றஸ்மி மூசா -சலபி - சீயா இஸ்லாமிய வரலாறில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் .
இஸ்லாம் மார்க்கம் உன்னதமான மார்க்கம், இஸ்லாத்தின் கொள்கைகள் இந்த மனித சமூகத்துக்கு சிறந்த வழிமுறைகளை வழங்கிக். கொண்டிருக்கின்றது .இப்படியான ஒரு சூழலில் இஸ்லாமிய கொள்கைகளை மாசுபடுத்தக் கூடிய அல்லது இஸ்லாமிய சரியாவுக்கு முரண்படக்கூடிய ஏதாவது ஒரு கொள்கையை நாம் எப்படி இஸ்லாத்தில் நின்று அணுக வேண்டும்.? அல்லது கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் ? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டிய ஒரு தேவை இன்று உள்ளது.
இஸ்லாம் மார்க்கம் உன்னதமான மார்க்கம், இஸ்லாத்தின் கொள்கைகள் இந்த மனித சமூகத்துக்கு சிறந்த வழிமுறைகளை வழங்கிக். கொண்டிருக்கின்றது .இப்படியான ஒரு சூழலில் இஸ்லாமிய கொள்கைகளை மாசுபடுத்தக் கூடிய அல்லது இஸ்லாமிய சரியாவுக்கு முரண்படக்கூடிய ஏதாவது ஒரு கொள்கையை நாம் எப்படி இஸ்லாத்தில் நின்று அணுக வேண்டும்.? அல்லது கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் ? இத்தகைய முக்கியமான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டிய ஒரு தேவை இன்று உள்ளது.
இந்தவகையில் இஸ்லாமிய உலகில் இன்றுள்ள மிகப்பெரிய
பிரச்சினைகளில் ஒன்றுதான் சீயா பற்றியதாகும் . நபி ஸல்
அவர்களின் மரணத்திற்கு பின்னால் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த துரதிஸ்டவசமான சம்பவங்களின்
பின்னணிதான் இந்த சீயா என்கின்ற பிரச்சினை உலகில் தீ பற்றி எரிந்து
கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணமாகும் என்றல்
யாரும் மறுக்க முடியாது.
இந்த சீயா என்ற அமைப்பின் தோற்றப்பாடு
என்பது ஒரு துரதிஸ்டவசமான சம்பவம்.நபி ஸல்
அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) மற்றும் அலி (ரலி) அத்துடன் முஆவியா (ரலி) போன்ற முன்னணி சஹாபாத் தோழர்கள் கலந்துகொண்ட
ஒரு சிறிய மோதல் அல்லது கருத்து முரண்பாடு இத்தகைய இந்த சீயா என்ற ஒரு பெரும் உலக
வலையமைப்பு உருவாக காரணமாக அமைந்தது. அத்துடன்
இஸ்லாமிய உலகை சீயா சுன்னி மற்றும் சலபி எனப்பிரித்து நோக்க காரணமாகவும் அமைந்து விட்டது .
வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று நாம் படித்தால் அல்லது
கேள்விபட்டால் பரவாயில்லை அதில் சில படிப்பினைகள் பெற்றவரலாறாக போய்விடும். அல்லது முன்சென்ற சமூகத்தின் வரலாற்று பின்னணியை உற்று நோக்கிய ஒரு காரணியாக மட்டும் அமைந்து
விடும். இதற்கு மாறாக இத்தகைய ஒரு சம்பவத்தின்
பின்னணியில் ஒரு சமூகம் உருவாகி இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை தகர்த்தெறிந்து
ஏனைய பிற கொள்கைவாதிகளையும் அளித்து, தாங்களும் வாழ்கையை பாழ்படுத்தி கொண்டு செல்லும் ஒரு
கொள்கை இந்த உலகில் வளர்ந்து கொண்டு வருகின்றது என்றால் இஸ்லாத்தின் பார்வையில்
இந்த கொள்கை பற்றி நாம் கட்டாயம் ஆராய வேண்டிய ஒரு கடப்பாடு உண்டு.
