ஒரு பெண் தனியாக பயணம் செய்ய முடியுமா ?

| 0 comments
கேள்வி “ஒரு பெண் தனியாக பயணம் செய்ய முடியுமா ? ஹஜ் போன்ற வணக்கங்கள் தனியாக சென்று வர முடியுமா?”
இஸ்ஸத் ஜஹான் , கொழும்பு Posted On 13/03/2014

விடையளிப்பவர்  - றஸ்மி மூசா
கணவன், அல்லது திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர இரண்டு நாட்கள் பயணத் தொலைவு கொண்ட இடத்துக்கு பெண்கள் பயணம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி
நூல்: புகாரி 1996, 1197, 1864. 

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாதுஎன்பது நபிமொழி
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி
நூல்: புகாரி 1086, 1087 

மேற்காணும் ஹதீஸ்களின் அடிப்படையில் ஒரு பெண் எந்தக் காரணம் கொண்டும் தனிமையில் பிரயாணம் செய்வது கூடாது என்பது நேரடியான ஆதாரமாக உள்ளது. பொதுவாக நேரடியாக ஒரு ஆதாரம் வந்தால் அதற்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மேற் காணும் ஹதீஸ்களில் ஒரு பெண் தக்க துணை இன்றி தனிமையாக பிரயாணம் செய்வது கூடாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மேலும் இதை வலுப் படுத்த “ நபியே மூமினான பெண்களிடம் நீங்கள் கூறுங்கள் அவர்கள் தங்கள் பாரவைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் "என்ற அல்குரானிய வசனத்தில்  சாதாரண பார்வையை பற்றிக் கூறும் இஸ்லாம் ஒரு பெண் தனிமை படுத்தப்பட்ட உலகத்தில் சஞ்சரிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காது என்பதை யாவரும் புரிந்து கொள்வர் .இதே போன்று அதே வசனத்தில் ஆரம்பபகுதியில்  ஆண்களையும்  பார்த்து இஸ்லாம் இதே போன்ற கட்டளை இடுகின்றது .இதுவெல்லாம்  சாதாரண பார்வை கூட இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம் .இப்படி இருக்கும் போது ஒரு பெண் தனியாக எங்கும் செல்வதை இஸ்லாம் அனுமதிக்காது என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கின்றேன் இதில் எந்த வாதப் பிரதி வாதமும் தேவை இல்லை.

இங்கு நாம் விடை காண வேண்டிய ஒரு வினா ஹஜ் மற்றும் உம்ராவுக்கு பெண்கள் தனியாக செல்ல முடியுமா மக்ரமியான ஆண் துணை அவசியமா ? என்றால் மேலே நாம் கூறிய விடயத்தில் பொதுவாக வரும் பயணத் தடைதான் ஹஜ்ஜுக்கும் பொருந்தும் ஏனனில் ஹஜ் என்பது ஒரு பயணம்தான் .அதுவும் ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் இடம்தான் எனவே ஹஜ் செலவதானாலும் கூட ஒரு பெண் தனது மஹ்ரமான துணை கொண்டுதான் செல்ல வேண்டும் பணம் மற்றும் ஆரோக்கியம் என்பது மட்டும் பெண்ணுக்குரிய நிபந்தனைகள் அல்ல மஹ்ரமி என்பதும் பெண்ணின் ஆயுற்கால நிபந்தனைதான் இதை பின்வரும் ஹதீஸில் காணலாம்

திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார். நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன் என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராகஎன்று கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி
நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233. 

இங்கு தனியாக மனைவியை ஹஜ் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றார் என்றால் இதை விட ஆதாரம் தேவை இல்லை .
சரி இங்கு மற்றுமொரு கேள்வி கேட்கலாம் இப்படி துணை இல்லாத சூழலில் வேறு பெண்களுடன் சேர்ந்து பயணம் செய்ய முடியுமா? இங்கு அவதானிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பிரயாணம் என்பது சேர்ந்து என்றிருந்தாலும் ஒரு பெண் தனிமை படக்கூடிய சூழல் அதிகம் உண்டு .தனியறையில் தங்குதல் , போன்ற விடயங்கள் கூட்டாக மற்ற பெண்களுடன் சென்றாலும் இடம் பெரும் சாதாரண நிகழ்வுகள்தான். எனவே இஸ்லாம் பிரயாணம் என்ற வாகனப் பயணத்தை மட்டும் சொல்லவில்லை பிரயானதோடு  இடம் பெரும் சகல அம்சங்களையும் குறிப்பிடுகின்றது எனவே ஒரு பெண் தனது பயணத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்வாள் என்று கூற முடியாது அவளை மீறியும் பல விடயங்கள் நடக்கக் கூடும் அல்லவா?

இதற்க்கு நல்ல உதாரணம் நபி ஸல் அவர்களின் மனைவி ஆயிஷா ரலி அவர்களுக்கு நடந்த சம்பவம். கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நபி ஸல் அவர்களுடன் சென்ற ஒரு பயணத்திலேயே அவர்கள் பழி சொல்லப் பட்டார்கள் நபி ஸல் கூட ஆயிஷா ரலியை பிழையாக  நம்பும் அளவுக்கு அந்த சம்பவம் காணப்பட்டது என்றால் பிரயாணம்  என்பது அப்படிதான் .எனவே ஒரு பெண் கடைசிவரைக்கும் தனியாக பயணம் செய்ய முடியாது .

