இனி ஒரு போதும் உலகில் ஹிலாபத் நிகழாது றஸ்மி மூசா சலபி-

| 3 comments

இனி ஒரு போதும் உலகில் ஹிலாபத் நிகழாது.-றஸ்மி மூசா சலபி


அலசுகிறார்   எழுத்தாளர் றஸ்மி மூசா சலபி
      
          ISIS அமைப்பிற்கான இற்கான பதிலுரை
றஸ்மி மூசா சலபி
ஹிலாபத் என்ற அரபுசொல் பல கருத்துக்களை கொண்டிருந்தாலும் நமது இந்த தலைப்புக்கு தேவையான கருத்தாகிய ஹலப பிரதிநிதித்துவப் படுத்தினான் என்ற கருத்தை கொடுகின்றது. அதாவது அதிலிருந்து வரக் கூடிய ஹலீபா என்ற சொல் ஒரு நபரின் பிரதிநிதி என்ற கருத்தைக் கொடுகின்றது இதையே அல்லாஹ்வும் மனித குலத்தை படைக்க நாடியபோது " நான் இந்த உலகில் ஒரு பிரதிநிதியை படைக்கப் போகின்றேன் "என்று மலக்குகளிடம் கூறியது இதே அர்த்தத்தில்தான் ஆனால் இங்கு அல்லாஹ் நாடும் அர்த்தம் நமது தலைப்புக்குரிய அர்த்தம் அல்ல.
எனவே  இதன் நேரடி கருத்தை நாம் அலசி ஆராய விட்டாலும் கூட நமது கட்டுரைக்குத் தேவையான ஹிலாபத் என்பதன் அர்த்தம் யாதெனில் இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல் அவர்களுக்கு பின்னால் இஸ்லாமிய ஆட்சியாளர்களாக திகழ்ந்த குறிப்பிட்ட உன்னத நபித் தோழர்களின் ஆட்சியதிகாரத்தை குறிக்கின்றது" அதாவது நபி ஸல் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட சில சஹாபாத்  தோழர்கள் ஹலீபாக்கள் என்ற அந்தஸ்தில் சமூகத்துக்கு முழுப் பொறுப்பாளர்களாய்  இருந்தார்கள் என்பதை இந்த விடயம் எமக்கு உணர்த்துகின்றது

இதை நபி ஸல் அவர்களே தனது வார்த்தை மூலம் சான்றுப் படுத்திக் கூறும் போது  : உங்களுக்கு எனது வழிமுறைகளை பின்பற்றுமாறும் எனக்குப் பின்னால் வரும் நேர்வழி பெற்ற ஹலீபாகளின்  வழிமுறைகளையும் பின்பற்றுமாறும் கட்டளை இடுகின்றேன். அதனை நீங்கள் கடைவாற் பற்களால்  பற்றிப் பிடியுங்கள் “ என்று தொடர்ந்து செல்லும் நபி மொழியில் நபி அவர்களுக்கு பின்னால் அவர்களின் அங்கீகாரம் அளிக்கப்பட்ட சில ஆட்சியாளர்களையும் அடையாளப்படுத்திவிட்டு நபி ஸல் அவர்கள   உலகை விட்டு மறைந்து சென்றாகள் .இது இஸ்லாமியன் ஒவ்வொருவரும்  அறிந்து கொள்ள வேண்டிய  நம்பிக்கை கொள்ள வேண்டிய அம்சமாகும்.

குறிப்பிட்ட சிலர்தான் இந்த பதவியில் அமர்த்தப்படுவார்கள் என்று இங்கு நாம் கூறக் காரணம் என்ன ? அதாவது நபி ஸல் அவர்கள் இந்த ஹிலாபத் 30 வருடங்கள் மட்டுமே இந்த உலகில்  நீடிக்கும் என்றும் அதற்க்கு பின்னால் அரசுகள்தான் தோன்றும் என்றும் எதிர்வு கூறிவிட்டு  சென்றார்கள். எனவே  இந்தப் பணி உலகில் நீண்ட நெடுந்தூரம்  செல்லாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதை நான் தொடர்ந்து விளக்குகின்றேன்

