தகவல்கள்

| 0 comments






றஸ்மி மூசா (சலபி ) JP
MA, BA.

 
இந்த கட்டுரையை உங்கள் முன் சமர்பிப்பிக்கின்றேன் உங்கள் ஆலோசனைகள எனக்கு முன் மொழியுங்கள்
            இஸ்லாமிய சட்டத்துறை  மனித சமூகத்தின் பாதுகாப்பு கருவியாகும் 
உப தலைப்பு -இஸ்லாமிய குற்றவியல் சட்ட துறை ஒரு பொது சர்வதேச பொறிமுறையாக இஸ்லாமிய நாடுகளில் ஏற்படுத்த  படவேண்டும்.
இஸ்லாமிய குற்றவியல்  சட்டத்துறை என்றால் ?என்ன அதன் பரிமாணங்கள் எவை?போன்ற பல விடயங்களை முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டிய கடப்பாடு எல்லோருக்கும் உண்டு இந்தவகையில் நேரடியாக நாம்தலைப்புக்குள்  செல்வதற்கு முன் இஸ்லாம் இந்த குற்றவியல் தண்டனை விடயத்தில்ஏன் ?அதிக அழுத்தம் கொடுக்கின்றது என்பதை பார்ப்போம் .
 இஸ்லாம் நீதி மற்றும் நியாயத்தை போதிக்கும் .மார்க்கம் அது யாருக்கும் யாரும்அநியாயம் செய்வதை அனுமதிக்காத அதே வேளை ,  தனக்கு தான் யாரும்   தீங்குஇழைத்து கொள்வதையும் அனுமதிக்காது. இதை இந்த உலகிற்கு உறுத படுத்த தான்  நபி ஸல் அவர்கள் தனது இறுதி ஹஜ் பிரசங்கத்தில்  போது  கூட  ஒருவருடையஇரத்தம் மற்றும் உடமைகளை இன்னொருவர் முறை தவறிய முறையில்மீறுவது ஹராம் என்பதை அழுத்தம் திருத்தமாக அன்று பல்லாயிரக்கணக்கானசஹாபாக்களுக்கு மத்தியில் பிரகடனம் செய்தார்கள்.
இத்தகைய கொள்கை அடிப்படையிலேயே இஸ்லாம்  மனித சமூகத்துக்கு பாதுகாப்பைவழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தவகையில்   இஸ்லாம்  மனித உயிர் மற்றும்உடமை பாதுகாப்பு தொடர்பாக ஏற்சரிக்கை  கலந்த அறிவுறுத்தல்களை மனிதசமூகத்துக்கு வழங்குகிறது . இவ்வாறு செய்வதன் மூலம் மனித சமூகத்தின்  பாதுகாப்பு தொடர்பாக அதிக அக்கறை காட்டுகிறது இந்த
 உலகில் ஒரு சாராரை அழித்து விட்டு அல்லது ஒரு சாராரை பழிதீர்த்து விட்டுஇன்னொரு  சாரார்  நிம்மதியாக வாழ முடியாது . அதனால்தான்  இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல  முழு உலகில் வாழும் ஏனைய மாற்று மத சமூகத்துக்கும் உரித்தாகும்இது  இஸ்லாத்தின்  ஓர்  உயரிய கொள்கையுமாகும்.