என்னதான் ஒரு பெண் அரசியாக இருந்தாலும் " ஆண்கள் பெண்களை நிர்வகிப்பவர்தான்" குரான் என்ற அடிப்படையில் ஒரு பெண் தனது தக்க துணை இன்றி ஆணைபோல் வாழ  முடியாது அப்படியான சாதாரண உலகம் இதுவல்ல .எனினும் நியாமான காரணங்களாக இருந்தால் அண்மித்த இடங்களுக்கு பிரயாணம் செய்வதில் எந்த தவறும் இல்லை உதாரணமாக ஒரு பெண் அண்மித்த ஒரு இடத்துக்கு வேலை நிமித்தம் செல்வதானால் பிற பெண்களுடன் சேர்ந்து செல்லலாம் இது பிரயாணமாக கருதுவதில்லை இது தனது வாழ்வின் அவசிய விடயம் கருதி மேற்கொள்ள முடியும் இதற்க்கு சான்றாக நபி ஸல் அவர்களிடம் ஒரு இத்தாவில் இருக்கும் பெண் வந்து தான் தொழில் நிமித்தம் வெளியே செல்ல வேண்டும் என அனுமதி கேட்டாள் அதற்க்கு நபி சல் அவர்கள் அனுமதி கொடுத்தார்கள் இது இத்தாவில் இருந்து வெளியே செல்லாமா என்ற அனுமதி என்பதோடு ஒரு பெண் தேவை கருதி வெளியே செல்லலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது

இதே வேளை வேறு ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டி பெண்கள் மக்ராமி இல்லாமல் ஹஜ் செல்லலாம் என சிலர் கூறுகின்றனர் அதாவது " நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?' என்று கேட்டார்கள். 'நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றதுஎன்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள்.'அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?' என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்'என்று சொன்னார்கள். நான், '(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?' என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595

இந்த நபி மொழி ஒரு பெண் மக்ரமி இல்லாமல் பிரயாணம் செய்யலாம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகின்றது ஒரு பெண் தனியாக பிரயாணம் செல்லலாம்  என்பதற்கு இந்த படர்க்கையில் ஒரு பெண்ணின் செயலை பற்றி கூறப்பட்ட இந்த விடயம் எவ்வகையிலும் ஆதாரமாக அமையாது இது  ஒரு சம்பவம் அவ்வளவுதான் இங்கு மஹ்ரம் சம்மந்தமாக நேரடியாக பேச எவ்வித தடயங்களும் இல்லை
பொதுவாக சட்டங்கள் என்பது காலத்துக்கு காலம் மாற்றி அமைக்கப்பட்ட படியால்  ஒரு சட்டம் பின்னர் மாற்றப்படக்கூடும் உதாரணமாக் ஹிஜாப் சம்மதமாக நபியின் மனைவியர்  முன்னர் முகத்தை மற்றவர்களுக்கு மறைக்கவில்லை  பின்னர் சட்டம் இறங்கியதும் மறைத்துக் கொண்டனர் அதற்காக முன்னர் முகத்தை காட்டிய சம்பவங்க்களை பின்னர் ஆதாரமாக கொள்ளலாமா ?   இந்த வகையில் மேலே ஒரு பெண்ணின் தனித்த பயணத்தை பற்றி சொல்லப்பட்ட  வேளை பின்னர் நபி ஸல் அவர்கள் கூறியுள்ள தனித்து பிரயாணம் செய்வது தொடர்பாக  எதுவும் கூறப் பட்டிருக்காது இதுதான்பல்வேறு பட்ட சட்டங்க்களை பற்றி மதிப்பிடும் போது ஒரு முடிவிற்கு வரமுடிகின்றது    
மேலும் ஒரு சட்டம் இன்னொரு சட்டத்தை மாற்றி அமைக்கும்  அதுதான் நியதி அத்தோடு இவை நபி ஸல் சொன்ன ஏனைய பெண்கள் தனியாக பிரயாணம் செய்வதை தடுக்கும் ஹதீஸ்கள மறுகின்றது  மேலும் ஏனைய ஹதீஸ்களுக்கு  மாற்றமாகவும் உள்ளது என்பதோடு இவை இஸ்லாமிய அகீதா  கொள்கைகளுக்கு முரணாகவும் உள்ளது
நேரடியாக எவ்வித சட்டத்தையும் சொல்லாத அதே வேளை வலுவான நேரடி சட்டத்தை சொல்லும் ஹதீகளை மறுப்பதால் இதனை ஆதாரமாக கொள்ள எவ்விதத்திலும் முடியாது .லாஜிகல் (LOGIC) முறையால் ஒன்றை பேசி மறுப்பதை விட ஆதாரமுள்ள வலுவான ஒரு தடயத்தை கொண்டு நாம் லாஜிகல் மூலம் பேசி நிரூபணம் செய்வது  சாலச் சிறந்தது 
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்
றஸ்மி மூஸா சலபி 

0 comments:

Post a Comment