சலபி என்ற பதம் எத்தகைய பரிமாணங்களைக் கொண்டது ?

| 0 comments

சலபி என்ற பதம் எத்தகைய பரிமானங்களைக் கொண்டது ?
ஆய்வறிக்கை .முதுமானி - றஸ்மி மூஸா சலபி 



ஆய்வுத் தொடர் அஷ்ஷேக்  றஸ்மி மூஸா சலபி

சலபி என்ற அரபு சொல் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் என்ன அர்த்தம் கொள்ளப்படுகின்றது .சலப     سلف என்ற அரபு சொல் அகராதியில்  تقدم என்ற முன் சென்றான் அர்த்தமும் அதே வேளை இதன் பரிபாஷையில் முன் சென்ற நல்வழியில் நடந்த சஹாபாக்கள் தாபியீன்கள் மற்றும் நல்ல அடியார்களை குறிக்க அர்த்தம் கொள்ளப் படுகின்றது  இந்த அடிப்படையில் சலபி என்ற சொல் யாரெல்லாம் உண்மையான நபி ஸல் கூறிய  அடிப்படையில் மார்க்கத்தை தூயமையாக பின் பற்றறுகின்றனரோ அவர்களை குறித்து பயன் படுத்தப்படுகின்றது அதனாலதான் சலபு சாலிஹீன் என்ற சொல்நான் மேலே கூறிய அர்த்தத்தில் பயன் படுத்தப் படுகின்றது .

இதற்கு எதிராக பயன்படுதப்படும் ஹலபி என்ற சொல்லைப் பொறுத்த வரையில் இது இஸ்லாமிய சரியாச் சட்டங்களுக்கு முரண்பட்டு தனது வணக்க வழிபாடுகளை பித்அதுக்கள் நிறைந்ததாக அமல் செய்கின்றாரோ அதனை சுட்டுவதற்கும் சலபி என்ற சொல்லை வேறுபடுத்திக் காடடுவதற்க்கும் இந்த ஹலபி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பாக இமாம் முகம்மத் பின் அப்துல் வஹாப் ரஹ்  அவர்களுடைய தூய இஸ்லாமிய புரட்சியோடு  இந்த சொல் மிகவும் பிரபலமானது ஆனாலும் அதற்கு முன்னர் இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது

இஸ்லாத்தில் இந்த சொல்லின் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள சூரா மாயிதாவில் அல்லா கூறுகின்ற ஹஜ்ஜில்  வேட்டை யாடுவது தொடர்பாக அதன் தெண்டங்களைப் பற்றிக்  கூறும்போது தவறுதலாக இதற்கு முன்னர் அறியாமல் இந்தக் குற்றத்தை  செய்தவர்கள் عفا الله عما سلف    அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று கூறுகின்றான் .இங்கு சலப என்ற சொல்லை பயன் படுத்துகின்றான்

அதே போன்று ஹலபி என்ற விடயத்தை நாம் விளங்கும் போது அல்லாஹ் கூறுகின்றான் خلف من بعدهم خلف أضاعوا الصلاة وأتيعوا الشهوات  என்று பின்னால் ஒரு கூட்டம் சென்றது அவர்கள்  தொழுகையை வீணடித்து மனோ இச்சைகளை பின்பற்றியோர் எனக் கூறுகின்றான்” எனவே இங்கு இது தொடர்பான புரிதல் குரான் சுன்னாவில் இருந்துதான் பெறபட்டிருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது
இதனால்தான் கூறுவார்கள் كل خير من اتباءهم من سلف ,كل شر من إتباءهم من خلف  என்பதாக.

நபி ஸல் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து தான் ஜாஹிலியாக் காலத்தில் தர்மம் மற்றும் உறவுகளை பேணி நடந்ததாகவும் தனக்கு அதில் நன்மை உண்டா? என்று கேட்டார் அதற்கு நபி ஸல் அவர்கள் நீ உனக்கு முன் சென்ற நல்லவர் வழியில்தான் இந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய் எனக் கூறினார்கள் இங்கு اسلمت علي من سلف لك من خير  என்றுதான் கூறினார்கள் எனவே சலப் என்ற சொல் முன் சென்றவர்கள் அதாவது நல்லடியார்கள் வழி என்பது எமக்கு இதன் மூலம் தெளிவாக புரிகின்றது 

இது தொடர்பாக இப்னு மன்லூர் அவர்கள் கூறும் போது سلف ,سليف , سلفة  போன்ற சொற்களும் இதற்க்கு நிகராக பயன்படுத்தப்படுகின்றது எனக் கூறுகின்றார் அதாவது அதே வார்த்தையில் வரும் சொற்களாக இவை உள்ளது .மேலும் சேஹ்க் இப்னு பாஸ் கூறும் போது இதற்கு நிகராக أثري  என்ற சொல்லும் பயன்படுத்தப் படுவதாக கூறுகின்றார் .இதுவும் சலபி என்ற அர்த்தத்தைத்தான் கொடுகின்றது .இதை நாம் ஹதீஸ் கலையில் காணக் கூடியதாக உள்ளது 

