பி ஜே சூனியத்தால் ஒரு போதும் மரணிக்க மாட்டார் ? -றஸ்மி மூசா சலபி

| 0 comments



  பி ஜே சூனியத்தால் ஒரு போதும்  மரணிக்க மாட்டார் ? -றஸ்மி மூசா சலபி

சூனியம் இஸ்லாத்தில் உண்ட இல்லையா என்பது வேறு  பி ஜே மரணிப்பாரா ?இல்லையா ? என்பது வேறு ஏனென்றால் சூனியம் மனிதனுக்கு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த விடயம் .அது எப்படி என்றால் மனிதன் எப்பெடி ஒரு தலைவலியை உணர்கின்றானோ அல்லது காய்ச்சலை  உணர்கின்றானோ அதே போன்றுதான் .ஆனால் ஒருவரை மரணிக்கச் செய்யும் ஆற்றல் சூனியத்துக்கு கிடையாது " அவனே உயிர்பிப்பவான் அவனே மரணிக்கச் செய்பவன் " எனக் குரான் கூறுகின்றது .எனவே இது அல்லஹ்வின் ஆற்றல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 

இந்த அடிப்படையில்தான் நபி ஸல் அவர்களுக்கு  ஏற்பட்ட  சூனிய உணர்வு அவர்களுக்கு எதோ ஒரு உணர்வு ஏற்பட்டது  செய்யாததை செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. என்பதுதான் நபி ஸல் அவர்கள் சூனியம் தொடர்பாக  ஆயிஷா ரலி அறிவிக்கும் நபி மொழி . இது பொதுவாக கடும் சுரம் ஏற்பட்டால் மனிதனுக்கு உண்டாகும் தற்காலிக உணர்வுதான்  

இந்த வகையில் மண்ணைக் கவ்வப் போவது அகோரி மணி கண்டந்தான் அதில் மாற்றுக் கருத்துக் கிடையாது இன் சா அல்லா. ஏனென்றால் இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் சகோதரனை நாம் மதித்து அவருக்குதான் பூரண ஆதரவு வழங்க வேண்டும் .நிராகரிப்பில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு சவால் விடும் சூனிய கார அகோரி மணி கண்டன் போன்றோருக்கு நாம் ஒரு போதும் ஆதரவு வழங்க கூடாது

ஏனென்றால்  இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் ஒரு தனிமனிதனை சூனியம் மரணிக்கச் செய்ததாக வரலாறு இல்லை .அல்லா அப்படி நாடவும் மாட்டான் .அதனால்தான் முன்னுள்ள நபிமார்கள் காலத்திலும் அப்படி மரணிக்கச் செய்யும் ஆற்றல் எந்த சூனியவாதிக்கும் கொடுக்கப் படவில்லை .

எனவே பி ஜே  வாதாடும் அம்சத்தில் உள்ள ஒரு உண்மை சூனியம் ஒருவனுடைய வாழ்கை யை சீரழிக்காது .கருவருக்காது .ஆனால் இந்த இடத்தில பி ஜே  தப்பிக்க நினைக்கும் இடம் அவர் வெற்றி பெற்றாலும் சூனியம் என்பது இல்லாமல் போகாது ஆனால் இது பி ஜே இனால் பயன்படுத்தப் படும் வழமையான உபாயங்களில் இது உயர்ந்த பட்சமானது . மக்களை நம்ப வைக்க பயன்படுத்தப்படும் ஒரு உபாயம் அதில் மாற்றுக் கருத்து இல்லை .அல்லா மிகவும் அறிந்தவன் .

சூனியம் பற்றிய எனது முழுமையான ஆய்வை கீழே உள்ள லிங்கை அழுத்தி வாசியுங்கள் 
http://ikamathulislam.blogspot.com/2014/02/blog-post_28.html

0 comments:

Post a Comment