சகாதுல் பித்ர் ஒரு கட்டாய வணக்கம். அது பணமாக வழங்க முடியாது

| 0 comments
சகாதுல் பித்ர்  ஒரு கட்டாய வணக்கம். அது பணமாக வழங்க முடியாது





          அஷேக்-றஸ்மி மூசா  26/07/2014

சகாதுல் பித்ர் என்ற ஒரு பொருள் வழங்கும் கடமையை நோன்பிக்கான ஒரு சிறப்பு வணக்கமாக அல்லா ஏற்படுத்தியுள்ளான் . எப்படி ஹஜ் பெருநாள் காலத்தில்  உள்கியா எனப்படும் சிறப்பு வணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதே போல் இந்த வணக்கமும் ஒரு சிறப்பு வணக்கமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் அதாலதான் நோன்புக்கு பயன்படுத்தபடும் பித்ர் என்ற சொல் இந்த தர்மத்தோடு இணைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தவகையில் சகாதுல் பித்ர் ஒரு கட்டாயக் கடமை என்பதை நபி ஸல் உணர்த்தும்  போது “அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

இதே போல் சகாதுல் பித்ர் ஒரு கட்டாயக் கடமை என்பதை உணர்த்தும்  பல நபி மொழிகள் உண்டு இங்கு பர்ல் என்ற சொல் மூலம் இந்தச் சட்டம் விதியாக்கப்பட்டுள்ளது. என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்

எதைக் நாம் சகாதுல் பித்ராக் கொடுக்கலாம்?  பொதுவாக இஸ்லாம் எல்லா தர்மங்களுக்கும் விதிமுறைகளை கொண்டுள்ளது அந்த அடிப்படையில்தான் கடமைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் .


இந்தக் கட்டுரையை நீங்கள் அதிகம் அதிகம் பகிருங்கள் .இதனால் அதிகமான சகாதுல் பித்ர் மற்றவர்கள் வழங்க காரணாமாக அமைவீர்கள்.

.உதாரணமாக உள்கியா கொடுக்க வேண்டும் என்றால் ஆடு மாடு ஒட்டகம் கொடுக்க வேண்டும்;  அகீகாக் கொடுப்பதென்றால் ஆடுதான் கொடுக்க வேண்டும் மாடு கொடுக்க முடியாது. அகீகா கொடுக்கும் பணத்தை மக்களுக்கு பங்கு வைக்க முடியாது. அல்லது என்னிடத்தில் மான்தான் உள்ளது அதைதான் நான் அறுக்கப் போகின்றேன் என்று கூற முடியாது. ஒருவருக்கு கை அடக்க தொலை பேசி தேவை  என்பதற்காக அவருக்கு நாம் அந்தப் பணத்தை பெற்று வாங்கிக் கொடுக்க முடியாது

நபி  ஸல் அவர்கள் பிதர் என்ற கடமைக்கு பொருள்தான் கொடுத்தார்கள்.
பணம் கொடுத்தால் சிலவேளை  அது இஸ்லாத்துக்கு முரணாக மதுபானம் மற்றும் புகைத்தல் போன்ற தீயகாரியங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்  இதை தவிர்த்து அன்றய தினம் யாரும் புசிக்காமல் இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கமே பொருட்கள் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படியான ஒரு நோக்கமும் இருக்கலாம் அல்லா மிகவும் அறிந்தவன். 

உண்மையில் அப்படி பணம் கொடுக்கலாம் என்றிருந்தால் உள்கியா  காலத்தில் சில நாடுகளில் அல்லது பகுதிகளில் மித மிஞ்சிய கால் நடைகள் அறுக்கப்படுகின்றன .எனவே அதை தவிர்க்க வேண்டும் என்பத்ர்க்காகாக அந்தப் பணத்தை நாம் மக்களுக்கு பங்கிட முடியாது. அல்லா எமக்கு சட்டமாக  ஆக்கி இருக்கும் இந்த வணக்கத்தை  நாம் உரியபடி நிறைவு செய்ய வேண்டும்.

அதே போல் சில இஸ்லாமிய நிறுவனங்களும் இப்படி அதிகமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை அதன் குறிப்பிட்ட அளவை தங்கள் ஏனைய நிர்வாக தேவைகளுக்கு பயன்படுத்துவதை அறிகின்றோம். எனவே அவை இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உள்கியாவினை அறுக்கும் அல்லது துப்பரவு செய்யும் நபருக்கு அதிலிருந்து கூலியாகக் கூட எதையும் அதலிருந்து கொடுக்க நபி ஸல் தடை விதித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையில் சகாதுல் பித்ர் என்ற இந்த வணக்கம் பொருளாகவே கொடுக்க வேண்டும் .

