பெண்களே தேர்தலில் வாக்களிக்கும் போது முகத்திரையை நீக்குங்கள்
றஸ்மி
மூசா சலபி
“தீய எண்ணங்களை விட்டும் உங்களை நான் எச்சரிகின்றேன்
நிட்சயமாக அவை வார்த்தைகளை பொய்யாக்கும் “( புஹாரி) என்ற நபி மொழியை உங்கள் முன் நிறுத்தியவனாக, முஸ்லிம் பெண்கள் முகத்தை கட்டாயம் மூடவேண்டுமா
இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு
புறம் இருக்க எதிர்வரும் பதினேழாம் திகதி
நடை பெறவுள்ள பொதுத் தேர்தலின் போது பெண்களே உங்களுடைய முகங்களை தயவு செய்து வாக்களிக்கும்
போது மற்றும் ஆளடையாளம் காட்டும் போதும் உங்கள் முகத்திரையை நீக்குங்கள் முகத்தை வெளியே சற்று காட்டுவது ஹராம் என்று நினைத்து
அப்படி செய்வதால் இன்றைய சூழலில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழ வாய்ப்புள்ளது .
முஸ்லிம்கள் மீது இருக்கும் காழ்புணர்வு மற்றும் வெறுப்பு குறிப்பாக தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு இன்று இருக்கும் சாதகமான சூழல் மறு பக்கம் பெண்கள் வாக்களிக்கும் போது முகத்திரை நீக்க மறுப்பது பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் . மறுதலையாக அரசாங்கமே தேர்தலின் போது கடுமையாக முஸ்லிம்கள் மீது நடக்க வாய்ப்புள்ளது
.மேலும் மஞ்சள் நிறக் காவிகள் கூட தருணம் பார்த்து காத்திருகின்றனர் எனவே நீங்கள் வாக்களிக்க சென்றால் தயவு செய்து முகத்தை தேர்தல் அதிகாரிகளுக்கு
காட்டுங்கள் .அதுதான் இஸ்லாம் .குறிப்பாக சில சகோதர்கள் மார்க்கம் என்ற போர்வையில் இதனை பிழையாக விளங்கி கடந்த காலங்களில் தேர்தலின் போது இவ்வாறான சம்பவங்களை ஏற்படுத்தி உள்ளனர் .
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் புரிய வேண்டாம் .நாங்கள் இந்த விடயத்தில் கடும் போக்காக இருந்தால் தேர்தல் காலத்தில் இதை விஸ்பரூபமாக்க பலர் ஆக்க முனையக்கூடும்.ஒரு பெரும்பாண்மை நாட்டில் எப்படி வாழ வேண்டும் என்று நாம் இஸ்லாத்தை படிதுள்ளோமோ அதே போன்று நடந்து கொள்ள வேண்டியது எமது தார்மீக பொறுப்பு எமக்குள்ளது .
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் புரிய வேண்டாம் .நாங்கள் இந்த விடயத்தில் கடும் போக்காக இருந்தால் தேர்தல் காலத்தில் இதை விஸ்பரூபமாக்க பலர் ஆக்க முனையக்கூடும்.ஒரு பெரும்பாண்மை நாட்டில் எப்படி வாழ வேண்டும் என்று நாம் இஸ்லாத்தை படிதுள்ளோமோ அதே போன்று நடந்து கொள்ள வேண்டியது எமது தார்மீக பொறுப்பு எமக்குள்ளது .
எனவே உலமாக்களே புத்தி ஜீவிகளே பொறுப்பு தாரர்களே “
நீங்கள் அனைவரும் பொறுப்பு தாரர்கள் உங்கள் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரணை
செய்யப்படுவீர் “ என்ற நபி மொழிக்கமைய இந்த விடயத்தில் நிதானப் போக்கை கையாளுங்கள் .உங்கள்
பெண்களுக்கு அறிவுறுத்துங்கள் .கட்டாயம் ஹுத்பா உரைகளில் இதனை வலியுறுத்துங்கள் .
(இதனை மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள் )
(இதனை மற்றவர்களுக்கு எத்தி வையுங்கள் )
றஸ்மி
மூசா சலபி

0 comments:
Post a Comment