எனவே சலப் என்ற பதம் சஹாபாக்கள் முதல் கொண்டு பின்னால் வந்த தாபியீன்கள் தபஉ தாபியீன்கள் மற்றும் சாலிகான நல்லடியார்கள் போன்ற வர்களை குறிக்கப் பயன்படுத்தப்படும் இதனை சேஹ்க்  ஸாலிஹ் அல் உதைமீன் சேஹ்க்  அல் பவ்சான் போன்ற நவீன கால அறிஞஜர்களும் இதனை கருத்தாகவும் கொள்கையாகவும் கொண்டுள்ளனர்
அல்லாஹ் “முஹாஜிர்களிலும் அன்சார்களிலும் நல்ல விடயங்களை பின் பற்றுவார்கள் அல்லாஹ் அவர்கள் பொருந்திக் கொண்டான் ..........எனக் கூறி முன் சென்ற நல்லடியார்கள் பற்றிக் கூறுகின்றான் இவர்கள்தான் அந்த சலபு சாலிஹீன்கள்

 இன்னோர் இடத்தில்” ஈமானை கொண்டு முந்தியவர்கள் “எனக் கூறுகின்றான் இதே போன்று நபி ஸல் அவர்களும் சஹாபாக்களை பற்றி அவர்களை பின் பற்றுவது பற்றிக் கூறுகின்றார்கள் எனவே சலபு சாலிஹீன்கள் என்பது சஹாபிகள் தாபியீன்கள் போன்று குறிப்பிட்ட ஒரு வர்க்கம் இல்லாவிட்டலும் இஸ்லாத்தை தூய்மையாக பின் பற்றிய ஒரு கூடத்தை குறித்து நிக்கின்றது குறிப்பாக பித்தத் மற்றும் சிர்க் நிறைந்த ஒரு சமூகத்தில் நின்று  வேறு பிரித்துக் காடடுவத்ற்கு இந்த சொல் அதிகம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

.இந்த அடிப்படையில் சலபிய என்ற அரபு தாருத் தௌஹீத் அஸ்ஸலபியா கலாசாலை என்பது அது ஒரு கல்லூரியின் பெயர் அதிலிருந்து வெளியகின்றவர்களுக்கு சலபி பட்டம் என்பது அது ஒரு பாரம்பரியம். எனவே அதனை கொண்டு சலபு சாலிஹீன்கள் என்று நாம் கருதுபவர்களுடன் ஒப்பிடக் கூடாது .சலபி பட்டம் பெற்ற ஒருவர் சலபியாக இருப்பார் என்பதும் அர்த்தமல்ல .


ஆய்வு இரண்டாம் பகுதி

எனது முதலாவது பதிவில் சலபி தொடர்பாக இஸ்லாமிய உலகில் என்ன நிலைபாட்டில் காணப்படுகின்றது என்பதை நான் தெளிவுபடுத்தினேன் .அடுத்தாக இந்த சலபி என்ற சொல் ஏன் இஸ்லாமிய வரலாற்றில் இடம் பிடித்தது என்பதையும் சுட்டிக் காட்டினேன் (முன்னைய பதிவில் ) “ஹலபி என்ற சொல்லைப் பொறுத்த வரையில் இது இஸ்லாமிய சரியாச் சட்டங்களுக்கு முரண்பட்டு தனது வணக்க வழிபாடுகளை பித்அதுக்கள் நிறைந்ததாக அமல் செய்கின்றாரோ அதனை சுட்டுவதற்கும் சலபி என்ற சொல்லை வேறுபடுத்திக் காடடுவதற்க்கும் இந்த ஹலபி என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது”

(முன்னைய பதிவில் ) மேலும் “ எனவே சலபு சாலிஹீன்கள் என்பது சஹாபிகள் தாபியீன்கள் போன்று குறிப்பிட்ட ஒரு வர்க்கம் இல்லாவிட்டலும் இஸ்லாத்தை தூய்மையாக பின் பற்றிய ஒரு கூடத்தை குறித்து நிக்கின்றது குறிப்பாக பித்தத் மற்றும் சிர்க் நிறைந்த ஒரு சமூகத்தில் நின்று வேறு பிரித்துக் காடடுவத்ற்கு இந்த சொல் அதிகம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