அப்படியானால் இந்த ஹிலாபத்தின் அர்த்தம் என்ன ? அது எத்தகைய தாத்பரியங்களை கொண்டுள்ளது? இத்தகைய கேள்விகளுக்கு நாம் விடை கண்டால் எனது இந்தத் தலைப்பை நீங்கள் இலகுவாக புரிந்துக் கொள்வீர்கள் .நபி ஸல் அவர்கள் தனது வாழ்கை அமைப்பை உலகில் முடித்துக் கொண்டதன் பின்னால் தன்னுடைய முழுப் பொறுப்பை இந்த உலகில் சுமந்து செல்லும் பாரிய பொறுப்பை இந்த ஹிலாபாத் என்ற அரதப்புஷ்டி மூலம் இந்த உலகிற்க்கு வெளிக்காட்டினார்கள்.

அத்தகைய ஹிலாபாத் என்பது வெறுமனே ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல இந்த முழு உலகிட்கும் இஸ்லாத்தை  அத்தோடு சமூக  ஆட்சியல் அதிகாரத்தை அதாவது இஸ்லாமிய  சரியத் சட்டதிட்டங்களை  இந்த உலகிற்கு எடுத்துச் செல்லும் மிகப் பெரிய பணி இதுவாகும்.

எனவே இந்த நுபுவதுக்குப் பின்னால் வரக்கூடிய ஹிலாபாத் ஏற்கனவே நபி அவர்களால் எதிர்வு கூறப்பட்டுவிட்டது  அதற்குப் பின்னால் பல சஹாபாக்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு இந்த ஹிலாபாதில் எந்தப் பங்கையும் நிர்ணயம் செய்யவில்லை. இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது இந்த ஆட்சி அதிகாரம் தனியான சிரப்பம்சம் வாய்ந்த அல்லஹ்வின் அருட்கொடை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இந்த வகையில் இந்த ஹிலாபத் நபி அவர்களுக்கு பின்னால் அவர்களின் தூதுத்துவ பணியை அப்படியே இந்த உலகிற்க்கு பிரதிநிதிதுதுவப்படுத்தும் மகத்தான பணி. இதையே அல்லா குர்ஆனில்.இது அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது  22:41 எனவே ஆட்சி அதிகாரம் எந்த தனி மனிதனாலும் உலகில் அல்லது குழுக்களாலும் தீர்மானிக்க முடியாது அல்லாஹ் நாடினால் மட்டுமே இதனை வழங்குவான் என்பதை மேலுள்ள வசனமும் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது  என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

அப்படியானால் அதற்குப் பின்னால் வரக்கூடிய சமூகத்துக்கு எல்லோருக்கும் இந்த ஹிலாபத் பணிக்கான வாய்ப்பு வசதிகள் உண்டா என்றால் நிட்சயமாக இல்லை. இது நபி ஸல் அவர்கள் இந்த உலகிற்கு அடயாளப்படுத்திய குறிப்பிட்ட சில சஹாபாக்களான  அபூ பக்கர் உமர் உத்மான் மற்றும் அலி ரலி அவர்கள் உட்பட நாலு சகாபாக்களுக்கு மட்டுமே இந்த ஹிலாபத் என்ற அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்குப் பின்னால்  எந்த ஒரு மனிதனுக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

 நபி ஸல் கூறினார்கள்”  அல்லா   நாடினால் உங்களில் நுபுவத் இருக்கும் பின்னர் அதை அல்லா உய்ர்த்திவிடுவான் பின்னர் அல்லா நாடினால் நுபுவத்தின் வழியில் ஹிலாபத் இருக்கும் பின்னர் அதையும் அல்லா உயர்திவிடுவான் பின்னர் வழிகெட்ட அரசர்கள் தோன்றுவர் அதையும் அல்ல்ஹ் நாடினால் உயர்திவிடுவான் பின்னர் அடக்கி ஆளும் அரசு இருக்கும் பின்னர் அல்லா  அதை  உயர்திவிடுவான் பின்னர் பின்னர் நுபுவத்தின் அடிப்படையில் ஹிலாபாத் தோன்றும் என்பதாக மிஸ்காதில்  இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது     

