நமது நாட்டின் தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்கலாமா? றஸ்மி மூசா - சலபி

| 0 comments
கேள்வி 
சில கூட்டங்களில் நமது நாட்டின் தேசிய கீதம் பாடப்படும்  போது எழுந்து நிற்பது பற்றி என்ன அபிபிராயம் உள்ளது ? பாகிஸ்தானுக்கும் இலங்கை நாட்டுக்கும் இடையில்   சர்வதேச கிரிக்கட் மேட்ச் நடக்கும் போது நாம் இனம் என்ற ரீதியில் பாகிஸ்தானுக்கு   ஆதரவு அளிக்கலாமா?
எம் .எப் .பைரூஸ் 
சாய்ந்தமருது 
3/04/2014 FB post 

விடை : றஸ்மி மூசா -சலபி


பொதுவாக ஒரு பெரும்பான்மை நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உண்டு .குறிப்பாக அந்த பிரச்சினைகள்தான் சிறுபான்மை நாட்டில் வன்முறை வெடிப்பதும் மற்றும் சிலவேளை போராகக்  கூட மாறுகின்றது. இதன் விளைவு  பல அப்பாவி மக்கள் கொல்லப்படக் காரணமாவும் அமைந்து விடுகின்றது நீங்கள் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இதை பற்றி விலாவாரியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.உங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கும் .

விடயம் என்னவென்றால் இத்தகைய இந்த நாடுகளில் சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தை  அனுசரித்து சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மார்க்க விடயங்களில் நேரடியாக நம்மோடு அவர்கள் மோதும் நிலை காணப்பட்டால் நாம் ஏதோ ஒரு வகையில் நமது சமூக அனுபவம் மற்றும் நபி ஸல் அவர்களின் போதனைகளை கொண்டு நம்மை வழிப்படுத்திக் கொள்ளலாலம் அல்லது எதோ ஒரு முடியுமான போராட்ட யுக்தியை கையாளலாம் .
ஆனால் நீங்கள் கேட்ட இந்த நாட்டு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை பொறுத்தவரையில் கட்டாயம் அனுசரித்துதான் போகவேண்டிய காலத்தின் தேவையாக  உள்ளது.

முதலாவது விடயத்துக்கு வருவோம் ஒரு தனி மனிதனுக்கும் எழும்பி மரியாதை செலுத்தக் கூடாது   என்று சொல்லும் மார்க்கத்தில் இப்படியான தேசிய சமூக மரபுகளை பேணுவதிலும் எமக்கு வழிகாட்டியுள்ளது. தேசிய கீதம் பாடப்படும் போது எல்லோரும் ஒரு சபையில் எழும்பி நிற்கும் போது நாம் மாத்திரம் அந்த இடத்தில உட்கார்ந்திருப்பது அவ்வளவு அழகானதல்ல . இவ்வாறான நமது நடத்தை  நம் மீதும் நமது மார்க்கம் மீதும்  வெறுப் புனர்சியை ஏற்படுத்தும்.அந்த இடத்தில பெரும் பெரும் அரசியல் வாதிகள் கூட இருக்கக்கூடும்அதுசங்கடத்தைஏற்படுத்தும்.அதுநமக்குஆபாதானஒன்றுதான் .

நமது மார்க்கம் மீதும் நம் மீதும் வெறுப்புணர்வு சார்ந்த கவனம் செலுத்தப் படும் அது தொடர்ந்தும் நமது சமூகத்துக்கு நிம்மதியற்ற வாழ்வையே ஏற்படுத்தும். எனவே இப்படியான இடங்களில் நாம் எழும்பி நின்று கொள்வதில் எந்த தவறும் கிடையாது. அல்லது அப்படி நமக்கு எழும்பி நிற்க விருப்பமில்லையாயின் அவ்வாறான இடங்களுக்கு போகக் கூடாது அதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் .அப்படி நீங்கள் தவிர்த்தல் அது எல்லோருக்கும் நல்லது நாமாக அந்த இடத்துக்கு போய் பங்கு பற்றிக் கொண்டு இதை மட்டும் நாம் நிராகரித்தால் அது பிழையான அனுபவங்க்களை தரக்கூடும் .அப்படியான பல சம்பவங்கள் சில இடங்களில் நடைபெற்றுள்ளது .

நபி ஸல் அவர்கள் ஒரு முறை உட்கார்ந்து இருந்த வேளையில்  ஒரு யூதனின் ஜனாஸா சுமந்து கொண்டு வரப்பட்ட போது அதற்க்கு  எழும்பி மரியாதை செலுத்தினார்கள்.  பிற சமூகங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு தக்க  சான்று இதே போன்று உலகின் எந்த நீதி மன்றுக்கு சென்றாலும் நீதிபதி  வரும் பொழுது  எழும்பி நிற்கத்தான் வேண்டும் அப்படி நிற்க மாட்டேன் என்று நீதி மன்றில்  கூற முடியாது. பஸ் வண்டியில் பிரயாணம் செய்யும் போது பெரும்பான்மை மதத் தலைவர்கள் ஏறும் போது நாம் அவர்களுடைய ஆசனத்தை கட்டாயம் கொடுக்கத்தான் வேண்டும் .இவ்வாறு பல விடயங்களை குறிப்பிடலாம் .

