பாகம் -03
பிக்ஹு துறை- பித்அத் (சமூகத்தில் காலூன்றியுள்ள நூதன அனுஸ்டானங்கள் )
கட்டுரையாளர் –றஸ்மி மூசா சலபி
பிக்ஹு துறையினை
விளங்கிக் கொள்வதில் சமூக முரண்பாட்டுக்கு அடிப்படை காரணம் பித்அத் பற்றி முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள குறைவான அறிவே எனலாம் .சமூகத்தில் பல புதிய
அம்சங்கள் மார்க்கத்தின் பெயரால் இன்று குடிகொண்டுள்ளன இந்நிலையில் சரியான இஸ்லாமிய
சட்டத்துறையை சமூகத்துக்கு நாம் எடுத்து கூற இந்த பித்அத் பற்றிய அறிவை கொடுக்கவேண்டியது காலத்தின் தேவை எனலாம். குறிப்பாக பிரசாரதில்
ஈடுபட்டுள்ள சில இஸ்லாமிய இயக்கங்களும் இது தொடர்பாக முறையான வியாக்யானத்தை கொடுக்க தவறுகின்றனர்.அல்லது
அதை சரியான முறையில் விளங்கி மற்றும் விளக்கி சொல்ல தவற விடுகின்றனர்
எனவே அடிக்கடி
எல்லோராலும் பேசப்படும் இந்த பித்அத் பற்றி நான் மீண்டும் எனது பக்கங்களில்
விலாவாரியாக எழுதாமல் எனது கட்டுரைக்கு
தேவையான சுருக்கமாக பகுதிகளை மட்டும் சொல்ல விளைகின்றேன் பித்அத் என்பது நபி ஸல் அவர்களின் வாழ்கையில்
இடம் பெறாத எந்த ஒரு மார்க்க ரீதியான செயலும்
பித்தத் ஆகும் .சான்றாக நபி ஸல் கூறினார்கள் “ உங்களுக்கு
நான் மார்க்கத்தில் புதிதான உண்டான செயற்பாடுகளை எச்சரிகின்றேன் அனைத்து புதிதான
உண்டானவைகளும் பித்அத் ஆகும் அனைத்து பித்அத்களும்
வழிகேடாகும் அனைத்து வழிகேடுகளும் நரகமாகும் “ அபூ தாவூத்
இந்த அடிபடையில் நபி ஸல்
அவர்கள் பித்அத் பற்றிக் கூறியுள்ள விடயங்கள் மட்டுமே வரை விலக்கணம் ஆகும் அவை மட்டுமே போதுமானது இதற்கு மேலாக யாருக்கும் புதிய வரைவிலக்கணம் கூற அதிகாரம் இல்லை .மேலும் பித்அத் என்பதை தரம் பிரித்து அல்லது புதிய வரை விலக்கணத்தை கூற
முற்பட்டால் அது இஸ்லாமிய சரியத்தை
விளங்கிக் கொள்வதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவே எவை குரான் சுன்னாவுக்கு மாற்றமான கருத்தை கொண்டுள்ளதோ அவை நூதன அனுஸ்டானங்கள்
என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.ஒரு கிரியை வணக்கமாக நிறைவேற்றப்பட
வேண்டுமானால் நிட்சயமாக அதற்க்கு தெளிவான சான்றுகள் வேண்டும் சான்றுகள் இல்லாத எதுவும் இஸ்லாமிய வணக்கமாகமாட்டாது
.
இந்த வகையில் இன்று தெளிவான
சான்றுகள் இருந்தும் பிழையான பல பித்அத்
செயற்பாடுகளை சமூகம் சட்ட வியாக்கியானம் கொடுத்துகொண்டு வருகின்றனர் .ஆனால் அவை
எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை நபி ஸல் கூறினார்கள் “நான் உங்களிடம்
இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன் அவைகளை பின்பற்றும் காலம் எல்லாம் வழி தவற
மாட்டீர்கள் அவை அல்லாஹ்வின் வேதமும் நபி ஸல் அவர்களின் வழி முறைகளுமாகும் “ என்பதாக
எனவே குரான் ஹதீஸ் மட்டுமே இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் என்பதில் எள்ளவும் சந்தேகம்
கொள்ளக் கூடாது
நொண்டிச் சாட்டுக்கள்
பித்அத் தொடர்பாக பல
நொண்டிச் சாட்டுக்கள் சமூகத்தில் முன்வைக்கப் பட்டுள்ளன அவைகள்தான் இன்று வரை
பித்அத் காலூன்ற காரணம் எனலாம்
1- சில்லறை பிரச்சினைகள் என அர்த்தப்படுத்தல்
இன்று சிலர் பித்அத்களை அணுகுவதற்கு அவற்றை செயற்படுத்துவதற்கும் சில்லறை பிரச்சினை அல்லது சின்னப்பிரச்சினை
என்ற ஒரு பெயரை சூட்டியுள்ளனர் .இதனால்
சமூகத்தில் பல மார்க்க அனுஸ்டானங்கள் நிலைத்து நிக்க வழி ஏற்படுத்திக்
கொடுகின்றனர் .குறிப்பாக சில மார்க்க அறிஞ்சர்கள் அல்லது இஸ்லாமிய
அமைப்புக்கள் இந்த முயற்சியில்
ஈடுபட்டுள்ளன மார்க்கத்தில் எந்த ஒரு விடயமும் முக்கியமானவை அவை சிறிசு அல்லது முக்கியமின்மை என்ற அம்சங்கள் கிடையாது .கையில் சிறிய நூலை தாயத்தாக அணிவதும் இணை வைத்தல்தான் அதே போல் கப்ருகளுக்கு முன்னால் நின்று வணங்குவதும் ஒன்றுதான் இதை
நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .
2- நடை முறை படுத்துவது சமூக பிரச்சினைகளை உருவாக்கும்
என கருதுதல்
மார்க்கத்தை சொல்வதால்
சமூகத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்க்கு பெயர் பிரச்சினை அல்ல அது சாதாரண விடயம். விளங்கிக் கொள்வதில் உள்ள சிக்கல் .மக்கள் பழைய சிந்தனைகளில் இருந்து
விடுபடுவதில் ஏற்படும் தாமதம் தான் என்று
சொல்லலாம் .நபி ஸல் கூறினார்கள் “ யார் தனது குழந்தையை
விட தனது பெற்றோரை விட மக்கள் அனைவரை விடவும் என்னை விருப்பத்துக்கு உரியவராக ஆக்காத வரை அவர் ஈமான் கொண்டவராக
மாட்டார் “ முஸ்லிம் என்பதாக எனவே
இஸ்லாத்தை நடைமுறை படுத்த சமூக ஒற்றுமை அல்லது சமூக முரண்பாடு கருத்தில் கொள்ள முடியாது ஆனால் இஸ்லாத்தை
சொல்ல நல்ல அணுகுமுறை அவசியமானது .திடீரென் நுழைந்து ஒரு சமூகத்தில் திணித்து விட
முடியாது அதற்கான அணுகுமுறை அவசியமாகும் “ நீங்கள் உமது
இரட்சகனின் பால் மதிநுட்பத்தை கொண்டும் நல்லுபதேசங்க்களை கொண்டும் அழையுங்கள்” என குரான் “கூறுகின்றது
எனினும் இவ்வாறு காலாகாலம் சமூகம் பிளவு படும் என்ற இந்த சாட்டை சொல்லிக்கொண்டு
யாரும் இஸ்லாத்தை அதன் உண்மை வடிவை எடுத்து சொல்லாமல் இருக்க முடியாது ஒருவகையில் பித்அத்துக்களை சமூகத்துக்கு
எடுத்துச் செல்லல் அது மார்க்கத்தின் மீது பொய் சொன்னதாக அமையும் நபி ஸல்
கூறினார்கள் “ யார் என் மீது வேண்டும் என்று பொய்யை
சொல்லுகின்றாரோ அவருடைய தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் “அஹ்மத்
3- சட்டங்களை புரிதலில் சிக்கல் என உணர்தல்
இது ஒரு பிழையான வாதம்
காரணம் இஸ்லாத்தில் புரிவதற்கு சிக்கலான எதுவும் இல்லை நபி ஸல் கூறினார்கள் “மார்க்கம் இலகுவானது அது யாரையும் கஷ்டப் படுத்துவதில்லை அதை
யார் தானாக மிகைத்துக் கொண்டாரோ அவர்களை தவிர .......”புஹாரி என்பதாக எனவே மார்க்கத்தை புரிவதற்கான ; கற்பதற்கான பல வழிகள் உண்டு எனவே புரிவதற்கு கஷ்டம் என கருதி கப்சாக் கதைகளை
அல்லது பித்அத் வழி முறைகளை மார்க்கமாக
கொள்வது மிகப் பெரிய பாவம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
4- ஆதாரம் இல்லாத சட்டங்களை
அணுகுதல்
இது மிகப் பெரிய ஆபத்து. ஏனனில்
சட்டம் என்பது தெளிவானது அல்லது அவை இடம்பாடுள்ள சட்டங்களாக இருக்கும் உதாரணமாக
ஜனாஸா தொழுகையில் கிராதினை சத்தமாக
ஓதுவதும் நபிவளிதான் ஆனால் நாம் அவற்றை அப்படி ஓதுவதில்லை அது நமது வழக்கதில்
இல்லை என்பதற்காக அது சட்டமில்லை என விளங்கிக் கொள்ளகூடாது மாறாக .சமூக
வழக்கத்தில் அவை இல்லை ஆனால் கூட்டு துஆ சமூக வழக்கத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுக்
கொண்டு வருகின்றது என்பதற்காக அது சட்டமும் இல்லை .எனவே நாம் சரியான சட்டங்களை
புரிந்து கொள்வது அவசியம் ஆதாரம் இருந்தால் மட்டுமே அது பின்பற்றப் படவேண்டும்.இல்லாவிட்டால் அது தெளிவான பித்அத் என்பதை புரிந்து கொள்ள
வேண்டும்
கட்டுரையாளர் –றஸ்மி மூசா சலபி
மேலும் .........தொடரும்

0 comments:
Post a Comment