இந்த அடிப்படையில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் சலபிகள் என்று மக்கள் அடையாளப் படுத்தும்  அறிஞ்சர்கள் எல்லாம் இஸ்லாமிய தூய  சிந்தனையில் இருப்பார்கள் என்று நாம் கூற முடியாது. இதனால்தான் நான் ஆரம்பத்தில் கூறிய சில அரபுக் கலூரிகளில் வளங்கப்படும் சலபு பட்டங்களைக் கொண்டு  இதனை மதிப்பிடக்கூடாது என்பதாக எனினும்  இத்தகைய பட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும்  சுன்னாவுக்கு மாற்றமாக நடக்க முனையமாட்டார்கள் என்பதை நாம் அழுத்திக் கூறலாம் .
அதே நேரம் சில இந்திய மற்றும் இலங்கை அறிஞ்சர்கள் புதிய ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்ற விவகாரத்தை கையில் எடுத்து குறிப்பாக சலபிகள் என்று பட்டம் பெற்ற ஆலிம்களை தாக்க முய்ற்சிகின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் ஏனனில் . மரபு சார்ந்த மார்க்கத்துக்கு முரண் இல்லாத முறைமை ஒன்றை ஒரு போதும் நாம் விமர்சனம் செய்யக் கூடாது இது வெறும் ஒரு காழ்புணர்வு  செயற்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது .

சமுதாயத்தில் இன்று தௌஹீத் மேலோங்கி இருப்பதற்கு சலபுகள்  என்று அடையாளப் படுத்தப் பட்ட பலர் கால்கோளாக இருந்துள்ளனர். இன்றும் இருந்து கொண்டிருகின்றனர் .சமுதாயம் இவர்களை இப்படி அடையாளப் படுத்திய காரணம் தான் இன்று இப்படி தூய இஸ்லாம் சமூகத்தில் மேலோங்க காரணம் எனலாம். எனவே அடையாளப் படுத்தல் கூடாது என்று நாம் வாதிட்டால் ஏன் தௌஹீத் வாதிகள் என்று நம்மை நாம் அடையாளப் படுத்துகின்றோம் இதற்க்கு மார்க்கத்தில் ஆதாரம் உண்டா ? தௌஹீதி என்று சிலர் பட்டப் பெயர் மட்டுமல்ல அரபுக் கல்லூரிகல்  கூட உண்டு அல்லவா ? ஏன் நாம் எதிர் மறையாக மற்றவர்களை பித்தத்வாதிகள் என்று அடையாளப் படுத்துகின்றோம் ? சிலவேளை இந்த வாதத்தில் இருந்து தப்ப நாங்கள் அப்படி கூறவில்லையே என்று வாதிட முனையக் கூடாது

எனவே ஒன்றிலிருந்து ஒன்றை வேறு படுத்த சில அடையாளங்கள் அவசியம் அதைதான் நாம் சலபு சால்ஹீன்கள் என்று கூறுகின்றோம் ஆனால் நபி ஸல் அவர்கள் இதற்கு வழி காடினார்களா ? என்றால் இல்லை என்றுதான் நாமும் கூறுகின்றோம் ஏன் ?

நபி ஸல் ஆலிம் என்று ஒருவரை அழைக்க வழிகாட்டவில்லை .மவ்லவி என்பதற்கும் அவர்கள் வழிகாட்டவில்லை. சேஹ்க் என்பதற்கும் வளிகாடடவில்லை. சலபி என்பதற்கும் வழிகாட்டவில்லை. உலவி என்பதற்கும் வழி காட்டவில்லை. தௌஹீதி என்பதற்கும் வழிகாட்டவில்லை  ஆனால் இவை இஸ்லாத்துக்கு முரண் இல்லை எபதனால் நாம் மரபாக கொண்டு இவைகளை அடையாளப் படுத்துகின்றோம் .அவ்வளவுதான்

இன்று ஒரு நூல் அரபியில் இருந்தால் அதை எழுதியவர் சலபு கொள்கை சார்ந்தவர ? என்று ஏன் நாம் அலசுகின்றோம் என்றால் அந்த நூலில் பிழைகள் வழுக்கள் மார்கத்துக்கு முரணான பல விடயங்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் மட்டுமே இது ஒரு பொது சிந்தனை எனவே அடையாளப் படுத்தல் கட்டாயமானது .இந்த அடிப்படையில்தான் இஸ்லாமிய வரலாறு சலபுசாலிஹீன்கள் என்று அறிஜர்களை அடையாள படுதியது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

எனவே நமது முன்னோர்களை அதாவது தூய சிந்தனையில் இருந்தவர்களை இப்படி அடையாளப் படுத்துவதில் மார்க்கத்தில் எந்த எவ்வித தப்பும் கிடையாது .அதே நேரம் இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்றும் நாம் நினைப்பது மிகவும் மடமையானது அல்லாஹ் மிகவும் அறிந்தவன் (தேவை ஏற்படின் தொடரும் இன்சா அல்லாஹ் )




0 comments:

Post a Comment