இங்கு கூறப்புட்டுள்ள பலவிடயங்களில் நாம் கற்றுக் கொண்ட நான்கு ஹிலாபாதுகளுக்கு அப்பால் ஐந்தாவது ஒரு ஹிலாபாத் வரவேண்டியிருக்கின்றது அதுதான் இமாம் மஹ்தி  அலை அவர்கள் இந்த பூமிக்கு வந்து இஸ்லாமிய ஆட்சியை நிருவார்கள் அதுதான் நபி ஸல் அவர்கள் கூறிய கடைசி ஹிலாபாத். இது உலகம் அழியும் காலப் பகுதியில் இந்த உலகில் அது அல்லாஹ்வின் அருளால் தோன்றும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் " மஹ்தி  என்ற ஆட்சியாளர் பிறப்பார் அவர் எனது வம்சமாகிய பாத்திமாவின் குடும்பத்தில் இருந்து பிறப்பார் அபூதாவூத் 4284 இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தவகையில்  இந்த நான்கு ஹலீபாக்களுக்கும் வழங்கப்பட்ட இந்த ஹிலாபாத் பணி நபி ஸல் அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்டது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன் அதை விட நபி சல் அவர்களே இந்த நான்கு கிலாபத்தின் முன்னறிவிப்பை பற்றிக் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறிவிட்டார்கள் என்றால் நாம் யாரும் இது தொடர்பாக ஆதாரமில்லாமல் அலசி ஆராய வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாத்துக்குப் பின்னால் நடக்கும் அல்லது நடக்கவிருக்கின்ற ஒவ்வொரு அசைவுகளும் நபி ஸல் அவர்களால் எதிர்வு கூறப்பட்டு விட்டன அதை மீறி எதுவும் நடக்காது அல்லா நாடினால் தவிர.

ஒரு முறை நபி ஸல் அவர்கள் உகது மலையில் அபூபக்கர் மற்றும் உமர் ரலி உதுமான் ரலி அவர்களுடன் ஏறுகின்றனர் உகது மலை அப்போது உசும்புகின்ற்றது  நபி ஸல் அவர்கள் உகதை பார்த்து கூறினார்கள் உகதே உசும்பாதே எனக்குப் பின்னால் ஒரு உண்மையாளன் சித்தீக் இருகின்றார் இரண்டு சஹீத் இருகின்றனர் என்று பின்னால் வந்த அபூபக்கர் உமர் மற்றும் உத்மான் ரலி அவர்களை சுட்டி காடி பேசினார்கள்" பிற்காலத்தில் அவர்கள் சொன்னது போன்று நடந்தது உமர் ரலி உதுமான் ரலி கொல்லப் பட்டார்கள்  எனவே இவைகள் நபி ஸல் அவர்கள் மூலம் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனங்கள் இதை மீறி பிற்காலத்தில் எதுவும் நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது.

இதே போன்று ஆயிஷா ரலி மற்றும் அலி ரலி குழுக்களிடையே நடைபெறவுள்ள ஜமால் யுத்தம் பற்றி கூறும் போது அலியை பார்த்து  கூறினார்கள்  அலியே உனக்கும்  ஆயிஷாவுக்கும் இடையே சண்டை நிகழும்    ஓரிடத்தை சுட்டிக் காட்டி கூறினார்கள்.   அப்போது நீ   அந்த  இடத்தில இருந்து எனது மனைவியை பாதுகாப்பாக ஓரிடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த இடத்தில நாய்களும் குரைக்கும் என்று கூறினார்கள் இந்த எதிர்வு கூறலை ஆயிஷா ரலி நபி ஸல் சொன்ன அந்த நிகழ்வை ஜமல் யுத்தம் நிகழும் போது ஆயிஷா ரலி அந்த இடத்தை கடந்தார்கள்  அப்போது நாய்கள் குரைத்தன நபி ஸல் அவர்கள் கூறிய அந்த எதிர்வு குரலை நினைத்துப் பார்கின்றார்கள். சுபானல்லாஹ்  எனவே நபி ஸல் அவர்களின் இத்தகைய எதிர்வு கூறலின் பின்னணிதான் இந்த ஹிலாபதும் இதை மீறி எதுவும் நடக்காது  என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட உமய்யா அப்பாசிய்யா ஆட்சி அதிகாரங்கள் நிலைப்பாடு என்ன ? என்று நாம்  கேட்கலாம் அவை நிட்சயாமாக ஹிலாபாத் அல்ல அவை ஆட்சி அதிகாரங்கள். அதானல்தான் அவை உண்மையான இஸ்லாமிய ஆட்சி அதிகாரங்களாக   இருக்கவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் ,