இஸ்லாம் என்றால் அது நல்ல சாலிகான மனித சமூகத்தை உருவாக்கும் ஒரு மார்க்கம் ,அதன் கொள்கை எந்த ஒரு தனி மனிதனுடனும் பின்னி பிணைந்தல்ல ,முகம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டும் அல்லஹ்வின் தூதர் ,அவருடைய தோழர்கள் பலர் இந்த மார்கத்துக்கு பாடுபட்டு பல தியாகங்கள் செய்துள்ளனர் .அல்லாஹ்வும் அவர்களை பற்றி குர்ஆனில் புகழ்ந்து பேசுகின்றான் . அவர்கள் ஒரு போதும் முகம்மதுக்கு நபிக்கு மாற்றமாக எதையும் சொல்லவோ செய்யவோ இல்லை .அவ்வாறு செய்யவும் முடியாது .
இந்த வகையில் இந்த சீயா என்ற கொள்கையின்
பின்னணி என்ன? என்று நாம்
அலசவேண்டிய தேவை இந்தக் கட்டுரைக்கு அவசியமில்லை அப்படி நான் சொல்ல முனைந்தால் அது எனது கட்டுரைக்கு மாறு செய்வதாக அமைந்து விடும் ,இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல, இந்த சீயா என்ற கொள்கையால் இஸ்லாத்துக்கு
என்னபாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது? என்பதும்
எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு நாம் விடுபடமுடியும் போன்ற பல
பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதே இந்தகட்டுரையின்
அடிப்படை நோக்கமாகும்.
இந்தவகையில் இந்த சீயா என்ற கொள்கை கோட்பாட்டின் உருவாக்கம் ஒரு
பரந்து விரிந்த ஒரு வரலாற்று பின்னணி என்றாலும் சுருக்கமாக சொல்வதானால் அது பின்வரும் ஏதாவது ஒரு நிகழ்வுகளில் ஒன்றாக
இருக்கலாம் .
1-சில பிழையான புரிந்துணர்வின் அடிப்படையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மூலம் சஹாபாக்களுக்கு இடையில்
இடம்பற்ற ஒரு சிறிய மோதல் வரலாற்று ரீதியாக பிற்பட்ட காலத்தில் தொடர்ந்தேர்சியாக ஒரு சமூகமாக உருவெடுதிருக்கலாம்.
2- அல்லது அவ்வாறு இடம் பெற்ற சம்பவங்கள் மேலும் மெருகூட்டப்பட்ட ஒன்றாகவும் அல்லது
மக்களுக்கு போதை ஊட்டப்பட்ட ஒரு வரலாற்று பின்னணியாகவும் இருக்கலாம் .
இவ்வாறு நடந்த முடிந்த சம்பவங்களின் பின்னணியில் இந்த பிரச்சினை உண்மையாக கதீஸ்களில்
குறிப்பிடப்பட்டவை தவிர அதிக பட்சமாக மெருகூட்டப் பட்டதாக அல்லது புனையப்பட்டதாக
காணப்படுகிறது . எனினும் இத்தகைய பின்னணியில் ஒரு சமூகம் உருவானதற்கும் சஹாபாக்கள் முரண்பட்டுக்
கொண்ட அந்த சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது
மிகத்தெளிவானது. ஏனனில் அவர்கள்
முரண்பட்டுக் கொண்டது மார்கத்துக்கு முரண்பட்ட ஒரு கொள்கை பக்கம் சாய்ந்து செல்ல
அல்ல .மாறாக மார்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கதிட்காகவேயாகும் . ஆனால் இன்றுள்ள இந்த சீயா என்ற கொள்கை முற்றிலும்
மார்க்கத்தில் இருந்து முரண்பட்டு
இஸ்லாமிய அக்கீதாவை சீர்குலைக்க முனைப்போடு செயற்பட்டுக்
கொண்டிருகின்றது இந்த கொள்கை அபாயகரமானது. இது இஸ்லாத்துக்கு விரோதமானது.