அதன் அளவு என்ன?  நபி ஸல் கூறினார்கள்
“நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவுப் பொருட்கள் ஒரு ஸாவு, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சையில் ஒரு ஸாவு என வழங்கி வந்தோம். முஆவியா (ரலி) (பொறுப்புக்கு) வந்து, சிரியா நாட்டின் தோல் நீக்கப்பட்ட கோதுமையும் புழக்கத்துக்கு வந்த போது இதில் ஒரு முத்து இதில் இரு முத்துக்களுக்கு நிகரானது என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 1508
பொதுவாக ஒரு சாஉ ஒரு நான்கு முத்துக்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளன எனவே நான்கு முத்து என்றால் இன்றைய கணிப்பீட்டின்படி ஒரு முத்து  இரு கை அளவு என்றிருப்பதால் நமது நாட்டின் அளவுப்படி சாதாரணமாக ஒரு கிலோ அரிசி என்றளவு அடிப்படையில் வழங்க முடியும்.  அரசியின் விலை கிட்டதட்ட ஒரு கிலோ அப்படி என்றால் இன்றைய கணிப்பீட்டின்படி அரசி பல விலைகளில் இருந்தாலும் 100 -150 க்கும் இடைபட்ட ஒரு தொகைக்கான உணவுப் பொருளை வழங்க முடியும். என்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம்.

மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு முத்து இரண்டு முத்துக்கு சமம் என்ற வேறு ஒரு அணுகுமுறை உள்ளதால்  இந்த சகாதுல் பித்ரை அதிகமாக கொடுக்க முடியும் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில் நாம் இதனை ஒரு சட்டமாக எடுக்கலாம். இந்த அடிப்படையில்   இங்கு ஒரு முத்து என்றிருந்தாலும் அது இரு முத்துக்கு சமம் என்று இங்கு கூரபட்டுள்ளதால் நாம் தாராளமாக அந்த அளவை மிகையாக வழங்க முடியும் அதாவது சாதரன கணிப்பீடு 150 ரூபா  என்றால்  சுமார் 300 ரூபாய் வரை உணவுப் பொருட்களை  வழங்க முடியும். கதார் ரியாலாக இருந்தால் இன்றைய கணிப்பியன் படி ஒருவர் 10 ரியால்களை வழங்க முடியும் (எனது இந்த அளவினை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்)

இதை எப்போது கொடுக்கலாம்?  இதை பெருநாள் பிறை கண்டத்தில் இருந்து பெருநாள் தொழுகை ஆரம்பிப்பதற்கு முன் கொடுக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை விதி இருந்தாலும் சஹாபாக்கள் இதை பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொடுத்துள்ளனர்

“ நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)        நூல்: புகாரி 1511

எனவே இந்த அடிப்படையில்  இந்த வணக்கம் இந்தக் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். மாறாக ரமலான் நோன்பு ஆரம்பித்ததில் இருந்தோ அல்லது அதற்க்கு முன்னரோ அல்லது தொழுகைக்கு பின்னரோ   பின்னரோ கொடுக்கக்கூடாது. சிலர் சகாதுல் பித்ர் என்ற போர்வையில ரமலான் ஆரம்பத்தில் கொடுக்கின்றனர்  அது சகாதுல் பித்ர் அல்ல அது சதகா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

நோன்பு நோற்றவர் வீணான காரியங்கல் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்கள் ஒரு தர்மம் போல் அமையும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் 1371

நமது தேவை மற்றும் சௌகரியங்களுக்கு ஏற்ப சட்டங்களை மாற்ற அல்லது திருத்தியமைக்க எந்தவொரு தனிமனிதனுக்கும் குழுவுக்கும் உரிமை கிடையாது என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்


இந்த அடிப்படையில் நபி ஸல் அவர்கள் எதை செய்தார்களோ அதனை நாம் சட்டமாக கொண்டு இந்த வணக்கத்தை இன்றிலிருந்து கடை பிடிக்க அல்லா அருள் புரிவானாக . அல்லா மிகவும் அறிந்தவன்

0 comments:

Post a Comment