குறிப்பிட்ட சிலரை தவிர எவரும் இஸ்லாமிய ஆட்சி நடத்தவில்லை அதாவது  இஸ்லாமிய ஆட்சி என்னும் போது நல்ல அரசர்களாக இருந்துள்ளனர்  இஸ்லாத்துக்கு நல்ல தொண்டு செய்துள்ளனர் அதனாலதான் பல இஸ்லாமிய ஆட்சியாளர்களை கடந்து வந்து ஒரு கட்டத்தில் நல்லாட்சி புரிந்த மன்னர் அப்துல் அசீசை உமையாக்களின் நல்லாட்சி என நாம் இன்றும் பேசுகின்றோம்.

அப்படி பின்னால் வந்த சகல ஆட்சியாளர்களும் ஹிலாபத் ஆட்சியாளர்கள் என்றால்  என்றால் நபி ஸல் கூறுவதுபோல் நாம் அவர்களுடைய வழிமுறைகளை நேர்வழி பெற்ற ஹலீபாக்களாக  நினைத்து நாம் அவர்களுடைய கட்டளைகளையும் வாழ்கையில் சரியதுக்கு மாற்றமாக இருந்தாலும் கூட எடுத்து நடக்க வேண்டி இருந்திருக்கும்,  இன்று அப்படி ஹிலாபாத் ஆட்சி நிறுவி விட்டோம் என்று கூறி யாராவது பிரகடனம் செய்தால் கூட அதுவும் இஸ்லாமிய ஹிலாபாதாக மாறி விடும் அத்தகைய ஆட்சி அதிகாரம் சொல்லும் எல்லாமே மார்க்கமாகி விடும் எனவே இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.  

அப்படியானால் இந்த உலகில் ஒருபோதும் இந்த உலகில் ஹிலாபாத் நிகழாதா? ஆம் பல அமைப்புக்கள் இந்த ஹிலாபாத் வேண்டிப் போராடுகின்றனரே என்ற கேள்வி நமது மனதில் தோன்றலாம் உலகில் இந்த ஹிலாபாத் வேண்டி போராடி பல அமைப்புக்கள் மறைந்துள்ளன பல இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றது உண்மை இஸ்லாத்தை இந்தப் பூமியில் நிலை நாட்ட வேண்டும் என்று நாம் உலகில் போராடுவது என்பது உண்மை அது சிலவேளை வெற்றி கிடைக்கலாம் அல்லது தோல்வி கிடைக்கலாம் ஆனால் அவை ஹிலாபாத் என்ற அர்த்தத்தில் இருக்காது.

அவை நல்லாட்சியாக இருக்கும். மேலே நான் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் இதைதான் கூறுகின்றது .இப்படி நிலை நாடப்படும் அரசுகள் சிலவேளை இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரில மக்களை அல்லது மாற்று மதக் கொள்கை சகோதரர்களை இன்னல் படுத்தும் காட்சியை நாம் பார்கின்றோம். இது ஹிலாபாத் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

இதைதான் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அல்லா   நாடினால் உங்களில் நுபுவத் இருக்கும் பின்னர் அதை அல்லா உய்ர்த்திவிடுவான். பின்னர் அல்லா நாடினால் நுபுவத்தின் வழியில் ஹிலாபத் இருக்கும். பின்னர் அதையும் அல்லா உயர்திவிடுவான் பின்னர் வழிகெட்ட அரசர்கள் தோன்றுவர் அதையும் அல்ல்ஹ் நாடினால் உயர்திவிடுவான் பின்னர் அடக்கி ஆளும் அரசு இருக்கும் பின்னர் அல்லா  அதை  உயர்திவிடுவான் பின்னர் பின்னர் நுபுவத்தின் அடிப்படையில் ஹிலாபாத் தோன்றும். என்பதாக மிஸ்காதில்  இந்த ஹதீஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது இந்த ஹதீஸை நான்  உங்களுக்கு    மேலேயும்  கூறியுள்ளேன்  இங்கு நபி ஸல் அவர்கள் கூறுவது போல் மன்னராட்சி இருக்கும் அது சிலவேளை நல்லாட்சியாக இருக்கும் அல்லது கொடுங்கோன்மை ஆட்சியாக இருக்கும்    

