நபி ஸல் அந்நிய பெண்ணுடன் நெருங்கிப் பழகினார்களா?

| 2 comments





நபி ஸல் அந்நிய பெண்ணுடன் நெருங்கிப் பழகினார்களா? உம்மு ஹராம் ரலி தொடர்பாக வந்துள்ள செய்தியை மறுக்கும் கூட்டத்திற்கு ஒரு பதிலுரை
றஸ்மி மூஸா சலபி
---------------------------------------------------------------------------------------------------------------
அன்சாரி குலத்தை சேர்ந்த உம்மு ஹராம் என்ற நபி தோழியரின் வீட்டுக்கு ஒரு நாள் நபி ஸல் அவர்கள் சென்று அவர்கள். அந்த நபி தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித் தோழியர் நபி ஸல் அவர்களுக்கு தலையில் பேன் பார்ப்பார்கள், உணவளிப்பார்கள் “புஹாரி செய்தியாகும்  (2895  2789 ....)
 மேற்குறித்த அமைப்பில் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .இவை ஆதாரமான செய்திகள் .
மேலே  குறிப்பிடப்பட்ட பெண் யார் என்றால்  இவர்  அனஸ் ரலியின் சின்னம்மா ஆவார். அதாவது அனஸ் ரலியின் தாயின் சகோதரி ஆவார்

இந்த செய்தியின் வரும் பிரச்சினை என்ன ?

அந்நிய பெண்ணுடன் இப்படி நபி ஸல் இப்படி தோழமை வைப்பதா?அதுவும் அல்லாஹ்வின் தூதர் இப்படி செய்திருப்பரகளா ?என்பதுதான்

நபி ஸல் அவர்களை தொட்டும் இப்படியான ஒரு செய்தி வந்து அது  எமக்கு விளங்காவிட்டால் அதை உரிய முறைப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும். உரிய விளங்கம் கிடைக்காவிட்டால்  விளக்கம் கிடைக்கும் வரை அமைதியாக இருக்க வேண்டும். மாறாக நபி ஸல் அவர்களின் ஆதார பூர்வமான  செய்திகளை ஒரு போதும் நிராகரிக்கக் கூடாது 

மேலும் இந்த செய்தி உண்மையானது ஆதாரபூர்வமானது  என்றாலும்  இது தொடர்பாக சிலரால்இந்த செய்தியை  நிராகரிக்க முன் வைக்கப்படும்   யூகங்கள் பிளையானவனை .அவை என்ன ?

11-  நபி ஸல் உம்மு ஹராம் ரலி அவர்களின் மடியில் உறங்குவதாக வரும் செய்தியில் அவர்கள் மடியில் உறங்குவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை .அது பிழையான ஒரு மொழி பெயர்ப்பு .

12-  மேலும்  இது அஜ்னபி மஹ்ரமி என்ற சட்டம் இறங்குவதற்கு முன்னர் நடை பெற்றுள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம் ஏனனில் ஹிஜாபுடைய சட்டம் நபி ஸல் அவர்களுடைய மனைவியர்களுக்கு மட்டும்தான் என்பதால் உம்மு ஹராம் ரலிக்கு  இந்த ஹிஜாப் சட்டம் பொருந்தாது  .

23-    பக்கத்தில் உறங்குவார்கள்  என்பதற்கு அன்னியோன்னியமாக என்று நாம் கற்பனை பண்ணுவது பிழையானது. ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள  கரீப் قريب என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் அருகாமையில்   என்பதை தான் எடுத்துக் கொள்ளவேண்டும் .அருகாமைக்கு அளவு என்பது நிர்ணயம் இல்லை 

 4- நபி ஸல் அவர்கள் உடலோடு சேர்ந்து தூங்குவார்கள் என நாம் கற்பனை பண்ண முடியாது என்பதால் இதனை நாம் அந்த அர்த்தங் கொள்ள முடியாது உதாரணமாக அடுத்த மாதம் அண்மித்து திருமணம் எனக்கு நடை பெரும் என்று ஒருவர் கூறினால் நாம் எப்படி அதை விளங்குவோம் அதே போன்றுதான் கரீப் என்பது ஏதோ ஒரு அண்மித்த இடம் அல்லது காலம்  என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .குறிப்பாக நபி ஸல் அவர்களை தொட்டும் பிழையாக விளங்கக் கூடியவாறு நாம் மொழி பெயர்க்க கூடாது .