இந்தவகையில் சமுதாய வாழ்கையில் செய்தானிய உணர்வுகளுக்கு அடிமைபட்டுமனிதன் வாழ்கையை பாழ்படுத்தக் கூடிய அமைப்பில் செயற்படுவதை இஸ்லாம்கட்டுபடுத்தவும் , பிறருடைய நலன்களை பாதுகாக்கவும்  மற்றும் ஒவ்வொருவரும்தங்களுடைய வாழ்க்கை அமைப்பை நெறிப்படுத்தவும்  இந்த குற்றம் மற்றும் தண்டனைஎன்ற சட்ட பிரமாணத்தை இஸ்லாம் ஏற்படுத்தி உள்ளது. எனவே குற்றம் மற்றும் தண்டனை என்பது வெறுமனே ஒரு சட்ட ஆட்சி மட்டுமல்ல அது ஒரு சமுதாய சீர்திருத்த கருவியுமாகும். இந்த குற்றம் மற்றும் தண்டனை தொடர்பாக நாம் இந்த உலகில் புரிந்து  கொள்ளவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால்,  குற்றவியல்தண்டனை இஸ்லாத்தில் மட்டும் இருப்பது போன்ற எதோ  ஓர் உணர்வு இன்று உலகசமுதாயத்தில் ஏற்படுத்தபட்டுள்ளது . இந்த எதிர்மறையான சிந்தனை தான் இன்று உலக சமூகத்தில் இஸ்லாம் தொடர்பான பிழையான அபிபிராயம் ஏற்படுவதற்கு காரணமாகும் 
அந்த சிந்தனை போக்கு  குற்றமும் தண்டனை என்பது இஸ்லாத்தில்  மட்டுமல்ல உலக வழக்கத்தில் இருந்து வரும் ஒரு விடயம்அவை உலக ராஜ்யங்களில் அந்தந்தநாட்டு தலைவர்களால் உருவாக்க பட்டு காலத்துக்கு காலம் மாற்றி அமைக்கப்பட்டுசமுதாய மற்றும் அரச வழக்கில் உள்ளது. ஆனபோதிலும் இத்தகைய சட்டங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதால் அதன் உண்மயான யதார்த்தம் தொடர்பாக பல வாதபிரதி வாதங்கள் உள்ளன.
இஸ்லாத்தின் நிலை அப்படி பட்டதல்ல இது இறை கட்டளை காலத்துக்கு காலம்யாரும்  மாற்ற முடியாது .உலகம் அழியும் வரை அதுதான் சட்டம். அதில்  யாரும் மாற்றுஅபிப்பிராயம் கூறவும்  முடியாது  . இந்த அடிப்படையில்  எந்த மனிதனையும் ஒரு குற்றத்திற்காக  சக  மனிதனை சுய சித்தத்தின் பேரில் தண்டிக்க முடியாதுஇஸ்லாத்தின் தெளிவான கொள்கை இது. இதனால்தான் நாட்டுக்கு நாடு (இஸ்லாமிய நாடுகள் )இந்த சட்டம் வேறுபடவும்  முடியாது .உலக
சமூகத்தில் இந்த சட்ட பொதுவானது என்பதை நாம் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். யார் இந்தசட்டத்தை நடைமுறைபடுத்த விரும்பினாலும்   அது  அல்குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையிலே நடை முறை படுத்தி தீர்ப்பு வழங்க வேண்டும்.அதுதான் உண்மையான இஸ்லாமிய இறை அரசு .
மற்றுமொரு விடயத்தை நாம் தெளிவாக  விளங்கி கொள்ள வேண்டும்  பொதுவாக இன்று உலக நாடுகளில் நடை முறையில் உள்ள தண்டனை சட்ட நடைமுறைகளை நாம் இஸ்லாத்தோடு  ஒப்பிட்டு பார்த்தால் சாதாரண உலக வழக்கில் உள்ளது போன்ற குற்றவியல் சட்டங்கள்  இஸ்லாத்திலும்  உள்ளதே  தவிர இது உலகிற்கு  ஒரு புதிய விடயமல்ல என்பதை  இஸ்லாத்தை அறிந்த வரும் இலகுவில் புரிந்து  கொள்வர் . அதே நேரம் உலகளாவிய ரீதியில் உள்ள குற்றவியல்  தொடர்பான சட்டங்களும் இஸ்லாத்தை விட மிகவும் ஆபத்தான சட்டங்கள் என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும் . இவற்றை இஸ்லாமிய சட்டங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இஸ்லாம்எவ்வளவு  தூரம் மேலானது என்பதை புரிந்து கொள்ளலாம் .உதாரணமாகசொல்வதானால் சீனாவில் இலஞ்சம் பெற்ற ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கபடுகிறது கொரியாவில் கற்பழித்த ஒருவருக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம்செய்யப்படுகின்றது. அதே வேளை இந்தியாவில்  மரண தண்டனை  இன்றுவரை அமுலில் உள்ளது . இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் பல சட்டங்கள் நடை முறையில் உள்ளது என்பது உலகம் அறிந்த  விடயம்.