இந்தவகையில் இந்த சீயா என்ற விடயம் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பிழையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருகின்றது
.சாதாரண ஒரு அரசியல் பின்னணியின் அடிப்படையில் உருவான இந்த கொள்கை இன்று இஸ்லாமிய
உலகம் பல கூறுகளாக மட்டுமன்றி பல உயிர்களை பலி கொடுக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் இதன்
மூலம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இன்று
இது நாடுகளுக்கு இடையில் பகைமை. உணர்வினையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது ,எந்த அளவுக்கு என்றால் மேற்கத்தைய நாடுகள இந்த பிரச்சினை பயன்படுத்திக்
கொண்டு முஸ்லிம் சமூகத்தை கூறு போடும்
மோசமான நிலை உருவாகி உள்ளது.
நிட்சயமாக இப்படி ஒரு மோசமான நிலை இஸ்லாத்தில் இருக்க முடியாது . .இந்த சூழல் இஸ்லாமிய ஒரு
சமூக உருவாக்கத்துக்கு தடையாகவும் . இருக்கின்றது இந்த
நிலையிலிருந்து மீள இஸ்லாம் காட்டும்
வழிமுறை என்ன என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இதற்கு நாம் சில அடிப்படை கேள்விகளுக்கு விடை காண வேண்டிய தேவை உள்ளது அதாவது
இஸ்லாம் என்றால் என்ன ? இஸ்லாத்தில்
மானிட சமூகத்தின் பங்கு என்ன ? தனி மனித
சமூகத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன ?
இந்த கேள்விகளுக்கு விடை
கண்டால் இந்த சீயா என்ற பிரச்சினைக்கு நாம் தீர்வை காணாலாம்
.
.
முதலில்
சஹாபாக்கள் என்றால் யார் ?
சஹாபாக்கள் பற்றி இந்த கட்டுரையில் விலாவாரியாக நான் சொல்ல முனையவில்லை. அது இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. இந்த சீயா என்ற பிரச்சினைக்கு மட்டும் சில
விடயங்களை சஹாபாக்கள் பற்றி குறிப்பிட விரும்பிகிறேன். சஹாபாக்கள் என்போர் நபி (ஸல்) அவர்களின் கூடவே வாழ்ந்து ,இஸ்லாதுக்காக
அரும் பாடுபட்ட நல்ல மனிதர்கள் ,இவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எந்தமாருதலும் செய்யாதவர்கள் ,இஸ்லாமிய சரியாவுக்கு முரண்பட்ட எதனையும் அவர்கள் சொல்லாதவர்கள் , இஸ்லாத்தில் நாம்
ஏதாவது மேலதிக விளக்கங்கள் அல்லது தீர்வுகளை பெற நபி ஸல் அவர்களுக்கு அடுத்த
படியாக அவர்களே மிகவும் தகுதி ஆனவர்கள் “ என் தோழர்கள்
விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை
அஞ்சிக் கொள்ளுங்கள்!எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார்
அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார்
அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார்.
அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத்தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை
தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) நூல் : திர்மிதி : 3797 இங்கு நபி (ஸல்) சஹாபாக்களை மிகச் சிறப்பாக
கண்ணியப் படுத்தியுள்ளனர் என்பது மிகவும் தெளிவானது .
ஆனால் அவர்கள் மனிதர்கள் என்னும் வகையில் மனித
சமூகத்தின் சகல விருப்பு வெறுப்புக்களையும் கொண்டவர்கள் ,நபி ஸல் அவர்களை
கண்ட மனிதர்கள் என்பதற்காக அவர்கள் சகலரும் சுவர்க்கவாசிகள் என்று கூட நபி (ஸல்) அவர்கள்
எப்போதும் கூறவில்லை .
