ISIS அமைப்பு இஸ்லாத்தில்
அனுமதிக்கப் பட்டதல்ல -
றஸ்மி மூசா
(இதன் முழுமையான கட்டுரை இந்த வெப் தளத்திலேயே உண்டு வாசியுங்கள்
)
நம்மில் பலர் உலமாக்கள் உட்பட ஹிலாபாத் என்ற இந்த சொல்லை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்
. குறிப்பாக ISIS என்ற குழு பற்றிப்
பேசும் போது இன்று அதிகம் அதிகம் இந்த சொல் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது .
அறிந்து கொள்ளுங்கள் ஹிலாபாத் என்பது நாம் போராடி வெற்றி கொள்வது அல்ல மாறாக அல்லா
அதை தானாக வழங்குவான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே ஆயுத ரீதியான வெற்றி
என்பது வெற்றி அல்ல. அது பலத்தின் மீதான வெற்றி மட்டுமே . அல்லாஹ்வின் அங்கீகாரம் இல்லாமல்
ஒரு போதும் யாரும் ஆட்சி செய்ய முடியாது. ஆட்சி
அதிகாரம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது உண்மையான ஹிலாபாத் எப்போது தெரியுமா ?
ஆம் அதுதான் நபி ஸல் அவர்கள் கூறிய மகதி அலை அவர்களின் ஆட்சி அதிகாரம். இமாம் மஹ்தி அலை அவர்கள் மற்றும் ஈசா அலை அவர்கள் இந்த உலகில்
வந்து இறுதிக் காலத்தில் இந்த உலகை ஆளும் நாட்கள் இறுதியாக நடக்கும் ஹிலாபாத் ஆட்சி
என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதையே நபி ஸல் அவர்கள் கூறும் போது “ பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த
நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான்.
அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின்
பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் அபூதாவூத்
மேலும் கூறும் போது “ அரபு தேசத்தை
என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது”
என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
கூறினார்கள்.-நூல் திர்மிதி 505/4
இதே போன்று இமாம் மஹ்தி அலை அவர்களுக்கு உதவியாக அல்லாஹ் ஈசா அலை அவர்களை இந்த
உலகிற்கு அனுப்புவான்.உதவி என்றில்லாவிட்டாலும் அல்லாஹ்வின் ஏற்பாடு இதுதான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த
இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை)
உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை
உடைப்பார்; பன்றியைக் கொல்வார்;
ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை
வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து
ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள
எவரும் இருக்கமாட்டார்
இப்படி ஈசா அலை அவர்களின் ஆட்சியை சிறப்பித்துக் கூறப் பட்டிருக்கின்றது ஈசா நபி
உலகிற்கு வந்தாலும் அந்த வேளை ஹலீபாவாக இருக்கும்
மஹ்தி அலை அவர்களை அவரும் தலைவராக ஏற்பார்
என்றால் இந்த ஹிலாபாதின் மகிமையை நாம் விளங்கிக் கொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு
ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே
நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள்.
அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத்
தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!" என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா
(அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித்
தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ்
இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறிவிடுவார்கள்.இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இங்கு நபி ஸல் அவர்கள் போராட்டம் என்று கூறும் விடயம் இமாம் மஹ்தி அலை அலை அவர்களின் போராட்டத்தைத்தான் இமாம் என்று
கூறுவது அந்த மகதி அலை அவர்களிதான் என்பதை
நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்
இதில் ஒரு மிக முக்கிய கோட்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் அப்படி இந்த ஹிலாபத்
ஏற்படுவதாக இருந்தால் நபி ஸல் அவர்கள் கூறியது போல் அது அவர்களுடை குடும்ப உறுப்பினர்
என்னும்போது எவ்வாறு வேறு ஒரு சமூகத்தில் இருந்து நாம் ஹிலாபத் என்றும் ஹலீபாவாக என்றும் அழைப்பதும் பிரகடனப்படுத்துவதும் என்பதை