ஆகவே  சீனா போன்ற அல்லது எனைய சோசலிச நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு வழங்கப்படும் மரண தண்டனை போன்று கூட இஸ்லாத்தில்  இல்லை. எனவே இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்பது உலகில்  எனைய ராஜ்யங்களில் உள்ளது போன்று சாதாரண அம்சங்கள் உள்ளடக்கியது தான் என்பது உலகம் புரிந்து கொள்ளக் கடமை பட்டுள்ளது. இங்கு ஒரு விடயம்என்னவென்றால்  இஸ்லாமிய சட்டங்கள் இறை திருப்தியை தன்னகத்தே கொண்டுள்ள படியால் அதன் பெறுமானம்  இம்மை மற்றும் மறுமை போன்ற இரு உலகத்திற்கும் பொருத்தமானதும் ஈடேற்றமானதுமாகும்.
அதனால் தண்டனை பெற்ற எவரும் பாதிக்க படமாட்டார்கள். தண்டனையின் பின்னால் மரணித்தாலும் மறுமையில் நற்பாக்கியம் பெறுவர் என்பது  இஸ்லாத்தில் உயரிய பெறுமானமுள்ள ஏற்பாடாகும். இதனால்தான் எதனையோ சஹாபாக்கள் நபி(ஸல்) முன்னிலையில் தாம் செய்த குற்றங்களுக்கு இந்த தண்டனைகளை பெற  முண்டி அடித்தார்கள் என்பதை  நாம் அறிந்து கொள்ளலாம்.
 அதேவேளை  உண்மையில் ஒரு விடயத்தை நாம் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். பொதுவாக சட்ட துறை என்பது உலகளாவிய ரீதியில் மிகவும் கடினமானவிடயம்இது அவதானமாக கையாளவேண்டிய ஒரு பொறுப்புள்ள விடயம் என்பதுஎமக்கு எல்லோருக்கும் தெரியும், ஏனெனில் இது நுணுக்கம் நிறைந்த துறை .இதில்தவறு விட்டால் ஒருவருடைய  உயிரை கூட இழக்க நேரிடலாம்  . நீதம் சரியாகவழங்கப் படாவிட்டல் சில வேளை பல சமுதாய மற்றும் இன ,சமய பிரச்சினைகள் பலஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் நிறைய உள்ளன. இதனால்தான் யூத சமூகத்தில் குற்றம் இழை த்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்த ஒருவரிடம் நபி (ஸல்) தௌராத் வேதத்தை கொண்டு வருமாறும் அதிலிருந்து அந்த யூதனுக்கு குற்றத் தீர்ப்பு வளங்கினார்கள் இதுவெல்லாம் இன்றைய உலகுக்கு இந்த குற்றவியல் தீர்ப்புகளுக்கு நல்ல முன்னுதாரணமாகும்.