மறுமையில் நபி (ஸல்) அவரால் ஹொவ்லுல் கொவ்தர் என்ற தடாகம்
பற்றி கூறும் போது அவர்கள் தங்களது தோழர்களை அந்த தடாகம் நோக்கி " அஷ்ஹாபி அஷ்ஹாபி எனது
தோழர்களே தோழர்களே என அழைக்கும் போது அல்லா முகம்மதே! உனக்கு
பின்னால் இந்த தோழர்கள் மார்க்கத்தில் இல்லாத எவற்றை எல்லாம் உட்புகுதினார்கள் என்பதை நீர் அறிய
மாட்டீர் " எனக் கூறுவான்.
எனவே சஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்விடம்
அவனுக்கும் அவனுடைய தூதருக்கும் அடிபணிந்த சமூகம் மட்டுமே உண்மையான மனித சமூகம்
என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சஹாபா என்ற
அந்தஸ்துள்ள சகலரும் சுவர்க்கம் நுழைவர் என்று
நாம் கூறினால் அது இஸ்லாத்துக்கு
முரணானது . தவறுகள் பாவங்கள் போன்ற சகல
விடயங்களுக்கும் அல்லா மட்டுமே தீர்பாளன் என்பதை மேற்காணும் நபி மொழி மிகத்
தெளிவாக கூறுகின்றது .(இங்கு சஹாபி என்பது சஹாபாக்களை மட்டும் குறிக்கவில்லை )
இதனால்தான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த பலர்
.இன்று நாம் சஹாபி என வரைவிலக்கனபடுத்தினாலும்
பலர் நயவஞ்சகர்களாக இருந்துள்ளனர். இதை அல்லா மிகத்
தெளிவாக கூறுகின்றான் " நபியே உன்னிடம் நயவஞ்சகர்கள் வந்தால் அவர்கள் நாங்கள்
உங்களை நபி என சாட்சி கூறுகின்றோம் எனக் கூறுவார்கள். ஆனால் அல்லா முனபிக்கீன்கள் நயவஞ்சகர்கள் எனச் சாட்சி பகிர்கின்றான் "
எனக் கூறுவதில் இருந்து சஹாபாக்கள் என்பவர்கள் நபியை கண்டவர்கள். அவர்கள் எல்லோரும் அல்லாஹ்வின் திருப்தியை
பெற்றவர்கள் எனக் கூறுவது மடமைத்தனம் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
.இதே போன்றுதான் அஹ்லு பைத் என்று சொல்ல கூடிய நபி (ஸல்) அவர்களின்
குடும்பம் நபி (ஸல்) அவர்கள் தனது குடும்பத்தை மேன்மை படுத்த சொன்னாலும் அவர்களும்
வரையறைக்கு உட்பட்டவர்கள் என்பதை நாம் புரிந்து
கொள்ளவேண்டும் .ஆயிஷா ரலி அவர்களுக்கு
ஏற்பட்ட ஒரு துன்பியல் நிகழ்வு நபி (ஸல்) அவர்கள்
ஒருமுறை வெளியிடத்துக்கு கூட்டி சென்ற போது ஏற்பட்ட ஒரு வதந்தி ஆயிஷா (ரலி) அவர்களின் நம்பக
தன்மைக்கே களங்கம் ஏற்படுத்தியது .அதாவது ஆயிஷா ரலி அவர்களை ஒரு சஹாபியோடு கூட தொடர்பு படுத்தி கூறும் போது கூட நபியவர்கள் ஆயிஷா ரலி பக்கம் சாயவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
இதற்கு ஒரு சான்றாக நபி ஸல் வரலாற்றில் இடம் பெற்ற ஒரு சம்பவத்தை நாம் காணலாம்
“ பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய் திருந்தார். அடிமையாக
இருந்த பரீரா விடுதலை செய்யப் பட்டபின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே
அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீஸ் அதிக அன்பு
வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடிய வில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறி னார்கள்.அப்போதுபரீரா ``இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா?
