சிறுபராயதிருமணத்தை (CHILD MERRAIGE ) இஸ்லாம் அனுமதிக்கவில்லை

| 0 comments


சிறுபராயதிருமணத்தை (CHILD MERRAIGE )  இஸ்லாம் அனுமதிக்கவில்லை

இஸ்லாத்தில் திருமணம் கட்டாயமில்லை  ?

              கட்டுரையாளர் - றஸ்மி மூஸா சலபி

திருமணம் என்பது இயற்கையின்  சமூக வழிமுறை .இறைவன் அப்படிதான் இந்த உலகை படைத்துள்ளான் அல்லாஹ் கூறுகின்றான்  “நிட்சயமாக அவன்   ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற சோடியாக படைத்துள்ளான்“ அல்குரான் இந்த அடிப்படையில் உலகத்தின் துவக்கமே ஆதம் அலை அவர்களை படைத்த இறைவன் கூடவே  ஹவ்வா அலை அவர்களையும்  சோடியாக படைத்துதான் இந்த உலகை சமூக அமைப்பாக அல்லாஹ் உருவாக்கினான் .

இந்த வகையில் இஸ்லாம் இந்த திருமணத்தை ஒரு அவசிய ஆனால் அத்தியவசிய அல்லாத ஒன்றாக சட்டமாக்கி உள்ளது .எனினும் திருமணத்தை முடிப்பது கூடாது என்று கொள்கையை  இஸ்லாம் அனுமதிக்கவில்லை .நபி ஸல் அவர்கள் கூறும்போது “திருமணம் எனது வழிமுறை யார் அதனை மறுகின்றாரோ அவர் என்னை சார்ந்தவர் இல்லை “ (திர்மிதி ) என்று கூறியுள்ளார்கள் எனவே  சில மதங்களிலும் கொள்கைகளும் காணப்படும் திருமணம் பற்றிய எதிர்மறையான கொள்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை முடிந்தால் திருமணம் செய்யுங்கள் என்றே கூறுகின்றது.திருமணத்தை வெறுத்து ஒதுங்கி  வாழ்தல் கூடாது எனினும் நியாயமான காரணங்கள் இருந்தால் திருமணம் செய்யாமல் ஒதுங்கி  இருப்பதில் எந்த தவறும் இல்லை  

இது பற்றி நபி ஸல் அவர்கள் கூறும் போது “ இளைஞ்சர் கூட்டமே நீங்கள் சக்தி இருந்தால் திருமணம் செய்யுங்கள் அது பார்வையை தாழ்த்தும் மறும உறுப்பை பாதுகாக்கும் அப்படி முடியாவிட்டால் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் அதுவே பாதுகாப்பு கேடயமாகும்  “( புஹாரி )என்ற அடிப்படையில் கூறினார்கள் .இந்த அடிபடையில் மனம் முடிப்பது கட்டாய கடமை அல்ல ஆனால் வெறுத்து ஒதுக்குவது கூடாது .என்பதுதான் இஸ்லாத்தின் கொள்கை  

சரி அப்படி அனுமதி இருந்தால் அதனை நாம் செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறை உண்டு அது இஸ்லாம் கூறும் ஒழுங்கு மற்றும் பொதுவான உலக நடைமுறைகள் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும். நான் உலக நடைமுறை என்பது பொது சமூக மரபுகளுக்கு உட்பட்டது (சர்வதேச சட்ட்டங்கள் உட்பட)

இந்த வகையில் சிறுபராய  திருமணம் (Child Merriage) என்ற ஒரு விடயம் இன்று உலகில் பரவலாக காணப்படுகின்றது  குறிப்பாக ஆபிரிக்க மற்றும் சில அரபு நாடுகளிலும் காணப்படுகின்றது மேலும் இஸ்லாத்தின் பெயரால் கூட அடிக்கடி அது பற்றி விமர்சிக்கப்படுகின்றது அதாவது வயதுக்கு வந்த அல்லது வராத சிறுமிகளை திருமணம் செய்து கொடுத்தல் (Child Merriage) என்பதாகும்

 இஸ்லாம் திருமண வயது  வயது தொடர்பாக எதுவும் கூறவில்லை விதிமுறைகளை மட்டும் கூறியுள்ளது எனினும் சிறுவர் என்றால் யார் பொதுவான உலக திருமண வயது என்ன ? போன்றவை உலகில் சட்டங்களாக உண்டு நான் மேலே கூறியது போல் நாம்   உலகியல் பொதுவான திருமண வயதுக் கட்டுப் பாடுகள் மற்றும் சட்டங்களுக்கு  மதிப்புக்கொடுக்க வேண்டும் .உதாரணமாக உலகியல் திருமண பொதுவான வயசு 18 சில நாடுகளில் 17 என்றும் கூறப்படுகின்றது  இந்த வயசு பொதுவாக மருத்துவ துறையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது .எனினும் சுமாரான வயதாக பெண்களின் திருமண  வயது 25  ஆக இருப்பது நன்று என  உலக  சுகாதார நிறுவனம் (WHO ) சுட்டிக் காட்டியுள்ளது  காரணம் ஒரு பெண் குழந்தை பெறும்  சரியான கற்பு முதிர்சிக்கான  வயது இதுவே என்று இன்று  கண்டறிபபட்டுள்ளது .