இந்தவகையில் இஸ்லாமிய சட்ட துறை  தூர நோக்கோடு கையாள பட வேண்டும் .இஸ்லாமிய சட்டதுறை என்பது அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும்பிரஸ்தாபிக்க பட்டவை அவை தெளிவாக குரானிலும் ஹதீஸ்களிலும்கூறப்பட்டுள்ளனஅல்லா இதனை ஒரு முன்னோடியாக இரத்தின சுருக்கமாக கூறும்போது இவ்வாறு கூறுகின்றான்   விசுவாசம் கொண்டோரே உங்களுக்கு கொலையுண்டவர் விடயத்தில் பழி தீர்ப்பது விதிக்க பட்டுள்ளது ,சுதந்திரவானுக்கு பதில்சுதந்திரவானும் அடிமைக்கு பதில் அடிமையும் பெண்ணுக்கு பதில் பெண்ணும்என்பதாக '"2;178 (அல் குரான் அல்குரான் கூறுகிறது குற்றவியல் தொடர்பாகஅல்குரான்  விரிவாக சொல்லவில்லை அது நபி ஸல் அவர்களின் வாழ்க்கைவரலாறுகள்  மூலமே தெளிவாக சமூகத்துக்கு சொல்லப்படுகிறது.
இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ளவேண்டிய  ஒரு விடயம் என்னவென்றால், இஸ்லாமிய சட்ட துறைக்கும் ஏனைய சட்ட துறைக்கும் உள்ள வேறுபாடுகள்என்பது  மலைக்கும் மடுவுக்மடுவுக்குமுள்ள வித்தியாசமாகும். அதனால்தான்    இன்றுள்ள நீதிமன்ற  முறைமை இஸ்லாத்தில் ஏற்று கொள்ளபடுவதில்லை ஏனனில் இன்றுள்ள வாததிறமை முறைமைக்கு  இஸ்லாம்  எந்த முக்கியத்துவமும் வழங்குவதில்லை .மாறாக அதில் உண்மை மற்றும் சத்தியம் உள்ளதா என்பதையும் , மாற்று  வழிகள் மூலம் வேறு பல தீர்வுகள் உண்டா என்பதையும் சிந்தித்து  தான் தீர்க்கமான முடிவுகளை பெறும் . இதனால்தான் இஸ்லாம் இன்றைய உலக நீதி நடை முறையில்
 இருந்தும் வேறுபட்டது இன்றுள்ள உலக நீதிமன்றங்களில் வாததிறமை அடிப்படையில் தீர்ப்புகள் வளங்கப்படுகின்ற.சிலவேளை ஒருநிரபாராதி கூட தண்டனை பெறும் சட்ட கோவைகள்தான் இன்று உள்ளன .இது பொதுவாக முறை தவறிய சட்ட முறைமை என்பதால் இஸ்லாத்தில் இது ஏற்று கொள்ளப்படமாட்டாது.பொதுவாக ஒரு குற்றவாளியும் இலகுவாக தப்பித்து கொள்ள இன்றுள்ள நீதி நடைமுறைகள் வழக்கில் உள்ளன,  என்பதுதான் இன்றுள்ள உலகளாவிய நீதி துறையின் பலயீனமாகும்.
இந்தவகையில் நாம் இஸ்லாமிய குற்றமும்  தண்டனையும் என்றால் என்ன என்பதை பார்ப்போம்   
இஸ்லாத்தை பொறுத்தவரையில் குற்றமும் தண்டனையும் பின்வருமாறு அமையும்
1-ஒருவர் இழைத்த குற்றம் இஸ்லாம் தடுக்கபட்ட ஒன்றாகவும் அதற்கான தண்டனை கோவைபடுத்த பட்ட ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
2- குற்றம் நிருபணமாக போதுமான சாட்சிகள் இருக்க வேண்டும் .
3-குற்றம் இழைத்தவர் குற்றத்தை ஒப்புகொள்ள வேண்டும் .
தடுக்கபட்ட குற்றம் எனும் போது அதற்கான  தண்டனனையும் வகுக்கபட்டிருக்கவேண்டும் .உதாரணமாக ஒருவரை ஒருவர் கொலை செய்தால் அதற்கான தண்டனை கொலை செய்தவரை கொலை செய்வதற்கு தீர்ப்பு வழங்க வேண்டும். அதே  வேளை தவறுதலாக ஒரு கொலை நடந்தால் அதற்கு தண்டம் அறிவித்து அதனை முடுவுருத்தலாம். அல்லது வேண்டுமென்றே கொலை செய்தாலும் அதற்கான தெண்ட பணம் வழங்கி அதனை முடிவுருத்தலாம்.
