கொடும்பாவி எரிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது

| 0 comments


கொடும்பாவி எரிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது 


றஸ்மி மூஸா சலபி

இன்று கொடும்பாவி எரித்தல் என்ற விடயம் பொதுவாக எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் மற்றும் அரசியல் சார்பான அரங்கில் சர்வ சாதாரணமாக போய்விட்டது. இது பொதுவாக இந்திய அல்லது மேற்கத்தைய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடும் ஆனால் இன்று  முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் இது பரவலாக தாவியுள்ளது அவதானிக்கத்தக்க பாரதூரமான விடயமாகும் எனினும்  .இஸ்லாம் இதை தடை செய்கின்றது.

நேரடியாக இத தடை செய்யவிடாலும் வேறு ஒரு கோணத்தில் இதை பார்கின்றது .இஸ்லாத்தில் ஒரு உயிரை எரிப்பது அது இறந்தாலும் சரி அல்லது உயிரோடு இருந்தாலும் சரி அது தடை செய்யப்பட்டுள்ளது ஒரு .எறும்பைக் கூட எரிக்க அனுமதி இல்லை.  

இதற்கு ஒரு சான்றாக முஸ்லிமில் வரக்கூடிய ஒரு ஹதீஸில் “ ஒரு எறும்பு ஒரு நபியை தீண்டியது அப்போது அந்த நபி இந்த இரும்பையும் அதன் கூட்டையும் எரியுங்கள் என்று கட்டளை இட்டார்.  அப்போது அல்லா அவருக்கு வகியாக அனுப்பினான் “ நீ அல்லாஹ்வை துதிக்கும் ஒரு சமூகத்தையா அழித்துவிட்டாய் என்று ? (முஸ்லிம்) அறிவிப்பவர் அபு ஹுரைரா

எனவே ஒரு அற்ப எறும்பை கூட எரிக்க நமக்கு அனுமதி இல்லை நெருப்புக்கு சொந்தக்காரன் அல்லாஹ். மறுமையில் ஒரு பாவியை நரக நெருப்பில் போடும் உரிமை அவனுக்கே உண்டு .இந்த வகையில் உயிரோடு இருக்கும் ஒருவரை நாம் எரிப்பது போன்று செய்வது என்பது மிகப் பெரிய பாவம் நாம் அப்படி செய்தால் அவருடைய மன நிலை பாதிப்படையும் .அவருக்கு அது அவமானமாக இருக்கும்.

மேலும் அல்லாஹ்வுடைய தண்டனையை நாம் கையில் எடுக்க முடியாது .குறிப்பாக முஸ்லிம் சமூகம் இதை செய்வதானது  மிகவும் வெறுக்கதக்க செயல் இதில்  நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. குறிப்பிட்ட ஒரு நபரை நாம் அரசியல் அரங்கில் ஆதரிக்க முடிந்தால் ஆதரிக்கலாம் இல்லாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளலாம்
.
இப்படி ஒரு நபரை அவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது அல்லாதவராக இருக்கலாம் இப்படி கொடும்பாவி எரிக்கும் நிலை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு முஸ்லிமின் வாழ்வில் இருப்பது கூடாது.இது இஸ்லாமிய ஒழுக்கத்துக்கு அப்பாற் பட்டது.குறிப்பாக ஆர்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை வழிநடாத்தும் மஸ்ஜிதுகள் மற்றும் உலமாக்கள் இந்த விடயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.எதிர்ப்பை காட்டுவதானால் நல்ல அழகிய வழி முறைகளை கையாள வேண்டும் .அல்லாஹ் மிகவும் அறிந்தவன்

றஸ்மி மூஸா சலபி       


0 comments:

Post a Comment