இந்த வகையில் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த இப்படியான தேசிய கீதம் பாடப்படும் போது எழும்பி நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதற்கு யாரும் எதிர் கருத்துக் கூற முடியாது. ஒரு நாட்டின் அரச திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள்  வரும் போது அது எல்லா சமூகங்களுக்கும்தான் வந்து சேரும் எனவே நாட்டின் அனுகூலங்களில்  மட்டும்  ஒரு முஸ்லிம பங்கு கொள்ளுவது    சரியாக இருக்காது.எனவே தேசிய கீதம் பாடப்படும் போது  நாம் எழுந்து அதற்க்கு மரியாதை செய்வது இன்றய காலத்தின் தேவையாகும் .

இத்தகைய நாட்டுப்  பற்றுடன் சம்மந்தப் பட்ட மற்றுமொரு விடயம்தான் இந்த கிரிக்கட் விவகாரம் இதுவும் நமது நாட்டில் பல எதிர்பலைகளை ஏற்படுத்திய விடயம்தான். ஒரு விளையாட்டை பொறுத்தவரையில் விரும்பிய அணியை ஆதரிப்பது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அது விளயாட்டு மரபும் கூட. ஆனால் இங்கு பிரச்சினை அதுவல்ல உதாரணமாக இலங்கை பாகிஸ்தான் அணி விளையாடும் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானை ஆதரிப்பது தமது இனப் பற்றினை வெளிக்காட்டிக்  கொள்ளத்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.அதனால்தான் இலங்கை பிரிட்டன் விளையாடும் போது இந்தப் பிரச்சினை எழுவதில்லை .நமது இனங்கள் மோதும் போது மட்டும் இந்த பிரச்சினை எழுகின்றது

 உண்மையில் நாம் வாழும் நாட்டில் எல்லாவிடயங்களையும் ஆதரிக்காவிட்டாலும் தேசிய முக்கியத்துவம் அல்லது சமூக பிரச்சினைகளை ஏற்படும் விடயங்களை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் இலங்கை பாகிஸ்தான் விளையாடும் போது நாம் பாகிஸ்தான் நாட்டை ஆதரிகின்றோம் என்றால் நாம் அமைதியாக யாருக்கும் பகிரங்கப் படுத்தாமல் ஆதரிக்கலாம் .
ஆனால் நடப்பது தலைகீழ் பாகிஸ்தான் சிலவேளை வெற்றி பெற்றால் நாம் வெடில் கொளுத்துவதும் ஊர்வலம் செய்வதும் என்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது அது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தம்

 ஒரு நாள் விளையாட்டு தீராத பகையாக மாறி அது பல  சமூக குழப்பங்களை ஏற்படுத்தும். கடந்த காலங்களில்அவ்வாறு  நிகழ்ந்துள்ளது. எனவே மார்க்கம் நேரடியாக தடை செய்யாத ஆனால் காலத்தின் தேவை கருதிய இவ்வாறான அம்சங்களில் நாம் நல்ல யுக்தியை கையாள வேண்டிய  கடப்பாடு  பெரும்பான்மை நாட்டில் வாழும் போது அவசியமானது இதைதான் ஹுதைபியா மற்றும் மதீனா சாசனங்கள் கூறுகின்றது

" நபி ஸல் அவர்கள் கூறினார்கள் "யார் ஜாஹிலியா  கால வழிகெட்ட கொடியின் கீழ் பிற சமூகத்தை கொலை செய்யப் அளைகின்றாரோ.  தனது இனத்துக்காக வெறித்தனமாக மக்களை கோபப் படுத்துகின்றாரோ அல்லது  இனத்துக்காக உதவி செய்கின்றாரோ அவர் ஜாஹிலியாக் காலத்தில் கொலை செய்தவர் போன்றாவார் " முஸ்லிம் நஸாயி

இந்த அடிப்படையில் நமது இனப்பற்று என்பது இனத்துக்கு எதிராக எழும் சூழ்ச்சிகள் முறியடிக்கப் படுவற்கே  இருக்க வேண்டும் தவிர மற்ற சமூகங்களுடன் குழப்பத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த இருக்கக் கூடாது ,

நமது மார்க்கதை பின்பற்றும் உரிமை ஒரு நாட்டில் நமக்கு வழங்கப்படும போது அந்த  நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக ஒரு போதும் முன் நிற்க கூடாது இஸ்லாம் அவ்வாறு எந்த வழிமுறையையும் எமக்கு  காட்டித் தரவில்லை .விட்டுக் கொடுப்பதும் சகித்துக் கொள்வதும் இஸ்லாத்தில் மிக முக்கிய அம்சங்களாகும் .அல்லாஹ் போதுமானவன்.

0 comments:

Post a Comment