அடுத்ததாக ஒருவர் ஒரு குற்றம் இழைத்தால் சாட்சி இருக்க வேண்டும்  ."தண்டனை நிறைவேற்ற படும்போது நான்கு சாட்சிகளை யார் கொண்டு வரவில்லையோ அவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் பொய்யர்கள்" குரான் (24: 12) என தெளிவாக கூறுகின்றது. இந்த வகையில் ஒரு சட்டம் யூகத்தின் அடிபடையில் அல்லது மாற்று வழிகள் இல்லை என்பதற்காக தீர்ப்பு வழங்கப்பட்டால் அது பெரும் பாவமாகும் இவ்விடயத்தில் இரண்டு விடயங்கள் உண்டு ஓன்று நேரடியாக உண்மை மூமின்கள் சாட்சி படுத்த வேண்டும். பின்னர் அந்த குற்றத்தை குற்றவாளி ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது  நவீன விஞ்ஜான முறையில் எந்த சாட்சிக்களுமில்லாமல் குறிப்பிட்ட குற்றத்திற்கு  முடியுமானால் மரபனு  சோதனை செய்து கூட தீர்ப்பு வளங்கலாம்.
 அல்லது தடவியல் நிபுனதுவ முறை மூலமாவது இந்த சாட்சி முறை நிருபணமாக வேண்டும் . சாட்சிகள் இருந்தும் குற்றவாளி குற்றத்தை  ஏற்று கொள்ளவேண்டும் என்பதற்கு அடிப்படி காரணம் சிலவேளை சாட்சி என்ற போர்வையில் சிலசதி காரர்கள் சிலருக்கு எதிராக பல பொய்யான வழக்குகளை தொடுக்க முடியும் என்பதாலும் அதனால் எந்த அப்பாவியும் பாதிக்க படக் கூடாது என்பதாலுமாகும்.
இவ்வாறாக இன்றுள்ள நவீன முறையில்  தீர்ப்பு வழங்கப்பட்டால் அது இஸ்லாமிய தீர்ப்பாக உதாரணமாக ஒருவர் விபசாரம் செய்துவிட்டார் என்று கொள்வோம் இங்கு இன்றுள்ள விஞ்ஜான முறைப்படி மரபனு மற்றும் இதர வேறு ஏதாவது முறைகள் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள பட்டால் இங்கு மனித சாட்சி மூலமான நிருபணம் என்பது தேவை இல்லை . எனவே நான்கு சாட்சிகள் என்பது இவ்விடத்தில் நாம் மேற்கொள்ளும் விஞ்ஜான நிருபணமாக இருக்கும் .    
குற்றம் தண்டனை விடயத்தில் இஸ்லாம் சிலவேளை கடுமையான ஆதாரங்களை தேடும்  காரணம் உலகில் சிலவேளை பிழையான அணுகுமுறை மூலம் பிழையான தண்டனை வழங்க  படகூடாது என்பதும் அவ்வாறு ஒருவர்  தப்பினாலும் மறுமையில் அல்லாஹ்விடம் உள்ள மிகப் பெரிய நீதி துறையில் இருந்து தப்பமுடியாது என்பதுமாகும்.
இந்த வகையில் பல முன்னுதாரணங்களை நாம் நபி (ஸல்) அவர்கள் வாழ்கையில் நாம் காணலாம்.
நபி ஸல் அவர்கள் ஒரு தண்டனை வழங்கபட வேண்டிய பெண்ணை பார்த்து கூறும்போது இப்னு அப்பாஸ் ரலி அறிவிப்பில் “ இதோ நான் சாட்சி இல்லாமல் கல்லெறிந்து கொள்வதாக இருந்தால் நான் இவளை கொண்டிருப்பேன்”  என கூறினார்கள் உண்மையில் விபசாரம் செய்த ஒரு பெண் என்று நபிக்கு தெரிந்தும் சாட்சியில்லை என்ற காரணத்தினால் கூட நபி ஸல் அவர்கள் அல்லஹ்வின் பேரில் சாட்டினார்கள் .
