வெற்றிலை பாக்கு சாப்பிடுதல் ஹராமாகும் -றஸ்மி மூசா -சலபி
இஸ்லாம் போதை தரக் கூடிய நுகர்வுப் பொருற்களை பின்வரும் காரணங்களுகாக தடை செய்கின்றது.
1- நேரடியாக போதை தரக் கூடியவை நபி ஸல் கூறினார்கள்
" போதை தரக்கூடிய அனைத்தும் ஹராமாகும் "
இது நேரடியாக மதுபானத்தை குறித்து மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா போதை தரக்கூடியவற்றையும்
குறிக்கும்.
2- மனிதனுக்கு தீங்கு தரக் கூடிய போதை வஸ்துக்கள் போன்றன
அடங்கும் இந்த வகையில் புகைத்தல் ,வெற்றிலை பாக்கு சாப்பிடுதல் போன்றன இதில் பிரதானமானவை .அல்லா குர்ஆனில் கூறும்
போது “ நீங்கள் அல்லஹ்வின் பாதையில்
செலவு செய்யுங்கள். உங்கள் கரங்களை அழிவின் பால் கொண்டு செல்லாதீர்கள் .நீங்கள் நல்லதையே செய்யுங்கள் நிட்சயமாக
அல்லாஹ நல்லதை செய்வதை விரும்புகின்றான்
" (பகரா-195) எனக் கூறுகின்றான் .இங்கு இவைகள் மதுபானம் போல்
போதை இல்லாவிட்டாலும் மனிதனை மயக்கும் பொருட்களாகும் . போதை சிறிதளவேனும் உண்டு
3-வீண் விரயம் பொதுவாக வீண்விரயம் ஹராம் " நிட்சயமாக
வீண் விரயம் செய்வோர் செய்தானின் நண்பர்கள்" என குரான் கூறுகின்றது. வீண் விரயம் என்பதற்குள்
வீணாக செலவு செய்வதையும் குறிக்கும். இது நேரடியாக போதை பொருட்களை தடுக்கும். ஏனனில்
நாம் போதை பொருட்களுக்கு அதிக செலவு செய்கின்றோம் அவை வீணான செலவுகளாகும்.
இந்த வகையில் இந்த வெற்றிலை பாக்கு சாப்பிடுதல் புகைத்தலை விடவும் மிகக் கொடிய
நோய் காரணி என்பதோடு புற்றுநோய் மிக இலகுவாக ஏற்பட காரணியாகவும் அமைகின்றது
.மேலும் புதிய ஒரு ஆய்வில் வெற்றிலை பாக்கு சாப்பிடுதல் ஒருவர் ஒரு தடவை புகைப்பதை
விட 10 மடங்கு ஆபத்து மிக்கவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.மேலும்
வெற்றிலை பாக்கு என்றில்லாவிட்டாலும் இன்று நவீன முறையில் விற்பனை செய்யப்படும் பக்கட்டுகளில்
அடைக்கபட்ட பாண்பராக்கு போன்றவையும் இதனுள்
அடங்கும்.
Australian Drug Reserch Institution செய்துள்ள ஆய்வின் அடிப்படையில் இதன் தாக்கங்கள்
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இந்த பின்வரும் தளத்துக்கு சென்று இதன் ஆய்வுகளை
பார்க்கலாம். http://www.druginfo.adf.org.au/drug-facts/betel-nut
எனவே நண்பர்களே உங்கள் பெற்றோர் உறவினர்களுக்கு இது பற்றிக் கூறுங்கள் .வெற்றிலை
பாக்கு தட்டம் வீடுகளில் பயன்படுத்துவதை தடை
செய்யுங்கள் .இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .அல்லா போதுமானவன்.

0 comments:
Post a Comment