சிந்தியுங்கள்
எனவே இந்த ஒரு கோணத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களை மதிப்பிடும் போது இன்று நடக்கும் போர் இஸ்லாமிய உலகில் சீயா மற்றும்
சுன்னிக்கள் என்ற அரசியல் பின்னணியின் பலத்தை நிறுவும் போராட்டம்.சீயாக்கள் தொடர்பானஎனது
கட்டுரை இந்த வெப் தலத்தில் உள்ளது வாசியுங்கள் இந்த ஒரு கோணத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களை
மதிப்பிடும் போது இதற்குள் யாரும் மூக்கை நுழைத்து இந்தப் போராட்டத்துக்கு ஹிலாபத்
சாயம் பூச முற்படவேண்டாம் குறிப்பாக உலமாக்கள் மிம்பர்களிலும் உரைகளிலும் இப்படி முழங்குவதை
கண்டிப்பாக தவிர்த்து கொள்ள வேண்டும்
உண்மையான ஹிலாபாத் எதிரிகளையும் வழிப் படுத்தும் அதே வேளை மாற்று சமூகமும் இந்த ஹிலாபாதுடன் வாழ்ந்த சரித்திரம்
இஸ்லாதில் பதிவு செய்யப் பட்டுள்ளது அதனால்தான் ஜிஸ்யா திம்மா போன்ற பல வரிகள் ஹிலாபதில்
ஏற்படுத்தப்பட்டன மற்றவர்களுடைய கோவில்களுக்கு பாதுகாப்பு உண்டு மற்ற சமூகங்களுக்கு
மத சுதந்திரம் உண்டு. பூமியை சுத்தப் படுத்துகின்றோம்
என்பதற்காக இருக்கும் மாற்று மத மக்களை அல்லது வணக்க தலங்களை உடைத்து நாம் ஒரு போதும் இறை ஆட்சியை நிறுவ முடியாது
இதைதான் நபி ஸல் அவர்கள் ஈசா நபி உலகிற்கு
வரும் போது " நபியோ ஸல் கூறினார்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது
சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே
நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்;
பன்றியைக் கொல்வார்;
ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை
வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து
ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள
எவரும் இருக்கமாட்டார் என்று இந்த இறையாட்சியை சிறப்பித்துக் கூறினார்கள்
உண்மையான இறை ஆட்சி கோவில்களை உடைக்காது சிலைகளை உடைக்காது மற்ற மக்களை அநியாயமாக
தாக்காது மற்றவர்கள் அறிவில்லாமல் பொது மக்களை தாக்குகின்றனர் என்பத்ர்க்காகாக அல்லாஹ்வின்
அடியார்கள் தாக்க மாட்டார்கள்
முடிவு
ஹிலாபத் என்ற அம்சம் பிரத்யேகமாக நபி ஸல் அவர்களால் இந்த இஸ்லாமிய உலகிற்கு அல்லாஹ்வின்
அருளால் வழங்கிய ஒரு அருட் கொடை. அது வெறும் ஆட்சி அதிகாரம் அல்ல. மாறாக இஸ்லாமிய உலகை
ஓன்று படுத்தும் மாபெரும் அருள். இது சாதாரண தனி மனிதர்களால் யாரும் நிருவ முடியாது
.இது நான்கு ஹலீபாக்கலான அபூ பக்கர் உமர் உதுமான் மற்றும் அலி ரலியோடு முடிந்து பின்னர்
இமாம் மகதி அலை அவர்களோடு முற்றுப் பெறும் . அல்லா போதுமானவன்
ஆயுத ரீதியான் போராட்டங்கள்
ஒரு போதும் ஹிலாபாத் அல்ல ஆனால் இஸ்லாமிய ஆட்சியை
நிறுவவேண்டும் என்றால் அல்லாஹ்வின் அருள் வேண்டும் அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்கும்
ஆனால் ஹிலாபதக இருக்காது
உலகில் ஒரு பகுதி
மட்டும் இஸ்லாமிய ஹிலாபாத் அல்ல. இஸ்லாமியன் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலாபாதாகதான் இருக்க
முடியும். இதனால்தான் நான்கு ஹலீபாக்கள் காலத்திலும் இஸ்லாமிய உலகு ஒன்றாக இருந்தது
இமாம் மஹ்தி அலை காலாதிலும் இது ஓன்று படுத்தப்பட்டு தான் உலகம் அழியும்

Prophet (صلّى الله عليه وآله وسلّم) did in fact prophecize in Hadith that there would be twelve Caliphs, and many Sunni scholars do believe that the last of the twelve will be Imam Mehdi who will fill the earth with justice. This is most definitely a belief of the Ahlus Sunnah wal Jama’ah, well-known to the scholars even if it is not well-known amongst the lay-persons from amongst the Sunnis.who are those 12.....
ReplyDeleteEstablishing Islamic ruling is Wajib ( IJMA of Scholers). it coud be called khilafah or islamic state. objective is same.
ReplyDeleteExplain the different between Khilafah and Islamic Rule (Islamic State).
ReplyDelete