என்று கேட்டார். அதற்கு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தின் கட்டளையில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால்
எனக்கு முகீஸ் வேண்டாம் என்று பரீரா கூறி விட்டார். நூல்: புகாரி 5283 இந்த விடயத்தில் நபி ஸல் அவர்கள் எதுவும்
பேசவில்லை.
இந்த விடயத்தை பார்க்கும் போது எனவே யாராக இருந்தாலும் விருப்பு வெறுப்பு நன்மை தீமை போன்றன உள்ளவர்கள் .இஸ்லாமிய
பார்வையில் அல்லாஹ்தான் திருப்தி படவேண்டும் .குற்றம் செய்த எவரும் குற்றதிற்காக தண்டிக்கக் படவேண்டும்
என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இந்தவகையில் நபி (ஸல்) அவர்களுடய பிந்தியகாலதில் இடம் பெற்ற இந்த சச்சரவுகளை நாம்
நோக்கினால், தனிப்பட்ட விரோத போக்குதான் இந்த சீயா என்ற
பிரச்சினை உலகில் தோன்ற அடிப்படை காரணம் எனலாம் . உண்மையில் சஹாபாக்கள் பிரச்சினை பட்டுக்
கொண்டார்கள் என்பது அதோடு முடிந்து போகவேண்டிய ஒரு விடயம் .அது பிரச்சினை தவிர
மார்க்கம் அல்ல .பிரச்சினை ஒரு பிரச்சினை என்பதாக முடிந்திருக்க வேண்டும் .அது ஒரு
பாரிய உலக பிரச்சினையின் வலையமைப்பாக உருவெடுக்க முடியாது. அதை உருவெடுத்து இந்த உலகை மாசுபடுத்த யாருக்கும் அதிகாரம்
கிடையாது.
எனவே இஸ்லாத்தை மாசுபடுத்தும் இத்தகைய கொள்கை உருவான
. பின்னணி பற்றி நாம் இன்னுமொரு வரலாறாக சமூகத்துக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
.அதை இஸ்லாமிய வரலாறாக காட்டட்கூட
முனையகூடாது . இது வரலாறுகளில் இருந்து
அப்புறப்படுத்தி தூய இஸ்லாத்தை மட்டும் சமூகத்துக்கு நாம் சொல்ல
வேண்டும். இன்று உலகில் நாசம் செய்த ஹிட்லர் முசோலினி
போன்ற பலரை உலகம் நல்ல வரலாறாக கூட பார்ப்பதில்லை . பாட நூற்களில் கூட உலகளவில் யாரும் இணைத்து கொள்ளவில்லை. காரணம் அவன் நாட்டுக்கோ உலகத்துக்கோ நல்லது
செய்யவில்லை என்பதாலாகும். இவ்வாறு
இருக்கும் போது முழுக்க முழுக்க இஸ்லாத்துக்கு மாற்றமாக இருக்கும் இந்த கொள்கைக்கு
இஸ்லாமிய சமூகம் விடை காண வேண்டும் .இதற்காக சில
வழிமுறைகளை இஸ்லாமிய சமூகம் உலகளாவிய ரீதியில் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். .
நான் தனிப்பட்ட எனது கடுரையின் நோக்கத்தை சொல்வதானால் ஹதீஸ் துறையில் காணப்படும் இப்படியான
சம்பவங்களை நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளுடன் இணைத்து ஒரு துறையாக கொண்டு
வராமல் தனியான ஒரு துறையாக கொண்டுவர முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அத்தோடு எப்படி குரான் தனித்துவமாக அமைய பெற்றுள்ளதோ அதே போன்று ஹதீஸ்
துறையும் இப்படியான ஒரு தனிதுவ துறையாக நபி (ஸல்) அவர்களை மையபடுத்தி மட்டும் அமைய
பெறவேண்டும். அதாவது ஹதீஸ் கட்டமைப்பு
நபி (ஸல்) அவர்களின் வாழ்கை மட்டும் அமைய பெற வேண்டும் .அப்படி இருந்தால் இஸ்லாமிய
வரலாற்றில் இடம் பெற்ற இப்படியான சம்பவங்கள் இஸ்லாத்துக்கு
விரோதமாக இருக்கமாட்டாது.