இந்த அடிப்படையில்தான் உலகில் பல அமைப்புக்கள்  இந்த ஹிலாபாத் என்ற சொல்லை    தங்களுடைய போராட்டத்துக்கு யுக்தியாக பயன் படுத்துவதையும் பின்னர் அதை இஸ்லாத்துக்கு மாற்றமாக பயன் படுத்துவதையும் அவதானிக்கின்றோம்
நாம் எடுத்துக் காட்டாக பார்த்தால் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில்  தலிபான் ஆட்சி வந்த போது ஹிலாபாத் என்றனர் அது வேகமாக மறைந்து விட்டது .எகிப்தில் ஹிலாபாத் என்றனர் அது வேகமாக மறைந்து விட்டது இப்போது ஈராக்கில் ISIS என்ற படையினர் செல்வது ஹிலாபாத் நோக்கிய பயணம் என்கின்றனர் என்ன நடக்கப் போகின்றது? இதுதான் நாம் ஹிலாபாத் என்ற வரை விலக்கணம் கொடுத்து இஸ்லாமிய உலகில் அங்கீகாரம் அளிக்கின்றோம்

அறிந்து கொள்ளுங்கள் ஹிலாபாத் என்பது நாம் போராடி வெற்றி கொள்வது அல்ல மாறாக அல்லா அதை தானாக வழங்குவான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். வெறுமனே ஆயுத ரீதியான் வெற்றி என்பது வெற்றி அல்ல அது பலத்தின் மீதான வெற்றி  அது அல்லாஹ்வின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு போதும்  யாரும் ஆட்சி செய்ய முடியாது.

அப்படியானால் நபி ஸல் அவர்கள் சொன்ன ஐந்தாவது ஹிலாபாத் என்ன ? ஆம் அதுதான் நபி ஸல் அவர்கள் கூறிய மகதி அலை அவர்களின் ஆட்சி அதிகாரம் இமாம் மஹ்தி  அலை அவர்கள் மற்றும் ஈசா அலை அவர்கள் இந்த உலகில் வந்து இறுதிக் காலத்தில் இந்த உலகை ஆளும் நாட்கள் இறுதியாக நடக்கும் ஹிலாபாத் ஆட்சி என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதையே நபி ஸல் அவர்கள் கூறும் போது “ பூமியின் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் மீதமாக இருந்தால் கூட அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான். அதில் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அல்லாஹ் அனுப்புவான். அவர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருக்கும். அவரது தந்தையின் பெயரும் என் தந்தையின் பெயரும் ஒன்றாக இருக்கும். அநீதியால் நிரப்பப்பட்டுள்ள பூமி முழுவதும் நீதியால் நிரப்புவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் அபூதாவூத்

மேலும் கூறும் போது “ அரபு தேசத்தை என் பெயருடையை என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்யும் வரை உலகம் அழியாது” என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.நூல் திர்மிதி 505/4
இதே போன்று இமாம் மஹ்தி அலை அவர்களுக்கு உதவியாக அல்லாஹ் ஈசா அலை அவர்களை இந்த உலகிற்கு அனுப்புவான்.உதவிஎன்றில்லாவிட்டாலும் அல்லாஹ்வின் ஏற்பாடு இதுதான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்