35-   மேலும் நாம் இந்த நிகழ்வு அடிக்கடி  நடந்தாதாக இல்லை ஒரு தினம் என்றுதான் புஹாரியில் வரும் பல செய்திகள் கூறுகின்றது .எனவே இது ஒரு சந்தர்ப்பம் நபி ஸல் அவர்கள் குறிப்பாக சிலருடன் இப்படி நடந்த  ஒரு தனிபட்ட செயற்பாடு

46-   அடுத்தது இது நபி ஸல் அவர்களும் உம்மு ஹராம் றழியும் தனியாக இருந்து நடை பெற்றிருக்கும் என்றும் நாம் நினைக்க கூடாது. அவர்கள் உபாதத் இப்னு சாமித் ரலியின் மனிவியாக இருந்தார்கள் அங்கு ஒரு வீடு என்னும் போது வேறு யாரும் உறவினர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்று கூற முடியாது .தனது கணவரே இருந்திருக்கலாம். எனவே சுருக்கமாக கூறப்படும் ஒரு ஹதீஸில் அவைகளை பற்றி விரிவாக கூற முடியாது ஹதீஸ் என்பது சுருக்க வாக்கியம் . மேலும் ஒரு பெண்ணுடன் மஹ்ரமி ஒருவர் இருக்காத நிலையில் தனிமையில் இருக்க வேண்டாம் “ என்று கூறிய நபி அவர்கள் தனிமையில் இருந்திருப்பார்கள் என்று நாம் கற்பனை பண்ணக்  கூடாது ..

  7-   மேலும் நபி ஸல் அவர்களுக்கு உம்மு ஹராம் பாலூட்டியவர் என்ற மிகவும் வலுவில்லாத ஒரு செய்தியும் இதற்க்கு வலு சேர்கின்றது .

மேற் குறித்த காரணங்களின் அடிப்படையில்   நாம் இந்த செய்தியை நிராகரிக்கும் அளவுக்கு நபி ஸல் என்னதான் செய்தார்கள்? அந்த வீட்டில் சாப்பிட்டார்கள். மேலதிகமாக உம்முஹராம் அவர்கள் நபி  ஸல் தலையில் பேன் பார்த்தார்கள் என்பது அவ்வளவுதான் .ஏன் இதனை  தனிபட்ட  ஒரு சம்பவமாக  கருத முடியும் என்றால் உம்மு ஹராம் அவர்களுக்கு நபி ஸல் அங்கே தூங்கி எழுந்தவுடன் சொன்ன ஒரு கனவில் ‘ ஒரு காலம் வரும் அப்போது எனது சமூகம் கடலில் டாம்பீக அரசர்கள் போல் செல்வ செழிப்பாக கப்பலில் செல்வார்கள் “ என கூற அதற்கு  உம்மு ஹராம் ரலி  அவர்கள்  தானும் நபி ஸல் கூறிய அந்த நல்ல கூட்டத்தில் சேர பிராத்திக்கும் போது நபி ஸல் அவர்கள் அதை ஏற்று பிரார்த்தனை செய்தார்கள் என்பது இந்த ஹதீசில் வந்துள்ளது .இத்தனைக்கும் உம்மு ஹராம் ரலி வயதில் மூத்த மற்றும் ஆசைப் பருவங்க்களை கடந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 .
 எனவே இப்படியான ஒரு நிலையில் இதை எப்படி அணுகப் படவேண்டும் என்றால் நபி ஸல் அவர்களுக்கு இது ஒரு தனிபட்ட செய்தி .எப்படி நபி ஸல் அவர்கள் தனிபட்ட சில விடயங்களை செய்தார்களோ அதே போன்ற ஒன்றுதான் இது தனது சேவகர் அனஸ் ரலி அவர்களுடன் இருந்த ஒரு உறவில் அங்கு சென்றிருப்பார்கள்

ஒரு பெண்ணோடு இப்படி நடந்தார்கள்  என்பதற்காக நபி ஸல் அவர்களுடைய நபி என்ற அந்தஸ்தை மீறி இதை ஒரு பெண்ணோடு நபி இப்படி நடந்திருப்பார்கள என்று நாம் கற்பனை பண்ண  முடியாது ஏனனில் இத்தனைக்கும் உம்மு ஹராம் தலையில் பேன் மட்டுமே பார்த்துள்ளார்கள் ஏனையவை எல்லாம் நமது பிழையான கற்பனைகள்

