
மல சல கூடத்தைக் குறிப்பிடலாம். எனவே
குரான் ஆயத்துக்களை இங்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடாது .இது குரானுக்கு நாம்
கொடுக்கும் மரியாதையை குறைத்துவிடும்.
2- மேலும் சப்தமாக ஒலிகளை எழுப்பக் கூடியவாறு இதனை பயன்படுத்தக்கூடாது.
அது மற்றவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும்.
மேலும் இது பொதுசூழல் மாசுக்கு வழி
வகுக்கும் எனவே நமக்கு தொலைபேசி ஒலி காதில் கேட்கும் அளவுக்கு இதன் சத்தத்தை பேணவேண்டும்
3- மிருகங்கள் மற்றும் பறவைகளின் ஒலிகளை தவிர்க்க வேண்டும் அது ஏனைய சுற்றத்தில் இருப்பவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும்.குறிப்பாக
மாற்று மத சகோதர்கள் இதனை விரும்பமாட்டார்கள்
4- கசீதாக்களை தவிர்க்க வேண்டும் காரணம் அதுவும் நல்ல விடயங்களை கூறுவதால் மேலும் இஸ்லாம் சம்மந்தமான செய்திகளை
கொண்டிருப்பதால் அவற்றை மலசலகூடம் போன்ற இடங்களில் பயன்படுத்தக் கூடாது அது ஒலி எழுப்பும் போது உவப்பில்லாமல் போகும் .
எனவே இந்த
விடயங்களை கருத்தில் கொள்ளும் அதே வேளை
ஒருவர் இசை கூடாது என கருதி முற்றாக அவர் எந்த ஓசையும் தொலைபேசியில்
போடாமல் silent mode இல் மட்டும்
போட்டுக் கொள்ள முடியாது. ஏனனில் அது வேறு பலவிழைவுகளை இன்றைய சமூக சூலில்
ஏற்படுத்தும். குறிப்பாக அவசர தேவைகள்
மற்றும் வேலை செய்யும் ஒருவருக்கு நிர்வாக விடயங்களுக்கு மேலும் காரியாலயங்களில் அல்லது
வங்கி நடைமுறைகள் உள்ள ஒருவருக்கு அல்லது அவசர செய்திகளை பரிமாற்ற இது பாதிப்பை
ஏற்படுத்தும்.அவசர உலகில் இது பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும்
அப்படி நாம் vibrate mode இல் போட்டாலும் பரவாயில்லை ஆனால் அதனை பதில்
அளிக்க கூடியவாறு பேணிக்கொள்ள வேண்டும். நான்
இசையை வெறுகின்றேன் என்று கூறி யாருடைய அழைப்பையும் உதாசீனம் செய்யமுடியாது அது
ஏமாற்று மோசடியாக போய்விடும் அப்படியானவர்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதை முற்றாக தவிர்ப்பதே
சிறந்த தீர்வாக அமையும்
எனவே மேலே கூறியவிடயங்களை
மையப்படுத்தி சாதாரண ஒரு ஒலியை நமது தொலைபேசி பாவனைகளுக்கு பயன்படுத்துவதில் எந்த
தவறும் இல்லை.அது குறிப்பிட்ட அந்த தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.எப்படி ஒரு
ஐஸ்க்ரீம் வியாபாரி தனது வியாபாரத்துக்கு ஒரு ஒலியை பயன்படுத்துகின்றாரோ எப்படி
ஒரு வீட்டில் கதவுக்கு மணி அடிக்கப்படுகின்றதோ(Calling
Bell) அதே போன்று இதையும் ஒரு சார்ந்த அமைப்பாக
எடுத்தக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த நபி மொழியை நாம்
ஒவ்வொரு கணமும் கவனத்தில் கொள்ள வேண்டும் நபி ஸல் கூறினார்கள் “ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின்
இசைக் கருவியாகும்.”இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ்
மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.(புஹாரி) இது எதோ ஒரு வகையில் நமக்கு
எச்சரிக்கையை வளங்குகின்றது
எனவே காலத்தின் அவசியம்
எனக்கருதும் நாம் மார்க்கத்தின் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்த
விடயத்தில் எல்லை மீறக் கூடாது அல்லா மிகவும் நன்கு அறிந்தவன்
கட்டுரையாளர் :
றஸ்மி மூசா சலபி

0 comments:
Post a Comment