இஸ்லாத்தின் பார்வையில் விவாதித்தல்- றஸ்மி மூசா சலபி
18/08/2014
விவாதம்
என்ற சொல் உலக அளவில்
சமயம் மற்றும் அரசியல் தொடர்பான
விடயங்களில் மிகப் பிரபலமானவை. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் அதாவது நவீன
தொழில் நுட்ப வளர்ச்சியின் பின்னராக
விவாத
முறைகள் துரித வளர்ச்சி அடைந்தன
.இந்த வகையில் இஸ்லாத்தில் இதன்
தேவைப்பாடு பற்றி நாம் அலசும்
போது பல விடயங்களை உள்வாங்கிக்
கொள்ளலாம் .இஸ்லாம் விவாதம் தொடர்பாக என்ன கூறுகின்றது என்பதற்கு
முன்னர் விவாதம் ஏன்
தேவை என்பதை நாம் அறிந்து
கொள்ள வேண்டும் .
உண்மையில்
ஒரு விடயத்தை உண்மை படுத்த பல
சான்றுகள் தேவை அந்த சான்றுகள்
போதிய அளவு இருந்தும் பிறரால்
ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாத ஒரு
நிலையில் விவாத முறைகளை பயன்படுத்தி
விடயங்களை உண்மை படுத்துவதில் தப்பு
கிடையாது. இந்த
வகையில் இஸ்லாம் இந்த விவாதத்தை
மூன்று வகையாகப்
பிரிகின்றது.
1- இஸ்லாத்தை அறிந்து கொண்டே தெளிவான
சான்றுகள் உள்ள விடயங்களுக்கு விவாதத்துக்கு
அழைத்தல். உதாரணமாக ஐந்து
வேளை தொழுகை
உள்ளது என்று ஒரு முஸ்லிமுக்கு
தெரியும். ஆனாலும் அப்படி
இல்லை நான்கு வேளைதான் என்று மற்றவர்களை
விவாதத்துக்கு
அழைத்தால் அது விவாதமும் அல்ல.
அவன் முஸ்லிமும் அல்ல. இதற்குப் பெயர்
விதண்டா
விவாதம்
இந்த வேளை
விவாதம் செய்யக் கூடாது என்று அல்லா கூறுகின்றான்.
"(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப்
புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால்,
நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன்
நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6 : 68)
2- இஸ்லாம்
அல்லாத மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தை
குறையாக விவாதம் செய்வர் இந்த
இடத்தில அவர்களுடன் நாம் கட்டாயம் விவாதம்
செய்து இஸ்லாத்தை உண்மை எது என்பதை நிலை நாட்ட
வேண்டும் .இது இஸ்லாமிய வளர்ச்சிக்கு
மிக முக்கியமானது. அல்லா கூறுகின்றான்
“ அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).(8: 6)
3- அடுத்த வகை விவாதம் அல்லா பல விடயங்களை
மனித சமூகத்துக்கு காலத்தின் அடிப்படையில் தெளிவு படுத்தாமல் மறைமுக அறிவாக வைத்துள்ளான
.அவை சிலேளை அதை அறிந்து கொள்வதில் இஜ்திகாத் என்றடிப்படையில் காணப்படும். அதாவது சட்ட நுணுக்கத்தில் ஒவ்வொருவருவரும் விளங்கிக்
கொள்வது வேறுபட்டுக் காணப்படும்.
இந்த வேளை நாம் ஒரு போதும் விவாதம் செய்யக்கூடாது.
உதாரணமாக பெருநாட் பிறை காணும் விடயத்தில் தேசிய மற்றும் சர்வதேச பிறை கண்டு பெருநாள்
கொண்டாடுதல் என்ற விடயம் கிட்டதட்ட ஒரு இஜ்திகாதாக எடுக்கலாம் .இங்கு நாம் இதை விவாத்ததிக்கு எடுக்க
வேண்டிய அவசியம் இல்லை .இது இஜ்திகாத் என்ற தரத்துக்கு கொண்டு வரலாம்.
அல்லா
கூறுகின்றான்
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.(3: 66)
இந்த
அடிபடையில் ஒழுக்கமாக போதிய சான்றுகளை கொண்டு
அறிவு பூர்வமாக விவாதிப்பதை பார்கின்ற மக்களுக்கு
தெளிவாக இருக்கும் அமைப்பில் நாம் விவாதம் செய்து
கொள்ளலாம். இதை பற்றி நபி
சல அவர்கள் கூறும் போது:
'நான்கு
பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன்
வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும்
ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை
நயவஞ்சகத்தின்
ஒரு பண்பு அவனிடம் இருந்து
கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால்
பொய் பேசுவான்;
ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால்
நேர்மை
தவறிப்
பேசுவான்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
அறிவித்தார். நூல் முஸ்லிம்
அல்லா
கூறுகின்றான்
“அல்லாஹ்வை
அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக்
கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே
இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர்
ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது;
ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர்
ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே
திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.(6: 164)
இந்த அடிப்படையில் நாம் நமது விவாதத்தை
அமைத்துக் கொண்டால் அது
இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதுதான். அல்லா மிகவும் அறிந்தவன்
றஸ்மி மூசா சலபி
18/08/2014
0 comments:
Post a Comment