இந்த இடத்தில அந்த பெண்தான் குற்றம் இழைத்தார் என்று தெரிந்தும் நபி ஸல் அவர்கள் அதனை சான்று படுத்த முடியாத காரணத்தால் அவர்கள் இவ்வாறு கூறினார்கள். இங்கு ஒரு விடயம் பிரிந்து கொள்ள படவேண்டும்.நபி ஸல் அவர்கள் காலத்தில் விஞ்ஜான மற்றும் அறிவியல் சாதனங்கள்  இல்லாத போது அவர்கள் கை கொண்ட அணுகு முறை என்பதும் இன்று நாம் கை கொள்ளும் அணுகு முறை என்பதும் வித்தியாசமானது ஏனனில் ஒரு குற்றவாளி போதிய
 மனித  சாட்சி இருந்தும் இல்லாவிட்டாலும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவேண்டும் .ஆனால் இதல்லாத நவீன முறை இன்றைய சாட்சி முறை நிருபணமானால் மனித சாட்சி தேவை இல்லை மற்றும் குற்றவாளி குற்றத்தை இம்முறையில் ஏற்று கொள்ள தேவையும் இல்லை என்பதை இங்கு தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்ஏனனில் உலகில்  தப்பி சென்றாலும் மறுமையில் தண்டனை  கிடைக்கும் என்பது உறுதியாகும்.
இதனால்தான் எத்தனையோ  மனிதர்கள்  தானாகமுன்வந்து சிலர் குற்றத்தை ஒப்புக் கொண்டதும் கூட நபி ஸல் பராமுகமாக இருந்ததற்கு காரணம் எனலாம். எனவே சாட்சி இல்லாவிட்டால் துருவி துருவி ஆராயும் நோக்கில் நீண்ட காலம் குற்றம் சாட்டிக் கொண்டு ஒருவரை அலை கழிப்பதை இஸ்லாம் அங்கீகரிக்க வில்லை. சாட்சி என்று தெளிவாக தெரிந்தால் தண்டனை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் அல்லாஹ்விடம் பொறுப்பு சாட்ட வேண்டும். தெளிவான சான்று இல்லாத போது காலங் கடத்தும் நோக்கில் யாரையும் சிறையில் அடைத்து நீண்ட காலம் துன்புறுத்துவதும் இஸ்லாத்தில் தடை செய்பட்டுள்ளது .அது இஸ்லாத்தின் கொள்கை  அல்ல ஒரு குற்றவாளி உண்மையில் இந்த உலகில் தப்பித்து கொண்டாலும் மறுமையில் அவன் நிட்சயம் பதில் கூறியே ஆக வேண்டும் இதனால்தான் இஸ்லாம் துருவி துருவி எதனையும் ஆராய்வதில்லை.
 இவ்வாறு துருவி  துருவி ஆராய கூடாது என்பதற்கு காரணம் ஒரு குற்றவாளியை தப்பித்து விட வேண்டும் என்பதல்ல மாறாக குற்ற வாளியை உண்மையாக உறுதி படுத்திக் கொள்வதும் அதே நேரம் தண்டனை வழங்கும் போது குற்றவாளி அந்த தண்டனையை ஏற்கும் நிலைப்பாட்டில் உள்ளாரா என்பதை உரிதிப்படுடுவதும் தான். இதனால்தான் நபி (ஸல் )அவர்கள் ஒரு பெண் கை குழந்தையோடு தான் விபசாரம் செய்ததை ஒப்புக்கொண்டு தானாக நபி ஸல் அவர்களிடம் வந்த போது அவர்கள் அதனை கண்டுக்காமல் இருந்ததற்கு காரணம் எனலாம்.