எனவே மனித சமூகத்தை நாசப்படுத்தும் , பிளவு படுத்தும்
எந்த வரலாறும் ஆவணபபடுத்தக் கூடாது .நல்ல அம்சங்களை மட்டும் கூறக் கூடிய வரலாறுகள்
மட்டும் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.உதாரணமாக குர்ஆனில் அல்லா பல
நபிமார்களுடைய சம்பவங்களை கூறுகின்றான்
.அதே நேரம் பல இஸ்லாத்துக்கு எதிராக வாழ்ந்த மனிதர்களை கூறி அதை ஒரு
படிப்பினையாக கூறி அல்லாஹ்வின் வல்லமையை வெளிப் படுத்துகின்றான் .
ஆனால் சீயா என்பது அப்படிப்பட்டதல்ல .அது ஒரு அங்கீகாரம் இல்லாமல் இடம் பெற்ற ஒரு வரலாற்று பின்னணி. அது ஒரு மனித பலயீனதின் வரலாறு .அது இன்னுமொரு பலயீனமான சமூகத்தை உருவாக்க முடியாது .எனவே சீயா என்பது உலகில் எவ்விதத்திலும் தேவை அற்ற ஒரு வரலாற்று பின்னணி .
ஆனால் சீயா என்பது அப்படிப்பட்டதல்ல .அது ஒரு அங்கீகாரம் இல்லாமல் இடம் பெற்ற ஒரு வரலாற்று பின்னணி. அது ஒரு மனித பலயீனதின் வரலாறு .அது இன்னுமொரு பலயீனமான சமூகத்தை உருவாக்க முடியாது .எனவே சீயா என்பது உலகில் எவ்விதத்திலும் தேவை அற்ற ஒரு வரலாற்று பின்னணி .
எனவே இத்தகைய வரலாறுகளை நாம் கூடிய மட்டும் சமூகத்துக்கு சொல்வதை இல்லாமல்
செய்து இஸ்லாமிய வரலாற்றில் இருந்து முழுமையாக நீக்க நடவடிக்கை எடுத்தால்
.இஸ்லாம் என்ற நல்ல ஒரு உன்னதமிக்க சமூகம் தோன்ற வழி ஏற்படும்
முடிவு
சீயா இஸ்லாமிய வரலாற்றில் ஒரு படிப்பினைக்குரிய வரலாறு அல்ல அந்த வரலாறு மேலும் மேலும் ஒரு பிழையான சமூகத்தை உருவாக்க முனைகின்றது .நபி ஸல் அவர்களின் அங்கீகாரம் இல்லாத இந்த தனிமனித பலஈனங்ககளால் ஏற்படுத்தப் பட்ட இந்த நிகழ்வு ஒரு உண்மை மூமினுக்கு எந்த வகையிலும் முன்மாதிரி அல்ல
தொடரும் ................................
.
முடிவு
சீயா இஸ்லாமிய வரலாற்றில் ஒரு படிப்பினைக்குரிய வரலாறு அல்ல அந்த வரலாறு மேலும் மேலும் ஒரு பிழையான சமூகத்தை உருவாக்க முனைகின்றது .நபி ஸல் அவர்களின் அங்கீகாரம் இல்லாத இந்த தனிமனித பலஈனங்ககளால் ஏற்படுத்தப் பட்ட இந்த நிகழ்வு ஒரு உண்மை மூமினுக்கு எந்த வகையிலும் முன்மாதிரி அல்ல
தொடரும் ................................
.
0 comments:
Post a Comment