இப்படி ஈசா அலை அவர்களின் ஆட்சியை சிறப்பித்துக் கூறப் பட்டிருக்கின்றது ஈசா நபி உலகிற்கு வந்தாலும் அந்த வேளை  ஹலீபாவாக இருக்கும் மஹ்தி  அலை அவர்களை அவரும் தலைவராக ஏற்பார் என்றால் இந்த ஹிலாபாதின் மகிமையை நாம் விளங்கிக் கொள்ளலாம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!" என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறிவிடுவார்கள்.இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இங்கு நபி ஸல் அவர்கள் போராட்டம் என்று கூறும் விடயம் இமாம் மஹ்தி  அலை அலை அவர்களின் போராட்டத்தைத்தான் இமாம் என்று கூறுவது அந்த மகதி  அலை அவர்களிதான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்

இதில் ஒரு மிக முக்கிய கோட்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் அப்படி இந்த ஹிலாபத் ஏற்படுவதாக இருந்தால் நபி ஸல் அவர்கள் கூறியது போல் அது அவர்களுடை குடும்ப உறுப்பினர் என்னும்போது எவ்வாறு வேறு ஒரு சமூகத்தில் இருந்து நாம் ஹிலாபத் என்றும் ஹலீபாவாக  என்றும் அழைப்பதும் பிரகடனப்படுத்துவதும் என்பதை சிந்தியுங்கள்

எனவே இந்த ஒரு கோணத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களை மதிப்பிடும் போது  இன்று நடக்கும் போர் இஸ்லாமிய உலகில் சீயா மற்றும் சுன்னிக்கள் என்ற அரசியல் பின்னணியின் பலத்தை நிறுவும் போராட்டம்.சீயாக்கள் தொடர்பானஎனது கட்டுரை இந்த வெப் தலத்தில் உள்ளது வாசியுங்கள் இந்த ஒரு கோணத்தில் நாம் ஆட்சி அதிகாரங்களை மதிப்பிடும் போது இதற்குள் யாரும் மூக்கை நுழைத்து இந்தப் போராட்டத்துக்கு ஹிலாபத் சாயம் பூச முற்படவேண்டாம் குறிப்பாக உலமாக்கள் மிம்பர்களிலும் உரைகளிலும் இப்படி முழங்குவதை கண்டிப்பாக தவிர்த்து கொள்ள வேண்டும்

உண்மையான ஹிலாபாத் எதிரிகளையும் வழிப் படுத்தும் அதே வேளை மாற்று   சமூகமும் இந்த ஹிலாபாதுடன் வாழ்ந்த சரித்திரம் இஸ்லாதில் பதிவு செய்யப் பட்டுள்ளது அதனால்தான் ஜிஸ்யா திம்மா போன்ற பல வரிகள் ஹிலாபதில் ஏற்படுத்தப்பட்டன மற்றவர்களுடைய கோவில்களுக்கு பாதுகாப்பு உண்டு மற்ற சமூகங்களுக்கு மத சுதந்திரம் உண்டு. பூமியை சுத்தப்  படுத்துகின்றோம் என்பதற்காக இருக்கும் மாற்று மத மக்களை அல்லது வணக்க தலங்களை  உடைத்து நாம் ஒரு போதும் இறை ஆட்சியை நிறுவ முடியாது

இதைதான் நபி ஸல் அவர்கள் ஈசா   நபி உலகிற்கு வரும் போது " நபியோ ஸல் கூறினார்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார் என்று இந்த இறையாட்சியை சிறப்பித்துக் கூறினார்கள்

உண்மையான இறை ஆட்சி கோவில்களை உடைக்காது சிலைகளை உடைக்காது மற்ற மக்களை அநியாயமாக தாக்காது மற்றவர்கள் அறிவில்லாமல் பொது மக்களை தாக்குகின்றனர் என்பத்ர்க்காகாக அல்லாஹ்வின் அடியார்கள் தாக்க மாட்டார்கள்     

