இசை ஹராமா ?

| 0 comments
இசை ஹராமா ? யுவன் சங்கராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் இஸ்லாத்தை ஏற்றுல்லாரே ? கேள்வி எம் .எல் .ராபி 


இஸ்லாத்தில் இசை தடுக்கப் பட்டுள்ளது .இஸ்லாமியா சிந்தனையை விட்டும் தடுக்கக் கூடிய இந்த இசை ஹராமானது தொழுகை , குரான் ஓதுதல் மற்றும் இதர வணக்கங்களின் எதிரி இந்த இசைதான் .ஓன்று அழகாக ரசனையாக இருக்கின்றது என்பதற்காக அது ஹலால் அல்ல.அப்படியானால் விபசாரம் இனிமியானது .மதுபானம் இனிமையானது இதை போன்ற பல உலக அம்சங்கள் இனிமையாகத்தான் இருக்கும் .அதற்காக் நாம் அதை ஹலால் என்று சொல்ல முடியாது .மனித ஈமானிய சிந்தனையை இசை தடுக்கின்றது .எனவே யுவன் சங்க ராஜா இஸ்லாத்திற்கு வருகின்றார் என்றால் அவர் இசையையும் விட்டுதான் வரவேண்டும் .அதற்குப் பெயர்தான் இஸ்லாத்துக்கு வருவது .இஸ்லாம் உண்மையானது அந்த உண்மை பக்கம் யாரும் வர வேண்டும் என்றால் அது அவர்களுக்கு தான் சிறப்பு .குறிப்பிட்ட பிரபல நபர் இஸ்லாத்துக்கு வந்தால் அது ஏனைய சமூகத்துக்கு முன்மாதிரி தான் எனினும் அவர் பூரணமாக வந்தால்தான் இஸ்லாத்தில் அவர் சிறந்த முன்மாதிரி 

நபி ஸல் ." நீங்கள குரானை ஓதுங்கள் அது மறுமையில் உங்களுக்கு சுவர்க்கம் செல்ல சிபாரிசு செய்யும் " முஸ்லிம் 

நிட்சயமாக செய்தான் எந்த வீட்டில் சூறா பகரா ஓதப் படுகின்றதோ அங்கிருந்து செய்தான் விரண்டோடுகின்றான் " 

" யார் குரான் ஓதுகின்றாரோ அவருக்கு ஹசனத் என்ற நன்மை உண்டு ஹசனத் என்பது 10 மடங்கு மேலானது எனவே நான் அலிப் ,லாம் ,மீம் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன் மூன்றும் ஒவ்வோர் எழுத்தாகும் " புகாரி முஸ்லிம் 

போன்ற ஹதீஸ்களை கூறி யுள்ள படியால் அதைதான் நாம் ஓத வேண்டும் தவிர இசை கருவி பயன்படுத்துவது ஹராம் ஆகும் 

ஆனால் இசை கருவி இல்லாமல் பாட்டு மட்டும் படிக்கலாம் .அந்தப் பட்டில் சிர்க் இருக்கக் கூடாது ஆபாசம் இருக்கக் கூடாது மார்கத்துக்கு முரணாக எதுவும் இருக்கக் கூடாது .

0 comments:

Post a Comment