இமாம் ஹாபிள் இப்னு ஹஜர் சொல்வது போல் இது நபி ஸல் அவர்களுக்கு தனிப்பட்ட ஒரு செயற்பாடு .அவர் அஜ்னபி  ஏற்ற ஒரு நிலைய இருந்தாலும் அந்தப் பெண்ணின் வயது மற்றும் தனது சேவகர் அனஸ் ரலியின் மீது கொண்டுள்ள அன்பு அவருடைய குடும்பத்தை இப்படி நோக்கச் செய்துள்ளது .மேலும் எப்படி அந்தக் குடும்பங்கள் ஆழமாக நடந்துள்ளார்கள் என்று நமக்கு செய்திகள் அறியாத நிலையில் நமக்கு கூறப் பட்ட ஒரு சில வரிச் செய்தியை கொண்டு சம்பவங்களை  மதிப்பிடக் கூடாது.


குறிப்பு
------------
இதனை தவிர வேறு விடயங்க்களை கொண்டு இந்த ஹதீஸை இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று நாம்   நியாயயப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை .மேலும் ஆதாரம் இல்லாத விடயங்களை கொண்டு அலசவும்  தேவை இல்லை இஸ்லாமிய வரம்புக்குள்ளும் நபி ஸல் அவர்களின் சிறப்பு செயற்பாடு என்ற அமைப்பிலும் நாம் நோக்கினால் தெளிவான விடை கிடைக்கும்   அல்லாஹ் மிகவும் அறிந்தவன் .

2 comments:

  1. உபாதா இப்னுஸ் ஸாமித்தின் இல்லம் நபியவர்களுக்குத் தனிச் சிறப்பு. உபாதாவின் மனைவி உம்முஹராம் ரலியல்லாஹு அன்ஹா. உம்முஹராமும் உம்முஸுலைமும் சகோதரிகள் என்பதையும் அவர்களின் சகோதர் ஹராம் இப்னு மில்ஹான் கொல்லப்பட்டதையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோமில்லையா? அதனால் நபியவர்களின் சிறப்பான கரிசனம் அவர்களது குடும்பத்தின்மீது நபியவர்களுக்கு இருந்தது. எந்த அளவு என்றால், ‘நம்பிக்கைக்குரிய சகோதரிகள்’ என்று இவர்களைக் குறிப்பிடுவார்கள் நபியவர்கள்.

    தவிர, அக்குடும்பத்துடன் நபியவர்களுக்கு உறவொன்றும் இருந்தது. பால்குடிச் சகோதர உறவு பற்றி, அபூஸுஃப்யான் இப்னுல் ஹாரித் (ரலி) வரலாற்றில் படித்திருக்கிறோம். அதைப்போல் உம்முஹராம், நபியவர்களுக்குப் பால்குடிச் சிற்றன்னை. அதாவது, நபியவர்களின் தாயார் ஆமினாவுக்குப் பாலூட்டிய செவிலித்தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர் உம்முஹராம். எனவே, நபியவர்களின் தாய்க்கு ஒப்பான உறவு அவரிடம் ஏற்பட்டிருந்தது. உபாதா இப்னு ஸாமித் (ரலி) மிகச் சிறந்த போர் வீரர்; மிகத் துணி்ச்சலானவர். அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்துக் கொண்ட அன்ஸாரீ. முஸ்லிம்களின் முதல் போரான பத்ரில் பங்கெடுத்துக்கொண்ட பத்ருப் போராளி. அதன் பிறகு ஏனையப் போர்களிலும் தவறாது நபியவர்களுடன் கலந்து கொண்டவர்.

    ஒருநாள் நபியவர்கள் குபா வந்தார்கள்; அன்றையப் பகல் உம்முஹராம் இல்லத்திற்கும் வருகை புரிந்தார்கள். ஆர்வமுடன் வரவேற்றார் உம்முஹராம். உணவும் பரிமாறினார். மதிய உணவிற்குப் பிறகு அசதியில் கண்ணயர்ந்த நபியவர்கள் திடீரெனத் தூக்கம் கலைந்தார்கள். ஆனால் முகத்தில் புன்னகை.

    ReplyDelete
  2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் எல்லா வராலாருகளும் ஹதீஸ் கிதாபுகளிள் பதியப்பட்டிருக்காது மார்க்கத்தை தெளிவாக படிக்கவும்

    ReplyDelete