எனவே இந்த அடிப்படையில் ஹிலாபாத் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் இந்தக் கட்டுரை எனது இஜ்திகாத் அடிப்படையில் நான் ஆய்வு செய்தவை நீங்கள் ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இஸ்லாமிய சரியத் அடிப்படையில் கொண்டிருந்தால் எனக்கு எழுதுங்கள் moosarasmy@yahoo.com .கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள்
முடிவு
ஹிலாபத் என்ற அம்சம் பிரத்யேகமாக நபி ஸல் அவர்களால் இந்த இஸ்லாமிய உலகிற்கு அல்லாஹ்வின் அருளால் வழங்கிய ஒரு அருட் கொடை. அது வெறும் ஆட்சி அதிகாரம் அல்ல. மாறாக இஸ்லாமிய உலகை ஓன்று படுத்தும் மாபெரும் அருள் இது சாதாரண தனி மனிதர்களால் யாரும் நிருவ முடியாது .இது நான்கு ஹலீபாக்கலான அபூ பக்கர் உமர் உதுமான் மற்றும் அலி ரல்யோடு முடிந்து பின்னர் இமாம் மகதி அலை அவர்களோடு முற்றுப் பெறும்  

ஆயுத ரீதியான் போராட்டங்கள் ஒரு போதும் ஹிலாபாத் அல்ல ஆனால் இஸ்லாமிய ஆட்சியை  நிறுவவேண்டும் என்றால் அல்லாஹ்வின் அருள் வேண்டும் அது இஸ்லாமிய ஆட்சியாக இருக்கும் ஆனால் ஹிலாபதக இருக்காது

உலகில் ஒரு பகுதி மட்டும் இஸ்லாமிய ஹிலாபாத் அல்ல. இஸ்லாமியன் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலாபாதாகதான் இருக்க முடியும். இதனால்தான் நான்கு ஹலீபாக்கள் காலத்திலும் இஸ்லாமிய உலகு ஒன்றாக இருந்தது இமாம் மஹ்தி அலை காலாதிலும் இது ஓன்று படுத்தப்பட்டு தான் உலகம் அழியும்

அபூஹுரைரா (ரலி) அவர்கள், "வேதம் வழங்கப் பெற்றவர்களில் எவரும், அவர் (மர்யமின் மைந்தர்) இறப்பதற்கு முன்பாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்” என்ற ஹதீஸை அறிவித்தார்கள்

இந்த இடத்தில ஒரு முக்கிய விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும் அதாவது இமாம் மஹ்தி அவர்களின் ஹிலாபாதை பற்றிக் கூறும் போது ஈசா நபி அவர்களையும் நாம் இணைத்துத்தான் பார்க்க வேண்டும் ஏனனில் இரண்டு பெரும் சேர்ந்துதான்   இந்த உலகை ஓன்று படுத்துவார்கள். அல்லா மிகவும் அறிந்தவன்
இந்தக் கட்டுரையை பார்த்தவிட்டு உங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்புங்கள் moosarasmy@yahoo.com







3 comments:

  1. ஆயுத ரீதியான் போராட்டங்கள் ஒரு போதும் ஹிலாபாத் அல்ல - Need Evidence

    ReplyDelete
  2. @@@@@WHAT U SAY FOR BELOW HADITH @@@@@
    Imam Ahmad extracted on the authority of Al-Nu’man Ibnu Bashir (R) who said: We were sitting in the mosque with the Messenger of Allah (PBUH), and Bashir was a man who used to follow his Hadith (PBUH). Then Abu Tha’alaba Al-Khashni came and said: O Bashir, do you recall the Hadith of the Messenger of Allah (PBUH) about the Amirs? Upon this Huthayfa said: I do recall his speech. So Abu Tha’alaba sat down and then Huthayfa said: The Messenger of Allah (PBUH) said: The prophecy will remain among you for as long as Allah wills, then Allah will lift it when He wishes to, then it will be a Khilafah Rashida (rightly guided) on the method of the prophecy, it will remain for as long as Allah wills, then Allah will lift it if He wishes, then it will be a hereditary leadership which will remain for as long as Allah wills, then He will lift it if he wishes, then it will be a tyrannic rule, and it will remain so for as long as Allah wills, then He will lift it if He wishes, then it will be a Khilafah Rashida on the method of the prophecy, then he kept silent. (Musnad of Imam Ahmad 4/273).

    ReplyDelete
  3. பன்னிரெண்டு கலீஃபா பற்றி ஹதீஸில் வந்துல்லது ஆனால் இங்கு ஐந்து கலீஃபாக்கள் மாத்திரம் என்றே எழுதப்பட்டுள்ளது.

    ReplyDelete