இதே போன்ற இன்னொரு மனிதர் பள்ளிவாயலில் நபி ஸல் அவர்கள்முன்னிலையில் தான் குற்றம் இளைதாக    கூறுகின்றார்கள்  நபி ஸல் அவர்கள் உண்மையில் அவருக்கு தண்டனை வழங்க முன்டியடிக்கவில்லை 'நீர் இப்போது தொளுதீரா ?என கேட்டார்கள் அவர் ஆம் என்றார் ப்படியானால் உன் பாவங்கள் மன்னிக்க பட்டு விட்டன என்று கூறி அவரை விடுவித்தார்கள். இவ்வாறு ஏராளமான முன்மாதிரிகளை நாம் இஸ்லாமிய வரலாற்றில்  கண்டு அடுத்த விடயம் குற்றம் இழைத்தவர் என குற்றம் சாட்டபட்டவர் தான் செய்த குற்றத்தை ஒப்பு கொள்ள வேண்டும் சரியான நிருபனமான குற்றம் என்றால் குற்றவாளி ஒப்புக் கொள்ள தேவை இல்லை . ஆனால் குற்றம் இழைக்கவில்ல என எமக்கு  புரியம் படியாக இருந்தால் நிட்சயம் குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டுதான் அக வேண்டும் இதுதான் இஸ்லாமிய நடைமுறையும் கூட. இதற்கு  சான்றாக பின்வரும்  நபி மொழி ஆதாரமாக உள்ளது .
அபு ஹுரைரா ரலி(  6842,  6843) அறிவிக்கும் ஒரு ஹதீஸில் விபசாரக் குற்றம் இளைததட்காக குறிப்பிட்ட ஒரு பெண்ணிடம் உனைஸ் ரலி அவர்களை .அனுப்பி அவள் குற்றத்தை ஒப்புக் கொள்கின்றாரா என்பதை கேட்டு வர சொல்லி தண்டனை நிறைவேற்றுகிறார்கள் அந்த பெண் ஏற்றுக் கொண்டதால் அவளுக்கும் தண்டனை வளங்குகிறார்கள். போதிய சாட்சி இல்லாத நிலையில் ஒருவர் குற்றத்தை ஏற்று கொள்ளாததட்காக  நபி ஸல் அவர்கள். ஒரு போதும் தீர்ப்பு வழங்கவே இல்லை.
இஸ்லாம் இவ்வாறு இந்த குற்றவியல் தண்டனை என்ற அம்சத்தில் உண்மை தன்மை அறிந்து முடிவிற்கு வர முயற்சி செய்வதற்கு  காரணம்  இஸ்லாம் தண்டனை வழங்கப்படுவதை அதிகமாக ஆதரிப்பதில்லை ." நீங்கள் மூமின்களிடமிருந்து கூடிய மட்டும் தண்டனை வழங்கு வதை தவிர்த்துக்  கொள்ளுங்கள்'  ( திர்மிதி )  என்பது நபி ஸல் அவர்களின் கூற்று. அல்லாஹின் அடியார்கள் உண்மையில் சமூகத்தை ஏமாற்றினால் இறுதியில் அல்லாஹ்விடம் தப்பமுடியாது என்பது இஸ்லாத்தின் அடிநாதம்.
ஒரு முறை ஒரு மனிதர்  நபி ஸல் அவர்களிடம் வந்து நான் விபசாரம் செய்து விட்டேன் என கூறுகிறார்  .அதற்கு நபி ஸல் அவர்கள்  மறுபக்கம் கண்டுக்காதது போல் திரும்பி கொள்கிறார்கள். மீண்டும் அவர் மறுபக்கம் வந்தும் இவ்வாறு கூறுகிறார்கள் நபி (ஸல்) மீண்டும் திரும்பி கொள்கின்றார்கள். இவ்வாறு நான்கு  முறை திரும்பி கொண்ட நபி ஸல் அவர்கள் அதற்கான தண்டனை வழங்க முனைப்போடு செயற்படவில்லை. எப்படியாவது அந்த நபரை காப்பாற்ற வேண்டும் என்றே முடிவு செய்தார்கள் .இறுதியில்  அவரிடம் நீ திருமணம் செய்துள்ளீரா என கேட்டு அவர் ஆம் என கூறவும் அந்த தண்டனை பற்றி முடிவு செய்கிறார்கள்.