மேலும் இள வயது திருமணம் இது அறுவை சிகிட்சை மூலம் குழந்தை பெறுவதை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகின்றது அதன் காரணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள் இந்த அடிபடையில் குழந்தை திருமணத்தை இஸ்லாம் ஆதரிக்கவில்லை .அப்படி குழந்தைகளை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் அநியாயக் காரர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .இதனால் ஒரு சிறுமியின் உரிமை பாதிக்கப் படுகின்றது .
எனது மேலே உள்ள கூற்றுக்களின் படி சிறு பராய திருமணத்தை தவிர்ப்பதால் பின்வரும் சமூக அனுகூலங்கள்   ஏற்படுகின்றது 
  
         ·            ஒரு பெண் குழந்தை பெரும் வயதை அல்லது முதிர்ச்சியினை பெற்றுக் கொள்கின்றாள்  

         ·            பாலியல் ரீதியான அறிவு மற்றும்  நிதானப் போக்கு ஏற்படுகின்றது
         ·            வாழ்கையில் பல இன்னல்களை சந்திக்க முகங்கொடுக்கும் சுபாவம் ஏற்படுகின்றது

         ·            குடும்பத்தை ஏற்று நடாத்தும் திறன்விருத்தி ஏற்படுகின்றது
         ·            ஒரு தாயாக இருந்து பிள்ளைகளை கவனிக்கும் குடும்ப  ஆற்றல் ஏற்படுகின்றது

         ·            மணவிலக்கு அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்

மேலும் இந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் ஆயிசா ரலி அவர்களை சிறு பராயதில்தானே முடித்தார்கள் அதுவும் வயது வருவதற்கு முன்னால் என்று பலர் வாதிடுகின்றனர் இல்லை  அது அவர்களுக்குரிய சிறப்புக் காரணம் நபியின் மனைவிமார்களை நபிக்குப் பிறகு யாரும் மறுமணம் செய்ய முடியாது என்பதுபோல் ஆயிசா ரலியை நபி ஸல் திருமணம் முடிப்பது என்பது அல்லஹ்வின் கட்டளை அது நபி ஸல் அவர்கள் கனவில் கண்டது அல்லாஹ்  வகியாக அனுப்பியது .எனவே அந்த சம்பவத்தை கொண்டு யாரும் சிறு பராய திருமணத்தை ஆதரிக்கவோ சட்டமாக்கவோ  முடியாது .எந்த ஒரு சஹாபியும் அப்படி சிறு பராய திருமணம் முடிக்கவில்லை .நபி ஸல் அவர்களே ஆயிசாவிடம் “ ஆயிசாவே நான் உன்னை மனம் முடிக்க கனவு கண்டேன் என்று கூறிய நபி மொழி புஹாரியில் காணப்படுகின்றது.எனவே இது வஹி அல்லாஹ்வின் கட்டளை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்
ஒருவேளை அந்த ஏற்பாடுதானோ  இன்று அதிகமான நபி மொழிகள் ஆயிசாரலி அறிவிக்க காரணமாக அமைந்திருக்கும் என்னவோ? எனவே வெறுமனே ஆதாரமில்லாமல் சமூக ஒழுக்கத்துக்கு மாறாக சிறு பிள்ளைகளை மனம் முடிக்கும் அல்லது மணம் முடித்து வைக்கும்  போக்கை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை .

அப்படி முடிப்பதால் பின்வரும் தாக்கங்கள் பாதிக்கப் படும் நபருக்கு  ஏற்படுகின்றது

Ø  குறிப்பிட்ட சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளாகின்றாள்

Ø  சிறு பராயத்தில் குடும்பசுமை அதிகரிக்கின்றது

Ø  சிறு பராயத்தில் மணம் முடித்து வைப்பதால் போதிய கல்வி வசதிகளை சிறுமி பெறமுடியாத சூழல் ஏற்படுகின்றது

Ø  தனக்கு வயது மூத்தவர்களை மணப்பதால் உளவியல் சமூக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றாள்
 
எனவே இஸ்லாத்தின் படி சமூக கட்டமைபை சிதறடிக்கும் இச் சிறுபராய திருமணத்தை நாம் எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது 
.
கட்டுரையாளர் - றஸ்மி மூஸா சலபி


0 comments:

Post a Comment