இஸ்லாத்தில் இருந்து யாரும் செல்லமுடியாது (மத மாற்றம்)
கொஸ்வத துடுகமுனு மாவத என்ற இடத்தில வசித்து வந்த முகம்மது அனீஸ் செய்னுல் என்பவரின் மகன் முகம்மத் சப்ராஸ் ,தலங்கம நாபித என்ற பெயரில் ஹாமததுர்வாக மதம் மாறினார் என்ற சம்பவத்தை நாம் கேள்விப் பட்டோம் . இதை இஸ்லாத்தின் பார்வையில் எப்படி அணுகலாம் என்றால் ,இஸ்லாமிய பெயர் தாங்கிய சகலரும் முஸ்லிம்களாக இருக்க முடியாது.
யார் உண்மையாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்று வாழ் கின்றனரோ அவர்கள்தான் உண்மை முஸ்லிம்கள். இன்றைய உலகில் பணம் மற்றும் அதிகாரம் போன்ற பல உலக சக்திகள் ஒன்றிக்கும் ஒரு காலத்தில் இப்படியான மதமாற்ற செய்திகள் சாதாரணமானவை. இன்னும் பலர் இப்படி முஸ்லிம் பெயர் தாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டார்கள் என்று நாம் கேள்விபடலாம். இதனால் இஸ்லாத்துக்கு எந்த பாதிப்பையும் இது ஏற்படுத்தாது. முஸ்லிம் சமூகத்துக்கும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்படி சில தனி நபர்களால் இஸ்லாத்துக்கு பாதிப்பு என்று நாம் கருதினால் இஸ்லாம் இந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்காது.
இந்தவகையில் ஒரு தனிமனிதனை இஸ்லாம் எவ்வாறு நோக்குகின்றது என்பதை நாம் பார்ப்போமானால். இந்த உலகத்தில் ஒரு மனிதன் முஸ்லிமாக வாழ வேண்டும் .வெறுமனே முஸ்லிம் என்றபெயர் மட்டும் ஒருவன் முஸ்லிம் என்பதற்கு அடையாளமல்ல ,அப்படியானால் உலகில் வாழும் பல கோடி பேரும் சுவர்க்கம் நுழைய தகுதி பெற்றவர் ஆகிவிடுவர் . இஸ்லாமிய கொள்கைபடி அப்படி அல்ல. ஒருவன் ஐந்து வேளை தொழாமல் இருந்தால் அவன் முஸ்லிம் என அழைக்கப்பட தகுதி இல்லாதவன் ,
இதனால்தான் உலகத்தில் முஸ்லிம் என்ற போர்வையில் வாழும் பல கோடி பேரும் சுவர்க்கம் நுழைய முடியாது. இந்த வகையில் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சீயா மற்றும் கப்ர் வணங்குதல் போன்ற விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பலர் வாள்கின்றனர். முழுக்க முழுக்க இவர்கள் இஸ்லாத்துக்கு பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சதி செய்வதை நாம் காண்கிறோம் எனவே உண்மை முஸ்லிம்கள் என்றால் யார் ? என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
இஸ்லாமிய கொள்கையை நாம் பார்ப்போமானால் நபி (ஸல்) கூற்றுப் படி " யார் தொழுகையை விட்டார்களோ அவர்கள் காபிர்கள் " ( முஸ்லிம்) என இஸ்லாம் கூறும் போது ,யார் கப்ர் வணக்கம் செய்கின்றனரோ அவர்கள் முஷ்ரிக் என இஸ்லாம் கூறும் போது இஸ்லாமிய பெயர் கொண்ட சகலரும் முஸ்லிம் என அழைக்கப்படமாட்டார்கள்.
எனவே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல் வாழும் ஒருவனே இஸ்லாத்தின் மேலானவன் முஸ்லிம் பெயர், சமூகம் என்பதெல்லாம் இஸ்லாத்தின் பார்வையில் வெறும் கற்பனையே. இத்தகைய ஒரு போக்குதான் முஸ்லிம் சமூகம் எம்மதமும் சம்மதம் என்ற போர்வையில் வாழ காரணமாகும்
எனவே மார்க்கத்தில் சரியான கொள்கைபடி இல்லாமல் வெறும் பெயர் தாங்கிக் கொண்டிருந்த ஒருவன் இஸ்லாத்தில் இருந்து சென்று விட்டான் என்பதை விட ,அவனுக்கு கிடைத்த ஒரு பிழையான ஒரு வழிகாட்டலில் இப்படி மோசமாகி விட்டான் என்பதே சால பொருந்தும். " யாருக்கு அல்லா நலவை நாடுகின்றானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான் " (திர்மிதி ) எனது இஸ்லாத்தின் நியதி இருக்கும் போது .எந்த தனிமனிதனாலும் அல்லாஹ்வின் அருள் இல்லாமல் ஒரு முஸ்லிமாக இந்த உலகில் வாழ முடியாது.
எனவே முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு கடப்பாடு உண்டு. இப்படி சரியான முறையில் இஸ்லாம் சென்றடையாத சமூகத்துக்கு இஸ்லாத்தை எடுத்து செல்ல வேண்டும் . எனவே இஸ்லாத்தின் கொள்கைபடி யாரும் இஸ்லாத்தில் இருந்து விலகி செல்ல முடியாது .அவன் உண்மை முஸ்லிமாக இருந்தால் மட்டுமே
0 comments:
Post a Comment