உள்கியா கொடுப்பது ஏழு பேர் என்பது ஒரு பொதுக் கணக்கீடு அல்ல -றஸ்மி மூசா

| 0 comments
     






உள்கியா கொடுப்பது ஏழு பேர் என்பது ஒரு பொதுக் கணக்கீடு அல்ல .றஸ்மி மூசா 

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாம் கடமையாக ஆக்கப்பட்டுள்ள உலகியக் கடமை பின்வரும் அடிப்படையில் அமையும் .

1-            ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஹூதைபிய்யா உடன்படிக்கை இடம்பெற்ற ஆண்டு எங்களில் எழேழு நபர்கள் இணைந்து ஒட்டகம், மாடு ஆகியவற்றை அறுத்தோம். (முஸ்லிம்: 1318)

2-            ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாங்கள் நபியவர்களுடன் ஹஜ்ஜில் பங்கேற்றோம். அப்போது எங்களில் ஏழு நபர்கள் கூட்டாக இணைந்து ஒட்டகம், மாடு ஆகியவற்றை அறுத்தோம். (அபூதாவுத்: 2808)

              3- இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:  நாங்கள் நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தோம். அப்போது ஈதுல் அழ்ஹாத்தினம் வந்தது. எனவே, எங்களில் ஏழு நபர்கள் மாட்டைஅறுப்பதிலும் பத்து நபர்கள் ஒட்டகத்தை அறுப்பதிலும் ஒன்றிணைந்தோம்.(4392), இப்னுமாஜா (3131), அஹ்மத் (2480)

3-            நபியவர்கள் பத்து ஆடுகளை ஒர் ஒட்டகத்திற்கு கணக்கிட்டார்கள். (புகாரி: 2324), (முஸ்லிம்: 5093)


எனவே நாம் பிராணிகளை அளவீடு செய்யும் போது  மேற் காணும் நபி மொழி அடிப்படையில் கணக்கிடலாம்.ஏழுபேர் தான் என்பது ஒரு பொதுக் கணக் கீடு அல்ல .இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்மை கிடைக்கும் .

0 comments:

Post a Comment