றஸ்மி மூசா சலபி –
PJ பற்றி உங்கள்
நிலைப்பாடு என்ன ? அவரை பலர்
ஒருதலை பட்சமாக பின்பற்றி நடக்கின்றனரே
? அன்வர்
பயாஸ் போஸ்ட் 2014/2/16 FB
தக்லீத்
என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் தனி மனித வழிபாடு
அதாவது ஒருவரை கண்மூடி தனமாக
வழிபடுவது . அவர் சொல்வதெல்லாம் சரி
என்று செய்வது உண்மையான குரான்
சுன்னாவுக்கு அவர் மாற்றமாக நடந்தாலும்
சரியே .இஸ்லாத்தை பொறுத்தவரையில் எந்த ஒரு தனிமனிதனையும் யாரும் பின் பற்ற
முடியாது .அவர் சொல்கின்ற விடயம்
குரான் ஹதீசுக்கு உடன்பட்டிருந்தால் மட்டும் அவருடன் உடன்
பட்டுச் செல்லே வேண்டும் .இது
தான் இஸ்லாத்தின் கொள்கை." உங்களுடைய தூதர் கொண்டு வந்ததை பின்பற்றுங்கள்
அவர் தடுத்த வற்றை நீங்கள்
தவிர்ந்து கொள்ளுங்கள் " இது இஸ்லாத்தின் அடிநாதம்
.இந்த வகையில் அல்லாஹ்வும் அவனுடய் தூதரும் கூறியவற்றை
மற்றும் எடுத்து நடக்க வேண்டும் .
நபி
ஸல் அவர்களுக்கு கூட மறுமையில் சுவர்கத்துக்கு தனது
தோழர்களை சிபாரிசு
செய்வது என்பது இறைவனால் வழங்கப்
படவில்லை .என்பதை நாம் அறிந்துள்ளோம்
.ஹொவ்லுல் காதர் என்ற தடாகம்
நோக்கி அவர்களை அழைக்கும் போது
அல்லா அந்த உரிமையை நபி
(ஸல்) அவர்களுக்கு வழங்க வில்லை என்பதை
நாம் அறிந்துள்ளோம்.
இவ்வாறு
பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டமுடியும்.
இது உங்கள் பதிலுரைக்கு நோக்கமாக அமையாது . இப்போது
நாம் விடயத்துக்கு வருவோம் PJ என்பவர் ஒரு மார்க்க
அறிஞ்சர் இஸ்லாமிய தமிழ் உலகில் தௌஹீத்
பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு சிறந்த அறிஞ்சர்
என்பதை யாரும் மறுக்க முடியாது
.அவருடைய சிறந்த
வழிகாட்டல் இஸ்லாமிய உலகில் அரபு அறிஞ்சர்களுக்கு
நிகராக இருந்துவந்துள்ளது .அவருடைய எழுத்துக்கள் விவாதங்கள் உரைகள்
மிகவும் கனமானவை என்பதில் மாற்று
கருத்து இல்லை
. .ஒரே நேரத்தில் பல மதங்களின் அறிவை
அவர் கொண்டுள்ளது ஒரு சிறப்பம்சம்தான் .
ஆனால்
இன்றுல் மிகப் பெரிய ஒரு சிக்கல்
என்னெவென்றால் அவருடைய அன்மைகால கருத்துக்கள்தான் .அதாவது ஆதாரபூர்வமான
ஹதீஸ்களை நிராகரித்தல்
.குரான் வாசங்களை மயக்கமாக வியாக்யானம் செய்தல்
.மாற்றுக் கருத்துள்ளவர்களை கடுமையாக தாக்குதல் போன்றன் அவருடைய அண்மைக்கால
போக்கு
.அதுமட்டுமன்றி மற்றுமோர் பிழையான வழிமுறை அவரின்
சார்பாக உருவாகப்பட்டுள்ளது .அதாவது PJ
அவர்களுடைய கருத்துக்களுக்கு முரணாக அல்லது பிழையாக
சொல்லும் கருத்துவாதிகளை பொருத்தமில்லாத முறையில் அல்லது தொனியில் பிரச்சாரம்
செய்வது .தங்களுடை பலம் மிகவும் அபரிதமானது
என எண்ணி மற்றவர்களை ஏலனமாக
நினைத்து விவாத்திற்கு அழைப்பது போன்ற செயல்கள் பிழையான
வளிமுரைகளாகும். தங்களுக்கு விவாதத் திறமை உண்டு என கொண்டாடுவது
போன்ற சில சிறுபிள்ளைதனமான விடயங்கள் அவர்களிடம் உண்டு.
எனவே
அவருடைய நல்ல பல அம்சங்கள்
இருந்தாலும் அவரிடம் இருக்கும் அல்லது
அவருடைய அமைப்பினரால் அரங்கேற்றப்படும் அங்கீகாரத்துடன் நடக்கும் பிழையான வழிமுறைகள் நிறுத்தப் படவேண்டும்
.ஒருவகையில்
அவருடைய சில கருத்துக்கள் இஜ்திகாத்
அடிப்படை என்று எடுத்துக் கொண்டாலும்
அவருடைய இவ்வாறான் பிழையான செயற்பாடுகள்
ஒரு போதும் ஏற்றுக் கொள்ள
முடியாது.
இந்தவகையில்
PJ பற்றி
மார்க்க தீர்ப்பு வழங்க எமக்கு உரிமை
இல்லாவிட்டாலும் அவர் பற்றி நாம்
கூறிய கருத்துக்கள் நடு நிலமையானவை.
என்பதை கூறிக் கொள்ள விரும்பு
கின்றோம் , அல்லா மிகவும் அறிந்தவன்
0 comments:
Post a Comment