மனைவியை பிரிந்த நீண்ட கால வெளிநாட்டு வாழ்க்கை கூடுமா ? அதிர்ச்சி தகவல்- அலசுகிறார் - றஸ்மி மூசா சலபி

| 0 comments

மனைவியை பிரிந்த  நீண்ட கால வெளிநாட்டு வாழ்க்கை கூடுமா ?  
அதிர்ச்சி தகவல்- அலசுகிறார்  - றஸ்மி மூசா சலபி

திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதன் சார்ந்தது அல்ல .மனைவி பிள்ளைகள் மற்றும் சூழ உள்ள பல உறவுகள் சார்ந்தது .நாம் விரும்பியோ விரும்பாமலோ கணவனோ அல்லது மனைவியோ சேர்ந்து வாழ வேண்டும் நமது பிள்ளைகளை கவனித்து அவர்களுக்கு உரிய வாழ்கை முறைமையை தெரிவு செய்து கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு உண்டு .

அதனால்தான் நபி ஸல் அவர்கள் “ வாலிபர்களே நீங்கள சக்தி இருந்தால் மட்டும் திருமணம் முடியுங்கள் “ (புஹாரி) என்று கூறினார்கள் .எனவே இஸ்லாத்தை பொறுத்த வரையில் திருமணம் என்பது கட்டாயம் என்றில்லை .ஆனால் செய்வதால் பல நன்மைகள் உண்டு .அது சமூக அமைப்புக்கு மிகவும் தேவையானது .மார்க்கத்துக்கும் அவசியமானது

ஆனால் இன்று நடப்பது என்ன திருமணம் முடித்து விட்டால் உரிய  முறையில் மனைவியை மற்றும் பிள்ளைகளை பலர் கவனிக்க மாட்டார்கள் .பெற்ற தாயை தந்தையை மற்றும் அல்லாஹ் பேணச் சொல்லி வலியுறுத்தும் இரத்த பந்தங்களை கவனிக்கமாட்டார்கள்  வெளி நாடுகளில் சதா காலத்தை கொண்டு செல்வார்கள் .நாட்டுக்கு போவதை ஒரு ரிலாக்சாக மட்டும் கருதுவார்கள் இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை

ஒரு மனிதர் இரவு தொழுகையும் பகல் முழுதும் நோன்புமாக இருந்தவரை பார்த்து சொன்னார்கள் “ நீ அவ்வாறு செய்தால் உன்னுடய கண்கள் அயர்ந்து விடும் உள்ளம் சோர்வடைந்து விடும் நீ எழும்பு அதேபோல் தூங்கு. நோன்பு பிடிப்பதுபோல் பிடிக்காமல் இரு ஏனென்றால் உனது குடும்பத்துக்கு உன்மீது செய்யவேண்டிய கடமை உண்டு உனது உள்ளத்துக்கு நீ செய்ய வேண்டிய கடமை உண்டு .எனக் கூறினார்கள்”  (முஸ்லிம்)  1159  (அப்துல்லாஹ் பின் அம்ர் )

இதே போன்று யுத்தத்துக்காக புறப்பட்ட  பலரை நபி ஸல் அவர்கள் தடுத்து குடும்பத்தை கவனிக்க சொன்னார்கள் போன்ற பல நபி ஸல் அவர்களின் போதனைகள் உண்டு (விரவஞ்சி சுருக்கலாம் எண்டு எண்ணுகின்றேன் )

எனவே குடும்பத்தோடு பக்கத்தில் இருந்து செய்யும் வணக்கத்துக்கு இப்படி நபி ஸல் அவர்கள் சுட்டிக் காட்டி  கூறினார்கள்  என்றால் நாம் காலம் காலமாக குடும்பத்தை விட்டு வெளிநாடுதான் வாழ்கை என்று தனித்திருப்பது பற்றி நாம்  ஆழமாக சிந்திக்க வேண்டும் .

எல்லாம் ஊர் அளவோடு இருக்க வேண்டும் .உழைப்பு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல .குடும்பத்தை கொண்டு செல்லும் பொறுப்பு என்பது மிக முக்கியமானது .

அப்படிதான் வெளிநாட்டில் இருக்க வேண்டும் நமக்கு பொருளாதார சிக்கல் என்று இருந்தால்  குறிப்பிட்ட சில வருடங்கள் மட்டும்  இருந்து விட்டு மீண்டும் நாடு திரும்பி விட வேண்டும் .அல்லது நீண்ட காலம்  இருப்பதானால் மனைவி பிள்ளைகள் சகிதம் நாம் இருக்கும் இடங்களில் கொண்டு சென்று வாழ்கை நடத்தலாம் .இதுதான் உண்மையான வழிமுறை .

அப்படி குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளில்வாழ்வதால்  ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய முடிவுகள் கீழே உள்ளன. இவைகளை மேலே நான் கூறிய விடயங்களை கொண்டு ஒப்பு நோக்கி பாருங்கள் .

மனைவி பக்கம்

ü  பல  வருடங்களுக்கு கணவனின் தொடர்பு இல்லாவிட்டால மனைவி மற்றும்  பிள்ளைகள்  ஏக்கத்துக்கு  உள்ளாகின்றனர் 

ü  மனைவிக்கு தேவையான காம உணர்வுகள் தீர்க்கப் படாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளகின்றாள்-இது  பெண்களின் பொதுவான இயல்பு  
ü  தனது காம உணர்வுகளை தீர்க்க வேறு  வழிகளை நாடுகின்றாள்.

ü  ஜீவனோபாயத்துக்கான போதிய பணம் கணவனால்  அனுப்பப்படாத காரணத்தினால் மனைவி கடன் தொல்லைகளுக்கு ஆளாகின்றாள்.இதனால்  பிள்ளைகளை படிப்பித்தல் போதிய உணவு வளங்கல் போன்றன பிரச்சினையாக உருவெடுக்கின்றன

ü  பிள்ளைகளுடைய ஒழுக்கம் சீரழிகின்றது

ü  கல்வி வீணடிக்கப்படுகின்றது

ü  குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மனைவியின் மூலம் பிள்ளை பிறக்கும்  தகுதி  இல்லாமல் போகின்றது

கணவன் பக்கம்

Ø  வெளிநாடுகளில் தொடர்ந்து இருப்பதால் ஒரு வகையான சுக போக வாழ்கை ஆட்கொண்டு குடும்ப வாழ்கை சீரழிகின்றது .

Ø  மது விபாசாரம் சூது போன்ற சமூக விரோத பழக்க வழக்கங்கள் ஆட்கொள்கின்றது 

Ø  புதிய நோய்கள் தோற்றுகின்றது (பாலியல் நோய்கள் )

Ø  சேமிப்பு இல்லாத வாழ்க்கை தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கத் தோன்றுகின்றது .

Ø  பிற பெண்களுடன் கள்ளத் தொடர்புகள் ஏற்பட்டு குடும்ப வாழ்கை சீரழிகின்றது .

இன்னும் பல ஏராளமான காரணங்கள் உண்டு .

நான் மேலே கூறிய குறிப்பிட்ட சில முக்கியாமான காரணங்கள்  பொதுவானவை .இவைகள் உலகத்தில் நடப்பதாக பல ஆய்வுகள் மூலம் சுட்டிக் காட்டப்படுகின்றது .


எனவே நாம் மேலே கூறப்பட்ட காரணங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய தார்மீக பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு .அல்லாஹ் மிக அறிந்தவன் 

0 comments:

Post a Comment