 அதே நேரம் இன்னோர் பெண் இவ்வாறான குற்றம் இழைத்தார் அதனை அவள் ஏற்று கொள்ளவில்லை உதாரணமாக சஹ்ல் பின் சத் ரலி  நபி (ஸல்) அவர்கள் ஒரு தம்பதி இடையில் தீர்ப்பு வளங்கினார்கள்அதாவது தனது மனைவி இன்னோர் ஆணிடம் விபசாரம் செய்ததாக ஒருவர் கூறுகின்றார். அப்போது  அதை அவருடைய மனைவி ஏற்று கொள்ளவில்லை. அப்போது நபி ஸல் அவர்கள் ஒரு விடயத்தை அந்த இடத்தில கூறினார்கள் .அது இன்றைய நவீன விஞ்ஜானத்தின் முன்னோடியாக கூட கொள்ளலாம் அவர்கள் சொன்னார்கள் அவனுடைய மனைவி இன்ன இன்ன வடிவத்தில் குழந்தை பெற்றால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அல்லது பொய்யாக இருக்கும் .என்று தீர்ப்பு வளங்கினார்கள் அவ்வாறு நபி ஸல் அவர்கள் கூறியது அவளுடைய கணவன் மற்றும் அவள் விபசாரம் செய்ததாக குற்றம் சாட்டபட்ட இருவருடைய உடல் அமைப்பு  மற்றும் நிறம் என்பவற்றை கொண்டுதான் .பின்னர் அந்த பெண் அருவருப்பான ஒரு குழந்த  பெற்றதாக ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது 
இது நபி (ஸல்)சொன்ன அந்த கூற்றை உண்மை படுத்தியது  மட்டுமல்ல இன்று ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் உள்ளது. இங்கு நபி ஸல் அவர்கள் சந்தேகதிற்கிடமான எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை அதன் அல்லாஹ்வின்  பெயரில் சாட்டினார்கள்.
எனவே இந்த கோணத்தில் இருந்து இஸ்லாமிய குற்றம் மற்றும் தண்டனை விடயத்தில் நாம் முன்மாதிரிகளை பெற்று கொள்ள வேண்டும் .எனவே குற்றம் மற்றும் தண்டனை என்பது கடுமையாக  அமுல் படுத்த வேண்டிய ஒரு விடயம் என்பதோடு உலகளாவிய இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய பொது தண்டனை சட்ட கோவை ஒன்றை தயாரிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.குறிப்பாக இன்று இந்த தண்டனையை அமுல் படுத்தும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு மித்த முடிவிற்கு வர வேண்டும் .
அதே நேரம் இஸ்லாமிய தண்டனைகளை வேறு தங்களது நாட்டு சட்டங்களுடன் கலந்து நீதி மன்றங்களில் அமுல்  படுத்துவதையும் இஸ்லாமிய நாடுகள் தடை செய்ய வேண்டும் .எப்படி நபி (ஸல் அவர்கள் தொழுதார்களோ, மற்றும் உலகளாவிய ரீதியில் எவ்வாறு இஸ்லாம் நடை முறை  படுத்த படுகிறதோ அதே போல் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு நான் இந்த தலைப்பில் பல கோணங்களில் கூறியதற்கு காரணம் இந்த பொறிமுறையில் காணப்படும் சகல அம்சங்களும் இஸ்லாமிய சட்ட துறையில் உள்ளடங்கப்பட்டு ஒரு சர்வேதேச  சட்ட துறையாக இஸ்லாமிய நாடுகளில் அமுல்படுத்த பட வேண்டும் என்பதாகும்.
வளரும்…………

0 comments:

Post a Comment